வயல்வெளிகளில் ஆடுகளின் மந்தை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வயல்வெளிகளில் ஆடுகளின் மந்தை

Added : ஏப் 03, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பொன்னேரி: ஆடுகளின் சாணத்திற்காக, விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு, 1,000 ரூபாய் செலவிட்டு, வயல்வெளிகளில், அவற்றை மந்தை போடுகின்றனர். ஆந்திர மாநிலம், புத்தூர், சித்தூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆடு வளர்ப்பவர்கள், 20 ஆயிரத்திற்கும் அதிகமான செம்மறி மற்றும் வெள்ளை ஆடுகளுடன், பொன்னேரியை சுற்றியுள்ள கிராமங்களில் முகாமிட்டு உள்ளனர். இயற்கை உரமாக உள்ள ஆடுகளின் சிறுநீர் மற்றும் சாணத்திற்கு விவசாயிகளிடையே வரவேற்பு, அவற்றிற்கு கிராக்கி உள்ளது. மேற்கண்ட ஆடுகளை, விவசாயம் மேற்கொள்ள உள்ள விளைநிலத்தில் அடைத்து, மந்தை போடுகின்றனர். ஒரு ஏக்கரில், 500 ஆடுகள் மந்தை போடப்படுகிறது. ஒரு இரவு முழுவதும், அவை அதே இடத்தில் இருக்கும்படி, நான்கு பக்கமும் ஆடு வளர்ப்பவர்கள் காவல் இருக்கின்றனர். இதற்காக, விவசாயிகளிடம் இருந்து, நாளொன்றிற்கு, ஒரு ஏக்கருக்கு, 1,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். பகலில் இரை தேடும் ஆடுகள், இரவில், விவசாயி கூறும் இடத்தில் மந்தை போட்டு அடைக்கப்படுகிறது. இரவு முழுவதும், ஆடுகளின் சாணம் மற்றும் சிறுநீர், விளைநிலத்தில் பரவலாக விழும்படி பார்த்துக்கொள்ளப்படுகிறது. குருவை பருவத்திற்கு தயாராகி வரும் விவசாயிகள், இதுபோன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X