திருவாடானை கோயிலில் 7 சுவாமி சிலைகள் கொள்ளை: 100 ஆண்டு பழமையானவை| Dinamalar

திருவாடானை கோயிலில் 7 சுவாமி சிலைகள் கொள்ளை: 100 ஆண்டு பழமையானவை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
திருவாடானை கோயிலில் 7 சுவாமி சிலைகள் கொள்ளை: 100 ஆண்டு பழமையானவை

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 100 ஆண்டு பழமைவாய்ந்த 7 வெண்கல சிலைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்று விட்டனர்
ராமநாதபுரம், திருவாடானையில் பிரசித்தி பெற்றது ஆதிரெத்தினேஸ்வரர் கோயில். நேற்று அதிகாலை 5 மணிக்கு,வழக்கம் போல் கோயிலின் முன்புற கதவை திறந்த காவலர் தர்மலிங்கம், உட்பிரகார கதவை திறக்க முயன்றார். பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி செயல் அலுவலர் சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்தார். பின்பு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக, கோயிலைச் சுற்றி மூங்கில் சாரம் அமைக்கப்பட்டுள்ளது. மர்மநபர்கள் மூங்கில் சாரத்தில் ஏறி, கோயிலுக்குள் இறங்கி கதவின் பூட்டை உடைத்து வெண்கலத்தால் செய்யப்பட்ட விநாயகர், முருகன், சந்திரசேகர், பவானிஅம்மன், அம்மன் ஆகிய சிலைகளையும், வேல், பீடம் ஆகியவற்றையும் கொள்ளையடித்துள்ளனர். டி.எஸ்.பி., சேகர், இன்ஸ்பெக்டர் கதிர்வேல் மற்றும் போலீசார் விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். துப்பறியும் மோப்பநாய் சூச்சனி கிராமம் வழியாக ஓடி, வயல் பகுதியில் நின்றது. அங்கு கொள்ளை போன வேல் மட்டும் கிடந்தது. அதை போலீசார் கைபற்றினர்.இதுகுறித்து ராமநாதபுரம் சமஸ்தான திவான் மகேந்திரன் கூறியதாவது: கொள்ளை போன சிலைகள் 100 ஆண்டு பழமை வாய்ந்த வெண்கல சிலைகள் என தொல்பொருள் ஆய்வு துறையினர் சான்றிதழ் வழங்கியுள்ளனர். கோயிலுக்கு இரவு காவலர் இல்லை. கண்காணிப்பு கேமரா வைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சில ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளை போன சோமஸ்கந்தர் என்ற சிறிய சிலை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை,” என்றார். திருவாடானை போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். தகவலறிந்த தொகுதி எம்.ஏல்.ஏ., சுப.தங்கவேலன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி, ஒன்றியத்தலைவர் முனியம்மாள் ஆகியோரும் வந்து கோயிலை பார்வையிட்டனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natesan Narayanan - Sydeny,ஆஸ்திரேலியா
21-ஏப்-201523:15:30 IST Report Abuse
Natesan Narayanan இதனை திருடியவர்களை தமிழ் நாடு போலீஸ் மிக எளிதாக பிடிக்கும் ஆற்றல் படைத்த போலீஸ் . ஏன் செய்யாமல் இருக்கிறது ? இதில் பெரிய பணமும் முக்கிய புள்ளிகள் தொடர்பு உள்ளத்தால் தான். தொடர்புள்ள அனைவரும் ஒருநாள் பெரிய சோதனைக்கு ஆள் ஆவார்கள் .
Rate this:
Share this comment
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
21-ஏப்-201520:25:35 IST Report Abuse
TamilArasan இதுவே ஒரு சிறுபான்மை வழிபாட்டு தளத்தில் நடந்து இருந்தால் இன்று அந்த செய்தியை நம் ஊர் பத்திரிக்கை மற்றும் செக்குலர் அரசியல் வியாதிகள் உலக அளவிற்கு கொண்டு சென்று இருப்பார்கள் ஆனால் பாருங்கள் ஒரு புராதான இந்து கோவிலை கயவர்கள் கொள்ளை அடித்துள்ளார்கள் ஆனால் பல ஊடகங்களில் இது பெட்டி செய்தியாய் கூட கொடிக்கவில்ல்லை .. செய்தியை மக்களுக்கு கொடுத்தமைக்கு தினமலருக்கு நன்றி...
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
21-ஏப்-201507:26:21 IST Report Abuse
kundalakesi இதெல்லாம் சின்ன நியூஸ், ஆரவாரமில்லாமல் தெரிவிக்கப் படும். இந்த சிலைத்திருடனுங்களை கண்டு புடிப்பது அவ்வளவு பெரிய வேலையா என்ன? தர்ம கர்த்தா என்பார்கள், இந்து அர நிலையத்துறை என்பார்கள், இவர்கள் மற்ற மத காவலர் போல் ஈடுபாட்டுடன் இல்லையோ? அவர்கள் அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.