PM Narendra Modi Announces $1 Billion Credit Line to Mongolia | மங்கோலியா நாட்டுக்கு பிரதமர் மோடி ரூ.6,000 கோடி கடனுதவி: பார்லி.,யில் தாமரை சின்னத்தை பார்த்ததும் மகிழ்ச்சி| Dinamalar

மங்கோலியா நாட்டுக்கு பிரதமர் மோடி ரூ.6,000 கோடி கடனுதவி: பார்லி.,யில் தாமரை சின்னத்தை பார்த்ததும் மகிழ்ச்சி

Updated : மே 19, 2015 | Added : மே 17, 2015 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
மங்கோலியா நாட்டுக்கு பிரதமர் மோடி ரூ.6,000 கோடி கடனுதவி: பார்லி.,யில் தாமரை சின்னத்தை பார்த்ததும் மகிழ்ச்சி

உலான் படோர்: மங்கோலியா நாட்டில், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று அந்நாட்டிற்கு, 6,000 கோடி ரூபாய் கடனுதவி வழங்கினார். விடுமுறை நாளான நேற்று, விசேஷமாக கூடியிருந்த அந்நாட்டின் பார்லிமென்டில் உரையாற்றிய மோடி, அங்கு தாமரை சின்னம் இருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

சீனாவில், மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் ஷாங்காய் நகரிலிருந்து, சீனாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மங்கோலியாவுக்கு, நேற்று முன்தினம் இரவு சென்றார். மங்கோலியா செல் லும், முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்ற மோடிக்கு, அந்நாட்டின் தலைநகர் உலான் படோரில், பார்லி., வளாகத்தில் உள்ள, 'ஸ்டேட் பேலஸில்', பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மங்கோலிய பிரதமர் சிமெட் சாய்கான்பிலெக், பிரதமர் மோடியை கட்டித் தழுவி வரவேற்றார்.பின், இருவரும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, 14 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அது பற்றிய விவரம் வருமாறு:
*ராணுவம், கம்ப்யூட்டர் குற்றங்கள் தடுப்பு, விவசாயம், புதுப்பிக்கத்தக்க மின்சாரம், சுகாதாரம் ஆகிய துறைகளில், இரு நாடுகளும் ஒத்துழைப்பது என, முடிவானது.
*மங்கோலியாவின் ராணுவப் பாதுகாப்பிற்கான, 'சைபர் செக்யூரிட்டி' மையத்தை ஏற்படுத்துவது.
*இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ், இந்தியா - மங்கோலியா பள்ளிகள், 200 துவக்கப்படும்.
*இருநாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள, சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தின் படி, மங்கோலியாவிலிருந்து, யுரேனியத்தை இந்தியா இறக்குமதி செய்யும்.பேச்சுக்குப் பின், இரு தலைவர்களும், கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது, பிரதமர் மோடி பேசியதாவது:இந்தியாவுக்கும், மங்கோலியாவுக்கும் இடையே, 60 ஆண்டுகளாக நிலவும் தூதரக உறவை மேம்படுத்திக் கொள்ளவும், மங்கோலியாவில், 25 ஆண்டு களாக நிலவும் ஜனநாயகத்தை போற்றும் வகையிலும், இந்த சுற்றுப்பயணம் அமைந்துள்ளது. கிழக்கு ஆசிய நாடுகளுடன், நல்லுறவை பேண வேண்டும் என்ற இந்தியாவின் கொள்கையின் படி, மங்கோலியாவுடன் நெருக்கமான உறவை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளோம்; இதன்மூலம், ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில், அமைதி ஏற்பட வழிவகை காணப்பட்டு உள்ளது.மங்கோலியாவுக்கு, 6,000 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும்; இந்த தொகை, மங்கோலியாவின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.இன்று, மங்கோலியா சுற்றுப்பயணத்தை நிறைவு செய்யும் மோடி, தென் கொரியா செல்கிறார்.


மோடிக்கு குதிரை பரிசு:

*மங்கோலிய அதிபர் சாகியாக்கின் எல்பெக்டோர்ஜை, மோடி சந்தித்து பேசினார்.
*அந்நாட்டின், 'ஸ்டேட் கிரேட் ஹுரால்' பார்லிமென்டில் மோடி பேசினார்.
*அங்குள்ள புத்த மடாலயம் ஒன்றில், பீகாரின் புத்தகயாவிலிருந்து எடுத்துச் சென்றிருந்த போதி மரக்கன்றை, பிரதமர் மோடி நட்டார்.
*மங்கோலியாவில் உள்ள தேசிய புற்றுநோய் மையத்தில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான, 'பாபாடிரான்' கருவியை, மோடி ஒப்படைத்தார்.
*மோடியை வரவேற்கும் விதமாக, அந்நாட்டின் பாரம்பரிய குதிரையேற்றம், மல்யுத்தம், வில்வித்தை போட்டிகளை உள்ளடக்கிய, 'நாதாம்' விழா நடைபெற்றது. அதை கண்டுகளித்த மோடி, மங்கோலியர்களின் பாரம்பரிய உடையை அணிந்திருந்தார்.அப்போது, பிரதமர் மோடிக்கு, குதிரை ஒன்றை, மங்கோலிய பிரதமர் பரிசளித்தார்.


பார்லி.,யில் 'தாமரை':

பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில், இதுவரை ஞாயிற்றுக்கிழமைகளில் கூடாத பார்லி., நேற்று கூட்டப்பட்டது; அதில், மோடி உரையாற்றினார். அப்போது, அந்நாட்டின் சின்னங்கள், அங்குள்ள சுவர்களில் வரையப்பட்டிருந்தன; அவற்றில், 'தாமரை'யும் வரையப்பட்டிருந்தது. அதை பார்த்ததும் மகிழ்ந்த மோடி, ''இது, எங்கள் கட்சியான, பா.ஜ.,வின் சின்னம்,'' என்றார்; அதைக் கேட்டு, எம்.பி.,க்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது பேசிய மோடி, ''இருநாடுகளுக்கும், யற்கையாகவே பாரம்பரிய உறவு இருப்பதை, இது நினைவுபடுத்துகிறது,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
18-மே-201521:12:19 IST Report Abuse
சொல்லின் செல்வன் அய்யா, உள்நாட்டில் ஆயிரம் பிரச்சனை இருக்கு. தமிழ்நாட்டுக்கு கர்நாடகாவும் ஆந்திராவும் கேரளாவும் தண்ணீர் குடுக்கமாட்டேன் என்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து மின்சாரம் மட்டும் வேண்டுமாம். அமெரிக்க நிறுவனங்களான பெப்சி மற்றும் கோக-கோலா இந்திய நாட்டின் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறார்கள். அமெரிக்காவில் இந்த நிறுவனங்களுக்கு நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி நமக்கென்ன. இந்தியர்கள் அதுவும் தமிழர்கள் இளித்தவாயர்கள்தானே. முதலீடுகளை கவர்கிறேன் என்கிறீர்கள். சரி. அதனால் 10000 பேருக்கு வேலை கிடைக்கும். ஆனால் அந்த நிறுவனங்களுக்கு விவசாய நிலங்களை தாரை வார்க்கிறீர்கள். விவசாயத்தை தவிர ஒன்றுமே தெரியாத விவசாயிகளை அந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமைகளாக போக சொல்கிறீர்கள்.. அவர்கள் அங்கு வேலை செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்? தற்கொலை செய்துகொள்வார்கள். சில மாதங்களுக்கு முன்னால் நம் சகோதரர்களின் தலையை பாகிஸ்தான் ராணுவம் கொய்து கொண்டு போனது. கண்டனம் தெரிவித்ததோடு நிறுத்திகொண்டீர்கள்.நேற்று ஆந்திர போலிசால் 20 தமிழர்கள் கொல்லப்பட்டனர். நீங்கள் அதை பற்றி வாயை கூட திறக்கவில்லை. நீங்கள் மங்கோலியா போங்க செக்கோஸ்லோவகியா போங்க வேண்டாம் என்று கூறவில்லை. உள்நாட்டுப்பிரச்சினைகளிலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் என்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel
P.S.R - Rio,பிரேசில்
18-மே-201520:49:37 IST Report Abuse
P.S.R தாமரையை பார்த்ததற்கு 6000 கோடி... கடவுளே இந்தியாவில் எத்தனை தெரு கோடி பாமரர்கள் உள்ளனர், அவர்களை பற்றியும் கொஞ்சம் சிந்தியுங்கள் பிரதமரே..... யாராவது காவி கட்டி பார்த்தால், ஒரு வேளை இந்தியாவையே கொடுத்து விடுவாரோ
Rate this:
Share this comment
Cancel
Muthu Kumar - Singapore,சிங்கப்பூர்
18-மே-201517:54:35 IST Report Abuse
Muthu Kumar யோவ்.... மொதல்ல நம்ம நாட்டு கடன் எவ்ளோ இருக்குனு தெர்யுமா...
Rate this:
Share this comment
Cancel
sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-மே-201515:06:55 IST Report Abuse
sunil மங்கோலியாவிலிருந்து என்ன முதலீட்டை எதிர்பார்த்து நமது பிரதமர் அங்கே போனார்......? மோடி உலகை சுற்றுவது முதலீட்டை ஈர்ப்பதற்கா இல்லை உலகை சுற்றிய முதல் பிரதமர் என்ற பெருமைக்காகவா.....?
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
18-மே-201517:09:03 IST Report Abuse
Sanny அவர் சிரியாவுக்கு போனால் தான் அந்த பெருமை கிடைக்கும். போவாரா?...
Rate this:
Share this comment
Cancel
Lokesh Raju - Chennai,இந்தியா
18-மே-201514:40:22 IST Report Abuse
Lokesh Raju அட முட்டாள்களே....இது கடன் உதவி... இலவசம் கிடையாது......மற்றும் 14 ஒப்பந்தங்கள் முடிவனதே அதை படிக்கும் பொது புரிய வில்லையா??? 50 ஆண்டு மோசமான காங்கிரஸ் ஆட்சியை விட, மோடி அரசு சந்தேகமே இல்லாமல் நாட்டின் வளர்சிக்கு பாடு படுகிறது.......
Rate this:
Share this comment
Cancel
Lokesh Raju - Chennai,இந்தியா
18-மே-201514:34:24 IST Report Abuse
Lokesh Raju வெளிநாட்டு பயன்கள் பிரதமரின் கடமை ...இந்தியர் பல நாட்டிலும் சென்று வேலை செய்வது, வியாபாரம் செய்வதால் பல நாட்டின் நல்லுறவு வேண்டும்.......இது கூட தெரியாமல் படித்தவர்களே வால் வால் என கத்துவது முட்டாள்தனமாக உள்ளது......
Rate this:
Share this comment
Cancel
P.S.R - Rio,பிரேசில்
18-மே-201513:33:57 IST Report Abuse
P.S.R தினமலர் தொல்லை தாங்க முடியலைடா சாமி.... மோடி வெளிநாடு சென்றிருக்கிறார் அவ்வளவுதானே... ஒரு தலைவர் இன்னொரு நாடு செல்வது சிறப்புதானே... இதை ஒரு செய்தியாக போட வேண்டிய அவசியம் என்ன? நேரு ,இந்திரா, ராஜீவ்( நான் காங்கிரஸ்காரன் இல்லை ) போன்றோர் ஏழைகளிடம் காட்டிய அன்பிற்கு முன் இவர் பகட்டு, கால் தூசு பெறுமா? முமைத் கான் வெளிநாடு சென்ட்ரல் கூடத்தான் மக்கள் பார்க்க வருவார்கள்...இதற்கு முந்தய கால பிரதமர்கள் வெளிநாடு சென்ற போது, அந்நாட்டு தலைவர்களும், மக்களும் இந்திய தலைவர்களை விரட்டியா அடித்தார்கள்? இந்த செய்தியை தலைப்பு செய்தியாய் போட என்ன அவசியம்? இப்படி செய்தி போட்டுத்தான் மோடி புகழை வளர்க்க வேண்டுமா? நல்லது செய்தால் தானாக புகழ் கூடும்...தினமலர் தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழ்நாட்டில் பிஜேபி எடுபடாது...
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-மே-201513:22:44 IST Report Abuse
Pugazh V செல்லுமிடமெல்லாம் சிறப்பு - இப்படி 6000 கோடி ரூபாய் தருகிறேன் என்றால் வரவேற்காமல் இருப்பார்களா? அதுவும் திருப்பித் தரவே வேண்டாத கடன் அல்லவா? எந்த நாடாவது இன்னொரு நாட்டிடம் வாங்கின கடனை திருப்பி தந்திருக்கிறதா? பட்ஜெட்டில் பற்றாக்குறை, ஆனால் பிற நாட்டுக்கு 6000 கோடி நிதி? ஒன்றும் புரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
s.p.poosaidurai - Ramanathapuram,இந்தியா
18-மே-201512:26:13 IST Report Abuse
s.p.poosaidurai இந்திய நாட்டு விவசாய்க்கு தொழில் முதலாளிக்கு கடன்கொடுத்து உதவ முன்வராத இந்திய பிரதமர், உலகநாடுகளிடம் வட்டிக்கு பணம் கொடுத்து வட்டி தொழில் நடத்துவது சற்று ஆச்சரியமாக இருக்கிறது. இந்திய மங்கோலியாவிருக்கு கடன்கொடுத்தால் சீன இலங்கைக்கு இலவசம் கொடுக்கும் நிலை உருவாகுமே. எது எப்படியோ நல்உறவு ஏற்பட்டால் இந்திய பணத்தை அள்ளிகொடுங்கள் அதே சமயம் இந்திய ஏழைகளுக்கு கொஞ்சம் கில்லி போடுங்கள்
Rate this:
Share this comment
Cancel
m.s.rajan - chennai,இந்தியா
18-மே-201509:38:21 IST Report Abuse
m.s.rajan வரும் போது குதிரையில் வருவாரா?
Rate this:
Share this comment
BLACK CAT - Marthandam.,இந்தியா
18-மே-201512:11:54 IST Report Abuse
BLACK CATநானும் கேட்க நினைத்த கேள்வி ...?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை