ஆன்மிக அற்புதங்கள் நிரம்பிய சிதம்பரம் நடராஜர் கோவில்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்மிக அற்புதங்கள் நிரம்பிய சிதம்பரம் நடராஜர் கோவில்

Added : ஏப் 21, 2015 | கருத்துகள் (10)
Advertisement
ஆன்மிக அற்புதங்கள் நிரம்பிய சிதம்பரம் நடராஜர் கோவில்

இந்த உலகத்தின் ஒட்டு மொத்த மையப்புள்ளி அமைத்திருக்கும் இடமாக, தமிழகத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உண்மையை கண்டு, இன்றைய நவீன விஞ்ஞான உலகம் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.


நோயின்றி வாழ:

சிதம்பரம் நடராஜர் கோவில், இன்றைய அறிவியலுடன் மட்டுமல்ல, மனிதர்களின் உடற்கூறுடன் பொருந்துவதும் அதிசயமே. ஆகவே தான், நம்மை, அங்கு சென்று வழிபட வைத்து, உலகத்தின் காந்த சக்திக்கு கட்டுப்பட்டு, நோயின்றி வாழ, நம் முன்னோர் வழிகாட்டியுள்ளனர். இக்கோவிலின் அற்புதங்களும், ரகசியங்களும், ஆச்சரியங்களும் ஏராளம். இன்னும், மனித ஆற்றலினால் கண்டுபிடிக்க இயலாத, பேருண்மைகள் இக்கோவிலின் அமைப்பில் புதைந்து உள்ளன!


கால் பெருவிரலில்...:

சர்வதேச ஆன்மிக அமைப்புகள், கடந்த எட்டு ஆண்டுகளாக, சில கோடி டாலர்கள் செலவு செய்து, தீவிர ஆராய்ச்சி நடத்தி, சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான், மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக கண்டுபிடித்துள்ளன. இதை, பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிந்து, இக்கோவிலை, நம் முன்னோர் கட்டினர்; அவர்கள், ஆன்மிகத்தின் உள் அறிவியலை


புகுத்திய ஞானிகள்!

நவீன ஆய்வகங்கள், விலை உயர்ந்த நவீன கருவிகள் ஏதும் இல்லாத, அக்காலத்தில், இதை முன்னோர் கண்டறிந்துள்ளனர் என்பது, நம்மை வியப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது! அணுத் துகள்கள் அசைந்தபடியே இருக்கும் என்ற உண்மையை, ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து, அதை பூமியின் மையப்புள்ளியில் அமர்த்தியது பெரிய சாதனை தான்!


அறிவியல் நூல்:

இதை, 5,000 ஆண்டுகளுக்கு முன்பே, கண்டறிந்த திருமூலரின் சிந்தனை ஆற்றலும், சக்தியும் மகத்தானது. திருமூலரின் திருமந்திரம், உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும். இதை உணர, இன்றைய அறிவியலுக்கு மேலும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்! 'சிதம்பரம் நடராஜர் கோவில் ரகசியம்' என்று பலரும், பல தகவல்களை கூறிவரும் வேளையில், கோவிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த விவரங்கள் அளவிட இயலாதவை. முன்னோர் செய்த அனைத்து செயல்களும், ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது. மன்னர்கள் கட்டிய பிரமாண்டமான கற்கோவில்களுக்கு, பின்னால் இருக்கிற பல அற்புதங்கள், அதைக் கட்டியவர்களின் நுண்ணறிவை வெளிப்படுத்துகிறது.


ஒன்பது வாயில்:

மனித உடலை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டுள்ள, சிதம்பரம் கோவிலில், ஒன்பது நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும், ஒன்பது வாயில்களை குறிக்கின்றன. கோவிலின் விமானத்தின் மேலே உள்ள பொற்கூரை, 21,600 தங்கத் தகடுகள் மூலம் வேயப்பட்டுள்ளது; இது, ஒரு மனிதன், தினமும் சராசரியாக, 21,600 தடவை சுவாசிக்கிறான் என்பதை குறிக்கிறது. இந்த தங்கத் தகடுகளை பொருத்த, 72 ஆயிரம் தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன; இந்த எண்ணிக்கை, மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளையும் குறிக்கின்றன. இதில் பல, கண்ணுக்குத் தெரியாத, உடலின் பல பாகங்களுக்கு சக்தியை சேர்ப்பவையும் அடங்கும். திருமூலர், திருமந்திரத்தில், 'மானுடராக்கை வடிவு சிவலிங்கம், மானுடராக்கை வடிவு சிதம்பரம், மானுடராக்கை வடிவு சதாசிவம், மானுடராக்கை வடிவு திருக்கூத்தே' என்று கூறுகிறார். அதாவது, 'மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்' என்ற பொருளைக்
குறிக்கிறது.


பஞ்சாட்சர படிகள்:

பொன்னம்பலம், சற்று இடதுபுறமாக அமைக்கப்பட்டுள்ளது; இது, நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய, ஐந்து படிகளை ஏற வேண்டும். இந்த படிகள், பஞ்சாட்சர படிகள் என அழைக்கப்படுகின்றன. அதாவது, 'சி, வா, ய, ந, ம' என்ற ஐந்து எழுத்தே அது! கனகசபை, பிற கோவில்களில் இருப்பதை போன்று, நேரான வழியாக இல்லாமல், பக்கவாட்டில் வருகிறது. இந்த கனகசபை தாங்க, நான்கு தூண்கள் உள்ளன; இது, நான்கு வேதங்களையும் குறிக்கின்றன. பொன்னம்பலத்தில், 28 தூண்கள் உள்ளன. இவை, 28 ஆகமங்களையும்; சிவனை வழிபடும், 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும், 64 + 64 மேற்பலகைகளை (பீம்) கொண்டன; இது, 64 கலைகளை குறிக்கின்றன. இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள், மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றன. பொற்கூரையின் மேல் இருக்கும் ஒன்பது கலசங்கள், ஒன்பது வகையான சக்தியை குறிக்கின்றன. அர்த்த மண்டபத்தில் உள்ள ஆறு தூண்கள், ஆறு சாஸ்திரங்களையும்; அர்த்த மண்டபம் அருகில் இருக்கும் மண்டபத்தில் உள்ள, 18 தூண்களும், 18 புராணங்களையும் குறிக்கின்றன.


ஆனந்த தாண்டவம்:

சிதம்பரம் நடராஜரின், ஆனந்த தாண்டவம் என்ற கோலம், 'காஸ்மிக் டான்ஸ்' என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகிறது. இந்து மத சாஸ்திர, சம்பிரதாயங்கள் அறிவியல் ரீதியானவை. அவை, மனிதனை மேம்படுத்த, உயர்ந்த தத்துவங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டவை. இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு, வரும், ?ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


ஆகாய உருவில் இறைவன்!

சிதம்பர ரகசியம் என்பது, சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சிற்சபையில், சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது, ஒரு சிறு வாயில். இதன் திரை அகற்றப்படும்போது, கற்பூர ஆரத்தி காட்டப்படும். இதனுள்ளே, திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தினாலான, வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே, வில்வ தள மாலை தொங்கும். இதன் ரகசியம், இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கிறார் என்பதை உணர்த்துவதே! அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை, வெறும் வெளியையே காட்டி, இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இது தான், 'சிதம்பர ரகசியம்' என, அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mayuran - chennai,இந்தியா
21-ஏப்-201514:12:14 IST Report Abuse
mayuran இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு, வரும், மே 1ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Arun - London,யுனைடெட் கிங்டம்
21-ஏப்-201513:45:07 IST Report Abuse
Arun "சர்வதேச ஆன்மிக அமைப்புகள், கடந்த எட்டு ஆண்டுகளாக, சில கோடி டாலர்கள் செலவு செய்து, தீவிர ஆராய்ச்சி நடத்தி, சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான்," ஆதாரம் உள்ளதா ? எந்த சர்வதேச அமைப்பு ? இது மாதிரி விஷயங்கள் பெரும்பாலும் கட்டுகதைகளாகி , இதை வெளியில் சொல்லும் நம்மவன் அவமான படுகிறான்.
Rate this:
Share this comment
Mathiyazhagan. K - Thanjavur,இந்தியா
21-ஏப்-201520:24:12 IST Report Abuse
Mathiyazhagan. KFritjof Capra, in his book 'The Tao of Physics' paid due tribute to the Hindu view of matter and established its linkage with modern physics with empirical research in 1972. He observed the linkage between the ancient Vedic mythology, religious symbolism, art and modern physics: "Every subatomic particle not only does an energy dance, but is also an energy dance a pulsating process of creation and destruction...without end...For the modern Physicists, then, Shiva's dance is the dance of subatomic matter." The European Centre for Research in Particle Physics in Geneva-CERN had unveiled in 2004 the two metre-tall statue of Nataraja, the form of Shiva depictd in dance pose. The dancing Indian deity, representing the cosmic cycles of creation and destruction also depicts the dynamics of subatomic particles, the basis of creation of the universe that is being researched by physicists around the world. Cosmic dance of Shiva-Times of India, Jan 11, 2012...
Rate this:
Share this comment
Cancel
s. subramanian - vallanadu,இந்தியா
21-ஏப்-201513:29:55 IST Report Abuse
s. subramanian இவ்வளவு தகவல்களை அறிவியல் வருமுன்னே நம்மவர்கள் சொன்னதும், அதை மறுக்காமல் ஏற்க மறுத்து, இப்ப ஏற்றுத்தான் ஆகவேண்டிய உண்மை சூழலில் அந்த வெங்காயம் ஒருபக்கம் இருக்கட்டும், இனியாவது அவர்களை ஒதுக்கிட ( பெரியார் ) தினம் தினம் இம்மாதிரி கோயில்களுக்கு சென்று வருவதே நல்லது.
Rate this:
Share this comment
Cancel
anvar - london,யுனைடெட் கிங்டம்
21-ஏப்-201511:53:09 IST Report Abuse
anvar என்ன என்னவோ சொன்னாலும் அதிக வசூல் ஐயப்பாவுக்கு தான் சபரிமலை தமிழன் அங்கேதான் கொண்டுபோய் காசை கொட்டுறான் ஏன் சிதம்பரம் அதிக புகழ் அடைய வில்லை
Rate this:
Share this comment
Cancel
Nannisigamani Baskaran - Chennai,இந்தியா
21-ஏப்-201511:00:51 IST Report Abuse
Nannisigamani Baskaran நான் பல தடவை இந்த ஆலயத்திற்கு சென்று வந்து இருந்தாலும் ஒரு நாள் காலை பூஜையில் கலந்து கொண்ட நினைவு மறக்க முடியாத அனுபவம் ? அபிஷேகம் முடிந்து மேளதாளங்கள் முழங்க தீப ஆராதனை நடந்தபொழுது கண்ணை மூடி தலைக்கு மேல் கையை தூக்கி வணக்கிய பொழுது சிவனே நேரிடையாக நடனம் ஆடியது போல இருந்தது, பிரமையோ என கண்ணை திறந்து இரண்டாவது கண்ணை மூடி பொழுது அதே நடனம் புலித் தோல் ஆடை கூட இன்றும் நினைவில் இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
Raju.M.A. - Dindigul,இந்தியா
21-ஏப்-201510:10:18 IST Report Abuse
Raju.M.A. ஒரு நல்ல ஆன்மிக தகவல் தினமலர் மூலம் உலக மக்களக்கு தரப்பட்டுள்ளது
Rate this:
Share this comment
Cancel
21-ஏப்-201510:08:45 IST Report Abuse
நானும் ஒரு தமிழன் தான் சில கோடி டாலர்களை செலவு செய்து இவ்வளவு உண்மைகளை கண்டறிந்த அறிவியல் குழுவிற்கு நன்றி ... நம் தமிழனின் அறிவியல் அறிவை உலகறியச்செய்ய அரசும் எதாச்சும் செய்யலாமே
Rate this:
Share this comment
Cancel
Desabakthan - San Francisco,யூ.எஸ்.ஏ
21-ஏப்-201506:28:08 IST Report Abuse
Desabakthan மிக அருமையான தகவல்கள். சிறந்த ஆன்மிக தகவல்களை தவறாது தரும் தினமலர் டீமுக்கு நன்றி.
Rate this:
Share this comment
Cancel
Raja Sekaran - Bangalore,இந்தியா
21-ஏப்-201503:00:38 IST Report Abuse
Raja Sekaran சித் சபே சா சிவ சிதம்பரம் .. சிவ சிவ ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை