தஞ்சை பெரிய கோவில் தேர் வெள்ளோட்டம்: 100 ஆண்டுகளுக்கு பின் நடந்ததால் பரவசம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோவில் தேர் வெள்ளோட்டம்: 100 ஆண்டுகளுக்கு பின் நடந்ததால் பரவசம்

Added : ஏப் 20, 2015 | கருத்துகள் (1)
Advertisement
தஞ்சை பெரிய கோவில் தேர் வெள்ளோட்டம்: 100 ஆண்டுகளுக்கு பின் நடந்ததால் பரவசம்

தஞ்சாவூர்: தஞ்சை, பிரகதீஸ்வரர் கோவிலில், 100 ஆண்டுகளுக்குப் பின், புதிய தேர் வெள்ளோட்டம் நடந்ததால், பக்தர்கள் பரவசத்துடன் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.உலக பிரசித்தி பெற்ற தஞ்சை, பிரகதீஸ்வரர் கோவில், சோழர் கால கட்டட கலைக்கு சான்றாக விளங்குகிறது. பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக, இக்கோவிலை, 'யுனெஸ்கோ' நிறுவனம் அறிவித்துள்ளது. இங்கு, 100 ஆண்டுகளுக்கு முன், சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்ததாக, ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதன்பின், பல்வேறு காரணங்களால் தேரோட் டம் நடக்கவில்லை.


ஜெ., அறிவிப்பு:

பக்தர்களின் கோரிக்கையை அடுத்து, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்து, 50 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக திருத்தேர் செய்யப்படும் என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, கடந்த, 2013ம் ஆண்டு, செப்டம்பரில், தஞ்சாவூர் மேல வீதி கொங்கணேஸ்வரர் கோவில் வளாகத்தில், தேர் செய்வதற்கான பூர்வாங்க பணி துவங்கியது. தேர் பணிகள், முழுமையாக முடிவடைந்த நிலையில் நேற்று, தேர் வெள்ளோட்டம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு, மேலவீதி விஜயராமர் கோவில் அருகில், தேர் நிறுத்தப்பட்டு, ஆகமபூஜைகள் நடந்தன. தேர் மீது, புனிதநீர் கொண்ட கலசத்தை வைத்து, காலை, 6:50 மணிக்கு, திருத்தேர் வெள்ளோட்டத்தை, ஆட்சியர் சுப்பையன் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.


கலைஞர்கள் இசை:

தேருக்கு முன்னால், அலங்கரிக்கப்பட்ட யானையுடன், நாதஸ்வர கலைஞர்கள், செண்டை மேள கலைஞர்கள் இசைத்தபடி சென்றனர். வடக்கு ராஜவீதி, கீழராஜ வீதி, தெற்கு ராஜ வீதி வழியாக வலம் வந்த தேர், 9:25 மணிக்கு, மேலராஜ வீதியில் உள்ள தேர் மண்டபத்தை அடைந்தது. தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்பிரான், குமாரசாமி தம்பிரான், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜாபோன்ஸ்லே உட்பட பலர், விழாவில் பங்கேற்றனர். திருவிழாவின், 15ம் நாளான வரும், 29ம் தேதி, சித்திரை தேரோட்டம் நடக்கிறது. ஒரு நூற்றாண்டுக்குப் பின், தேர் திருவிழா நடந்ததால், இதை காண, ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
21-ஏப்-201508:07:43 IST Report Abuse
பெரிய ராசு ஓம் நமச்சிவாயா உலகை காத்து அருளுங்கள் பரமபொருளே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை