Fake ticket in Tamil Nadu bus | விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களில் போலி டிக்கெட்? மிரளும் பயணிகள்; மழுப்பும் அதிகாரிகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களில் போலி டிக்கெட்? மிரளும் பயணிகள்; மழுப்பும் அதிகாரிகள்

Added : மார் 08, 2015 | கருத்துகள் (33)
Advertisement

கோவை : தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பஸ்களில், போலி டிக்கெட் கொடுப்பதன் மூலமாக, பெரும் முறைகேடு நடப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழக (எஸ்.இ.டி.சி.,) பஸ்களுக்கான டிக்கெட்கள், ரிசர்வேஷன் முறையில் வழங்கப்படுகின்றன. டிக்கெட் வழங்கும் பணி, தனியார் நிறுவனங்களிடம் 'அவுட்சோர்சிங்' முறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஒரு நபருக்கு ரிசர்வேஷன் கட்டணமாக, 25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பஸ்களில், அதிக கட்டணம் என்பதால், இந்த பஸ்களில் ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் பயணிக்கின்றனர்.இதைப் பயன்படுத்தி, புதுவிதமான முறைகேடு அரங்கேறத் துவங்கியுள்ளது. இரவு நேரங்களில் இயக்கப்படும் பஸ்களில், 'செக்கிங்' நடப்பதில்லை என்பதைப் பயன் படுத்திக் கொண்டு, இந்த முறைகேடு நடக்கிறது.

அதாவது, அரசின் சார்பில் அச்சிடப்படும் டிக்கெட்களுக்குப் பதிலாக, கைகளால் எழுதப்பட்ட டிக்கெட்களைக் கொடுத்து, அதற்கான தொகை, பங்கு போடப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

கோவையிலிருந்து, திருப்பதிக்குச் செல்லும் அரசு விரைவு பஸ்சில், ஈரோட்டிலிருந்து திருப்பதிக்கு, கடந்த 26ம் தேதியன்று பயணித்த நான்கு பயணிகளுக்கு, கைகளால் எழுதப்பட்ட டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. ஈரோட்டிலுள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ் ஸ்டாண்டில், இந்த டிக்கெட் தரப்பட்டு, கண்டக்டரிடம் அதைக் காண்பித்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஈரோட்டிலிருந்து திருப்பதிக்கான டிக்கெட் கட்டணம் 305 ரூபாய். ரிசர்வேஷன் கட்டணத்தையும் சேர்த்து, 330 ரூபாய். இந்த தொகையைச் செலுத்திய சில பயணிகளுக்கு, சிறிய வெள்ளைத்தாளில், 'ஈரோடு டூ திருப்பதி, ரூட் நம்பர்: 962, டூ சீட்ஸ் ஒன்லி' என்று ஆங்கிலத்தில் எழுதி, கையெழுத்துப் போட்டுத் தரப்பட்டுள்ளது. அதில், 'எஸ்.இ.டி.சி., ஈரோடு' என்ற 'சீல்'
மட்டும் உள்ளது.இதைப் பெற்றுக்கொண்ட அந்த பஸ்சின் கண்டக்டர், அந்த டிக்கெட்களையும் வாங்கி வைத்துக்கொண்டுள்ளார். பயந்துபோன பயணி ஒருவர், 'எதற்கும் இருக்கட்டும்' என்று, டிக்கெட்டை தனது மொபைலில் படமெடுத்து வைத்துக் கொண்டதன் மூலமாக, இந்த விஷயம் வெளியே கசிந்துள்ளது.

அன்று ஒரு நாளில், ஒரு பஸ்சில் மட்டும் நான்கு பயணிகளுக்கு போலி டிக்கெட் கொடுத்ததன் மூலமாக, அரசுக்கு, 1,020 ரூபாய் (ரிசர்வேஷன் கட்டணம் தவிர்த்து) இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திற்குள், 658 பஸ்களும், அண்டை மாநிலங்களான கேரளா, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலுள்ள நகரங்களுக்கு, 379 பஸ்களுமாக, 1037 வழித்தடங்களில், 1,117 எஸ்.இ.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு பஸ்சிலும், நாலு டிக்கெட் என்று கணக்கிட்டாலும், தினமும் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்புள்ளது.

'டிக்கெட் தரும் ஏஜன்சியைச் சேர்ந்தவர்களும், பஸ் கண்டக்டர்களும் சேர்ந்து இந்த முறைகேட்டில் ஈடுபடுகின்றனரா' அல்லது 'பெரிய இடத்து ஆதரவுடன் இந்த முறைகேடு நடக்கிறதா' என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. 'தற்போதுள்ள நடைமுறையில், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யவே முடியாது' என்று, அரசு விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மறுக்கின்றனர்.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கோவை கிளை மேலாளர் சுப்ரமணியத்திடம் கேட்டபோது, ''அது, ரிசர்வேஷன் கவுன்டரில் இருப்பவர்கள் செய்த தவறு. பிஎன்ஆர் எண் எழுதாமல் கொடுத்துள்ளனர். அந்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டு, பஸ்சில் இருந்த கண்டக்டர், அச்சிடப்பட்ட டிக்கெட் கொடுத்துள்ளார். இதில் முறைகேடு நடப்பதற்கு துளியும் வாய்ப்பில்லை,'' என்றார்.

சம்மந்தப்பட்ட டிக்கெட் கவுன்டர், சேலம் கிளைக்கு உட்பட்டது. அந்த கிளை மேலாளர் சந்திரசேகரிடம் கேட்டபோது, ''கைகளில் டிக்கெட் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தால், அது முற்றிலும் தவறு. கம்ப்யூட்டர் பழுதாகியோ, மின் தடையினாலோ கம்ப்யூட்டர் டிக்கெட் கொடுக்க முடியாவிட்டாலும், அச்சிடப்பட்ட டிக்கெட் கொடுத்திருக்கலாம். இதுபற்றி விசாரித்த பின்பே, எதையும் உறுதியாய்க் கூறமுடியும்,'' என்றார்.

இந்த புகாரைப் பொறுத்தவரை, பிப்.,26ல் ஈரோடு-திருப்பதி சென்ற பயணிகள் சிலருக்கு, வெள்ளைச் சீட்டுக்குப் பதிலாக மாற்று டிக்கெட் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பதை சம்மந்தப்பட்ட பயணிகள் மறுத்துள்ளனர். அரசு போக்குவரத்துக்கழகத்தில் ஏதோ முறைகேடு நடக்கிறது என்பது தெரிகிறது. முழுமையாக விசாரித்தால், இன்னும் பல 'பகீர்' புகார்கள் வெளியே வரலாம்.


யாருடைய பஸ்கள்?

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படும் சில வழித்தடங்களில் (உதாரணம்: கோவை-மதுரை, கோவை-திருச்சி), வார இறுதி நாட்களில், சில தனியார் ஆம்னி பஸ்கள், அனுமதியின்றி இயக்கப்படுகின்றன. இதில் கட்டணமும், அரசு பஸ் கட்டணத்தை விட, கொஞ்சமே அதிகம்.அதனால், பொதுமக்கள் அதிகளவில் இதில் பயணிக்க, அரசு பஸ்கள் காலியாகச் செல்கின்றன. இந்த பஸ்கள், கரூரைச் சேர்ந்த வி.ஐ.பி., ஒருவருக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ
08-மார்-201522:25:01 IST Report Abuse
ஏடு கொண்டலு அயோக்யப் பயல்களுக்கு என்ன ஒரு பக்தி? மெய் சிலிர்க்கிறது. திருட்டுத் தொழிலில் கூடப் பிள்ளையார் சுழி... சூப்பர். இந்த நாய்களுக்கெல்லாம் நாகாலாந்து அடிதான் சரி.
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
08-மார்-201522:19:10 IST Report Abuse
Murugan அவசரத்தில் செல்பவர்களும், படித்தவர்களும் தான் இந்தமாதரி டிக்கெட் எடுக்கிறார்கள். மொபில் போனில் போட்டோ எடுத்து வெளியிட்ட நண்பருக்கு மிகவும் நன்றி. சம்மந்த பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்ணா தாங்கள் சொல்வது உண்மைதான். பல தடங்களில் நடப்பதுதான். ஆயினும் அவ்வாறு நடந்திருந்தால் இவ்வாறு சந்தேகம் ஏன் வரவேண்டும்? கூடிய விரைவில் இந்த செய்தி உண்மை என்று வெளிவரும்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
08-மார்-201520:09:55 IST Report Abuse
Endrum Indian இதெல்லாம் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் ஆதரவு இல்லாமல் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Mayan. - puducherry,இந்தியா
08-மார்-201520:02:08 IST Report Abuse
Mayan. எல்லாம் ஊழல் லஞ்ச மயம். அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி எனபது பழமொழி.இப்போது அரசனுக்கு பதில் ? திருடர்களை விட பன் மடங்கு மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவர்கள் திருந்த போவதில்லை.. நீதி கன்னைக்கட்டி கொண்டிருக்கிறது..தெய்வம் நின்று கொல்லும். .
Rate this:
Share this comment
Cancel
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
08-மார்-201519:14:36 IST Report Abuse
Rajamani Ksheeravarneswaran இந்த டிக்கட் ஒரு தற்காலிகமாக ( அரேஞ்மென்ட்) கொடுக்கபட்டிருக்கலாம் .பின்னர் பயணிக்கு ஒரிஜினல் டிக்கெட் வழங்கப்படிருக்கலாம். அரசை எமாற்ற வேண்டுமெனில் இப்படி ஒரு டிக்கெட் கொடுக்கவேண்டிய அவசியமில்லையே .இதில் கையொப்பம் இட்டு கொடுத்திருக்கிறார் .இதில் பணம் வசூளிக்கபட்டதாகவும் தெரியவில்லை. யாரோ அரசு போக்குவரத்து அதிகாரி அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சிபாரிசு கடிதம் கொடுத்திருக்கலாம். கொஞ்சம் மூளையை கசக்கி பார்த்தால் இந்த படிவம் பயணசீட்டு இல்லை என்பதும் ,ஒரு உயர் அதிகாரி இரண்டு நபர்களுக்கு ஈரோடிலிருந்து திருப்பதி ரூட் நோ. 962 வில் செல்ல இட வசதி சிபாரிசு கடிதம் போல் தோன்றுகிறது. அப்படிப்பட்ட சீட்டுக்களை வாங்கி பணம் கொடுத்து பயணம் செய்ய எந்த பயணியும் தயாராக இருக்க மாட்டார்கள்.உண்மையில் அரசு நடத்துனர்கள் அரசை ஏமாற்ற நினைத்தால் இந்த மாதிரி சீட்டு கொடுக்காமல் பயணதொகையில் பாதியை வாங்கி கொண்டு தங்கள் சட்டை பையை நிரப்பி இருக்கலாம். கையெழுத்து போட்டு மாட்டிக்கொள்ளும் அளவு அவர்கள் முட்டாள்கள் இல்லை. இப்படித்தான் ஒரு டிக்கெட் பரிசோதகர் திருட்டு ரயிலில் வந்த ஒரு பயணியை சரியாக பரிசோதிக்காமல் விட்டு தமிழ் நாடே /இந்தியாவே களவு போய் விட்டது
Rate this:
Share this comment
Cancel
sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08-மார்-201518:34:16 IST Report Abuse
sunil முட்டாள் தினமலரே இது டிக்கெட் கிடையாது........... token என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel
Haneefa Abdul Majeed - Fahaheel,குவைத்
08-மார்-201517:40:32 IST Report Abuse
Haneefa Abdul Majeed உண்மைதான், சி டி கடை நடத்தி இன்று தமிழ் நாட்டையே விலைக்கு வாங்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறதென்றால், அத்துடன் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி விட்டு 100 கோடி செலவு செய்ததும் பின்னர் என் வளர்ப்பு மகனே அல்ல என்றதும் இதெல்லாம் இதே வரிசையில் வரும் பித்தலாட்டம் தானே.
Rate this:
Share this comment
Cancel
Palanichamy - Theni,இந்தியா
08-மார்-201516:36:24 IST Report Abuse
Palanichamy போக்குவரத்து கழகம் எப்படி லாபத்தில் ஓடும்.
Rate this:
Share this comment
Cancel
Haneefa Abdul Majeed - Fahaheel,குவைத்
08-மார்-201514:29:46 IST Report Abuse
Haneefa Abdul Majeed கொஞ்ச நாள் முன்னாலே பால் லாறியை மறித்து கொள்ளையடித்தார்களே அது போன்ற கும்பலின் வேலையாக இருக்குமோ. அல்லது இல்லாத கம்பெனியில் உதிரி பாகங்கள் வாங்கி பேருந்துகளை செப்பனிட்டதாக கணக்கு காட்டினார்களே அதுவா?
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
08-மார்-201513:26:01 IST Report Abuse
Natarajan Ramanathan இந்த மாதிரி பத்து ரூபாய் ரப்பர் ஸ்டாம்ப் சில வைத்திருந்தால் போதும். தமிழ்நாடு முழுதும் இலவச பயணம்தான். சென்னையில் AC பேருந்தில் டிக்கெட் வாங்காமல் செல்லும் பலரும் செக்கிங் இல்லாததால் மாட்டுவதே இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை