என்பார்வை; பொன்னான உயிர்கள் மண்ணாகலாமா| Dinamalar

என்பார்வை; பொன்னான உயிர்கள் மண்ணாகலாமா

Updated : மே 15, 2015 | Added : மே 14, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 என்பார்வை; பொன்னான உயிர்கள் மண்ணாகலாமா

அயல் நாடுகளை போல் கடுமையான போக்குவரத்து சட்டம் நம் நாட்டிற்கு தேவை என தேச நலனில் அக்கறை கொண்ட எண்ணற்றோர் எழுப்பிய கூக்குரல் பாராளுமன்றம் வரை எட்டி விட்டது போலும். தற்போது 'சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா - 2015' விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இம்மசோதா, தேசிய மோட்டார் வாகனங்கள் சட்டம் 1988 க்கு முற்றிலும் மாற்றாக கடுமையான விதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து விதி மீறல்கள் மற்றும் சாலை விபத்துக்கள் பெருமளவு குறையும் என கூறுவதை விட விபத்துக்களே நடக்காது என கூறுவது தான் இதன் தனிச்சிறப்பு.
மாண்புமிகு மசோதா இந்த மசோதா அமலுக்கு வந்தால் ஐந்து ஆண்டுகளில் இரண்டு லட்சம் பேர் விபத்தில் இருந்து காக்கப்படுவர். மசோதாவின் முக்கிய நோக்கம் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் செயல் திறனுள்ள பொருளாதார பயன் அமைத்து கொடுத்தல். மத்திய அரசு, இச்சட்டத்தை அமல்படுத்தி ஆறு மாதத்திற்குள், தேசிய ஆணையம் ஒன்றை அமைத்து, அதற்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கும். அதன் கவுரவ உறுப்பினராக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் இருப்பார். சாலை போக்குவரத்தின் செயலாளர் அந்தஸ்தில் ஒரு உறுப்பினர், நான்கு முதல் எட்டு வரை மற்ற உறுப்பினர்கள் இருப்பர்.
அனைத்து முக்கிய முடிவுகளையும் தேசிய ஆணைய உறுப்பினர்கள் எடுப்பர் என்பது மசோதாவின் மாண்பாக கருதப்படுகிறது.
விதிமீறலுக்கு குட்பை இம்மசோதாவில் முதன்மையானது எளிதில் திருட முடியாத மோட்டார் வாகனம் உருவாக்குதல். வாகன ஓட்டுனர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க பல ஆலோசனைகளை தெரிவித்தல். உதிரி பாகங்கள் குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்தல். தனியார் நிறுவனத்தின் பங்கு. அனைவருக்கும் ஒன்றுபடுத்திய வாகனப்பதிவு செய்யும் முறை. சாலை பாதுகாப்பு மற்றும் சாலை போக்குவரத்து மேலாண்மை. நவீனமய சரக்கு மேலாண்மை போன்றவையாகும். இதன் மூலம் விதிமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.
வாகன ஓட்டுனர், வாகன விபத்தில் குற்றஞ்சாட்டப்பட்டால் அபராத புள்ளிகள் வழங்கப்படும். 12 தண்டனை புள்ளிகள் ஒருவர் பெற்றால், அவரின் ஓட்டுனர் உரிமை ஐந்து ஆண்டுகள் ரத்து செய்யப்படும். பயிற்சி ஓட்டுனர் உரிமம் வைத்துப்பழகும் போது நான்கு புள்ளிகள் பெற்றாலே, அவரின் பயிற்சி ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். வாகனங்களுக்கும் அபராத புள்ளி உண்டு. அதிக பாரம் ஏற்றி சென்றாலே அபராத புள்ளியும், மேலும் முறைப்படுத்தப்படாமல் விதிமீறி ஓடும் வாகனங்கள் 12 புள்ளிகள் பெற்றால் குறிப்பிட்ட காலத்திற்குள், அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
சீட் பெல்ட் கட்டாயம் இனி, காரை ஓட்டும் டிரைவரும், முன் இருக்கையில் அருகில் இருப்பவரும் கட்டாயம் 'சீட் பெல்ட்' அணிய வேண்டும். டூவீலர் ஓட்டுபவர், பின் இருக்கையில் இருப்பவர் கட்டாயம் ெஹல்மெட் அணிய வேண்டும். சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் புதிய ெஹல்மெட் டிசைன் செய்து தரப்பட்டு, அவர்களும் ெஹல்மெட் அணிய வேண்டும். புதிய சட்டத்தின்படி அன்றாடம் நடைபெறும் சாதாரண போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுனர்களுக்கு தண்டனை, அபராதம் விதிக்கப்படுவதால் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் முற்றிலும் இருக்காது. சிவப்பு விளக்கை கடந்து செல்வது, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, எதிர் திசையில் வாகனம் ஓட்டுவது, அலைபேசியில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவது போன்ற விதிமீறல்களுக்கு முதல் முறை ரூ.100ம், இரண்டாவது முறை அதே தவறை செய்தால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
மது கூடவே கூடாது மது குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.5,000 முதல் ரூ.20 ஆயிரம் அபராதம். மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அளிக்கப்படும். இவர்களின் ஓட்டுனர் உரிமம் ஆறு மாதங்கள் ரத்து செய்யப்படும். இதே தவறை ஒருவர் இரண்டாவது முறையாக செய்யும்போது ரூ.20 ஆயிரம் வரை அபராதம் மற்றும் ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனையும், ஓராண்டுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.
இனி நினைத்த இடத்தில் வாகனத்தை நிறுத்த முடியாது. தடை செய்யப்பட்ட இடத்திலோ, போக்குவரத்துக்கு இடையூறாகவோ, வாகனங்கள் நிறுத்தினால் அபராதம் வீடு தேடிவரும். சைக்கிள் செல்லும் பாதையில் வாகனத்தை நிறுத்தினால் ரூ.5,000 அபராதம். மீண்டும் இதே தவறை செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம். இரண்டு வாரங்களுக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்படும். இப்புதிய சட்டத்தில் ஓட்டுனர்கள் விதிகள் மீறினால், மன மாற்றத்திற்காக குறைந்தது 15 மணி முதல் 300 மணி நேரம் வரை சமூக சேவை செய்ய வேண்டும்.
போலி உதிரி பாகம் உதிரி பாகங்களை இனி போலியாக விற்க முடியாது. யாரேனும் விற்றால் அவர்கள் கடுமையான நடவடிக்கையை சந்திக்க நேரிடும். விபத்து நடந்து சில மணித்துளிகளை 'தங்க நேரம்' என்பர். அந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி முதலுதவி, பணம் இல்லாவிட்டால் கட்டாயம் முதலுதவி அளிக்கும் வகையில் சட்டம் நிறைவேறவுள்ளது. அனைத்து வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் உள்ளதால் உடனடியாக இழப்பீடும் வழங்கும் வகையில் விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
விபத்து ஏற்படும் வண்ணம் வாகனம் ஓட்டினால் அல்லது விதி மீறி ஓட்டினால், தேசிய நெடுஞ்சாலை சொத்துக்கு சேதம் ஏற்படுத்தினால், அவரை போக்குவரத்து அதிகாரிகள் குற்றவியல் நீதிபதி உத்தரவு இல்லாமலும், வாரன்ட் இல்லாலும் கைது செய்யலாம். மாநில அரசுகளுக்கு சாலை பாதுகாப்புக்கு வேண்டிய சி.சி.டி.வி., கேமரா, ஸ்பீட் கன், பிரித் டெஸ்ட் போன்ற கருவிகளை வாங்குவதற்கு நிதி உதவி அளித்து தேசிய ஆணையம் கண்காணிக்கும். எந்த விபத்து ஏற்பட்டாலும், அதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
டூவீலரில் நாய், கால்நடைகளை ஏற்றிக் கொண்டு செல்லக்கூடாது. ஓட்டுனர் உரிமம் பெற பல பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தாலும் விதிகளை மீறினால் அதை எப்போதும் வேண்டும் என்றாலும் பறிமுதல் செய்யலாம். மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதால், பல மாற்றங்கள் செய்த பிறகே இச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன. இச்சட்டத்தை எதிர்த்து தேசிய அளவில் பந்த் நடந்தது. எங்கும் போக்குவரத்து விதி தான். முன்பு போல் சுதந்திரமாக வாகனம் ஓட்ட முடியாதா என சிலர் புலம்பலாம். என்ன செய்ய? விலை மதிக்க முடியாத பொன்னான உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்றால் கடும் விதிகளை நாம் மதித்து பின் பற்றித்தான் ஆக வேண்டும்.
- எஸ்.அருண்குமார், வழக்கறிஞர்சாலை பாதுகாப்பு உறுப்பினர்,மதுரை. 98421 99239.
வாசகர்கள் பார்வை
ஆபத்தான அழகு

என் பார்வையில் வெளியான 'அழகு சாதனங்களில் ஒளிந்திருக்கும்' ஆபத்து கட்டுரை படித்தேன். ஆபத்தை விலை கொடுத்து வாங்கி நம்மை அழகாக்கி கொள்கிறோம் என்பதை பெண்கள் உணர வேண்டும்.
- வி.எஸ்.ராமு, செம்பட்டி.

தள்ளாடும் இளைஞர்கள்

என் பார்வையில் வெளியான 'மதுவை விட்டு விலகினாலும் மது விலக்கே' கட்டுரை படித்தேன். இன்றைய திருமண பார்ட்டிகள் மது விருந்து இல்லாமல் நிறைவு பெறுவதில்லை. இளைஞர்களின் போக்கு தள்ளாட்டமாக தான் போய் கொண்டிருக்கிறது.
- எஸ்.பரமசிவம், மதுரை

கெமிக்கல் அழகு

'அழகு சாதனங்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து' கட்டுரை படித்தேன். கெமிக்கல் கலந்த அழகு சாதனங்களை வாங்கி நம் ஆரோக்கியத்தை கெடுத்து வருகிறோம் என்பதை பெண்கள் இனியாவது உணர வேண்டும்.
- அ.முகமது இஸ்மாயில், தேவகோட்டை.

வெற்றி வாகை

என் பார்வையில் வெளியான 'வீழ்ந்தாலும் வீறு கொண்டு எழு' கட்டுரை கண்டேன். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி வாகை சூடி அந்த வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை உணர்த்தியது கட்டுரை.
- அ.ராஜா ரஹ்மான், கம்பம்.

என்னை கவர்ந்த என் பார்வை

என் பார்வை என்னை மிகவும் கவர்ந்த பகுதி. இப்பகுதியில் வரும் கட்டுரைகள் அனைத்தையும் தவறாமல் படித்து வருகிறேன். என்னைப் போல பலரும் என் பார்வை பகுதியை படிக்கிறார்கள் என்பதை வாசகர்கள் கடிதம் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
- டி.சம்பத், காரைக்குடி.

ஆதார் அவசியம்என் பார்வையில் வெளியான 'இது நமது ஜனநாயக கடமை' கட்டுரை படித்தேன். வாக்காளர் அட்டையுடன் ஆதார் விபரங்களை இணைப்பதிவின் அவசியத்தை தெரிந்து கொண்டோம்.
- மா. கார்த்திகேயன், ஆர்.எஸ்.மங்கலம்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை