Karunanidhi questions about jayalalithaa's case | 24 மணி நேரத்தில் உச்ச நீதிமன்ற அமர்வா?கருணாநிதி கேள்வி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

24 மணி நேரத்தில் உச்ச நீதிமன்ற அமர்வா?கருணாநிதி கேள்வி

Updated : ஏப் 20, 2015 | Added : ஏப் 19, 2015 | கருத்துகள் (144)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
24 மணி நேரத்தில் உச்ச நீதிமன்ற அமர்வா?கருணாநிதி கேள்வி

சென்னை : 'பெரிய அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கையில், ஜெயலலிதா வழக்கில் மட்டும், 24 மணி நேரத்தில், உச்ச நீதிமன்றம், பெரிய அமர்வை அமைத்தது எப்படி?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராவது குறித்து, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வேறுபட்ட கருத்து தெரிவித்ததால் வழக்கு, அதைவிட பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுபோல், பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்ட பல வழக்குகளுக்கு, இதுவரை பெரிய அமர்வு அமைக்கப்படவில்லை. ஆனால், ஜெயலலிதா வழக்கில், பெரிய அமர்வுக்கு மாற்றும் உத்தரவு வெளியாகி, 24 மணி நேரத்தில் அந்த அமர்வு அமைக்கப்பட்டு, விசாரணை தேதியையும் அறிவித்துள்ளனர்.

இதெல்லாம், ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் தெரிந்து தான் நடக்கிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஜெயலலிதாவோடு தண்டனை பெற்ற மற்ற மூவரின் சார்பில் ஆஜரான, ஓய்வுபெற்ற நீதிபதி சுதந்திரத்துக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரிய மேல்முறையீட்டு ஆணைய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியும், கேரள கவர்னருமான சதாசிவத்தின் மீது குற்றச்சாட்டுகள் இருக்கையில், அவரை தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக நியமிப்பது குறித்து, உச்ச நீதிமன்றம் கவனிக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (144)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sumant - chennai,இந்தியா
21-ஏப்-201512:43:24 IST Report Abuse
sumant கருணாநிதி ஆபத்து தெரியாமல் உச்ச நீதி மன்றத்தைப்பற்றி சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்கிறார். யாராவது நீதி மன்ற அவமதிப்பின் கீழ் பொது நல வழக்கு தொடர்ந்தால் இவர் பாடு திண்டாட்டம். அ தி மு க வக்கீல்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ?
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
20-ஏப்-201509:04:46 IST Report Abuse
g.s,rajan கருணாவை "பிடித்துப் போடுங்கள் உள்ளே". ஜி.எஸ்.ராஜன், சென்னை.
Rate this:
Share this comment
Cancel
Thangaraj - Santacruz,இந்தியா
20-ஏப்-201505:16:37 IST Report Abuse
Thangaraj ஒரு சில முட்டைகளை உடைக்காமல் ஆம்பிலேட் போட முடியாது.அது போல கோழியை கொல்லாமல் சிக்கன் சூப் குடிக்க தான் முடியுமா என்ன? அது போல சில நல்ல திட்டங்கள் வரும் போது ஒரு சிலர் பாதிக்கப்பட தான் செய்வார்கள்.அதற்காக யாரும் பாதிக்க பட கூடாது என்றால் நாட்டில் புதிதாக சாலை கூட அமைக்க முடியாது. சாதாரணமாக ஒரு சாலையை அகலபடுதும் போது கூட சிலரின் நிலங்களை கையக படுத்த வேண்டி இருக்கும் அதில் சிலர் பாதிக்க பட தான் செய்வார்கள் அதற்காக சாலைகளை கூட புதிதாக அமைக்க கூடாது என்று சொல்லி விடுவீர்களா? நிலம் கையகக படுதாமால் தொழிற் சாலைகளை ஆகாயத்தில் அமைக்க வேண்டும் என்கிறீர்களா ? சாதரணமாக ஒரு சாலையை விரிவு படுத்த வேண்டும் என்றால் கூட பக்கத்தில் உள்ள சில விவசாய வயல்களில் நிலங்களை கையக படுத்த வேண்டியது இருக்க தான் செய்யும் .. அதற்காக என் நிலத்தில் வருசத்துக்கு நான்கு முறை பனங்காய் விளைகிறது நான் கொடுக்க மாட்டேன் என்று சொனால் காலம் முழுவதும் கல் ரோட்டில் தான் பயணம் செய்ய வேண்டி இருக்கும். வள்ளியுரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் நான்கு வழி சாலையை பார்த்தீர்களா கன்னியாகுமரி அருகில் ஒரு குளத்தில் போய் முடிகிறது .. அந்த சாலையை 10 ஆண்டுகள் ஆகியும் முடிக்க முடிய வில்லை ... காரணம் ஒருவன் குளத்தின் நீர் பிடிப்பு பகுதி பாதிக்கும் என்று வழக்கு தோடுதிருகிறான் ... பாருங்கள் என்ன ஒரு அற்ப காரணத்துக்காக தடை செய்கிறார்கள் என்று , இனி அந்த வழக்கு நீதிமண்டரத்தில் முடிந்து வர இன்னமும் 20 ஆண்டுகள் கூட ஆகலாம் ,,, இந்நிலையில் இது போன்ற சில அதிரடி திட்டங்கள்/சட்டங்கள் இந்த நாட்டுக்கு தேவை .. இதை மோடி உணந்து தான் செயல்படுகிறார்... அதுற்கு தான் இந்த சட்டம் எந்த ஒரு திட்டத்தை எடுத்தாலும் அதில் சாதகம் பாதகம் என்று இரு அம்சங்கள் இருக்க தான் செய்யும் அதற்காக ஒரு திட்டமே வேண்டாம் என்றால்... மோடி எப்போதும் கார்பரேட்டுகளை துணைக்கு வைத்து கொள்ளுவார் அது தான் "மோடி ஸ்டைல் ஒப் நிர்வாகம்" கார்பரேட்களின் வளர்ச்சியில் தான் நாடு வளரும்... கார்பரேட் எனபதும் கூட அரசின் ஒரு அங்கம் தான் .. என்பதை இவர்கள் என்று தான் புரிந்து கொள்ளுவார்களோ ? மேலும் இந்த சட்டம் மூலம் பல நன்மைகள் இருக்கிறது உதாரணத்திற்கு கங்கையும் காவிரியையும் இணைக்க போகின்றார்கள் என்று வைத்துகொள்வோம்..அப்போது நீர் பாய்ந்து வருகின்ற நீர் போக்குக்கு உகந்த நிலங்களை இனி கொடுக்க முடியாது என்று விவசாயமே செய்திடாமல்..வறண்ட பூமியை அவர்கள் கொடுத்தே தீரவேண்டும் என்றால்..அது சரிதானே? நிலங்களை விற்று காசுபார்த்த விவசாயிகள்..தற்போது கோடீஸ்வரர்களாக இருப்பதை காண்கின்றோம். இன்னும் தங்கள் நிலத்தில் விவசாயம் செய்பவர்கள் ஏளைகளாக தான் உள்ளார்கள். நான் ஊருக்கு போன் போடும் போது என் தந்தையிடம் "இந்த மாசம் நஷ்டம் எவ்வளவு" என்று தான் கேட்பேன்.. இந்த நிலையில் தான் நம் நாட்டு விவசாய இருக்கிறது .. விவசாய நிலத்தை எடுக்க கூடாதாம் .. நாட்டில் என்ன நிலமே இல்லையா என்ன ? 80 சதவீத நிலங்கள் தரிசு நிலங்கள் தான்.. இது போன்ற கையக படுத்துதல் மூலம் நம் நாட்டில் உள்ள நிலங்களில் வெறும் 0.0000001 சதவீதத்தை கூட எடுக்க போவதில்லை. இன்னியாளியில் ஏதோ நாட்டை முழுவதும் விற்று விட்டு விவசாய நிலைகளை இல்லாமல் தொழில் சாலைகள் கொண்டு வருவது போல் ஒரு பிரம்மை தான் உண்டு பன்ன படுகிறது ..திருநெல்வேலியில் இருந்து திருவந்த புரத்துக்கு அரசு புதிதாக ஒரு சாலையை அமைக்க விரும்புகிறது , இந்த பணிக்கு தனியார் யாருமே நிலம் கொடுக்க வில்லை , வெருமனே அரசு நிலத்தில் தான் சாலை அமைக்க வேண்டும் என்றால் எப்படி சாத்தியமாகும்? உங்களிடம் எதாவது மாற்று திட்டம் இருந்தால் சொல்லுங்கள் .? உங்கள் கதையெல்லாம் பார்த்தால் நாட்டில் கடலுக்கு மேல்தான் அலல்து ஆகாயத்தில் தான் தொழிற்சாலை கட்ட முடியும்... அல்லது அரசாங்க நிலத்தில் மட்டுமே தொழிற்சாலை கட்ட முடியும்... அப்படிப்பட்ட இடம் ஊரில் இருந்து 100 அல்லது 200 கிலோ மீட்டரில் ஒரு வேளை கிடைக்கலாம். சில நேரங்களில் அவ்வளவு தூரத்தில் அவ்வாறு நிலம் கையகப்படுத்துவது சாத்தியம் இல்லாமல் கூட இருக்கலாம்.. சந்தை விலையில் 4 மடங்கு என்பதே அதிகம்... இதுவும் போதாது இன்னும் வேண்டும் என்றால் என்ன நியாயம் ? இது போன்ற அதிரடி திட்டங்கள் இருந்தால் தான் நாட்டின் உள் கட்டமைப்பை மிக குறிகிய காலத்தில் கட்டி முடிக்க முடியும் ..அதை தான் இந்த அரசாங்கமும் விரும்புகிறது.. . உதாரணமாக மும்பை அகமதாபாத் புல்லட் ரயில் வர போகிறது அதற்க்கு நிலம் கையக படுத்த வேண்டும் .. இது போன்ற அதிரடி திட்டங்கள் இல்லை எண்டால் அரசு நீதி மன்றத்தில் எல்லா வழக்கு களையும் சந்தித்து வர 10 முதல் 20 ஆண்டுகள் ஆகலாம் .. யார் இவ்வளவு காலம் போருதிருப்பா.... இந்த மசோதாவை எத்தனை குட்டி கரணம் போட்டாவது மோடி அரசு சட்டமாக்காமல் விடாது என்னும் நிலையில் நாம் ஏன் நம் நேரத்தை வீணடிக்க வேண்டும்
Rate this:
Share this comment
ragupathi ragupathi - salem,இந்தியா
20-ஏப்-201522:59:56 IST Report Abuse
ragupathi ragupathiஉண்மை அண்ணா. நன்றி...
Rate this:
Share this comment
Cancel
Thangaraj - Santacruz,இந்தியா
20-ஏப்-201505:12:05 IST Report Abuse
Thangaraj கருணாநிதியைப் போன்ற ஒரு பழுத்த அரசியல்வாதியை இந்தியா அல்ல உலகமே கண்டதில்லை. கருணாநிதியின் பேச்சு, மூச்சு, உணவு அனைத்துமே அரசியல்தான். ஒரு இயக்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதில் இருந்து எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்பது வரை, மாக்கியவல்லியின் 'பிரின்ஸ்' புத்தகத்தை கரைத்துக் குடித்தவர் போல நடத்துவார். அப்படித்தான் திமுக மிகப்பெரிய பிளவுகளை சந்தித்தபோதெல்லாம் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். ஆட்சியில் இருக்கையில் ஒரு அரசியல் கட்சியை நடத்துவது எளிது. பழத்தின் மீது மொய்க்கும் ஈக்களைப் போல வந்து ஒட்டிக் கொள்வார்கள். ஆனால், ஆட்சியில் இல்லாதபோது கட்சியை நடத்துவதுதான் திறமை. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. கட்சியை கருணாநிதியைப் போல திறமையாக நடத்த யாருமே கிடையாது. இந்த 92 வயதிலும், காலை 4 மணிக்கு எழுந்து, அனைத்து செய்தித்தாள்கள், வார இதழ்கள், வாரமிருமுறை இதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களையும் படித்து, அவற்றில் குறை கண்டு பிடித்து, நிறைகளை கோடிட்டு அறிக்கை வெளியிட்டு, தானே கேள்விகளை கேட்டு, அதற்குத்தானே பதில் சொல்லி அதை அறிக்கையாக முரசொலியில் வெளியிட்டு, இரண்டு குடும்பத்தின் பஞ்சாயத்துகளை தீர்த்து வைத்து, இரு குடும்பத்துக்கும் நேரத்தை சமமாக ஒதுக்கி, கட்சியினரை சந்தித்து, கட்சியினரோடு அளவளாவி…….. படிக்கவே மலைப்பாக இருக்கிறதல்லவா? இதுதான் கருணாநிதி. கருணாநிதியின் இந்தத் தகுதிகளில் இரண்டு சதவிகிதம் கூட ஸ்டாலினுக்கு கிடையாது. கட்சியினரை அரவணைத்துச் செல்வதோ, உட்கட்சிப் பூசல்களை சமாளிக்கும் திறனோ, பேச்சுத் திறனோ, எழுத்துத் திறனோ அறவே கிடையாது. ஆனால், ஆசை மட்டும் மலையளவு இருக்கிறது. எதிர்த்துக் கேள்வி கேட்க யாருமே இல்லாமல், ஜெயலலிதாவைப் போல கட்சியை நடத்த வேண்டும் என்று நினைக்கிறார் ஸ்டாலின். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம், அதிமுகவைப் போன்ற அடிமைகளின் கட்சி அல்ல. திமுக ஆட்சி நடக்கையில், அமைச்சரவைக் கூட்டங்களில் சண்டை போடுவது போல கருணாநிதியிடம் மூத்த அமைச்சர்கள் விவாதம் செய்வர். அதிமுகவில் என்ன நடக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை. ஆனால், அதிமுக போலவே, திமுகவை நடத்த வேண்டும் என்றே விழைகிறார் ஸ்டாலின். ஸ்டாலினிடம் முழுமையாக கட்சி ஒப்படைக்கப்பட்டு, ஸ்டாலின் தலைமையில் திமுக சந்தித்த இரண்டு தேர்தல்களில் படு தோல்வி அடைந்திருக்கிறது.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-ஏப்-201513:11:16 IST Report Abuse
Nallavan Nallavanதங்கச்சி .... தாத்தா வல்லவரு .... நல்லவரு ..... ஆனா அஞ்சு வாட்டி முதல்வரா இருந்தும் தமிழ்நாட்டை ஏன் சிங்கப்பூரா கூட வேணாம் (தொளபதி சென்னையை அப்படித்தான் ஆக்கப் போறதா சொன்னாரு, ஞாபகம் இருக்குதா) .... ஒரு வளர்ந்த மாநிலமாக் கூட ஆக்க முடியலையே .... அதுக்கு ஏதாவது திட்டம் வேச்சுருக்காரா ?...
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-ஏப்-201513:22:35 IST Report Abuse
Nallavan Nallavanஅதானே .... சட்டத்தை மீறவும், நீதியை வாங்கவும் திமுக-காங்கிரஸ் கும்பலுக்கு இல்லாத உரிமையா அவர்களுக்கு இருக்கிறது ????...
Rate this:
Share this comment
Cancel
Ad Appavi - Periyakulam,இந்தியா
20-ஏப்-201501:08:59 IST Report Abuse
Ad Appavi நீங்க சொல்றதை எல்லாம் மெலிவான தோல் உள்ளவர்களுக்கு புரியும்
Rate this:
Share this comment
Cancel
ranjith kumar - tuticorin,இந்தியா
20-ஏப்-201501:02:49 IST Report Abuse
ranjith kumar 18 ஆண்டுகளாக வழக்கை ஜெ இழுத்து அடிக்கிறார் என்று முதலில் சொன்னவர் தாத்தா. நீதி மன்றங்கள் தாமதம் செய்கின்றன என்றவர் தாத்தா. இப்போது ஏன் விரைந்து செயல்படுகின்றன என்பதும் தாத்தா. என்னதான் செய்ய வேண்டுமாம் தாத்தாவுக்கு? அவருக்கு ஜெவை எப்போதும் உள்ளே வைத்திருக்க வேண்டும். அரசியலில் ஜெயிக்க முடியாமல் நீதி மன்றத்தின் மூலமாக ஜெவை ஜெயிக்க நினைக்கிறார். சர்க்காரியா கமிசனை ஓபன் செய்து இவரை ஏன் உள்ளே வைக்க கூடாது? முன்பு விரைந்து முடிக்க வேண்டும் என்றவர் இப்போது விரைந்து ஏன் முடிக்கிறார்கள் என்கிறார்? கடவுள்தான் இவரிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
19-ஏப்-201522:38:19 IST Report Abuse
adalarasan உச்ச நீதிமன்றத்தை அவதூறாக பேச இவருக்கு என்ன உரிமை இருக்கிறது. தாமதமானால் வேண்டுமென்றே தாமதம் செய்கிறார்கள் என்று குறை கூறுகிறார் உச்சநீதிமன்றம்தான், உயர் நீதிமன்றத்தை ஏப்ரல் 18 க்குல் முடிக்க சொல்லிற்று கேசை இழுத்தடிக்க தி. மு.க.. பாடு பாடுகிறது ஏன் இவர்கள் போட்ட கேஸ், சொல்வது எல்லாம் பொய் என்று தெரிந்து பயப்படுகிறாரோ? இதே போல் 2G கேசையும் வெகு விரைவில் முடிக்க உச்சநீதிமன்றம் ,உத்தரவு இட வேண்டும்மே முடிவுக்குள் வேண்டுமென்றே இந்த கேஸ் இழுத்து அடிக்கபடுகிறது{உச்ச நீதிமன்ற நேர்பார்வையில், அவர்கள் ஆணைப்படி நடுந்தும்] நடராசன்.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
20-ஏப்-201508:01:47 IST Report Abuse
Anandanஅதிமுகவிற்கு மட்டுமே உள்ள உரிமை அது...
Rate this:
Share this comment
Cancel
Bala - Chennai,இந்தியா
19-ஏப்-201522:29:34 IST Report Abuse
Bala இன்று அரசு விடுமுறை என்பதால் வியாபாரம் சரியாக ஓடாது என்பது திருட்டில் முக்கிய கட்சியின் தலைவர் திரு தானே தலைவர், தன்மான சிங்கம், அஞ்சா நஞ்சர், அல்சைமரின் துணைவர், கவரி மான் பரம்பரை கடனா நரி அவர்கள் வீட்டில் ஆற அமர அமர்ந்து கொண்டு நாளை என்ன அறிக்கை வெளியிடுவது என்பது குறித்து குறிப்பு எடுத்துக்கொண்டிருப்பார். நாளை முதல் சனிக்கிழமை வரை தேவையான குறிப்புகளை எடுத்துக்கொண்டு ஒரு கலக்கு கலக்கு என்று கலக்கப்போகிறார் பாருங்கள் கண்மணிகளே
Rate this:
Share this comment
Cancel
Bala - Chennai,இந்தியா
19-ஏப்-201522:21:58 IST Report Abuse
Bala இன்று அரசு விடுமுறை என்பதால், திருட்டில் முக்கிய கட்சியின் தலைவர் குடும்பத்துடன் நாளை என்ன அறிக்கை விடுவது என்பது குறித்து விவாதம் நடத்திக்கொண்டு இருப்பார். ஆகவே, தானே தலைவர், அஞ்சா நஞ்சர், கவரி மான் பரம்பரை இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை எடுத்துக்கொண்டார். நாளை மீண்டும் வழக்கம் போல் பக்கம், பக்கமாக அறிக்கை வரும். காத்திரு கண்மணிகளே.
Rate this:
Share this comment
RENU - Chennai,இந்தியா
26-ஏப்-201502:24:03 IST Report Abuse
RENUஇவர் வயதுக்கு அரை டஜன் மாத்திரை சாப்பிட்டால் தான் அன்றாடம் பொழுது போகும் ..இவர் பெயரை போட்டுக்கொண்டு ஒரு கும்பல் அறிக்கை விடுது ..எந்த மருத்துவராவது கேளுங்கள் இவர் வயதில் இந்த மாதிரி அறிக்கை விட முடியும்மான்னு ...ஆசீர்வாதம் வழங்குவதை விட இந்த வயதில் வேற ஒன்னும் செய்ய முடியாது...
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
19-ஏப்-201521:06:56 IST Report Abuse
g.s,rajan கருணா மேலே இனி வழக்குப் போட்டா அவர் வாய்தா வாங்க மாட்டார் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை