100 ஆண்டுக்கு பின் நந்திக்கு சந்தனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

100 ஆண்டுக்கு பின் நந்திக்கு சந்தனம்

Added : மே 12, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்திக்கு 100 ஆண்டுகளுக்குப் பின், 250 கிலோ சந்தனத்தில் அலங்காரம் செய்யப்பட்டது.தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், கி.பி., 1,010ம் ஆண்டு சோழர் மன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. தமிழக கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோவிலை, "யுனஸ்கோ' நிறுவனம் உலக புராதான சின்னமாக அறிவித்துள்ளது.


இங்கு, சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, நாயக்க மன்னர்கள் காலத்திலும், விழாக்களை நடத்தி வந்தனர். 16ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால், தஞ்சை பெரிய கோவிலில், 13 அடி உயரம் கொண்ட மகாநந்தி சிலை உருவாக்கப்பட்டது. இந்த நந்தியம்பெருமானுக்கு சந்தனகாப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. காலப்போக்கில் சந்தனகாப்பு அபிஷேகம் தடைபட்டது.


தற்போது, 100 ஆண்டுகளுக்குப் பின், இன்று நந்தியம்பெருமானுக்கு 250 கிலோ சந்தனத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 9 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


இந்த அலங்காரத்துக்கு தேவையான, 250 கிலோ சந்தனத்தை அரைக்கும் பணியை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன், சென்னை வேங்கடராமசுவாமி சீடர்கள் இணைந்து மேற்கொண்டனர்.


விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் ரமணி, வேங்கடராமசுவாமி சீடர்கள் செய்தனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை