ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காகட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு| Dinamalar

தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காகட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு

Added : மார் 15, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement


திருச்சி:ஸ்ரீரங்கத்தில், 8.67 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் நட்சத்திர வனத்தை, கலெக்டர் பழனிசாமி ஆய்வு செய்தார்.சிறு பூச்சிகள், புழுக்கள், பறவைகள் முதல் பெரிய விலங்குகள் வரை உணவுக்கு ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதால், உணவு சங்கிலியில் ஒவ்வொரு உயிரினங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
சில உயிரினங்களின் உணவாகவும், மகரந்த சேர்க்கையில் முக்கிய பங்காற்றும் வண்ணத்துப்பூச்சி இனத்தை பெருக்கி, பாதுகாக்கும் வகையில், ஸ்ரீரங்கம் மேலூர் காவிரிக்கரையில் வனத்துறைக்குச் சொந்தமான, 10 ஹெக்டர் பரப்பில், 8.67 கோடி ரூபாய் மதிப்பில் வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் நட்சத்திர வனம் அமைக்க கடந்த, 2012ம் ஆண்டு, தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.இந்த பூங்காவில், பூக்கள் மற்றும் நிழல் தரும் மரங்கள், மலர் செடிகள், அழகு செடி, கொடிகளுடன் கூடிய குழந்தைகள் பூங்கா, வண்ணத்துப்பூச்சி சிலை, தேன் தரும் பூக்களான சின்யா, பென்டாஸ், டிரைக்டரி, புலும்பாகோ, கோபி, அஸ்காப்பியா உள்ளிட்ட பல்வேறு செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.மேலும், இயற்கையான சூழலில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா மிருதுவான இலைகளை உண்டு வளரும் வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்கத்திற்கும், பாதுகாப்பிற்கும், மக்களின் பொழுதுபோக்கிற்கும் சிறந்த சுற்றுலாத்தலமாக அமைய உள்ளது.பூங்கா அமைக்கும் கட்டுமான பணியை, மாவட்ட கலெக்டர் பழனிசாமி பார்வையிட்டார். மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என அலுவலர்களிடம் கூறினார்.ஆய்வின் போது, மாவட்ட வன அலுவலர் சதீஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) ரபீந்தர், சுற்றுலா அலுவலர் ராமமூர்த்தி, வனச்சரகர் சரவணக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X