கோவில் கோபுரம் அருகே கழிப்பறை: நெல்லையில் தான் இந்த கூத்து!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் கோபுரம் அருகே கழிப்பறை: நெல்லையில் தான் இந்த கூத்து!

Added : மார் 31, 2015 | கருத்துகள் (16)
Advertisement

திருநெல்வேலி: திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவிலின், வடக்கு கோபுர வாசல் அருகே, கோவில் நிர்வாகம் கழிப்பறை கட்டி வருவதற்கு, பக்தர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இங்குள்ள சிற்பங்கள், இசைத்தூண்கள் உலக பிரசித்திப் பெற்றவை. அதனால், இக்கோவில், தொல்பொருள் சிறப்புமிக்கதாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. நெல்லையப்பர் கோவிலின், வடக்கு கோபுர வாசல் அருகே, கோவிலுக்கு சொந்தமான இடம், பல நாட்களாக ஆக்கிரமிப்பில் இருந்தது. பொதுமக்கள் பலரும், கோவில் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த ஆக்கிரமிப்பு நீக்கப்பட்டது. தற்போது, அந்த இடத்தில், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான பொதுக் கழிப்பறையை, கோவில் நிர்வாகம் கட்டி வருகிறது. இதற்காக, வடக்கு கோபுர வாசல் அருகே, மிகப் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு, வேலை நடந்து வருகிறது.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது: கோவில் கட்டும் போது, கோபுரத்திற்கு பெரிய அளவில் அஸ்திவாரம் போடப்படுவதில்லை. அதனால், கோபுரம் அருகே, கட்டடங்கள் கட்டுவது, போர்வெல் போடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறியதால் தான், 2010ல், காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்தது. தற்போது, நெல்லையப்பர் கோவிலில் விதிமுறை மீறப்படுகிறது. அதனால், கோபுரத்திற்கு தான் ஆபத்து. கந்தசஷ்டி விழாவின் சூரசம்ஹாரத்தின் போது, முருகன் பக்தர்களுக்கு காட்சி தருவது, வடக்கு கோபுர வாசல் அருகே தான். இதனால், கோபுர வாசல் அருகே, கழிப்பறை கட்டக் கூடாது. இவ்வாறு, அவர்கள் கூறினர். இது குறித்து, நெல்லையப்பர்கோவில், உதவி ஆணையரிடம், மனு ஒன்றை அளித்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
01-ஏப்-201514:26:19 IST Report Abuse
LAX கோவிலின் உள்ளேயே குளியலறைகள்/கழிப்பறைகள் கட்டியிருக்கும் கோவிலும் இருக்கே.. அதுவும் சரியான பராமரிப்பின்றி.. கட்டண வசூல் மட்டும் கறார்..
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
01-ஏப்-201507:11:46 IST Report Abuse
spr ஒரு வீட்டு கிரகப்பிரவேசம் சென்றிருந்த பொழுது, புரோகிதர் ஒருவர் இயற்கை உபாதைக்காக அந்த இல்லத்தின் குளியலறையைப் பயன்படுத்தி வெளியே வந்தார். நாற்றம் தாங்க முடியவில்லை. அவரிடம் அருகில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டியதுதானே என்றால், "அங்கு போனால் குளிக்க வேண்டும் இங்கு போனால் "அங்க சுத்தி" செய்து கொண்டால் மட்டும் போதும்" என்றாரே பார்க்கலாம். இது போன்ற இந்தக் கழிப்பறை குறித்த நம் மனநிலை மாறாதவரை இதுவும் ஒரு பிரச்சினையே. அண்மைக்கால வரை திருவண்ணாமலையார் கோவிலின் ஒரு வெளிப்பிரகாரம் சுற்றுலாப் பயணிகளின் திறந்தவெளி கழிப்பறையாகவே இருந்தது எல்லோரும் அறிந்த உண்மை. அன்பர்கள் திரு ரஜினி, இளையராஜா போன்ற பிரபலங்கள் எடுத்த முயற்சியின் பயனாக இன்று சற்றே தூய்மையாக இருக்கிறது. நெல்லை மற்றும் கும்பகோணம் அருகில் பல கோவில்கள் குறிப்பாக அறநிலையத்துறை வசம் இருப்பவற்றில் இந்த அவலம் தொடர்கிறது. நீரழிவு நோய் அதிகமாகிவிட்ட இந்நாளில் ஆலையம் வரும் அன்பருக்கு (ஆண்கள் இன்னமும் மிருகங்கள் போல எங்கே வேண்டுமானாலும் இயற்கை உபாதையைத் தணித்துக் கொள்கிறார்கள் என்பதால்) கழிப்பறை இன்மை என்பது குறிப்பாகப் பெண்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை கழிப்பறையில் நீர் வசதி இல்லாதது இன்னும் பெரிய பிரச்சினை. அதனாலேயே துர்நாற்றம் வீசும் வாய்ப்பும் அதனால் மக்கள் அதனைப்பயன்படுத்தாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே நீர் வசதியுடன், ஆலையத்தில் வெளிப்பிரகாரத்தில், ஒரு பகுதியில் கழிப்பறை கட்டுவதால் ஆலையம் தூய்மையாக இருக்க வாய்ப்புள்ளது தொலைவில், ஆலையத்திற்கு வெளிப்புறம் வந்துதான் பயன்படுத்த வேண்டுமென்றால், நம் மக்கள் அதனைப் பயன்படுத்தும் வாய்ப்பு மிகக் குறைவு. இதில் இன்னொரு வேடிக்கை பல இடங்களில் கழிப்பறையும் கட்டி அதற்கு "அலிகார்" பூட்டும் போட்டிருக்கிறார்கள் அது அறநிலையத்துறை அதிகாரிகள் பயன்பாட்டிற்கு மட்டுமாம் ஆனால் சில இடங்களில் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடுகளில் தனியார் கழிப்பறை கட்டி கட்டணமும் வசூலிக்கிறார்கள் எனவே இது போன்ற நல்ல செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாம் சிங்கப்பூர் போல இந்த நாடு மாறவேண்டுமெனக் கனவு காண்பதிலும் அதனை நனவாக்கியவர்களைப் பாராட்டுவதிலும் என்ன சிறப்பு இருக்கிறது.
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
01-ஏப்-201514:24:02 IST Report Abuse
LAXமிகவும் சரியாச் சொன்னீங்க.....
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
31-மார்-201520:15:39 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அடடா உம்மாசிக்கு கக்கா வந்தால் போக வசதியா இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
31-மார்-201518:26:16 IST Report Abuse
Agni Shiva நாய்களுக்கு கூட அறிவு இருக்கிறது. ஆனால் இந்த மனித உடல் கொண்டு நடமாடும் இந்த ஜந்துக்களுக்கு மட்டும் ஏன் அறிவு மங்கி போகிறது? கழிவறை கட்ட அனுமதித்த அதிகாரிகளை மருத்துவ ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
31-மார்-201516:47:11 IST Report Abuse
Sundeli Siththar இவ்வளவு அருகாமையில் தேவையில்லை. அதேநேரம், வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சற்று தொலைவில் கழிவறை இருப்பதும் அவசியம்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
31-மார்-201515:18:30 IST Report Abuse
Pasupathi Subbian கோவில் நிர்வாகம் நல்லபடி நடக்கத்தான் அரசாங்கம் இந்து அறநிலையத்துறை என்று ஒரு துறையை ஆரம்பித்து அதன் அலுவலர்கள் உதவி செய்வதற்காக அனுப்பப்பட்டனர். ஆனால் தற்போது அவர்கள் அந்த அந்த கோவில்களின் தலைவர்கள் போல நடக்க ஆரம்பித்து விட்டனர். ஆகமம் என்றால் என்ன என்பதுகூட புரியாமல் தெரியாமல் இவர்கள் தற்குரிதனமாக நடப்பது பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதே வழக்கமாகி விட்டது. ஒரு கட்டிட வல்லுநர்களையோ ஸ்தபதிகளையோ கலந்துகொள்ளாமல் , தங்களின் இஷ்டபடி நடவடிக்கை எடுப்பது இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது என்றே தெரியவில்லை. இது பக்தர்களின் சுதந்திரத்தில் தலையீடு செய்ய இவர்களுக்கு உரிமை இல்லை.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
31-மார்-201513:43:10 IST Report Abuse
மதுரை விருமாண்டி அறிவு கெட்ட மூதிகளின் கையில் சிக்கி சின்னாபின்னமாகிறது நமது கலைவளம்.. ஒரு தூணை நயமாக செய்து நிறுத்த முடியுமா இவனுங்களால்? இதே போன்ற கொடுமைகள் எல்லா கோவில்களிலும் உள்ளது. இன்றும் திருவரங்கம் கோவிலுக்குள் ரெட்டை இலை சின்னத்துடன் மினி லாரி உள்ளே தூண்களை இடித்துக் கொண்டும், தேய்த்துக் கொண்டும் புகையி கக்கிக் கொண்டும் நாசமாக்கிக் கொண்டு இருக்கிறது. ஆமாம், கோவில் உள் பிரகாரத்துக்குள் தான்.. சம்மி கண்ணி மூடிக்கிட்டு நீட்டிப் படுத்துக் கெடக்குறர் என்கிற மதப்பில் ஆளும்கட்சியின் அல்லக்கை ஒப்பந்தக்காரர்களின் கொட்டத்தை கண்டால் கண்ணீர் தான் வருகிறது.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
31-மார்-201513:15:41 IST Report Abuse
தமிழ்வேல் கோவிலை மறைத்து அதுவும் கோவிலுக்கு பக்கத்திலேயே அமைப்பது சரியல்ல... கோவிலின் தெரு முனையில், கடைகள் உள்ள இடத்தில் கோவிலிலிருந்து சுமார் 50, 100 மீட்டர் தூரத்தில் அமைப்பதே சரி.. ஆனால், கழிப்பறை தேவையானதொன்று. சமீபத்தில் சஷ்டியப்த பூர்த்தி செய்யப்படும் ஒரு முக்கிய கோவிலில் அம்மன் கோவில் பின்புறம் உள்ள இடத்தில் (கோவில் வளாகம்) அர்ச்சகர் ஒருவர் இயற்கை உபாதையை கழித்ததைப் பார்த்தேன். இது ஒரு அவசரத்தினால் இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
31-மார்-201512:19:29 IST Report Abuse
P. SIV GOWRI கோபுர வாசல் அருகே, கழிப்பறை கட்டுவது சரியானது அல்ல. கோவில் நிர்வாகம் இதை கை விட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
31-மார்-201511:00:59 IST Report Abuse
chinnamanibalan கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கழிப்பிடம் கட்டுவது அவசியம்தான்.ஆனால் கோபுரத்தின் வாசலை ஓட்டினால் போல் கழிப்பிடம் கட்டுவது கண்டிக்க தக்கது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை