'தினச்சுடர்' ஆசிரியர் பா.சு.மணி காலமானார்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'தினச்சுடர்' ஆசிரியர் பா.சு.மணி காலமானார்

Added : மே 05, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 'தினச்சுடர்' ஆசிரியர் பா.சு.மணி காலமானார்

பெங்களூரு: பெங்களூரு, கிருஷ்ணகிரியிலிருந்து வெளியாகும், 'தினச்சுடர்' நாளிதழ் நிறுவனரும், ஆசிரியருமான, டாக்டர் பா.சு.மணி, 78, நேற்று முன்தினம்
காலமானார்.கடந்த, 1936ல், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே உள்ள, நாகலாபுரம் பள்ளிவாசல் பட்டியில் பிறந்தவர், பா.சு.மணி. முதல் மாணவர்கடந்த, 1958ல், எம்.ஏ., தேர்வில், சென்னை பல்கலையில், முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். 'தினத்தந்தி' மற்றும் 'மாலை முரசு' நாளிதழ்களில் பணியாற்றினார். பின், சென்னை 'மாலை முரசு', தலைமை செய்தி ஆசிரியராக
பணியாற்றினார்.இதன்பின், 'தமிழ்நாடு' என்ற நாளிதழில் பணியாற்றினார். கடந்த, 1964ல், தன், 27வது வயதில், பெங்களூருவில், 'தினச்சுடர்' மாலை நாளிதழை துவக்கினார். 1983ல், 'சஞ்சேவாணி' என்ற கன்னட நாளிதழையும் தோற்றுவித்தார்.இவருக்கு, தேன் அமுதன் என்ற மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். பல்வேறு புத்தகங்கள் எழுதியுள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமானவராக திகழ்ந்தார். மறைந்த காங்., தலைவர் காமராஜருடனும் நட்பு வைத்திருந்தார்.உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பா.சு.மணி, நேற்று முன்தினம் இரவு, பெங்களூருவில் காலமானார். சி.வி.ராமன் நகர், நான்கவாது கிராஸ், வர்ஸவா லே-அவுட்டிலுள்ள, அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த மணி உடலுக்கு, ஏராளமானோர் மலர் அஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்குஅவரது இறுதிச் சடங்கு, இன்று காலை, 11:00 மணிக்கு கல்பள்ளி மயானத்தில் நடக்கிறது. முன்னதாக, காலை, 10:00 மணிக்கு, பெங்களூரு குயின்ஸ் ரோட்டிலுள்ள, 'தினச்சுடர்' அலுவலகத்தில், அவரது உடல், பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.இவரது மறைவுக்கு, பெங்களூரு தமிழ் சங்கம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X