கேரள கவர்னராகும் லட்சுமணன்: தமிழக பா.ஜ.,வில் திடீர் பரபரப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கேரள கவர்னராகும் லட்சுமணன்: தமிழக பா.ஜ.,வில் திடீர் பரபரப்பு

Added : ஏப் 20, 2015 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கேரள கவர்னராகும் லட்சுமணன்: தமிழக பா.ஜ.,வில் திடீர் பரபரப்பு

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன், விரைவில் கேரள கவர்னராக நியமிக்கப்பட இருப்பதாக, அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.மத்தியில் பா.ஜ., ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் பல மாநில கவர்னர்களும் ராஜினாமா செய்தனர். மூத்த தலைவர்கள் காலி இடங்களில், கட்சியின் மூத்த தலைவர்களாக இருந்த பலருக்கும், கவர்னராகும் வாய்ப்பளிக்கப்பட்டது. இப்படி வாய்ப்பளிக்கப்பட்டவர்களில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாருமில்லை. ஆனால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற, தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவத்துக்கு, கேரள கவர்னராகும் வாய்ப்பு கிட்டியது. இதனால், கவர்னர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த தமிழக, பா.ஜ.,வின் மூத்த தலைவர்கள், கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், கேரள மாநில கவர்னராக இருக் கும் சதாசிவம், தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவியை பிடிக்க, காய் நகர்த்தி வருகிறார். இந்த பதவியை எதிர்பார்த்து, அவர் நீண்ட நாட்களாக காத்திருப்பதோடு, பா.ஜ., தலைமையும், சதாசிவத்தை அந்த பதவி யில் அமர்த்த தயாராக இருக்கிறது. சதாசிவம், தேசிய மனித உரிமை ஆணையத் தலைவராக நியமிக்கப்படும் பட்சத்தில், அவர், கேரள மாநில கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதனால் ஏற்படும் காலியிடத்துக்கு, புதியவர் ஒருவரை நியமிக்க வேண்டும். இதனால், தமிழக பா.ஜ.,வைச் சேர்ந்த ஒருவருக்கே, அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என, கட்சியினர் பலரும் விரும்புகின்றனர். இந்த தகவல், கட்சி யின் தேசியத் தலைவர் அமித் ஷாவுக்குச் செல்ல, அவரும், தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ., மூத்த தலைவர் ஒருவரை, கேரளாவின் புதிய கவர்னராக நியமிக்க, பிரதமருக்கு பரிந்துரைத்திருப்பதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

பா.ஜ.வைப் பொறுத்த வரையில், தமிழகத்தில் இந்து முன்னணியின் ராம கோபாலன் தான் சீனியர். 'அரசியல் மற்றும் அரசு சார்ந்து, எனக்கு எந்தப் பொறுப்பும் வேண்டாம்' என அவர், பா.ஜ., முன்னணி தலைவர்களிடம் தெரிவித்து விட்டதால், கவர்னர் பொறுப்புக்கு அவர் பெயரை, பா.ஜ., தேசிய தலைமை பரிசீலிக்காமல் விட்டுவிட்டது. அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும், தமிழக, பா.ஜ., முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணனுக்கு, கவர்னர் பதவி அளிக்க வேண்டும் என, தேசிய தலைமை முடிவெடுத்து உள்ளது. தற்போது சேலத்தில், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் ஒரு பள்ளியை நிர்வகித்து வரும் லட்சுமணன், முக்கிய அரசியல் நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்று வருகிறார்.


தட்டிப் பறிக்க முயற்சி:

கவர்னர் பொறுப்புக்கு அவர் தகுதியான நபர் என்றாலும், அதை தட்டிப் பறித்து, கவர்னர் பொறுப்பை தங்களுக்கு வாங்கிவிட வேண்டும் என, தமிழகத்தில் இருக் கும் வேறு சில தலைவர் கள் முயற்சிக்கின்றனர். ஆனால், கட்சித் தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் ஆசி பெற்றிருக்கும் லட்சுமணனுக்கே, கேரளாவின் அடுத்த கவர்னராகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
21-ஏப்-201513:43:28 IST Report Abuse
ஆரூர் ரங் மோதி, லட்சுமணன் சவுராஷ்டிரர் என்பதால் இப்படி ஒரு ஆசையா?
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
21-ஏப்-201518:30:51 IST Report Abuse
K.Sugavanamஅதுஅப்புறம் தான்..முதல்ல கட்சி தொண்டர்கள்.....
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
21-ஏப்-201511:40:50 IST Report Abuse
sundaram ஏனுங்க நம்ம கோல்மால்புரத்து பாஜக பிரதிநிதி இல கணேசனாருக்கு என்ன தகுதிக்குறைச்சல்? அவாளா இருந்தாலும் பரவாயில்லையே. இப்போகூட தாலி அகற்றும் போராட்டத்துக்கு தனது ஆதரவை மௌனமாக இருந்து தெரிவிச்சாரே.
Rate this:
Share this comment
Kamala Xavier - Delhi,இந்தியா
21-ஏப்-201521:24:06 IST Report Abuse
Kamala Xavierசுந்தரம் சார், சூப்பர் கருத்து. செம நச்...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
21-ஏப்-201508:40:52 IST Report Abuse
K.Sugavanam திரு கே.என். லக்ஷ்மணன் ஜி தமிழக பிஜேபி தலைவராக இருந்தவர்.எம் எல் ஏ ஆகவும் சிறப்புற பணியாற்றியவர்..பல ஆண்டுகளாக சேலத்தில் கல்விநிறுவனம் நடத்துவதில் சிறப்பு பெற்றவர்,குடத்துள் இட்ட விளக்காக இருப்பவர் குன்றில் ஏற்றிய தீபமானால் சேலம் வாசிகள் அனைவருக்கும் பெருமையே.. வாழ்த்துக்கள் ஜி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X