இணையம் யார் வீட்டு சொத்து?| Dinamalar

இணையம் யார் வீட்டு சொத்து?

Added : ஏப் 20, 2015 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
இணையம் யார் வீட்டு சொத்து?

'நெட் நியூட்ராலிட்டி''- இன்று இந்தியாவில், ஏன் உலக மக்களின் வாழ்வின் தன்மையையே பாதுகாக்கும் சக்தியாக உள்ளது. இதனை “வரையறையற்ற நடுநிலையான இணைய சேவை” என அழைக்கலாம். இதற்கு இப்போது சோதனை ஏன் ஏற்பட்டது?
இணையம் நம் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கம். ஏதேனும் ஒரு வகையில் அதனைச் சார்ந்தே நம் வாழ்க்கை இயங்கிக் கொண்டிருக்கிறது. ரயில், பஸ் டிக்ெகட், தேர்வு முடிவு, கல்லுாரி அட்மிஷன், கடிதங்கள் அனுப்ப, போட்டோக்கள் பரிமாற்றம், திரைப்படம், 'டிவி' காட்சிகளைப் பார்த்தல், பாட்டு கேட்டல், இணைய தொலைபேசி, வங்கி பணப் பரிமாற்றம், அரசு வழங்கும் சேவைகள், சான்றிதழ்கள் பெறல் என எத்தனையோ செயல்பாடுகளை எடுத்துக் காட்டலாம். கடந்த 1991 ஆகஸ்டில் முதல் இணைய தளம் தொடங்கப்பட்டது. இன்று இணைய தளங்களின் எண்ணிக்கை 93 கோடி 5 லட்சத்து 10 ஆயிரம்.
எந்தப் பொருள் குறித்து தேடினாலும், அது குறித்த தகவல் பல இணைய தளங்களில் இருக்கும். பெரும்பாலானவற்றிலிருந்து தகவல்களை இலவசமாகவே பெறலாம். இணையத்தைப் பயன்படுத்தும் 292 கோடி பேர் தொடர்ந்து பயன்படுத்த காரணம் இவை இலவசமாகத் தங்களிடம் இருப்பவற்றைத் தருவதுதான்.
இந்த வகையில் அதிகம் பயன்படுத்தப்படும் தளங்கள் கூகுள், பேஸ்புக், யாஹூ, வாட்ஸ் அப், அமேஸான், பிளிப் கார்ட் போன்றவை. இந்தத் தளங்களை இணையத்தில் இயக்க நிலையில் வைத்திருக்க, பயன்பாட்டிற்குத் தர இந்த தளங்களை அமைத்து நிறுவியவர்கள் அதற்கான செலவினை மேற்கொள்கிறார்கள் அல்லது விளம்பரம் போன்ற வழிகளில் அச்செலவினை ஈடுகட்டிக் கொள்கின்றனர்.
இன்றைய பிரச்னை :இப்போது இங்குதான் பிரச்னை. இணைய இணைப்பைத் தரும் நிறுவனங்கள் இந்த தளங்களை அணுகி, 'உன்னுடைய தளத்தை உன் வாடிக்கையாளர்கள் அணுகுகையில், உனக்குப் போட்டியாக இருக்கும் மற்ற தளத்திடம் இருந்து தகவல்களைத் தாமதமாகத் தந்துவிட்டு, உன் தளத் தகவல்களை அவர்கள் கம்ப்யூட்டரில் வேகமாக இறக்குகிறேன். என்னைக் கொஞ்சம் தனியே கவனி' என பணம் கறக்கத் தொடங்கிவிட்டனர். பணியாதவர் தளங்களை தாமதமாகக் காட்டுவது, இடையூறு ஏற்படுத்துவது என ஈடுபட்டுள்ளனர்.சில நிறுவனங்களோ இணைய தள உரிமையாளர்களிடம், 'உங்களிடம் உள்ள தகவல்கள் எங்கள் இணைப்பின் மூலம் தானே செல்கின்றன; உன்னிடம் உள்ள பொருட்கள், நாங்கள் இணைப்பு கொடுத்தால் தானே விற்பனையாகின்றன. எனவே எங்களிடமும் கட்டணம் செலுத்து' என்று கூவத் தொடங்கிவிட்டனர்.
காரணம் கேட்டால், 'அதிகச் செலவில் அரசிடம் உரிமம் பெற்ற மிகப் பெரிய அளவில் சர்வர்களின் கட்டமைப்பை ஏற்படுத்தி இணைய இணைப்பு தரப்படுகிறது. இந்த செலவை ஈடு கட்ட எங்களுக்குக் கட்டணம் செலுத்தித்தான் ஆக வேண்டும்' என்பது இவர்களின் வாதம்.பயனாளர்களிடமும், 'இணைய இணைப்பிற்காக நீங்கள் செலுத்தும் கட்டணம் சில இலவச தளங்களைப் பார்வையிடத்தான். முக்கிய இணைய தளங்கள் வேண்டும் எனில் கூடுதலாக கட்டணம் செலுத்துங்கள்' என அறிவிக்கத் தயாராகி விட்டனர்.
இதை அமல்படுத்தினால் நாம் இணைய இணைப்பிற்கென அதன் வேகம், டேட்டா பரிமாற்ற அளவு மற்றும் கால அளவின் அடிப்படையில் மாதந்தோறும் தொகை செலுத்திவிட்டு, பின் 'கூகுள் குரோம்' பயன்படுத்த ரூ.150, 'யூ டியூப்' பார்க்க ரூ.250, 'பேஸ்புக்' பதியவும் பார்க்கவும் ரூ.90, பிளஸ் 2 ரிசல்ட் பார்க்க ரூ.30 என ஒவ்வொன்றுக்கும் தனித் தனியே கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இது சரியா... இணையம் யார் வீட்டு சொத்து?
அனைத்தும் சமம்:'இணையத்தில் உள்ள அனைத்தும் சமமாகக் கருதப்பட வேண்டும். இணைப்பு தருபவர்கள் இவற்றைப் பிரித்து வகைப்படுத்தி, இடையே கொள்ளை அடிக்கவிடக் கூடாது' என்ற போர்க்குரல் இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் எழுந்துள்ளது. இதைத்தான் 'நடுநிலையான இணைய சேவை' (நெட் நியூட்ராலிட்டி) என அறிவித்து, 'உலகெங்கும் இந்த சேவை வழங்கப்பட வேண்டும்' என கேட்டுப் போராடி வருகின்றனர்.
இந்த சிக்கலை எளிய வழியில் விளக்குகிறேன். கல்யாண மண்டபத்தில் வாட்ச்மேன் ஒருவர் இருப்பார். நாம் செல்லும்போது காம்பவுண்ட் கதவைத் திறந்து வைத்து வழி அனுப்புவார். அவர், 'நீ உள்ளே போய் நான் வெஜ் சாப்பிட்டால் எனக்கு ரூ. 100 கொடு. வெஜ் சாப்பிட்டால் ரூ. 75 கொடு' என கல்யாணத்திற்கு செல்வோரிடம் கேட்க முடியுமா?
இந்த வாட்ச்மேன் கேட்பதைத்தான், இணைய இணைப்பு நிறுவனங்களும் கேட்கின்றன. இதை அனுமதித்து விட்டால், 'நெட் நியூட்ராலிட்டியை' நாம் இழந்துவிட்டால், இணைப்பு தரும் நிறுவனங்கள் வெற்றி பெற்றுவிட்டால், நாளைக்கு மின்சாரப் பயன்பாட்டிலும் இதே கட்டண முறையைக் கொண்டு வருவர். யூனிட்டுக்கு இவ்வளவு என்று முதலில் செலுத்தச் சொல்லிவிட்டு, கூடுதலாக பிலிப்ஸ் லைட் எரிந்தால் ரூ.35, வேறு நிறுவன விளக்கு என்றால் ரூ. 25, சோனி 'டிவி'க்கு ஒரு கட்டணம், பானாசோனிக் என்றால் தனிக் கட்டணம், வேர்ல்பூல் பிரிட்ஜுக்கு ஒரு கட்டணம், சாம்சங் பிரிட்ஜுக்கு ஒரு கட்டணம் எனக் கேட்பார்கள். இதை அனுமதிக்கலாமா?
உலக நாடுகளில்... அமெரிக்காவில் ஆறு மாதங்களில் 40 லட்சம் மக்கள் இதுகுறித்து தங்கள் கருத்துகளை அமெரிக்க அரசிடம் தெரிவித்தனர்.'இணைய சேவை நிறுவனங்களை' பொது சேவை நிறுவனங்கள் என அரசு அறிவித்தது. 'இணையப் பயன்பாடு என்பது தொலைபேசிக்கு இணையானது. எனவே அது ஒவ்வொருவருக்கும் தடையின்றி, பாகுபாடின்றி கிடைக்க வேண்டும்' என அதற்கான அமைப்பு தீர்ப்பு வழங்கியது.
அதிபர் ஒபாமா, ''அமெரிக்காவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மின்சாரமும் தொலைபேசியும் எவ்வளவு முக்கியமோ, அதே போல சுதந்திரமான இணையமும் தேவை. நுகர்வோர் இந்த வசதிகளைப் பெறும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்” என்றார். 'இணைய சேவையில் பாகுபாடும் இருக்கக் கூடாது' என முதன்முதலாக 2010ல் 'நெட் நியூட்ராலிட்டியை' சட்டமாக்கிய நாடு சிலி. அங்கு விக்கிபீடியா, பேஸ்புக் போன்றவற்றை இணைப்புக் கட்டணம் கூட இல்லாமல் பயன்படுத்தலாம்.
மக்களே உஷார் : இப்போது இணையத்தை பயன்படுத்துவதில் உள்ள தடங்கல்களை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை என்றால் அது இணையம் பயன்படுத்தும் பாங்கினையே மாற்றி, நம்மை பின் நோக்கி தள்ளிவிடும். மக்களே உஷார்! இந்தியாவில் 'நெட் நியூட்ராலிட்டி' இல்லை என்றால் இணைய இணைப்பு தரும் நிறுவனங்கள், இணையப் பயன்பாட்டின் தன்மையையே மாற்றிவிடுவார்கள்.யூ டியூப், வாட்ஸ் அப், ஜிமெயில், ஜி டிரைவ், யாஹூ, அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்கள் ஈட்டும் வருமானத்தில் பங்கு கேட்பார்கள். கிடைக்கவில்லை என்றால், அவற்றையும் பொதுமக்களிடம் கறக்க முற்படுவார்கள். கூடுதல் கட்டணம் செலுத்தவில்லை என்றால் ரூ.600 செலுத்தி, 'இந்தியாவில் உள்ள இணைய தளம் மட்டும் பார்' என்று அனுமதி கொடுப்பார்கள். மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ''இணையத்தினை முடக்க நினைக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அறிவித்துள்ளது ஆறுதலான தகவல். ''இதுகுறித்து ஆய்வு செய்யும் குழு மே 9க்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்'' எனவும் கூறியுள்ளார்.
--டாக்டர் பெ.சந்திரபோஸ்கல்லுாரி முதல்வர் (ஓய்வு), தகவல் தொழில்நுட்ப இதழியலாளர்(அமெரிக்காவில் வசிப்பவர்)drchandrabose@gmail.com

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
H Jothi - Delhi,இந்தியா
20-ஏப்-201517:17:35 IST Report Abuse
H Jothi இப்போ நாம காசு கொடுத்து டிவி - ல விளம்பரம் பாக்கறமாதிரி. எ.க. நாம ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் -கு காசு கட்டணும். ஆனா அவிங்க போடுற advt பார்த்து தொலைக்கணும்.
Rate this:
Share this comment
Cancel
chandrasekaran - chennai,இந்தியா
20-ஏப்-201513:37:08 IST Report Abuse
chandrasekaran போகிற போக்கைப் பார்த்தால் மன்மோகன் அரசாங்கமே மேல் என்னும் நிலைக்கு மக்கள் நினைப்பார்கள் போல் உள்ளது..
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
20-ஏப்-201513:33:55 IST Report Abuse
Ramamoorthy P எப்படி வானத்துக்கு யாரும் சொந்த கொண்டாட முடியாதோ அதே போல் இணையத்துக்கும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Srikanthan - NRW,ஜெர்மனி
20-ஏப்-201513:09:36 IST Report Abuse
Srikanthan நான் IT நிறுவனத்திலோ அல்லது அதை சார்ந்தோ வேலை பார்கவில்லை. Google மெயில் பயன்படுத்துவோர் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கூகுளே கேட்டால் அதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. எதுவுமே இலவசமாக இருக்க சாத்தியம் இல்லை. கண்மூடித்தனமாக நான் எதையும் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. இலவசமாக எல்லா தகவல்களும் எப்போதும் எப்படி கிடைக்க முடியும் ? பெரிய இன்டர்நெட் நிறுவனங்கள் பல ஆயிரகணக்கான பில்லியன் டாலர்களை கொட்டி சர்வர், router இன்னும் பல இன்டர்நெட் கட்டுமான பணிகளை செய்துவிட்டு விளம்பரத்தை மட்டும் நம்பி வழ முடியுமா என்று நாம் முடிவு செய்ய முடியாது. இலவசமாக இருக்கும் வரை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு நல்லது. இலவசமாக எப்போது வைத்திருக்க என்ன செய்ய முடியும் என்று பொருளாதார ரீதியாக ஆராய்ந்து நுகர்வோருக்கு பாதிப்பு வராமல் என்ன செய்ய முடியும் என்று பார்க்கவும். இதை செய்வது அரசாங்கத்தின் கடமை.
Rate this:
Share this comment
kundalakesi - VANCOUVER,கனடா
20-ஏப்-201514:11:40 IST Report Abuse
kundalakesiகூகுல் பணம் கேட்டால், அதன் பயன்பாடு நிறுத்தப் பட்டு , இந்திய அல்லது சீனா தளத்திற்க்குச் செல்லுவர். சீனா விட்ட அறையில் கூகுல் இன்னும் கன்னத்தை தடவிக் கொண்டிருக்கிறது. நாம் பயன்படுத்தினால்தான் அதற்கு விளம்பர வருமானம். இவன் இல்லையென்றால் இன்னொரு ஜாட்டான். டாட்டா, பிர்லா முறுக்கினால், வேறே தளங்கள்....
Rate this:
Share this comment
Ramesh Kumar - coimbatore,இந்தியா
20-ஏப்-201514:13:25 IST Report Abuse
Ramesh Kumarசார்.....பணம் வேண்டும் என்று கூகுளே கேட்கவில்லை ...( பணம் கட்டி பயன்படுத்த Google business mail, yahoo premium mail உள்ளன ) இப்போது கூடுதல் பணம் கேட்பது ISP எனப்படும் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள்...இதை அனுமதித்தால் கட்டண கேபிள் TV போல ஆக்கி விடுவார்கள்...... இறுதியில் பாதிக்கப்படப் போவது நாம்தான்........
Rate this:
Share this comment
Cancel
Saudi_Indian_tamil - Khobar,சவுதி அரேபியா
20-ஏப்-201511:17:51 IST Report Abuse
Saudi_Indian_tamil மக்களுடைய பலவீனத்தை பயன்படுத்தி எப்படி காசு பண்ணலாம் என்பதை ஒரு கூட்டம் ரூம் போட்டு யோசிக்கும் போல இருக்கு. இணையத்தினால் எஸ்எம்எஸ் பயன்பாடு குறைந்து அதனால் எழையாகிட்டோம்னு இப்படி காசு பண்ண நினைக்குது தொலை தொடர்பு நிறுவனங்கள். இணையத்துக்கு அடிமையாகிட்ட மக்கள் இருக்கும் வரை இப்படி காசு பண்றது இந்தியாவில் சாத்தியமே ஏதோ இண்டர்நெட்டு வருது பிரவுஸ் பண்றோம்னு இல்லாம சரியானபடி புரிஞ்சிகிட்டு தேவைக்கு மட்டும் உபயோகப்படுத்தினால் பிரச்சனை இல்லை. அதை விட்டுட்டு வீணாக இண்டர்நெட்டில் நேரத்தை போக்குவதை தவிர்க்க வேண்டும். இந்தியாவில் எதுவும் செய்ய முடியும் பொதுமக்கள் பணத்தை நன்கு கறக்க முடியும். மக்கள் தான் புத்திசாலித்தனமாக நடந்து இது போன்ற சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும். எளிமையான நல்ல கட்டுரை.
Rate this:
Share this comment
Cancel
Senthilkumar - Puducherry,இந்தியா
20-ஏப்-201510:29:02 IST Report Abuse
Senthilkumar வழக்கம் போல கோர்ப்ரடே நிறுவனங்களுக்கு தான் சாதகமாக முடிவு எடுக்குமா இந்த அரசு... உணவு கலபடத்தையே கட்டுப்படுத்த அரசாங்கம் தானே இந்திய அரசு...???
Rate this:
Share this comment
Cancel
Sathiya Moorthi - Singapore,சிங்கப்பூர்
20-ஏப்-201508:56:21 IST Report Abuse
Sathiya Moorthi மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) இந்தியாவின் தனியார் தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு 20 கேள்விகள் கொண்ட ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. இந்தக் கேள்விகளின் உள்ளடக்கம் இதுதான்: சமநிலை இணைய சேவை (நெட் நியூட்ராலிட்டி) குறித்த உங்கள் கருத்துகள், இதில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், இதற்கு தாங்கள் கருதும் தீர்வுகள் யாவை? அலைக்கற்றை ஏலத்தை மார்ச் மாதம் நடத்தி முடித்து, இந்திய அரசு ரூ.1.10 லட்சம் கோடி வருவாய் பெற்ற அடுத்த கணமே இந்த சுற்றறிக்கை வழங்கப்பட்டதற்கு காரணம் உள்ளது. 2014ஆம் ஆண்டில் வெறும் ரூ.62,162 கோடி ஏலம் போன அலைக்கற்றை, தற்போது இரட்டிப்பு வருவாயைத் தந்திருப்பதால், ஏலம் எடுத்தவர்களுக்கு அரசும் பதிலுக்கு ஏதாவது நன்மை செய்தாக வேண்டும். ஆகவே, இத்தகைய கேள்விகளை டிராய் தானாகவே கேட்க முனைந்தது. சமநிலை இணைய சேவை : யூ டியூப்பில் படம் பார்க்கலாம், பதிவேற்றம் செய்யலாம், ஃபேஸ்புக், லிங்க்டுஇன் கணக்கு தொடங்கலாம், கூகுள், யாகூ எதில் வேண்டுமானாலும் எதையும் தேடலாம். ஃபிலிப்கார்ட், அமேசான் என எந்தவோர் இணைய வணிகர்களிடமும் பொருள் வாங்கலாம், ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யலாம். மின் கட்டணம் செலுத்தலாம், நெட் பேங்கிங் செய்யலாம், இவை அனைத்துக்கும் தேவை நீங்கள் இணையத்துக்கான இணைப்பு (நிரந்தரமாக அல்லது தாற்காலிகமாக) பெற்றிருக்க வேண்டும். அவ்வளவுதான். ஆனால், சேவைகளைக் கட்டுப்படுத்துதல், சேவைகளுக்குக் கட்டணம் விதித்தல், சேவைகளைத் தரவரிசைப்படுத்துதல், சில சேவைகளுக்கு அதிவேகம் நிர்ணயித்தல் ஆகிய உரிமைகளை தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கோருகின்றன. இதில் எதை அனுமதித்தாலும் அது இணையப் பயன்பாட்டாளருக்கு எதிராகத்தான் முடியும். ஆகவேதான் சமநிலை இணைய சேவைக்கு மக்களிடம் ஆதரவு பெருகியுள்ளது. டிராய் அமைப்புக்கு இதுவரை சுமார் 3 லட்சம் பேர் மின்அஞ்சல் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ண்மையில் இதே கோரிக்கை தொடர்பாக அமெரிக்காவில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் (ஓபன் இன்டர்நெட் ஆர்டர்) இணையப் பயன்பாட்டாளருக்கு சாதகமஹா அறிவிக்கப்பட்டது. தகவல் தொடர்பு சேவை நிறுவனங்களின் பார்வையில் படுவது கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்), முகநூல் (ஃபேஸ்புக்) போன்ற சிறப்பு சேவையாளர்கள் (ஓவர் த டாப்) மீதுதான். வழக்கமான தொலைபேசி சேவை, குறுந்தகவல், எம்எம்எஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல், கட்செவி அஞ்சல், முகநூல், லைன், வைபர், வீசாட் போன்றவற்றின் மூலம் தகவல், விடியோ, புகைப்படம் பரிமாறிக்கொள்வதால் உலகம் முழுவதிலும் உள்ள தகவல் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு 50 லட்சம் கோடி அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படுகிறது என்பது அவர்கள் வாதம். இந்தியாவைப் பொருத்தவரை, தகவல் பரிமாற்றம் செய்வோரில் 52 சதவீத நபர்கள் சிறப்பு சேவை வழங்குவோர் மூலமாகவே தகவல் பரிமாற்றம் செய்கின்றனர். இந்தியாவில் கட்செவி அஞ்சல் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 7 கோடியை எட்டியுள்ளது. இந்தியாவில் தற்போதைக்கு அதிக அளவு தகவல் பரிமாற்றம் (42%) முகநூல் மூலமே நடைபெறுகிறது. 83% பேர் ஸ்மார்ட்போன் மூலம் இணைய சேவை பெறுகின்றனர். இதனால், இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3,700 முதல் ரூ.4,000 கோடி இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்படுகிறது. உண்மையில் பார்த்தால், இது இழப்பு அல்ல. மொத்த வருவாயில் 5% குறைவு, அவ்வளவே. இந்தியாவில், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை நமக்குத் தெரியாமலேயே பிடுங்கி விடுகின்றன. இழப்பு என்பதை மாற்று வகையில் ஈடு செய்துவிடுகின்றன. ஆனால் வெளியே சொல்வதில்லை. நுட்பமாகப் பார்த்தால், இணைய இணைப்பு பெறுவதற்கான கட்டணங்களில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல நிலைகளில், நாள் எண்ணிக்கையில் வைத்து, கட்டணத்தை அதிகரிக்கவே செய்கின்றன. ஆரம்பத்தில் செல்லிடப்பேசி இணைய சேவைக்கான கட்டணம் 30 நாள்களுக்கு 1 ஜிபி பதிவிறக்கத்திற்கு ரூ.68 ஆக இருந்தது, இப்போது 3ஜி சேவைக்கு 28 நாள்களுக்கு ரூ.198 வசூலிக்கப்படுகிறது. இது தவிர, லைப்ஸ்டைல் சேவை என்ற பெயரில், நாம் கோராமலேயே அளித்து, அதற்கும் கட்டணம் வசூலித்துவிடுகிறார்கள். இந்த அநியாய கட்டணப் பிடிப்பை நாம் கவனித்துத் தட்டிக் கேட்டால் திரும்ப அளிக்கிறார்கள். கண்டுகொள்ளப்படாமல் எடுக்கப்படும் கட்டணம் இதுபோல எத்தனை ஆயிரம் கோடியோ, யாரறிவார்? வழித்தட நெரிசல் காரணமாகத் தரமான சேவை வழங்க இயலவில்லை என்று தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சொல்லுமேயானால், அவர்கள் இதுகாறும் சம்பாதித்த லாபத்தை முதலீடு செய்து, தங்கள் கருவிகளை மேம்படுத்துவதே நியாயமாக இருக்கும். அரசியல் கட்சிஹளையும், தலைவர்ஹளையும் கிண்டல் செய்யும் அனைவரும் இங்கு உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
JSS - Nassau,பெர்முடா
20-ஏப்-201508:37:00 IST Report Abuse
JSS மிக சிறந்த கட்டுரை. எல்லோரும் ஆதரிக்க வேண்டுகிறேன். இந்திய டெலிகாம் கம்பனிகளின் அடாவடியை அடக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை