DMK ready to fight | தேர்தல் 'பஜாரில்' கடை விரித்த திமுக ; கூட்டணிக்கு முன்பே களப்பணிக்கு "ரெடி'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் 'பஜாரில்' கடை விரித்த திமுக ; கூட்டணிக்கு முன்பே களப்பணிக்கு "ரெடி'

Added : மே 25, 2015 | கருத்துகள் (52)
Advertisement
கூட்டணிக்கு முன்பே களப்பணிக்கு "ரெடி'

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில், தேர்தல் பணிக்கு இப்போதே தயாராகத் துவங்கி உள்ளது திமுக. தேர்தல் கூட்டணியாகட்டும், வேட்பாளர் பட்டியல் ஆகட்டும், தேர்தல் பணி என்றாலே எப்போதும் முன்னணியில் இருப்பது அதிமுக. மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி பேச்சுவார்த்தையை "ஜவ்வாய்' இழுத்துக்கொண்டும் மல்லுக்கட்டிக் கொண்டும் இருக்கும்போது, அதிமுக மட்டும் "தடாலடி'யாக அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டு இருக்கும்.

வேட்பு மனு தாக்கல் தொடங்கிய பிறகு தான், மற்ற கட்சிகள் பேச்சுவார்த்தையை முடித்து, "மூச்சு வாங்கிக்கொண்டு' இருக்கும். ஆனால் இந்த முறை திமுகவே முதலில் முந்தும் போல் தெரிகிறது. சொத்துக் குவிப்பு வழக்கு அப்பீல் தீர்ப்பு வரும் வரை ஜெயலலிதா அமைதி காத்ததால், தமிழக அரசியலில் ஒரு இடைவெளி உருவானது. இதைப் பயன்படுத்தத் தொடங்கியது திமுக.

மு.க.தமிழரசு மகன் திருமணத்தை சாக்கு வைத்து, மற்ற கட்சி தலைவர்களை சந்தித்து, ஒரு இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சித்தார் ஸ்டாலின். இந்த "ராஜதந்திரம்' முழு வெற்றி பெற்றது என கூற முடியாவிட்டாலும், "களப்பணி' வேலையை தொடங்கிவிட்டது திமுக.


மதுரை மாநாடு: இதன் ஒரு கட்டம் தான், மதுரையில் நேற்று நடந்த திமுக மாநாடு. "மக்கள் ஓரணி, கேள்வி கேட்கும் பேரணி' என தலைப்பு வைத்து, நல்ல கூட்டத்தைக் கூட்டி காட்டிவிட்டது அக்கட்சி. 18 மாவட்ட கட்சியினர் கலந்து கொண்டதும் இக்கூட்டத்திற்கு காரணம்.

மாநாட்டின் தலைப்பு, "எதிர்க்கட்சிகள் ஓரணி' என சொல்லாமல் சொல்லி, இக்கூட்டத்தைக் காட்டி, ""இவ்வளவு கூட்டத்தைக் கூட்டி உள்ளோம். இன்னமும் எங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. எங்களுடன் கூட்டணி சேருங்கள். உங்களுக்கும் நல்லது'' என அறைகூவல் விடுத்துள்ளது திமுக.


மாவட்டங்கள் கூட்டம்: அதோடு நிற்கவில்லை அக்கட்சி. மாநாடு முடிந்த கையோடு, அனைத்து மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தையும் கூட்டிவிட்டார் அக்கட்சி தலைவர் கருணாநிதி. மதுரை மாநாட்டுக்கு வந்திருந்த மாவட்ட செயலாளர்கள், இரவோடு இரவாக சென்னைக்கு "பரபரப்பாக' பறந்துள்ளனர்.

ஆக, எந்தக் கட்சி தங்களுடன் கைகோர்க்கும் என உறுதியாகாத நிலையில், தேர்தல் களப்பணிக்கு "உடன்பிறப்பு'களை உசுப்பி விட்டுள்ளது அக்கட்சி. பெருங்கூட்டத்தைக் காட்டி, மற்ற கட்சிகளை கொஞ்சம் மிரளவும் வைத்துள்ளது. ஆக, களத்தில் இறங்கிவிட்டது திமுக. இவர்களுடன் வேறு யார் யாரேல்லாம் ஜோடி சேரப் போகிறார்களோ?


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundararaj - singapore,சிங்கப்பூர்
26-மே-201504:15:29 IST Report Abuse
sundararaj வாருங்கள் தளபதியாரே, வாருங்கள் , 2016 DMK வுடயதே ,
Rate this:
Share this comment
Cancel
sundararaj - singapore,சிங்கப்பூர்
26-மே-201504:14:49 IST Report Abuse
sundararaj திமுக தான் அதிமுகவுக்கு ஒரே மாற்று.....மக்கள் இந்த ஆளும் அரசாங்கம் மேல செம காண்டுல இருக்காங்க போல....
Rate this:
Share this comment
Cancel
Sundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-மே-201520:25:13 IST Report Abuse
Sundar Good strategy.
Rate this:
Share this comment
Cancel
தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா
25-மே-201519:48:43 IST Report Abuse
தம்பி ஸ்டாலின் அவசரத்தை பார்த்தல் இன்னும் சில நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்துவிடுவார் போல
Rate this:
Share this comment
Cancel
தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா
25-மே-201519:47:04 IST Report Abuse
தம்பி மதுரை வரை வந்துவிட்டு அண்ணன் அழகிரியை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவரை கூட்டத்திற்கும் அழைக்கவில்லை ஏன் தளபதி
Rate this:
Share this comment
Cancel
தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா
25-மே-201519:45:50 IST Report Abuse
தம்பி இன்னும்மா இந்த ஊர் உங்களை நம்புது
Rate this:
Share this comment
vadivelu - chennai,இந்தியா
25-மே-201520:52:44 IST Report Abuse
vadiveluகூடத்துக்கு அழைத்து வரப்பட்டவர்களில் பலர் தமிழ் தெரியாத அயல் மாநிலக்காரர்கள்.தி மு க மாநாட்டில் இந்தி போல் ஒரு மொழியை பேசி கொண்டு இருந்தார்களாமே.ஏன் இந்த நிலைமை....
Rate this:
Share this comment
Cancel
Shahul Hameed - salem,இந்தியா
25-மே-201518:48:32 IST Report Abuse
Shahul Hameed கடைய திறக்கறாங்க..பகடைய உருட்டறாங்க..குமாரசாமிய திட்டறாங்க..கேப்டன்கிட்ட கெஞ்சறாங்க. அன்புமணி விளக்குமாறில் விளாசிய பிறகும் இளிக்கறாங்க..சோனியா காலப்பிடித்து கண்கலங்குறாங்க. கொலைப்பழியை வைகோ மீது சுமத்தி கழுத்தபிடிச்சு வெளியே தள்ளிவிட்டு இப்ப குசலம் பேசறாங்க..திருமா திரும்ப வருமா என ஏங்கறாங்க.. நீங்க சவாாி செய்ய இத்தனை முதுகுகள் தேவையா?????உங்களுக்கு முதுகெலும்பு என்று ஒன்று இருக்குமானால் தனியா எந்திாிச்சு நடங்க...காறி துப்பிய ...கேவலபடுத்திய கட்சிகள்கிட்ட போய் கூட்டணி பிச்சை கேட்கும் இயக்கம் திமுக மட்டும்தான். ச்சீ போ என்ற வாா்த்தை கேட்கும் பிச்சைக்காரன் மீண்டும் அந்த வீட்டின் வாசலை மிதிப்பதில்லை..நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்.
Rate this:
Share this comment
kalyan - CHENNAI,இந்தியா
26-மே-201505:59:55 IST Report Abuse
kalyanகொன்னுட்டீங்க ஹமீது.. சூப்பரோ சூப்பர்...
Rate this:
Share this comment
Cancel
ஜெய் - us  ( Posted via: Dinamalar Android App )
25-மே-201518:04:16 IST Report Abuse
ஜெய் திமுக தான் அதிமுகவுக்கு ஒரே மாற்று.....மக்கள் இந்த ஆளும் அரசாங்கம் மேல செம காண்டுல இருக்காங்க போல....
Rate this:
Share this comment
tharan - chennai,இந்தியா
25-மே-201519:01:14 IST Report Abuse
tharanMr ஜெய் அடுத்த தேர்தலில் அ தி மு க win பண்ணலைன பார்க்கலாம் ஜெய் அவர்கலிய .தி மு க படு தோல்வி அடையும் இது உறுதி ஈளுதி வசுகொங்க சும்மா சொல்லல ஜெய் மக்களின் டி கடை ஹோட்டல் வொர்கிங் ஏரியா எல்லதிளும் பேசி கேட்டத சொல்றன் பட் final தீர்ப்பில் கொஞ்சம் மன கசப்பு அதுவும் நன்மைக்க...
Rate this:
Share this comment
Cancel
sp kumar - Chennai,இந்தியா
25-மே-201517:34:30 IST Report Abuse
sp kumar அம்மா விடுதலை ஆனதும் ரோட்டுக்கு வந்த கூட்டம் , பதவி ஏற்க போறப்ப முதன் முதலா வெளிய வந்த அன்னைக்கு திரட்டப்படாத, பார்க்க வந்த ஜனம் வரலாறு காணாதது. ஆனால் ஒரு மாநாட்டுக்கு உங்களால் எல்லா மாவட்டங்களிலும் , மதுரையில் குவார்ர்டெருக்கும் பிரியாணிக்கும் லாரியில் ஏற்றி வந்த கூட்டத்துக்கும் அதிக வித்தியாசமுள்ளது .இந்த எழுச்சியை மக்கள் திலகம் மட்டுமே கொண்டிருந்தார் . அதையும் மிஞ்சி விட்டார் அம்மா. நீங்க தூண்டி தூண்டி செல்வாக்கை வழக்குறீங்க . ஆங்கிலத்தில் Blessing in disguise என்பார்கள் . அதுதான் நடக்குது இங்க .
Rate this:
Share this comment
Cancel
bavajan. a - vellore,இந்தியா
25-மே-201517:30:15 IST Report Abuse
bavajan. a நினைவிருக்கட்டும். நேற்று மும்பை இந்தியன்ஸ் வெற்றிபெற்றது .பெரும் தோல்வியால் துன்புற்றவர்கள் மீண்டும் பெற்ற வெற்றி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை