Govt plans amendments in dowry harassment law | பொய் புகார் பெண்களால் ஆண்களுக்கு கொடுமை: சட்டத்தை திருத்த, மத்திய அரசு முடிவு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பொய் புகார் பெண்களால் ஆண்களுக்கு கொடுமை: சட்டத்தை திருத்த, மத்திய அரசு முடிவு

Added : மே 18, 2015 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பொய் புகார் பெண்களால் ஆண்களுக்கு கொடுமை: சட்டத்தை திருத்த, மத்திய அரசு முடிவு

புதுடில்லி: 'மாமியார், மாமனாரை சிறையில் தள்ள வேண்டும்' என, மோசடித்தனமாகக் கருதும் மருமகள்களால் தொடரப்படும் வரதட்சணை கொடுமை வழக்குகள் அதிகரிப்பதால், அந்த சட்டத்தை திருத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நம் நாட்டில், வரதட்சணை கேட்பதும், கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம். 'வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகின்றனர்' என, மணமகன் வீட்டார் மீது மணமகள், போலீசில் புகார் கொடுத்தால் போதும்.


3 ஆண்டு சிறை:

சம்பந்தப்பட்ட மணமகன் வீட்டார் உடனடியாக கைது செய்யப்படுவர்; குற்றம் நிரூபிக்கப்படுமானால், மூன்றாண்டு கள் சிறை தண்டனை கிடைக்கும்; அவர்களால் ஜாமினில் வெளியே வர முடியாது. வரதட்சணை குற்றங்களை தடுக்க, இத்தகைய கடுமையான சட்டப் பிரிவுகளை, இந்திய தண்டனை சட்டம் அளிக்கிறது. இதை சில பெண்கள், தவறாக பயன்படுத்துவதால், வரதட்சணை கொடுமைக்கு எதிரான, இந்திய தண்டனை சட்டம், 498 - ஏ பிரிவை திருத்தம் செய்ய, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.இதற்கு, மத்திய சட்ட அமைச்சகமும், நீதிபதி மாலிமத் கமிஷனும் பரிந்துரை செய்துள்ளன.அதன் படி, கோர்ட்டில் விசாரணை துவங்கினாலும், கணவன் - மனைவி சமாதானமாக செல்ல ஏதுவாக திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.


அபராதம்:

மேலும், சிறை தண்டனைக்கு பதில், குறிப்பிட்ட தொகையை அபராதமாக வழங்கினால், தண்டனையிலிருந்து தப்பலாம் என, திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.


ஆண்டுக்கு 10 ஆயிரம் போலி வழக்குகள் பதிவு:

கடந்த, 2011, 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், முறையே, 99 ஆயிரம், 1.06 லட்சம் மற்றும் 1.18 லட்சம் வரதட்சணை கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்குப் பின், அவற்றில், தலா 10 ஆயிரம் வழக்குகள், வேண்டுமென்றே மருமகளால் போடப்பட்ட வழக்குகள் என்பது தெரிய வந்தது. தேசிய குற்றப் பதிவகம், இந்த தகவலை தெரிவித்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John - Chennai,இந்தியா
19-மே-201501:05:03 IST Report Abuse
John நானும் பொய் வழக்கல் பாதிக்க பட்டவன்..தற்போது எனது மகனை பிரிந்து துன்பபடுகிறேன் 3 வருடமாக..கல்யாணம் செய்யாமல் கூட இருந்து விடலாம், ஆனால், மகனை பிரிந்து இருப்பது தான் பெரிய வலியாக தினம் தினம் உள்ளது..என்ன செய்ய..நீதிமன்றங்களும் யார் பிள்ளையோ எப்படியாவது போகட்டும் என்று தான் எண்ணுகிறது..ஊருக்கு ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரிய விரட்டுமாம் என்ற பழமொழி ஏற்ப நம்முடன் வசித்த பெற்றோரை விரட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் திருமணம் செய்கிறார்கள் சில பெண்கள்..
Rate this:
Share this comment
Dowrycase Victim - noida,இந்தியா
25-ஜூலை-201521:12:06 IST Report Abuse
Dowrycase Victimநானும் தான் :(...
Rate this:
Share this comment
Cancel
ilangovandba - Chennai,இந்தியா
18-மே-201508:59:46 IST Report Abuse
ilangovandba பொய் புகார் போட சொலுவது வக்கீல்கள் தான். முதலில் தவறை தூண்டி பணம் பறிக்க நினைக்கும் வக்கீல்களை முதலில் தண்டிக்க வேண்டும். ஆண்கள் பெற்றோருக்கும், சகோதரிக்கும், மனைவிக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் உழைக்கும் அடிமையாக கருத படுகிறார்கள். பெண்கள் அவர்கள் குழந்தைகளை மட்டும் பார்த்து கொள்ளுவதை சாதனையாகவும் வலியாகவும் எண்ணுகிறார்கள். ஆணுக்கு நிகரான தண்டனை பெண்களுக்கும் வேண்டும். ஆண் என்றால் அடிமை, பெண் என்றால் பொக்கிஷம்/பாவம் என்கிற நிலை மாற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
18-மே-201506:30:56 IST Report Abuse
kundalakesi ம்ம், அதுவும் கைச்செலவுக்கென்று கூறி வேலைக்கு செல்லத்தான் செல்வேன் என அடம் பிடித்து செல்லும் பெண்கள், ரொம்பவே கூத்தடிக்கும், இல்லத்திலும், அலுவலகத்திலும். இந்தப் பெண்களால் அவமானந்தான் .
Rate this:
Share this comment
Cancel
18-மே-201505:54:30 IST Report Abuse
சத்தியநாராயணன் (சத்தி) கணவர், மாமியார் , மாமனாரை பழிவாங்கத்தான் வரதட்சணை கொடுமை வழக்குகள் பதிவு செய்யபடுகின்றன. பெண்ணுரிமை பாதுகாப்பு சட்டத்தை உண்மையில் தேவைப்படும் பெண்கள் பயன்படுத்தாது இருபதுதான் உண்மை நிலவரம். ஆண்களை ஒடுக்க நினைக்கும் இந்தமாதிரி gender biased சட்டங்கள் இருப்பது நம் நாட்டில் மட்டுமே.
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
18-மே-201505:47:12 IST Report Abuse
தங்கை ராஜா இந்த சட்டத்தினால் தான் ஈகோ கூடிப்போய் விவாகரத்துக்களும் அதிகரித்துள்ளன. திருத்த வேண்டிய சட்டம் தான்.
Rate this:
Share this comment
Cancel
Balaji - Vellurankottai,இந்தியா
18-மே-201504:56:40 IST Report Abuse
Balaji திருமணம் செய்யாமல் உறவு என்று அரசு கொண்டுவர வேண்டும், ஆண் divorce கேட்டாலும் கொடுக்க வேண்டும், இல்லை என்றால் உலக நாடுகள் இந்திய அரசியல் குடும்ப சட்டத்தை அசிங்கமாக சொல்லும். அனைத்து மதத்தவருக்கும் ஒரே சட்டம் வேண்டும், விபசார பெண்களை அரசு அமைத்து கொடுக்க வேண்டும். அவர்களுக்கு பென்ஷன் கொடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-மே-201504:11:18 IST Report Abuse
Kasimani Baskaran நோயே இல்லாமல் திடமாக இருக்கும் இணைவிக்கு அல்சைமர் என்று சொல்பவர்கள் மீது வழக்குத்தொடர வழி இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
BLACK CAT - Marthandam.,இந்தியா
18-மே-201500:46:48 IST Report Abuse
BLACK CAT திருமணம் செய்யமல் இருந்தால் நன்று ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை