More trouble for agri krishnamoorthy | பதவி பறிக்கப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நெருக்கடி: விவசாய அதிகாரி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (86)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

நெல்லையைச் சேர்ந்த, வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில், சமீபத்தில் அமைச்சர் பதவியைப் பறிகொடுத்த, அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நெருக்கடி அதிகரித்து உள்ளது. முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளதால், 'மாஜி' மீது, நடவடிக்கை பாயுமோ என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில், வேளாண்மை பொறியியல் துறையில், உதவி செயற்பொறியாளராக பணியாற்றியவர் முத்துக்குமாரசாமி; இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற இருந்தார்.இவர் பணிபுரிந்த துறையில், ஏழு ஓட்டுனர் பணியிடங்கள் காலியாக இருந்தன. அவை அனைத்தையும், மாவட்ட கலெக்டர் பரிந்துரைப்படி நியமனம் செய்ய, முத்துக்குமாரசாமி முடிவு எடுத்து செயல்படுத்தினார். இதில் தலையிட்ட, வேளாண் துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தான் பரிந்துரைத்த நபர்களுக்கு ஓட்டுனர் பணி வழங்காமல், மாற்று நபர்களுக்கு எப்படி வழங்கலாம் என, முத்துக்குமாரசாமியை கடிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், கடந்த மாத இறுதியில், நெல்லையில், ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

அறிக்கை:இந்த விவகாரத்தில், தமிழக காங்., தலைவர் இளங்கோவன் உட்பட, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நெருக்கடி கொடுத்தனர்.அத்துடன், தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமாரசாமியின் உறவினரான, தலைமைச் செயலர் ஞானதேசிகன் கொடுத்த அறிக்கை அடிப்படையிலும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின், வேளாண் துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன், கட்சிப் பொறுப்புகளில் இருந்தும், அவர் கழற்றி விடப்பட்டார்.

இருப்பினும், இந்த பிரச்னை ஓயவில்லை. 'வேளாண் அதிகாரி தற்கொலைக்கு காரணமான,

அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய வேண்டும்; முத்துக்குமாரசாமி மரணம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நெருக்கடிகள் காரணமாக, முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு, நெல்லை ரயில்வே போலீஸ் விசாரணையில் இருந்து, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

சாதாரண வழக்கு:
இது தொடர்பாக, போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
மேலிடத்தில் இருந்து சரியான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லாததால், ரயில்வே போலீசார், முத்துக்குமாரசாமி மரணத்தை, சாதாரண தற்கொலை வழக்காகவே பதிவு செய்திருந்தனர். இப்போது, அரசுக்கு பல தரப்பில் இருந்தும் நெருக்கடி அதிகரித்திருப்பதால், சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெரிய பெரிய வழக்குகள் எல்லாம், சி.பி.சி.ஐ.டி.,யினரால், சரியான முறையில் விசாரிக்கப்பட்டு, துப்பு துலக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, தண்டனையும் பெற்றுள்ளனர். விசாரணையில் தவறு இருந்தால், யார் மீதும் நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால், அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு, பதவி பறிபோனது மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் நெருக்கடியும் அதிகரித்து உள்ளது.

அரசு பணியாளர் மகா சம்மேளன தலைவர், பாலசுப்பிரமணியன் கூறுகையில்
,அரசு ஊழியரான முத்துக்குமாரசாமி, சிலரால் மிரட்டப்பட்டு, நெருக்கடி தாங்க முடியாமல், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Advertisement

இந்த நிகழ்வு குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

கைதுசெய்யும் வரை விட மாட்டோம்:
வேளாண் பொறியியல் துறை ஊழியர்கள் கூறுகையில்,சமீபத்தில், ஆவின் பாலில் தண்ணீர் கலந்த விவகாரம் பூதாகரமாகியது. சர்ச்சை வெடிக்க, பால்வளத் துறை அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தியின் கட்சிப் பொறுப்பும், அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. இதன் பின், பாலில் கலப்படம் செய்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. பாலை ஏற்றி வரும் லாரி ஒப்பந்தம் பெற்றிருந்த, வைத்தியநாதன் மட்டும் கைது செய்யப்பட்டார்; அமைச்சராக இருந்த மூர்த்தி மீது வழக்கு தொடரப்படவில்லை. அதேபோல், நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கிலும், அமைச்சர் நீக்கப்பட்டு, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது; இதை ஏற்க முடியாது. அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்படும் வரை விட மாட்டோம்

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (86)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - Madurai,இந்தியா
09-மார்-201519:47:02 IST Report Abuse
Tamilan இதுக்கும் ஒரு சாதி சங்கம் அக்ரி எங்காளு என்று வக்காலத்து வாங்கி கொண்டு போஸ்டர் ஒட்டுதுங்க....
Rate this:
Share this comment
Cancel
ravi - coimbatore,இந்தியா
09-மார்-201518:36:32 IST Report Abuse
ravi இங்கே நேரிய பேரு d m k அமைச்சர்கள் பற்றி கருத்து சொல்லி இருகிறார்கள்... dmk மந்திரிகள் நல்லது செய்து இருந்தாலும் அதை கேட்டது என்று சொல்லுவார்கள் தான் இருகிறார்கள் இங்கே... இந்த தமிழ்நாடு முட்டா பசங்க எப்போது திருந்துவார்கள் என்று புரிய வில்லை ...
Rate this:
Share this comment
Cancel
Vedanayagam Kalyanakumar - Chennai,இந்தியா
09-மார்-201518:28:40 IST Report Abuse
Vedanayagam Kalyanakumar ஒரு நேர்மையான அதிகாரி அ.தி.மு.க மந்திரியால் தற்கொலைக்கு தூண்டபட்டு இறந்துள்ளார். அந்த அமைச்சரை கைது செய்யாமல் பதவியை விட்டு விளக்கினால் போதுமா. சி.பி.சி.ஐ.டி போலீஸ் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எப்படி மந்திரி ஆக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுப்பார்கள் ? அதனால் சி.பி.ஐ விசாரனைக்கு உத்தரவு கொடுத்தால்தான் உண்மையான விசாரணை நடைபெறும்.
Rate this:
Share this comment
Cancel
yila - Nellai,இந்தியா
09-மார்-201516:24:30 IST Report Abuse
yila இப்படிப்பட்ட நெருக்கடிகள் வரும்போது அதிலிருந்து தப்பிக்க என்னென்ன செய்யலாம் என்பதை, அதிகாரிகளின் சங்கங்கள் கூடி முடிவு செய்து, அனைவருக்கும் அறிவிக்கலாம். எனக்குத் தெரிந்த ஒரு உண்மையான நிகழ்வு: வங்கிக்கடன் கொடுக்க கமிஷன் கேட்டு நெருக்கடி கொடுத்த வங்கி மேலாளர் மீது, வாடிக்கையாளர் ஒருவர், சிபிஐ இடம் நேரடியாகத் தொலைபேசியில் புகார் கொடுத்ததால், சிபிஐ நேரடியாக வந்து அந்த வங்கி மேலாளரைக் கைது செய்தது. அமைச்சர்களால் மிரட்டப்படும் அதிகாரிகள் இப்படி ஏன் செய்யக் கூடாது?
Rate this:
Share this comment
Cancel
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
09-மார்-201515:44:22 IST Report Abuse
மஸ்தான் கனி இப்படி பணப்பரிக்கும் அரசியல்வாதிகளை மக்கள் மீண்டு மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள், தண்டனைக் கொடுத்து என்னபலன்?
Rate this:
Share this comment
Cancel
Singam - Kuwait,குவைத்
09-மார்-201515:03:23 IST Report Abuse
Singam ஜெயலலிதா மேல் எனக்கு தனிப்பட்ட ஒரு வெறுப்பு உண்டு,,,அது ஊழல்,,,, அதே போல் அவங்களை போல் ஒரு சிறந்த நிர்வாகி என்ற போர்வையில் அவன்களின் அந்த தைரியம் எனக்கு பிடிக்கும்,,,ஒரு பெண் இத்தனை ஆண்களை தன காலடிக்குள் இத்தனை வருடம் வைத்து இருக்கிறார் என்றா சும்மாவா?? அதே போல் கட்டுப்பாடு மற்ற கட்சிகளுக்கு கடுகளவும் இல்லை...
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
09-மார்-201514:49:50 IST Report Abuse
Balaji விசாரணை எப்படி எந்த அளவுக்கு நேர்மையான முறையில் நடக்கும் என்பது கேள்விக்குறிதான்.........
Rate this:
Share this comment
Cancel
sivakumar - chennai,இந்தியா
09-மார்-201513:00:07 IST Report Abuse
sivakumar அம்மாவின் திருவிளையாடல் ஆரம்பம்...தன் மேல் உள்ள அவபெயரை மறைக்க என்னவெல்லாம் செய்ய போகிறாரோ...
Rate this:
Share this comment
Cancel
vandu murugan - chennai,இந்தியா
09-மார்-201512:19:32 IST Report Abuse
vandu murugan தோலை நக்கியவன் மாட்டிகிட்டான் , இவனிடம் சுளையை நக்கியவன் யார் என்று கேட்டு அவர்களுக்கும் தக்க தண்டனை வழங்க வேண்டும்,
Rate this:
Share this comment
Cancel
sp kumar - Chennai,இந்தியா
09-மார்-201512:14:30 IST Report Abuse
sp kumar அவரை பதவியில் இருந்து விலக்கியதே அவரை அரசு குற்றவாளியா தான் பார்கிறது என்பதற்கு ஒரு சாட்சி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.