மொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்:ரூ.1.50க்கு ஒரு கிலோ தக்காளி- எம்.கனகராஜ் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்:ரூ.1.50க்கு ஒரு கிலோ தக்காளி- எம்.கனகராஜ்

Updated : பிப் 22, 2015 | Added : பிப் 22, 2015 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

தமிழகத்தில், விவசாய பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம், 'ரியல் எஸ்டேட்'காரர்களிடம் சிக்கி, வீட்டு மனைகளாக மாறிவிட்டன. இதைக்கண்டு உள்ளம் குமுறுவோருக்கு ஆறுதலாக, மண் இல்லா விவசாய முறையை, தனது வீட்டு மாடியில் அமல்படுத்தி சாதித்துகாட்டியுள்ளார் கோவை, சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாகேந்திரன்.

எம்.இ., எலக்ட்ரானிக்ஸ் முடித்த இவர், 10 ஆண்டுகளாக இன்ஜி., கல்லுாரிகளில் பேராசிரியராக பணியாற்றிவிட்டு, தற்போது, 'ஏரோபோனிக்ஸ்' விவசாய திட்டம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். விவசாயத்தின் முக்கிய உயிர்நாடி மண் வளம்; பயிர்கள் வேர் பிடிக்க மண் அவசியமான ஒன்று. ஆனால், இவர், மண்ணே இல்லாமல் செடி வளர்த்து, இரண்டு ஆண்டுகளாக சத்தான காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறார்.

தனது வீட்டின் மொட்டை மாடியில் 'மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்' செய்கிறார்; கண்காணிக்க ஆள் தேவையில்லை; நீர் பாய்ச்சுவது உள்ளிட்ட அனைத்தையும் கம்ப்யூட்டர் கவனிக்கிறது. விவசாயிகள் துாவும் உரம், சில நேரத்தில் மண்ணில் தங்கி, மண்வளத்தை கெடுக்கலாம். ஆனால், இவரது மாற்று விவசாய முறையில் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது.

ஐநுாறு சதுர அடி பரப்புள்ள, மொட்டை மாடி தான் இவரது பசுமைத் தோட்டம். பி.வி.சி., குழாய்களில் பயிர் வளர்கிறது. ஏறக்குறைய ஒவ்வொரு குழாயிலும் 150 செடிகள் வளரும் அளவுக்கு, சிறு துளைகள் போடப்பட்டு நாற்றுகள் பிடிப்புடன் வைக்கப்பட்டுள்ளன (மண் இல்லை). வளர்ந்த செடிகள் கீழே சரியாமல் இருக்க, அதன் கிளைகள் நுாலால் கட்டப்பட்டுள்ளன.

செடிகளின் வேர்களுக்கு நீர் பாய்வதில்லை; மாறாக செடிகளின் மீது, தானியங்கி முறையில் நீர் (ஸ்பிரிங்லர்) தெளிக்கப்படுகிறது. தினமும் குறைந்தது, 7 நிமிடம் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. இலை, காய் வளர்ச்சிக்கே இங்கு முக்கியத்துவம். மொட்டை மாடி தோட்டத்துக்குள் வெய்யில் நுழைவதில்லை. சணல் சாரம், கூடாரம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. வெய்யிலால் ஏற்படும் வெப்பத்தின் தாக்கம் கூடும்போது மேற்குபகுதி நீர் தெளித்து குளிரூட்டப்படுகிறது. இதற்காக சிறு துளைகள் வழியாக, மேலிருந்து தண்ணீர் துாவப்படுகிறது.

தண்ணீர் தெளிப்பு உள்ளிட்ட அனைத்துக்கும், 300 வாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின்னுற்பத்தி சாதனம் உதவுகிறது. அறையின் ஈரப்பதமும், தட்பவெப்ப நிலையும், எப்போதும் பாதுகாக்கப்படுகிறது. இதுகுறித்து, நாகேந்திரன் கூறியதாவது: ஐநுாறு சதுரடி பரப்பளவு தோட்டத்தில் வளர்க்கப்படும் 1000 செடிகளுக்கு தினமும், 250 லி., நீர் போதுமானது. ஒரு கிலோ தக்காளி உற்பத்திக்கு 1.50 ரூபாய் மட்டுமே செலவாகிறது. ஒரு சென்ட் நிலத்தில் மாதம், 15 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு நவீன விவசாயம் இஸ்ரேல், கனடா, தாய்லாந்து, ஜெர்மனி நாடுகளில் நடைமுறையில் உள்ளது. சிங்கப்பூரில் இத்திட்டத்துக்காக, அந்நாட்டு அரசு பெரும் உதவி
செய்கிறது.குறிப்பிட்ட கால இடைவெளியில், சீரான தண்ணீர் வினியோகம் இருப்பதால் அனைத்து செடிகளும் ஒரே மாதிரியாக வளர்கிறது. நோய், பூச்சி, புழு எதுவும் செடிகளை தாக்குவதில்லை. மண்ணில் காய்க்கும் செடிகளை விட உயரமாக வளர்கிறது. இதன் காய்களும், பழங்களும் சத்து மிக்கதாக உள்ளது. விளைநிலங்கள் காணாமல் போகும் இக்காலகட்டத்தில், இத்திட்டத்தை பயன்படுத்தி, எதற்கும் பயன்படாத தரிசு நிலங்களையும் பசுஞ்சோலைகளாக்க முடியும். நாட்டின் காய்கறி உற்பத்தியை மட்டுமல்ல, உணவு பற்றாக்குறையையும் தீர்க்க முடியும். விவசாய ஆர்வலர்கள், சந்தேகங்களுக்கு, 95852 86005 என்ற எண்ணில் என்னை
தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, பேராசிரியர் நாகேந்திரன் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendran Subramaniam - Madurai,இந்தியா
23-பிப்-201501:15:03 IST Report Abuse
Rajendran Subramaniam vaazhthukkal.I hope u can clear the doubts expressed by one of the commentators doubting abt the benefectaory facts as present in the produces of your growing and the produces of ordinary growing and the manures u use in bringing them up.We hope and pray this must reach all the desiring aspirants to have the same in their homes.And u must explain the cost of starting such though approximately.
Rate this:
Share this comment
Nagendhiran C V - Coimbatore,இந்தியா
23-பிப்-201520:27:04 IST Report Abuse
Nagendhiran C VThank you for your good wishes sir. The tem can accomodate both organic as well as non organic nutrients. As for the costing it will dep on a lot of factors. We can set up a computerised tem even at 10000 rupees. The tem shown in Dhinamalar cost around five to six lakhs. But that tem is designed to give maximum returns on investment. As the area increases cost will fall drastically. A 1000 square feet unit will cost only around 7 to 8 lakhs and it will as area increases. I would be explain very clearly in person as there are so many technical details. Naghiran...
Rate this:
Share this comment
Cancel
JSS - Nassau,பெர்முடா
22-பிப்-201523:28:49 IST Report Abuse
JSS எங்கள் வீட்டு மொட்டை மாடியில் ரோஜா, செம்பருத்தி, குண்டு மல்லிகை, aster போன்ற பூ வகைகளும், mango , கொய்யா, அத்தி, வாழை, மாதுளை, பப்பாளி போன்ற பழவகைகளும், பாலக், பொன்னங்கண்ணி, மனத்தக்காளி, புதினா போன்ற கீரை வகைகளையும், கத்திரி , கோவைக்காய், தக்காளி போன்ற காய்கறிகளையும் பயிரிட்டு வெற்றி கண்டு இருக்கிறோம் . திரு நாகேந்திரனுடன் தொடர்பு கொண்டு Avarum ஆலோசனைகளை பெற உள்ளேன்
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
22-பிப்-201517:39:27 IST Report Abuse
P. SIV GOWRI மிகவும் அருமையான திட்டம். நாகேந்திரன் ஜி உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்
Rate this:
Share this comment
Nagendhiran C V - Coimbatore,இந்தியா
23-பிப்-201520:30:10 IST Report Abuse
Nagendhiran C VNandri Ayya....
Rate this:
Share this comment
Naga Sundaram - Batlagundu, Dindigul,இந்தியா
15-ஆக-201514:43:39 IST Report Abuse
Naga Sundaramதிரு நாகேந்திரன் அவர்களே, தங்களது புதிய முயற்சி வெற்றியடைந்தமைக்கு பாராட்டுக்களும், மேலும் மேலும் பல சாதனைகள் செய்ய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நானும் இதுபோல எனது வீட்டு மாடியில் செய்ய விருப்பமாய் உள்ளேன். விபரம் அறிந்து கொள்ள ஆவல். இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணுக்கு அழைத்தால் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவே வருகிறது. உங்களை எங்கு தொடர்பு கொள்ள வாய்ப்புள்ளது, என தெரிவித்தால் நலம்.( எனது மெயில் ஐடீ.....nagasundaramperiyasamy@gmail.com...
Rate this:
Share this comment
Cancel
Varathappan Parthasarathy - Karur,இந்தியா
22-பிப்-201517:09:49 IST Report Abuse
Varathappan Parthasarathy மண்ணில்லா விவசாயத்த கண்டுபிடித்த என்ராசா தண்ணி இல்லா விவசாயத்தை கண்டுபிடிராசா .
Rate this:
Share this comment
Cancel
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
22-பிப்-201515:53:27 IST Report Abuse
மஸ்தான் கனி உற்பத்திகள் அதிகமாகலாம் ஆனால் காய்கறிகள் சத்தானதாக இருக்காது மாறாக காய்கள் பெரிதாக இருக்கும். மண்ணில் விளையும் காய்கறிகளை மட்டும் Organic food என்று அழைக்கிறார்கள். புதிய சாதனைக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
தமிழன் - சென்னை,இந்தியா
22-பிப்-201521:30:27 IST Report Abuse
தமிழன்மண்ணில் என்ன வளமெல்லாம் இருக்கிறதோ, அதை எல்லாம் செயற்கையாக அளிப்பது கடினம் தான். இதே முறையில் மண்ணில் வளரும் முறையில் விவசாயம் செய்யலாம். மற்றபடி, புதிய முறைகளை ஊக்குவிப்பது நல்லதே. உணவின்றி ஏழ்மை நிலையைச் சந்திக்கும் நிலையை மாற்றலாம்....
Rate this:
Share this comment
Cancel
T.Elangovan - Chennai,இந்தியா
22-பிப்-201515:03:51 IST Report Abuse
T.Elangovan நான் இப்பொழுது தான் பேராசிரியரிடம் பேசினேன், அவர் அடுத்த வாரம் சென்னை வருகிறார் அனைவரும் அவரை சந்தித்து பயன்பெறுங்கள்.
Rate this:
Share this comment
paul jaison - chennai,இந்தியா
22-பிப்-201522:56:34 IST Report Abuse
paul jaisonsir can you share his phone number? i wish to meet him too....
Rate this:
Share this comment
Cancel
T.Elangovan - Chennai,இந்தியா
22-பிப்-201515:01:17 IST Report Abuse
T.Elangovan நன்றி பேராசிரியர் அவர்களே, உங்களின் சேவை தொடரட்டும்.
Rate this:
Share this comment
Cancel
G. Madeswaran - MA,யூ.எஸ்.ஏ
22-பிப்-201514:56:17 IST Report Abuse
G. Madeswaran Great.. Meaningful Scientist from Engineering background.. Our Agricultural University students and Professor Scientists (?1) may need to learn these new technologies and develop further for our agricultural society..
Rate this:
Share this comment
Nagendhiran C V - Coimbatore,இந்தியா
23-பிப்-201521:06:16 IST Report Abuse
Nagendhiran C VThank you Sir. In our country for a lot of people life is race rather than a celebration. That is the reason for slowness in certain sectors. But i had the benefit of realising the fire in the new generation youth who responded and called me after the article. I am sure in the near future we Indians are going forge ahead in real earnest. Once we are on the way our sound cultural background will make us invincible....
Rate this:
Share this comment
Cancel
Nagaraj - Doha,கத்தார்
22-பிப்-201513:48:28 IST Report Abuse
Nagaraj எல்லோரும் பின்பற்ற வேண்டிய மிக பயனுள்ள திட்டம். திரு. நாகேந்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
Rate this:
Share this comment
Cancel
Palanichamy - Theni,இந்தியா
22-பிப்-201511:37:13 IST Report Abuse
Palanichamy நிலம் இல்லாதவர்களும் விவசாயம் செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு வரபிரசாதம், அனைவரும் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பெற உன்னதமான திட்டம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை