கடமைக்கு சன்மானம் வாங்கினால் கடவுளே மன்னிக்க மாட்டார்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடமைக்கு சன்மானம் வாங்கினால் கடவுளே மன்னிக்க மாட்டார்!

Updated : மார் 08, 2015 | Added : மார் 07, 2015 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கடமைக்கு சன்மானம் வாங்கினால் கடவுளே மன்னிக்க மாட்டார்!

தமிழகத்தின் முதல், ஆம்புலன்ஸ் வாகன பெண் ஓட்டுனர், கயல்விழி, 32. தைரியத்தின் அடையாளம்; மன உறுதியின் மற்றொரு வடிவம். பட்டாளத்தில் வசிக்கும் இவர், கடந்த ஏழு ஆண்டுகளாக, '108' ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டி வருகிறார்.இவர், நம்மிடம் பேசியதில் இருந்து...

* சென்னையின் சாலைகளில், இருசக்கர வாகனத்தில் செல்வதே ஒரு பெரிய சவாலான செயல் தான். நீங்கள் எப்படி, ஆம்புலன்ஸ் வாகனத்தை தைரியமாக ஓட்டுகிறீர்கள்?


என் தைரியமே, என் தன்னம்பிக்கையும், என் குடும்பத்தாரின் ஊக்கமும்தான். ஆம்புலன்ஸ் ஓட்டுவதால், எல்லாரும் துணிச்சலான பெண் என்பர். ஆனால் துணிச்சலோடு, திறமையான பெண்ணாகவும் இருக்கவே விரும்புகிறேன். காரணம், சேவை சம்பந்தமான வேலையில் இருக்கிறேன். என் ஒரு நிமிட தாமதம் கூட, ஒருவரது உயிரை பறிக்கலாம். அதனால் துணிச்சலோடு திறமையும் இருந்தால்தான், சவாலான சென்னை சாலைகளில் வண்டி ஓட்ட முடியும். நான் சிறிது கவனம் பிசகினாலும், என் பாலினத்தை காரணம் காட்டி, 'பெண் தானே' என்று விமர்சிப்பர்; அந்த விமர்சனத்தை என்னால் ஏற்க முடியாது.

* எப்படி ஓட்டுனர் பணிக்கு வந்தீர்கள்?


பொதுவாக, வாகனங்களை இயக்குவது எனக்கு பிடிக்கும். அதனால் கற்றுக் கொண்டேன். முதலில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம், ஆட்டோ ஓட்ட கற்றுக் கொண்டேன்; குடும்பத்திற்கு உதவியாக இருந்தேன். பின், கனரக வாகனம் முறையாக ஓட்டக் கற்றுக் கொண்டேன். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். நேர்காணல் அழைப்பு வந்தது; தேர்வில் வென்றேன்; விரும்பிய வேலை கிடைத்தது.

* உங்கள் பாதை, பயணம் பாதுகாப்பானதா?


பாதை நான் தீர்மானிப்பதல்ல; பயணம் குறித்து நான் தீர்மானிக்க முடியும். அலாரம் அடித்து வண்டி ஓட்டுவதால், பாதி பேர் வழிவிடுகின்றனர். இன்னும் சில பேர், வண்டி கூடவே போனால், தாங்களும் சீக்கிரம் சென்று விடலாம் என நினைத்து, ஆம்புலன்ஸ் கூடவே வருவர். பொதுமக்கள் வழிவிட்டாலும் சரி, வழிவிடவில்லை என்றாலும் சரி. கிடைக்கும் வழியில் லாவகமாக, பாதுகாப்பாக, சரியான நேரத்தில், ஆம்புலன்சை கொண்டு வந்து விடுவேன். அதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் மிகவும் ஒத்துழைப்பு தருவர். அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

* மறக்க முடியாத பாராட்டு?


எல்லாரும் பாராட்டுவர். சிலர், அன்பளிப்பும் கொடுக்க முன்வருவர். ஆனால், நாசூக்காக மறுத்துவிடுவேன். ஓட்டுனராக என் வாகனத்தில் வருவோரின் உயிரை காக்க வேண்டியது, என் கடமை. கடமையை செய்ய சன்மானம் வாங்கினால், கடவுள் மன்னிக்கமாட்டார். கடந்த ஏழு ஆண்டுகளாக தினசரி, ஆம்புலன்சில் உட்காரும்போது, பொதுமக்களே, 'ஆல் த பெஸ்ட்' என, வாழ்த்துவர்.

* ஓட்டுனர் வேலைக்கு வந்ததால் இழந்தது...?


என் குழந்தை, என் அருகாமையை இழக்கிறாள்; நானும் தான். ஆனால், வேலை என்றால், குடும்பம் எனக்கு இரண்டாம் பட்சம்தான். என் குழந்தையை, என் தாய் பராமரிக்கிறார். ஆம்புலன்ஸ் ஓட்டும் போது குழந்தை அழுகிறது என தொலைபேசி வந்தால் கூட, எடுக்கமாட்டேன். சுயநலம் பார்ப்போர் சேவையில் இருக்க முடியாது.

* இறைவனிடம் வேண்டுவது?


நோய்களோடு மனிதன் பிறக்கக் கூடாது; நோயால் இறக்கவும் கூடாது. இதுவரை நான் ஒரு விபத்து கூட ஏற்படுத்தியதில்லை, எவ்வளவு பதற்றமாக இருந்தாலும். இனியும் ஏற்படுத்த மாட்டேன்.


(இன்று உலக மகளிர் தினம்)

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murugaiyan - Singapore,சிங்கப்பூர்
12-மார்-201503:31:07 IST Report Abuse
murugaiyan பாராட்டுகள்
Rate this:
Share this comment
Cancel
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
10-மார்-201506:56:44 IST Report Abuse
K.   Shanmugasundararaj தோழி கயல்விழிக்கும் அவரது பெற்றோர் மற்றும் கணவருக்கும் வாழ்த்துக்கள்.கயல்விழி அவர்கள் போன்று சமுதாயத்தில் எல்லோரும் உழைக்க வேண்டும்.நேர்மை வெல்லும்.
Rate this:
Share this comment
Cancel
அபி கார்த்திக் - DINDIGUL,இந்தியா
09-மார்-201509:32:35 IST Report Abuse
அபி கார்த்திக் சேவை தொடர வாழ்த்துக்கள் சகோதரி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X