India's rich temples may open gold vaults for Modi | கோவில் தங்கத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்தும் திட்டத்துக்கு வரவேற்பு: அரசின் புது திட்டம் மூலம் கோவில்களுக்கும் வருமானம் Dinamalar
Advertisement
பதிவு செய்த நாள் :

Dinamalar Banner Tamil News

Advertisement

புதுடில்லி : இந்து கோவில்களில் உள்ள தங்கத்தை வங்கிகள் மூலம் பெற்று, அதற்கு ஈடாக வட்டி அளிக்கும் புதிய திட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. தங்கம் இறக்குமதி செய்வதன் மூலம் செலவாகும் அன்னிய செலாவணியை வெகுவாகக் குறைக்கவும், கடத்தல் தங்கத்தை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கோவில்களும் அதிக அளவு வட்டி பணத்தைப் பெற்று, கோவில் மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்தலாம். இந்த திட்டத்தை, பலரும் வரவேற்றுள்ளனர்.

முந்தைய அரசுகளைப் போல இல்லாமல், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, புதுமையான பல திட்டங்களை தீட்டி வருகிறது.துாய்மை இந்தியா, இந்தியாவில் உற்பத்தி, அமைச்சர்கள், அதிகாரிகளின் ஆடம்பரத்திற்கு தடை போன்ற நடவடிக்கைகள் வித்தியாசமானவையாகக் கருதப்படுகின்றன.

தங்கத்துக்கு பணம்:

அந்த வகையில், கடந்த பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டின் போது, நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்த, தங்கத்தை வங்கிகளில் இருப்பு வைத்து, பணமாக பெறும் வசதியும் ஒன்று.'கோல்ட் மானிடிசேஷன் பிளான்' எனப்படும் இந்த திட்டம், கடந்த, 1999ம் ஆண்டிலேயே அறிமுகமானது. வட்டி வீதங்கள் குறைவாக வழங்கியதால், அந்தத் திட்டம் வரவேற்பை இழந்தது. முந்தைய திட்டத்தை சற்றே மாற்றிஅமைத்துள்ள மோடி அரசு, கோவில் தங்கத்தை குறிவைத்துள்ளது.திருவனந்தபுரம் பத்ம நாப சுவாமி கோவில், மும்பை சித்தி வினாயகர் கோவில், ஷீரடி சாய்பாபா கோவில், புட்டபர்த்தி சாய்பாபா கோவில் போன்ற பிரபலமான கோவில்களின் இரும்பு பெட்டகங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகளை வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். அந்த தங்கத்திற்கு ஈடான ரூபாய் மதிப்பிற்கு, கோவில் நிர்வாகங்களுக்கு வங்கிகள் வட்டி கொடுக்கும்.

இறக்குமதி தங்கம்:

வங்கிகளில் உள்ள தங்கத்தை, தங்கக் கட்டிகளாக உருக்கி, உள்ளூர் சந்தையில் அரசு விற்பனை செய்யும். இதனால், தங்கம் இறக்குமதி குறையும்.இதில், மத்திய அரசுக்கு என்ன லாபம் என்ற கேள்வி எழலாம்.வர்த்தக பற்றாக்குறை எனப்படும், இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையேயான வித்தியாசத்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு, தங்கம் இறக்குமதியால் தான்

அதிகமாக உள்ளது. ஒவ்வொரு பண்டிகையின் போதும் தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களை வாங்கி அணிவதையும், தங்க நாணயங்களை இருப்பு வைப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ள நம் இந்திய மக்கள், கையில் கிடைக்கும் பணத்தில் அதிக தொகையை, தங்கத்தில் முதலீடுசெய்கின்றனர். இதனால், வெளிநாடுகளில் இருந்து, ஆயிரக்கணக்கான டன் தங்கம், ஒவ்வொரு ஆண்டும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கான பணத்தை, அமெரிக்க டாலராகக் கொடுக்க வேண்டி உள்ளது. இதனால், அமெரிக்க டாலருக்கு தேவை அதிகரிப்பதால், நம், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து விடுகிறது. இதை சரிகட்ட அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் பெரும்பாலும் பலனளிப்பதில்லை. இதனால், ஆண்டுக்கு ஆண்டு வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து, பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது.சித்தி வினாயகர்:

இந்த பாதிப்பில் இருந்து மீள, நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல, மோடி அரசு, கோவில்களில் உள்ள தங்கத்தை பெற முடிவு செய்துள்ளது. இந்திய கோவில் பெட்டகங்களில், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.மும்பையில், 200 ஆண்டுகள் பழமையானதும், இந்தியாவின் பணக்கார கோவில்களில் ஒன்றுமான சித்தி வினாயகர் கோவிலில், பல நுாறு கிலோ தங்கம் உள்ளது. கேரளாவின் பத்மநாப சுவாமி கோவிலின் ரகசிய அறைகளில் பாதுகாக்கப்பட்டு வரும், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, பல ஆயிரம் கிலோ தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் திருப்பதி, வெங்கடாஜலபதி கோவிலிலும், டன் கணக்கில் தங்கம் இருக்கிறது. இந்திய குடும்பங்களில் பயன்பாட்டில் உள்ள தங்கத்தின் எடை, 17 ஆயிரம் டன் என, புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த அளவு, அமெரிக்காவின் முன்னணி வங்கி ஒன்றின் இருப்பில் உள்ள தங்கத்தை விட பல மடங்கு அதிகமானது.

சம்மதமா?

அரசின் இந்த திட்டத்திற்கு மக்களை சம்மதிக்க வைப்பது கஷ்டம் என அரசு கருதுகிறது. பல நுாறு ஆண்டுகளாக, தங்கள் இஷ்ட கடவுள்களுக்கு பக்தர்கள் சிறுக சிறுக கொடுத்த தங்க ஆபரணங்களை சேர்த்து வைத்துள்ள கோவில்கள், அவற்றை அரசிடம் அள்ளிக் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கவர்ச்சிகரமான வட்டி வீதம் கிடைத்தால் தான், இந்த முறைக்கு மக்கள் ஒத்துழைப்பர். முந்தைய திட்டப்படி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தங்கத்திற்கு 0.75 - 1 சதவீத வட்டி தான் வழங்குகிறது. இப்போதும், 15 டன் தங்கத்தை அந்த வங்கி இருப்பாக வைத்துள்ளது.

கோவில்களில் உள்ள தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களை, மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, வங்கிகளுக்கு கொடுப்பீர்களா... அந்த தங்கத்தை, வங்கிகள், தங்கக் கட்டிகளாக மாற்ற அனுமதிப்பீர்களா... என, பக்தர்கள் சிலரிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:நாங்கள் தங்கம் காணிக்கையாக வழங்குவது, கோவிலுக்கு அல்ல; அந்த கோவிலில் வீற்றிருக்கும் கடவுளுக்கு. கடவுளுக்கு நாங்கள் கொடுக்கும் தங்கத்தை விட, கூடுதலாக அவர் எங்களுக்குத் தருவார் என்ற நம்பிக்கையில் தான் தங்கத்தை தானமாக வழங்குகிறோம்.நாங்கள் வழங்கும் தங்கம், வங்கிகளுக்கு கொண்டு செல்லப்படும் என்றால், தங்க நகைகளை தானமாக வழங்க மாட்டோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நிர்வாகிகள் வரவேற்பு :

ஷீரடி சாய்பாபா கோவில் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கடவுள்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்கத்தை சேர்த்து வைத்து வருகிறோம். எவ்வளவு தங்கம் இருப்பில் உள்ளது என்ற விவரத்தை வெளிப்படையாக, சில கோவில் நிர்வாகங்கள் தெரிவிப்பது இல்லை.எங்கள் வசம் உள்ள தங்கம் எவ்வளவு என்பது குறித்து, வெளிப்படையாகக் கூற முடியாது. மேலும், அரசின் கோரிக்கையை ஏற்க நாங்கள் தயாராக இருந்தாலும், பக்தர்கள் ஏற்றுக் கொள்வரா என்பது சந்தேகமே.இவ்வாறு, அவர் கூறினார்.

ஆனால், மும்பை சித்தி வினாயகர் கோவில் நிர்வாகிகள், இதுகுறித்து கூறும் போது, 'அரசு கேட்டுக் கொண்டால், நாட்டின் நலனுக்காக எங்கள் வசம் உள்ள தங்கத்தை தரத் தயாராக உள்ளோம். முடங்கிக் கிடக்கும் தங்கத்திற்கு வட்டி கிடைப்பதால், அதை கோவில் மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்த முடியும்' என்றனர்.

Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:வாசகர் கருத்து (133)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karuna - Tirupur,இந்தியா
13-ஏப்-201513:20:34 IST Report Abuse

Karunaசிவன் சொத்து குல நாசம் என்பது மோடிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை ... அதை தின்னும் மக்களுக்கும் தான் பிரச்சினை. பார்த்து முடிவு பண்ணுங்க ....

Rate this:
Proud Indian - kumari2kashmir,இந்தியா
11-ஏப்-201523:08:36 IST Report Abuse

Proud Indianகோரி, கஜினி இவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
11-ஏப்-201522:52:30 IST Report Abuse

g.s,rajanஎல்லா மதங்களிலும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் உள்ள தங்கம் கைப்பற்றப் படவேண்டும்.மதச் சார்பே வேண்டாம்.

Rate this:
Devar - Abu Dhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஏப்-201522:34:28 IST Report Abuse

Devar இந்தியாவிலேயே தென்னக கோவில்களில்தான் அதிக சொத்துகளும் , தங்க நகைகளும் உள்ளன. அதை நூதன முறையில் கொள்ளையடிக்க வட இந்திய முதலாளித்துவ கூட்டம் போடும் திட்டமே. இதை கடுமையாக எதிர்க்க வேண்டும். உங்களையெல்லாம் தென்னக கடவுள் தண்டிக்காமல் விடாது.

Rate this:
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
12-ஏப்-201510:59:00 IST Report Abuse

மதுரை விருமாண்டிமதக் கடவுள், தென்னகக் கடவுள்.. கடவுளையும் ஊரு, ஜாதி வாரியா பிரிச்சாச்சா? வெளங்கிடும்.. ஆனாலும் உங்க கடுப்பு என்னான்னு புரியுது.. கடவுள் பேரை சொல்லி மனுசப் பயலுகள் செய்ற செட்டை தான் இதெல்லாம்....

Rate this:
adalarasan - chennai,இந்தியா
11-ஏப்-201522:32:00 IST Report Abuse

adalarasanகருப்புப்பணம் ஒருபகுதி கோவிலகளில் உண்டியலில் தங்கமாக போடுகிறார்கள். அதை அரசாங்கம்,நாட்டில் நற்பணிக்காக செலவழிப்பதில் தவறில்லை

Rate this:
Arvind Bharadwaj - Coimbatore,யூ.எஸ்.ஏ
11-ஏப்-201521:51:38 IST Report Abuse

Arvind Bharadwajபழமையான பொருட்களுக்கும். கலாச்சாரத்துக்கும் உலகமே தலைவணங்கி போற்றிப் பாதுகாக்கிறது. ஆனால், இந்தியாவில் மட்டும்தான் இதனை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை அரசாங்கமும், மக்களும். நூற்றுக் கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க நாணயங்களும், நகைகளும் அரசின் முட்டாள்தனமான நடவடிக்கைகளாலும், ஒரு சிலரின் பேராசையாலும் தீக்கிரையாகப் போகிறது என்றால் நம்பவே முடியவில்லை.

Rate this:
Varun Ramesh - Chennai,இந்தியா
11-ஏப்-201517:33:41 IST Report Abuse

Varun Rameshஇந்திய மக்களின் தங்க நகை மோகம் - அதன் காரணமாக அதிக அளவில் தங்கம் இறக்குமதி - அதன் காரணமாக வர்த்தக பற்றாக்குறை அமெரிக்க டாலருக்கான அதிகப்படியான தேவை - அதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி - அதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி குறைவு - அனைத்தும் சரி. எனவே, கோவில் பெட்டகங்களில் இருக்கும் தங்கத்தை வங்கிகள் மூலமாக பெற்று அதனை உருக்கி சந்தையில் விற்பனை செய்வது, மேற்சொன்ன பிரச்சனையை கையாள தென்படும் வழிமுறைகளில் ஒன்று என்பதில் ஐயமில்லை. ஆனால், அது ஒன்று மட்டுமே வழியில்லை. பல நூற்றாண்டு பாரம்பரியமும் கலாச்சார பின்னணிகளையும் கொண்ட கோவில் தங்க நகைகளை உருக்கினால் கலாச்சாரத்தை உருக்கொலைப்பதற்கு சமமில்லையா? உருக்கிய நகை, தேவைப்பட்டால், மீண்டும் உருப்பெறலாம். ஆனால், பாரம்பரியத்தை மீட்க முடியுமா? மேலும், கோவில்களில் இருந்து கிடைக்கும் தங்கம், நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை ஈடு செய்யத்தேவையான அளவிற்கு இருக்குமா என்பது சந்தேகமே. மாறாக, பொது மக்கள் வைத்துள்ள நகைகளில் அதிகம் பயன்படுத்தாத தங்க நகைகளை மேற்சொன்னவாறு பெற்று, அவர்களுக்கு வட்டி கொடுத்து, அதனை பயன்படுத்தலாம். ஏனென்றால், அவர்கள் நகைகளை வாங்கி சில காலங்களுக்குப்பின் நாகரீக மாற்றங்களை முன்னிட்டு அவற்றை மாற்றி புதிய நகைகளை வாங்குவது வழக்கமான ஒன்று தான். அதனால் இதில் பாரம்பரியம் குறித்த பிரச்சனை எழ வாய்ப்பில்லை. அதனால் எதிர்ப்புகள் வராது. இதனை ஊக்குவிக்கும் வகையில் தேவையான சட்டங்களை கொண்டுவரலாம். பொதுவாக தங்கத்தின் மீது முதலீடு செய்வதை குறைக்குமாறு மக்களுக்கு எடுத்துச்சொல்லலாம். அனைத்திற்கும் மேலாக, கருப்பு பணத்தை ஒழிக்க முயற்சி செய்யலாம். கருப்பு பணம் தான் பொருளாதார சீர் கேடுகளுக்கு அதி முக்கியமான காரணம். அதனை கட்டுப்படுத்த நடை முறை சாத்திய வழிகளை செயல் படுத்த அரசு முன் வருமா? அதுதான் நிரந்தர தீர்வாகுமே தவிர, கோவில் நகைகளை பெறுவது நிரந்தர தீர்வல்ல. அது கலாச்சார ஒழிப்பிற்கு வேண்டுமானால் பயன்படலாம். வர்த்தக பற்றாக்குறையை களைய பயன்படாது.

Rate this:
Varun Ramesh - Chennai,இந்தியா
11-ஏப்-201517:04:54 IST Report Abuse

Varun Rameshஇந்திய மக்களின் தங்க நகை மோகம் - அதன் காரணமாக அதிக அளவில் தங்கம் இறக்குமதி - அதன் காரணமாக வர்த்தக பற்றாக்குறை அமெரிக்க டாலருக்கான அதிகப்படியான தேவை - அதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி - அதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி குறைவு - அனைத்தும் சரி. எனவே, கோவில் பெட்டகங்களில் இருக்கும் தங்கத்தை வங்கிகள் மூலமாக பெற்று அதனை உருக்கி சந்தையில் விற்பனை செய்வது, மேற்சொன்ன பிரச்சனையை கையாள தென்படும் வழிமுறைகளில் ஒன்று என்பதில் ஐயமில்லை. ஆனால், அது ஒன்று மட்டுமே வழியில்லை. பல நூற்றாண்டு பாரம்பரியமும் கலாச்சார பின்னணிகளையும் கொண்ட கோவில் தங்க நகைகளை உருக்கினால் கலாச்சாரத்தை உருக்கொலைப்பதற்கு சமமில்லையா? உருக்கிய நகை, தேவைப்பட்டால், மீண்டும் உருப்பெறலாம். ஆனால், பாரம்பரியத்தை மீட்க முடியுமா? மேலும், கோவில்களில் இருந்து கிடைக்கும் தங்கம், நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை ஈடு செய்யத்தேவையான அளவிற்கு இருக்குமா என்பது சந்தேகமே. மாறாக, பொது மக்கள் வைத்துள்ள நகைகளில் அதிகம் பயன்படுத்தாத தங்க நகைகளை மேற்சொன்னவாறு பெற்று, அவர்களுக்கு வட்டி கொடுத்து, அதனை பயன்படுத்தலாம். ஏனென்றால், அவர்கள் நகைகளை வாங்கி சில காலங்களுக்குப்பின் நாகரீக மாற்றங்களை முன்னிட்டு அவற்றை மாற்றி புதிய நகைகளை வாங்குவது வழக்கமான ஒன்று தான். அதனால் இதில் பாரம்பரியம் குறைத்த பிரச்சனை எழ வாய்ப்பில்லை. அதனால் எதிர்ப்புகள் வராது. இதனை ஊக்குவிக்கும் வகையில் தேவையான சட்டங்களை கொண்டுவரலாம். பொதுவாக தங்கத்தின் மீது முதலீடு செய்வதை குறைக்குமாறு மக்களுக்கு எடுத்துச்சொல்லலாம். அனைத்திற்கும் மேலாக, கருப்பு பணத்தை ஒழிக்க முயற்சி செய்யலாம். கருப்பு பணம் தான் பொருளாதார சீர் கேடுகளுக்கு அதி முக்கியமான காரணம். அதனை கட்டுப்படுத்த நடை முறை சாத்திய வழிகளை செயல் படுத்த அரசு முன் வருமா? அதுதான் நிரந்தர தீர்வாகுமே தவிர கோவில் நகைகளை பெறுவது நிரந்தர தீர்வல்ல. அது கலாச்சார ஒழிப்பிற்கு வேண்டுமானால் பயன்படலாம். வர்த்தக பற்றாக்குறையை களைய பயன்படாது.

Rate this:
Shruti Devi - cbe,இந்தியா
11-ஏப்-201516:54:59 IST Report Abuse

Shruti Deviஏழைகளிடமும் பிடுங்கும் கோவில்களில் உள்ள தங்கம் ஏழைகளுக்குத் தான் சேர வேண்டும்.. அதை மக்களிடம் நேரடியாக சேர்க்கணும்.அரசை எதிர்த்து கோவில்கள் மீண்டும் தங்கத்தை கேட்டு பெற முடியுமா? நாளைக்கு இன்னொரு அரசு வந்து வட்டி விகிதத்தை குறைத்தால் என்ன செய்வது? தங்கமும் போச்சு, வட்டியும் போச்சு...நாளைக்கு இன்னொரு அரசு வந்து வட்டி விகிதத்தை குறைத்தால் சரின்னு சொல்லலாம் கோவிலுக்கு ஏன் வட்டின்னு சொல்லிட்டா... கொஞ்சம் சிந்திக்கவும்.........பணத்திற்கு பதிலாக நிலம் அளிக்கலாம். அதில் பள்ளி கல்லூரிகள் தொடங்கலாம் இந்துகளுக்காக அரசு தலையீடு இல்லாமல்.

Rate this:
chennai sivakumar - chennai,இந்தியா
11-ஏப்-201516:52:17 IST Report Abuse

chennai sivakumarஎதற்கு இந்து கோயில். எல்லா மத கோவில்களிலும் உள்ள தங்கத்தை வெளிக் கொண்டு வரட்டும். அந்த அந்த கோவில்களுக்கு வட்டி கொடுக்கட்டும். திரு மொரார்ஜி தேசாய் அவர்கள் தங்க bond கொண்டு வந்த கதை போல ஆகி, உள்ளதும் ................. .............களுக்கு போச்சு நொள்ள கண்ணா என்ற கதை ஆகிவிடும். இந்த கருத்துக்கு reserve பேங்க் கவர்னர் அவர்களின் ஒப்புதலை இவர்களால் பெற முடியுமா? முடியாது. ஏனென்றால் அவர் கொடுக்க மாட்டார். உலக மார்க்கட்டில் தங்கம் ஏறு முகமாக உள்ளது. தங்கத்தின் இன்றைய மதிப்பை வைத்து வட்டி நிர்ணயம் செய்வது. ஐந்து ஆண்டுகளுக்கு பின்னால் தங்கம் விலை டபுள் ஆனால் வங்கிகள் வட்டி கொடுத்தே திவால் ஆகிவிடும். இது எப்படி இருக்கிறது என்றால் "நீ அவல் கொண்டு வா. நான் உமி கொண்டு வரேன். இரண்டுபேரும் ஊதி ஊதி திங்கலாம் ". கேட்பதற்கும் படிப்பதற்கும் நன்றாக இருக்கலாம் ஆனால் நடை முறைக்கு ஒத்து வராதது. இந்திய மக்களின் weakness தங்கம் வாங்குவது . அந்த மோகம் இன்னும் எத்தனை யுகம் வந்தாலும் அழியப்பூவது இல்லை. இன்னும் ஒரு வாரத்தில் அக்ஷய திரிதியை வருகிறது. நேற்று தினமலரில் செய்தி வந்தது சுமார் 2000 கிலோ தங்க விற்பனை இலக்கு என்று. 22 தேதி தினமலரில் செய்தி வரும். நேற்று அக்ஷய திரிதியை - தங்கம் விற்பனையில் தமிழ் நாட்டில் எதிர்பார்த்த 2000 கிலோவிற்கு மேலாக 3000 கிலோ தங்கம் விற்பனை ஆகி விட்டது. நகை வியாபாரிகள் மிக மகிழ்ச்சியாக உள்ளனர்.வாசகர்களே இன்னும் ஒரே ஒரு வாரம்தான். பிறகு என்னை கிழி கிழி என்று கிழியுங்கள் இது நடக்காவிட்டால். உண்மை நிலை என்ன என்றால் நமது பெண்டிருக்கு மேல் நாட்டு பெண்டிர் போல தங்க மோகம் என்று க்ருஐயுமொ அன்று தீர்வு. இதற்க்கு அந்த சர்வேஸ்வரன் உதவி செய்ய வேண்டும்.ஏற்கனவே முந்தைய அரசு இதைத்தான் செய்ய துடித்தது. அதை இவர்கள் முயற்சிக்கிறார்கள். உண்மையில் கோயில்களுக்கு வருமானம் இல்லை என்றால் பெரிய கோயில்களின் சொத்துக்களை முறையாக பராமரித்தாலே பாதி பிரச்சினை solved . வாடகை பாக்கி, குத்தகை பாக்கி இவற்றை முறை படுத்த வேண்டும். 100 கொடுத்து சிறப்பு தரிசனம் செய்ய வருபவர்களிடம் ஒரு மினி டீல் போட்டு சீட்டு இல்லாமல் உள்ளே அனுமதிப்பது போன்றவை நிறுத்தினாலே வருமானம் பெருகும்.

Rate this:
மேலும் 122 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement