ரூ.80 கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் மீட்பு : சர்வதேச கடத்தல்காரன் சுபாஷ் கபூரின் கூட்டாளி கைது | ரூ.80 கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் மீட்பு : சர்வதேச கடத்தல்காரன் சுபாஷ் கபூரின் கூட்டாளி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.80 கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் மீட்பு : சர்வதேச கடத்தல்காரன் சுபாஷ் கபூரின் கூட்டாளி கைது

Added : மே 14, 2015
Advertisement
 ரூ.80 கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் மீட்பு : சர்வதேச கடத்தல்காரன் சுபாஷ் கபூரின் கூட்டாளி கைது

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த, 80 கோடி ரூபாய் மதிப்புள்ள, எட்டு பஞ்சலோக சுவாமி சிலைகள் மீட்கப்பட்டன. இது தொடர்பாக, சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் கபூரின் கூட்டாளி கைது செய்யப்பட்டான்.சென்னை, அண்ணா நகரில் உள்ள, பொருளாதார குற்றப்பிரிவின் கீழ் செயல்படும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, கடந்த, பிப்., மாதம், திருவண்ணாமலை மற்றும் வந்தவாசியில் உள்ள, இரண்டு கோவில்களில் திருடப்பட்ட பஞ்சலோக சுவாமி சிலைகளை, ஒரு கும்பல், வெளிநாடுகளுக்கு கடத்த இருப்பதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து, ஏ.டி.ஜி.பி., பிரதீப் வி பிலிப்; ஐ.ஜி., அசோக்குமார் தாஸ்; டி.ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், இந்த கும்பல் குறித்து துப்பு துலக்கி வந்தனர்.
ஆட்டோவில் கடத்தல்
நேற்று காலை, சிலை கடத்தல் கும்பலை சேர்ந்த, தனலிங்கம், 38, என்பவர், சென்னை, மேற்கு மாம்பலத்தில் இருந்து ஆட்டோவில், பஞ்சலோக சுவாமி சிலைகளை கடத்துவது தெரியவந்தது.
போலீசார் அங்கு விரைந்து சென்று, தனலிங்கத்தை மடக்கிப் பிடித்தனர். ஆட்டோவின் பின்பகுதியில், பதுக்கி வைத்திருந்த மூட்டையை அவிழ்த்து பார்த்த போது, பெருமாள், சிவன், பார்வதி, உமையாள் பரமேஸ்வரி, பார்வதி, விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி, சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட, எட்டு சிலைகள் இருந்தன.
சிவனும், பார்வதியும், ஒரே பீடத்தில் அமர்ந்து காட்சி தருவதுபோல் சிலை வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தனலிங்கத்தை, போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து, ஏ.டி.ஜி.பி., பிரதீப் வி பிலிப் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:பெருமாள், சிவன் பார்வதி, பார்வதி, உமையாள் பரமேஸ்வரி சுவாமி சிலைகள், 11ம் நூற்றண்டையும்; விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி சுவாமி சிலைகள், 13ம் நூற்றண்டையும் சேர்ந்தவை. பிற்கால சோழர்கள், இந்த சிலைகளை பிரதிஷ்டை செய்து உள்ளனர்.சிலைகளின் சர்வதேச மதிப்பு, 80 கோடி ரூபாய் வரை இருக்கும். கைது செய்யப்பட்ட, பட்டதாரியான தனலிங்கத்தின் பூர்வீகம், பெரம்பலூர் மாவட்டம் என்ற போதிலும், 10 ஆண்டுகளாக, சென்னை, கோடம்பாக்கத்தில், மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.
மறைமுக கூட்டாளி
'அப்புச்சு கிராமம்' என்ற திரைபடத்தில், புரடெக் ஷன் மேனேஜராக பணியாற்றி வந்ததாக தெரிவிக்கிறார். சினிமா துறையைச் சேர்ந்த சிலருக்கும், தனவேலுக்கும், சிலை கடத்தல் சம்பந்தமாக தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது.சர்வதேச அளவில் சிலைகள் கடத்தி, கைது செய்யப்பட்ட சுபாஷ் கபூருக்கும், தனலிங்கத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும், அவரது மறைமுக கூட்டாளிகளின் வட்டத்தில் மிகவும் நெருக்கமாக இருந்து உள்ளார். கன்டெய்னர் வாயிலாக துறைமுகம் சென்று, பின், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு, சிலைகளை கடத்த இருந்தது தெரிய வந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், சென்னை, நுங்கம்பாக்கம் - கோடம்பாக்கம் சாலையில் உள்ள, பிரபல ஓட்டலில் பேரம் நடந்த, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள விஷ்ணு, புத்தர் சிலைகளும், தி.நகர், வணிக வளாகத்தில், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில், ஒரு கிலோ போதை பொருள், 11 கிலோ எடை கொண்ட விநாயகர் சிலை மீட்கப்பட்டன.கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒன்பது சுவாமி சிலைகள் மீட்கப்பட்டதே பெரிய நடவடிக்கை. திறம்பட செயலாற்றிய போலீசாருக்கு, 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை