'பொருள் தேவை அதிகரிக்கும் போது வாழ்வது கடினமாகிறது': பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக மலர்கிறது மஞ்சள் பை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பொருள் தேவை அதிகரிக்கும் போது வாழ்வது கடினமாகிறது': பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக மலர்கிறது மஞ்சள் பை

Added : மார் 28, 2015 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
'பொருள் தேவை அதிகரிக்கும் போது வாழ்வது கடினமாகிறது': பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக மலர்கிறது மஞ்சள் பை

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, மஞ்சள் துணிப்பைகளை அறிமுகப்படுத்தி, குடும்பத்துடன் பிரசாரம் செய்து வருகிறார் கிருஷ்ணன். சூழலை பாதுகாப்பதில், துணிப்பை பயன்பாட்டுக்கு, தனி மரியாதை உள்ளது. இந்த தனித்துவமே, பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக மஞ்சள் பையை உருவெடுக்க வைத்துள்ளது. இந்த திருப்பத்தை ஏற்படுத்தி வருபவர், சென்னையில் வசிக்கும் கிருஷ்ணன்.


இதுகுறித்து அவர் கூறியதாவது:

பொருள் தேவை அதிகரிக்கும் போது, வாழ்க்கை கடினமாகிறது. பொருளுடன் வாழும் சுமையை குறைக்க துவங்கிய போதுதான் பிளாஸ்டிக் (நெகிழி) பைகள் பற்றி சிந்திக்க துவங்கினேன். பெங்களூரில், பிளாஸ்டிக் பைகளை பரண் மேல் வைத்திருந்தோம். சென்னை வந்த போது அவையும் உடன் வந்தன. இங்கு, 2012 நவம்பரில், 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளுக்கு தடை வந்தது. அப்போது, கடைக்கு, துணி பைகளை எடுத்து சென்றோம். ஆனால், பொருட்கள் பிளாஸ்டிக் பைக்குள் இருந்தன. அவற்றை, துணிப்பையில் கட்டி வரவேண்டியிருந்தது. எனவே சில்லரையாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவற்றை, அண்ணாச்சி கடைகளில் பையில் வாங்கினேன். சூப்பர் மார்க்கெட்களுக்கு போவதை தவிர்த்தேன். பிளாஸ்டிக் பைகள் வீட்டுக்குள் வருவது குறைந்தது.

மதுரையைச் சேர்ந்த எனக்கு, துணிப்பை நெருக்கமானது. மஞ்சள் பையிலோ, மூங்கில் கைகள் கொண்ட பெரிய துணிப் பைகளிலோ தான் பொருட்களை வாங்கி வருவோம். சில்லரை பொருட்களை, தாளில் கட்டிக் கொடுப்பர். பலசரக்கு கடைகளில், பழைய செய்தித்தாள்களை அடுக்கி, பெரிய சணல் நூல் பந்தை தொங்க விட்டிருப்பர். நூலை இழுத்து, செய்தித்தாளை மடித்து, பொட்டலம் கட்டுவதே தனி அழகு. துணிப்பைகள் தேய்ந்து, பிய்ந்து போகும் வரை பொருட்களை சுமக்கும். பின், சமையலறையில் கரித்துணியாகி அழிந்து போகும். பிளாஸ்டிக் பைகள், கைக்கு வந்த 30 நிமிடத்திற்குள், குப்பை தொட்டிக்கு போய், அடுத்த சில நாட்களில், குப்பை திடல்களில் எரிந்து நச்சைக் கக்குகின்றன. இந்த முரண்பாடு தான், 'தி எல்லோ பேக்' என்ற பெயரில், மஞ்சள் பையை தயாரித்து, அறிமுகப்படுத்த தூண்டியது. என் மனைவி கவுரியும், இதற்கு ஒத்துழைத்து வருகிறார். செயற்கை சாயத்தால் வண்ணம் உருவாக்குவதை தவிர்த்து, பருத்தி துணியை துணிப்பைகளுக்காக அப்படியே பயன்படுத்துவதால், இயற்கை அங்காடிகளில் விரும்புகின்றனர். சமூக விழாக்களில், விருந்தினருக்கு பரிசளிக்க பரிந்துரைத்து வருகிறோம். 'நெகிழி பூதம்' ஒன்றை, பிளாஸ்டிக் பைகளால் உருவாக்கி, பொது இடங்களில் நிறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இதையே, துணிப்பையை பயன்படுத்த- நமது- நமது சிறப்பு நிருபர் - சிறப்பு நிருபர் - பிரசாரமாக பயன்படுத்துகிறோம். 'தி எல்லோ பேக்' என்பதை இயக்கமாக்கி உள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார். தொடர்புக்கு: 98401 66905

- அமுதன் -

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan - Madurai,இந்தியா
29-மார்-201507:06:14 IST Report Abuse
Loganathan சணல் பைகளையும் பல கடைகளில் வழங்கி சுற்று சூழலுக்கு உதவுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
A.Sethupathi - chennai,இந்தியா
29-மார்-201506:27:08 IST Report Abuse
A.Sethupathi எதாவது மளிகை கடையில் பேப்பரில் கட்டி கொடுத்தல் அந்த கடைக்கு நாங்கள் மாற விரும்புகிறோம்( குரோம்பேட்டையில் )
Rate this:
Share this comment
Cancel
murugan - Chennai ,இந்தியா
29-மார்-201503:38:49 IST Report Abuse
murugan இதைவிட தாவர நார் பைகளை தயாரித்து விற்பனை செய்ய அரசு மானியம் ஒதுக்க வேண்டும். அதில் கூட தையல் போடுவதற்கு பதில் அதனை வெட்டி ஒட்டி பயன்படுத்த ஊக்கமளிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X