தனுஷ்கோடி ஜடாயு தீர்த்த கோயிலில் பாலாலய பூஜை: ரூ.4.5 லட்சத்தில் திருப்பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனுஷ்கோடி ஜடாயு தீர்த்த கோயிலில் பாலாலய பூஜை: ரூ.4.5 லட்சத்தில் திருப்பணி

Added : ஏப் 11, 2015 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தனுஷ்கோடி ஜடாயு தீர்த்த கோயிலில் பாலாலய பூஜை: ரூ.4.5 லட்சத்தில் திருப்பணி

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே உள்ள ஜடாயு தீர்த்த சிவன் கோயிலில், ரூ.4.5 லட்சத்தில் திருப்பணி கள் துவங்கிட நேற்று பாலாலய பூஜை நடந்தது. ராமேஸ்வரத்தில் இருந்து 7 கி.மீ., தூரத்தில், தனுஷ்கோடி தேசிய சாலை அருகே ஜடாயு தீர்த்த சிவன் கோயில் உள்ளது. இங்கு உள்ள தீர்த்தம் சிவபெருமான் தலையில் இருந்து வரும் நீரில் உருவானதால், ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பாவம் நீங்கிட ஸ்ரீ ராமர் இங்கு நீராடி புதுபொலிவு பெற்றதாக, ராமாயணத்தில் கூறப்படுகிறது. இத் தீர்த்தத்தில், வரும் 2016 ல் மகாமகம் நடைபெற உள்ளதால், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில், ரூ.4.50 லட்சத்தில் திருப்பணிகள் துவக்கப்பட உள்ளன. இதற்காக, நேற்று ஜடாயு தீர்த்த கோயிலில் உள்ள சித்தி புத்தி விநாயகர், ஞானேஸ்வரர், அங்ஞானேஸ்வரர் சன்னதியில், கோயில் குருக்கள் விஜயகுமார் பாலாலய பூஜை, மகா தீபாராதனை நடத்தினார். இதில் கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், நகராட்சி தலைவர் அர்ச்சுனன், கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின், சுவாமி பிரணவநந்தா, பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளீதரன் மற்றும் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. SIV GOWRI - Chennai,இந்தியா
11-ஏப்-201513:17:59 IST Report Abuse
P. SIV GOWRI ஒம் நமசிவாயா. எல்லாம் நல்லதே நடக்க சிவ பிதாவின் அருளை பெறுவோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை