அண்ணாதுரையின் நண்பர் கிள்ளிவளவன் காலமானார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அண்ணாதுரையின் நண்பர் கிள்ளிவளவன் காலமானார்

Added : மார் 13, 2015 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அண்ணாதுரையின் நண்பர் கிள்ளிவளவன் காலமானார்

சென்னை: முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நெருங்கிய நண்பர் டி.எஸ்.கிள்ளிவளவன், 90, காலமானார்.

கடந்த, 1926ல், சென்னை திருவல்லிக்கேணி யில் பிறந்த அவர், பள்ளிப் பருவத்தில் நீதிக்கட்சியின் பால் ஈர்க்கப்பட்டு, ஈ.?வ.ராவுடன் அரசியல் பணியாற்றினார். கடந்த, 1949ல், அண்ணாதுரை, தி.மு.க.,வை துவக்கிய போது, சென்ன மாவட்ட பிரதிநிதியாக செயலாற்றினார். கடந்த, 1967ல், காமராஜர் வாயிலாக, காங்கிரசில் இணைந்த கிள்ளிவளவன், காங்., கட்சி அலுவலக செயலராக, பல ஆண்டு காலமாக இருந்தார். முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வலது கரமாகவும் செயல்பட்டார். சில மாதங்களாக, நோய்வாய்பட்டு, வயோதிகத்தோடு போராடிய கிள்ளிவளவன், நேற்று மாலை, 6:30 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கம் குளக்கரை சாலையில் உள்ள, அவரது வீட்டில் காலமானார். கிள்ளிவளவனின் பரிதாப நிலை குறித்து, 'தினமலர்' நாளிதழில், சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, அவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vandhiyan - SanDiego,யூ.எஸ்.ஏ
15-மார்-201502:09:10 IST Report Abuse
Vandhiyan அண்ணாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். என்ன இவரு வயதுடைய மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் தமிழ்நாட்டுல எவ்ளோ சுபிட்சமா இருக்காங்க,ஆனால் இவர் பாவம், ரொம்ப நேர்மையா இருந்துட்டார் போல..
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
14-மார்-201515:08:59 IST Report Abuse
P. SIV GOWRI கிள்ளிவளவன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்தனை செய்வோம்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
14-மார்-201512:54:47 IST Report Abuse
Pasupathi Subbian வயதான திமுக தொண்டர் அப்படி என்றால் ஏழ்மை இவருக்கு சொந்தம். மேலும் அந்நாளைய அரசியல்வாதி. சம்பாதிக்க தெரியாத மனிதராக இருந்திருப்பார். அடுத்த தலைவர்கள் இவரை மறந்திருப்பர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X