இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம்! | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம்!

Added : பிப் 21, 2015 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம்!

பண்பாடு, பழக்கவழக்கம், கல்வி, வேலைவாய்ப்பு என, எல்லாவற்றிலும் நாம், மேலைநாடுகளை பின்பற்றும் சூழலில், அதே விஷயங்களுக்காக மேலைநாட்டவர், இந்தியாவை பின்பற்றும் காட்சிகளும் ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன.டென்மார்க்கைச் சேர்ந்த, 59 வயதான மைக்கேல், சைவ சித்தாந்தம் பற்றி ஆய்வு செய்து வருகிறார். சென்னை பல்கலை மாணவரான அவரிடம் பேசியதில் இருந்து...

* சென்னை பல்கலையில் படிப்பதற்கான காரணம்?


இதற்கான காரணத்தை ஒரு வரியில் சொல்லிவிட முடியாது. என் வாழ்க்கைக்கும், இந்த படிப்புக்கும் தொடர்பு உள்ளது. நான் பொறியியல் படித்துவிட்டு, தகவல் தொடர்பு துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது, என் இல்லற வாழ்க்கையில் இருந்து, மனைவி பிரிந்து சென்று விட்டாள். பின், இல்லற வாழ்வில் இருந்து, என் மனமும் விலக துவங்கியது. தத்துவங்களின் மீது நாட்டம் ஏற்பட்டது. டென்மார்க்கில் உள்ள ஒரு கல்லூரியில், மேலைநாட்டு தத்துவவியல் சார்ந்த படிப்பை முடித்தேன். அதே காலகட்டத்தில் தான், இந்தியாவுக்கு அடிக்கடி வரும் வாய்ப்புகளும் கிடைத்தன. அப்போது, காசியில் நடந்த, ஒரு தத்துவ மாநாட்டிற்கு பார்வையாளனாக சென்றிருந்தேன். அங்கு, விவாதிக்கப்பட்ட இந்திய தத்துவங்கள், என் அகப்பார்வையை வேறுவிதமாக திருப்பின. அதிலும் குறிப்பாக, சைவ சித்தாந்த தத்துவங்கள் என்னை மிகவும் கவர்ந்து விட்டன. பின், சைவ சித்தாந்தத்தில் பட்டப்படிப்பு படிக்க நினைத்தேன். என் விருப்பத்தை, அந்த மாநாட்டுக்காரர்களிடம் தெரிவித்தேன். அவர்கள், சென்னை பல்கலையும், மதுரை காமராஜர் பல்கலையும் தான், இந்த பாடங்களை நடத்துவதாக தெரிவித்தனர். நான், சென்னை பல்கலைக்கு விண்ணப்பித்தேன். பெரும் போராட்டங்களுக்கு பின், வாய்ப்பு கிடைத்தது.

* சென்னை பல்கலையில் உங்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாயினவா?


சென்னை பல்கலையில், சைவ சித்தாந்தம் குறித்த தத்துவத்துக்காக விண்ணப்பித்த எனக்கு, பொது தத்துவம் வழங்கப்பட்டது. ஆயினும், சைவசித்தாந்தம் படிக்க துவங்கினேன். தமிழகத்தில் உள்ள பல்வேறு மடங்களுக்கும், கோவில்களுக்கும் சென்றேன். படிப்படியாக, சென்னை பல்கலையிலேயே சைவசித்தாந்தம் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததால், எம்.பில்., முடிக்க முடிந்தது. இப்போது, பி.எச்டி., படித்துக்கொண்டிருக்கிறேன்.

* மேலைநாட்டு தத்துவங்களுக்கும் இந்திய தத்துவங்களுக்குமான வேறுபாடுகளாக உங்கள் பார்வையில் படுவன எவை?


நல்லனவற்றை செய்பவன் சொர்க்கத்துக்கும், தீயன செய்பவன் நரகத்துக்கும் செல்வான் என்பது, மேலைநாட்டு தத்துவம். மேலைநாட்டு தத்துவங்கள், மறுபிறவியை மறுக்கின்றன. கடவுளால் முன்மொழியப்பட்டபடியே, பிறப்புகள் அமைகின்றன என, அவை கூறுகின்றன. வாழ்வியல் நெறிகள், அதில் வகுக்கப்படவில்லை என்பதே என் கருத்து. என் நாட்டில், தத்துவங்களை, பாதிரியார்கள் மட்டுமே பேசுவர். அவர்களிடம் இருந்து விருப்பப்பட்டோர் கேட்டுக்கொள்வர். மற்றவர்களை தத்துவங்கள் ஈர்ப்பதில்லை. மேலை நாடுகளில், வாழ்வியல் நெறிகளை, சட்டங்களே தீர்மானிக்கின்றன. பைபிளின் புதிய ஏற்பாட்டில், காலத்திற்கேற்ப தேவையான மாற்றங்களை, டென்மார்க் அரசு செய்திருக்கிறது. அங்கு, பாதிரியார்களும், தேவாலயங்களும், அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அரசும், மதமும் வேறல்ல என்ற நிலை உள்ளது. அதனால், பைபிள், நாளுக்குநாள் மாறி வருகிறது.

இந்திய தத்துவங்களை பொறுத்தவரை, மாயை, ஆணவம் பற்றி அதிகம் பேசுகிறது. மற்ற தத்துவங்களும், வாழ்வியலோடு ஒட்டி வருகின்றன. சாங்கியம், யோகம், நியாயம், மீமாம்சை, வைசேஷிகம் ஆகிய தத்துவங்கள், வாழ்வியலை ஒட்டியே விளக்கப்படுகின்றன. சரியை, கிரியை, யோகம், ஞானத்தின் மூலம் வாழ்வியலின் உயர்ந்த நிலையை அடையும் மார்க்கங்கள், சைவசித்தாந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்திய தத்துவம், மறுபிறவியை பற்றியும், இந்த பிறவியின் வாழ்வியல் நெறிகளையும் போதிக்கிறது. மந்திரங்களும், ஆகமங்களும் வாழ்வியலோடு இணைந்தே இருக்கின்றன. நான், காஷ்மீர் முதல், தமிழகம் வரை பயணித்த போது, மக்களின் சகிப்புத்தன்மைக்கு, இந்திய தத்துவங்களே காரணம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

* வாழ்வியலோடு இணையாத தத்துவம் எப்படிப்பட்டதாக இருக்கிறது?


இங்குள்ள தத்துவங்கள் பக்தியோடு ஊடுருவி இருப்பதால், பழக்கவழக்கங்களோடும், சடங்குகளோடும், நீதிக்கதைகள் மூலமும், காலம்காலமாக கடத்தப்படுகின்றன. இந்தியாவில், சாதாரண மக்கள் கூட, மந்திரங்களை சொல்லி வழிபடும் வழக்கமும், மற்ற மதத்தினரின் வழிபாட்டு தலங்களுக்கு அருகிலேயே, சகிப்புத்தன்மையுடன் வழிபாடு நடத்தும் பாங்கும், வேறெங்கும் காணமுடியாது.

* சைவசித்தாந்தத்தை பற்றி தெரிந்துகொள்ள மொழி தடையாக இல்லையா?


பெரும்பாலான மந்திரங்களும், ஆகமங்களும் சமஸ்கிருதத்தில் இருந்ததால், சமஸ்கிருதத்தை கற்றுக்கொண்டேன்.

* உங்களின் எதிர்கால திட்டம்?


நான், எங்கள் வீட்டில் சிவலிங்கத்தை வைத்து, மந்திரங்கள் சொல்லி, தினமும் பூஜித்து வருகிறேன். அங்கு, நான் கற்றவற்றை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாது. அதனால், படிப்பை முடித்தபின், அடிக்கடி இந்தியாவிற்கு வந்து, இந்திய தத்துவங்களை பற்றி எடுத்துக்கூற இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gopikkannan k t - ramanathapuram,இந்தியா
22-பிப்-201520:54:48 IST Report Abuse
gopikkannan k t எங்களுக்கே தெரியாது
Rate this:
Share this comment
siva arivolian - Raleigh,யூ.எஸ்.ஏ
25-பிப்-201500:50:13 IST Report Abuse
siva arivolianஎது உங்களுக்கே தெரியாது ?...
Rate this:
Share this comment
Cancel
siva arivolian - Raleigh,யூ.எஸ்.ஏ
22-பிப்-201519:33:25 IST Report Abuse
siva arivolian One hundred years ago... "A Christian priest H.R Hoyzington,the founder of church of South India ( CSI) who has already mastered six languages, came to India from America. After learning Sanskrit and tamil,he made the first English translation of Sivagnana Botham after studying Saiva Siddhantam. His conclusion was, the doctrine and philosophical truth in Saiva Siddhantam can never be found in any Greek or Latin philosophy and made it compulsory for every Christian priest around the world to master this great work of Meykandar. He also made a translation of Sivapragasam by Umapathi Sivachariyar. (Ref: ://saivaphilosophy.blogspot.com/2009/12/what-is-saiva-siddhantam.html)"
Rate this:
Share this comment
Cancel
Dynamo - Den Haag,நெதர்லாந்து
22-பிப்-201517:04:51 IST Report Abuse
Dynamo இவரை டென்மார்க்கில் "கர் வாப்ஸ்சி" செய்வார்களா?
Rate this:
Share this comment
Cancel
kovai - kovai,இந்தியா
22-பிப்-201516:45:47 IST Report Abuse
kovai படிப்பது சைவ சித்தாந்தம்.. கற்றுக்கொண்ட மொழி சமஸ்கிருதம்..எப்படி உங்கள் அகபார்வையை தொடர்பு கொள்ள உதவும்..? சைவ சித்தாந்தத்தை பற்றி நீங்கள் அறிந்துகொள்ள தமிழ் மொழியை அல்லவா கற்றுக்கொள்ள வேண்டும்..
Rate this:
Share this comment
siva arivolian - Raleigh,யூ.எஸ்.ஏ
25-பிப்-201506:17:42 IST Report Abuse
siva arivolianவேதத்தின் முடிவை சைவ சித்தாந்தம் மிகத் தெளிவாக விளக்குகின்றது. தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர். 40 ஔவையார் - நல்வழி You can understand the connectivity between sanskrit vedham and tamil saivam in this link: ://www.shaivam.org/daily-prayers/prayer-padal-3.htm...
Rate this:
Share this comment
Cancel
Dharumi - New York,யூ.எஸ்.ஏ
22-பிப்-201511:51:07 IST Report Abuse
Dharumi நம்மோட பண்பாடு, கலாச்சாரம்,சம்ப்ரதாயம் இதை பற்றி எல்லாம் வெளி நாட்டு காரா சொன்னாதானே நம்ப அத பத்தியே யோசிக்கறதா இருக்கோம். பாராட்டுக்கள் அய்யா. வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
22-பிப்-201508:37:40 IST Report Abuse
N.Purushothaman இந்தியாவின் அடிப்படையை அருமையாக புரிந்து கொண்டு உள்ளார்...
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
22-பிப்-201506:32:28 IST Report Abuse
kundalakesi சிவ சிவ சிவ சிவ, மனத்திலிருந்து உண்மையாய் கருத்து தெரிவித்திருக்கிர்றார். விசேஷ வியாதி தீர்ப்பு நாடகங்கள் மூலமாக இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-பிப்-201506:13:54 IST Report Abuse
Lion Drsekar உங்களக்கு தெரிகிறது, ஆனால் இங்கோ இதற்கு எதிராக பல இயக்கங்கள் இருக்கின்றன , பல்கலைக் கழகங்களும் இருக்கின்றன , எங்கே போய் சொல்வது வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
karthik_mumbai - mumbai,இந்தியா
22-பிப்-201505:29:39 IST Report Abuse
karthik_mumbai உண்மை அய்யா சைவ சித்தாந்தம் மிகவும் பெருமைக்குரியது. அதை உங்களை போன்ற வெளிநாட்டவர் சொல்லும் போது தான் நம் குடிமகன்களுக்கு தெரியும். அதிலும் இந்து மதம் சொல்லாதது எதுவும் இல்லை , நீங்கள் சமஸ்கிருதம் படித்து உள்ளீர்கள். வேறு பெரிய பெருமை ஒன்றும் இல்லை, உங்களால் தமிழுக்கு பெருமை. அனைவரும் ஓடிக்கொண்டு இருகிறார்கள். எதற்கு என்ற காரணம் தெரியவில்லை. நின்று நிதானமாக யோசித்தால் வாழ்கையில் ஒன்றும் இல்லை. மறுபிறவி வேண்டாது இறைவனின் பாதகமலங்களில் சரண் அடைவதே என்று தெரியவரும்.
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
22-பிப்-201501:48:01 IST Report Abuse
Manian திரு மைகளுக்கு உதவி செய்ய எனக்கு தெரிந்த அறிவாளிகள் சிலர் உள்ளனனர். எனவே அவரது மின் அஞ்சல் முகவரி தந்தால் தின மலருக்கு நன்றி உரித்தாகும். படித்தல் வேலை கிடைக்குமா என்றே உள்ள நம் நாட்டில் நமது பண்பாடு பற்றி பேசமுடியாது. முன் வினையில் இந்த நல்ல மனிதர் செய்த நற்பால் இவருக்கு இந்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அவருக்கு என் பணிவார்ந்த வணக்கம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை