குமரகிரி ஏரியில் தூய்மை பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குமரகிரி ஏரியில் தூய்மை பணி

Added : மே 18, 2015

சேலம் : சேலம், அம்மாபேட்டை குமரகிரி ஏரி நீர்நிலை ஆதார பசுமை இயக்க குழு மற்றும் சேலம் மக்கள் குழு சார்பில், நேற்று அம்மாபேட்டை குமரகிரி ஏரியை சுத்தப்படுத்தினர்.அம்மாபேட்டை குமரகிரி ஏரி, 39.25 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஏரியை தூர்வாரி, 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஏரியில் சாக்கடை நீர், சாயக்கழிவுகள், பாலித்தீன் பேப்பர், குப்பைகள், கோழி கழிவுகள் உள்ளிட்டவை நிறைந்து, மிக மோசமான நிலையில் இருந்தது.இதை கருத்தில் கொண்டு, அம்மாபேட்டை குமரகிரி நீர்நிலை ஆதார பசுமை இயக்க குழு ஆரம்பிக்கப்பட்டது. மாநகராட்சியிடம் அங்கீகாரம் பெற்று, சேலம் மக்கள் குழு என்ற மற்றொரு அமைப்புடன் சேர்த்து, ஏரியை சுத்தம் பணியை மேற்கொண்டனர்.ஏரியில் வேம்பு, மூங்கீல் என, 6,500 மரங்கள் நடப்பட்டுள்ளது. கோரை போன்ற புல் வகைகள் நடப்பட்டுள்ளதால், 2,000க்கும் மேற்பட்ட பறவைகள் வசித்து வருகின்றன. நேற்றைய, சுத்தம்படுத்தும் பணியில், பாலித்தீன் பையால் ஏற்படும் தீமைகள் குறித்து, பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அம்மாபேட்டை குமரகிரி ஏரி நீர்நிலை ஆதார பசுமை இயக்க குழுவின் பொருளாளர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X