காலம் கடந்த திருமணங்கள்தீர்வு என்ன| Dinamalar

காலம் கடந்த திருமணங்கள்தீர்வு என்ன

Added : ஜூன் 02, 2015 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 காலம் கடந்த திருமணங்கள்தீர்வு என்ன

இக்கட்டுரைக்கு உந்துதலாக இருந்தவை, நான் பல ஆண்டுகளாக, பார்த்து, கேட்டவற்றோடு, என்னிடம் ஆலோசனைக்கு வந்த நம்பவே முடியாத, நம் இளவயது தம்பதியர்கள் கொண்டுவந்த மண முறிவு பிரச்னைகள் தான்.
அன்று: பெரும்பான்மையான 99 சதவீத திருமணங்கள் பெற்றோர் கைகாட்டிய பெண் அல்லது ஆண் மகனை பேசி முடித்து நடந்த திருமணங்கள். அந்த திருமணங்களில் 99 சதவீதம் மணமுறிவுகள் ஏற்பட்டதில்லை. அனுசரித்து போனார்கள் அந்த காலத்து சம்பந்திகள், மணமக்கள். திருமணமும் குறிப்பிட்ட வயதிற்குள் நடந்தது.
இன்று: திருமணம் ஆவதற்கே பெரும்பான்மையான பெண்களுக்கு 25 வயதுக்கு மேலும், ஆண்களுக்கு 30 வயதுக்கு மேலும் ஆகிறது. இதற்கான முக்கிய காரணம் இருபாலருமே ஆரம்பத்தில் சொல்வது படிப்பு முடியட்டும்... பின் வேலை கிடைக்கட்டும்... பின் நல்ல வேலை கிடைத்து சொந்த காலில் நிற்க வேண்டும்... என தள்ளி போட்டு கொண்டே வந்து அவர்கள் எண்ணப்படி நல்ல சம்பளம் கிடைப்பதற்குள் மேற்சொன்ன வயதாகி விடுகிறது.
திருமண வயதிலிருக்கும் பெண்களின் எதிர்பார்ப்புகள் 1. பெண் நன்றாக படித்து விட்டால் (எவ்வளவு வசதி குறைவான வீட்டில் பிறந்திருந்தாலும்) மாப்பிள்ளை தனக்கு மேல் படித்திருக்க வேண்டும் என நினைக்கிறாள்.
2. தன்னை விட அதிக சம்பளம் பெறும் மாப்பிள்ளை தான் வேண்டும் என நினைக்கிறார்கள்.
3. திருப்தியான தாம்பத்தியத்திற்கு உடல்ரீதியாக வயது ஒரு பிரச்னை இல்லை எனினும், சிறிதளவு வயது வித்தியாசம் இருந்தால் கூட அந்த மாப்பிள்ளை அழகு, அந்தஸ்து இருந்தாலும் வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள்.4.பெண்களை பெற்ற 10 சதவீத பெற்றோர் அவர்களின் சம்பள பணத்தை, இன்னும் கொஞ்ச நாள் அனுபவிப்பதற்காக ஜாதகத்தை சொல்லி வரன்களை தட்டிக் கழிக்கின்றனர். இது சம்பந்தபட்ட பெண்ணுக்கே தெரியாமல் நடக்கும். இப்படி சில வீடுகளில் நடக்கிறது.
திருமண வயதில் இருக்கும் ஆண்கள்
1. 10 சதவீத ஆண்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை, வயது தான். அதுவும் அவர்கள் அதிக சம்பளத்தில், சொந்த காலில் நிற்க எடுத்து கொண்ட காலம், திரும்பி பார்க்கும் போது 30 வயதாகி விடுகிறது.
2. அதிக சம்பளம் பெறாத, அதிகம் படிக்காத, வசதியான குடும்பத்தில் பிறக்காத மாப்பிள்ளைகளுக்கு, பெண் கிடைப்பதே அரிதாகிவிட்டது.
3. இப்போது அதிக ஆண், பெண்கள் நிராகரிக்கப்படுவது ஜாதக பொருத்தமில்லை என்ற காரணம் கூறித்தான்.
எவ்வளவோ வயது வித்தியாசத்தில் இரண்டாம் திருமணம் செய்யும் நமது சமூகத்தில், முதல் திருமணத்திற்கு குறைந்த வயது வித்தியாசத்தை ஒரு தடையாக பார்க்கக்கூடாது என்பது என் கருத்து. திருப்தியான தாம்பத்ய உறவும், குழந்தை பேறும் ஆண், பெண் இருபாலரின் உடல் கூறில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மணமுறிவுக்கு மிகவும் முக்கியமான காரணமாக நான் பார்ப்பது...
1.சம்பந்திகளுக்கு இடையே கவுரவ பிரச்னை.2. மணமக்களுக்கு இடையே கவுரவ பிரச்னை.3. அதிகமான எதிர்பார்ப்பு, - அந்த எதிர்பார்ப்பு நடக்கவில்லை எனில், ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி மணமுறிவு.4. ஒரு பக்கம் தாம்பத்திய உறவு பற்றிய தவறான கருத்துக்கள் கொண்டு அதனால் ஏற்படும் மணமுறிவுகள்.5. இன்னொரு பக்கம் தாம்பத்திய உறவு பற்றி ஒன்றும் தெரியாமல் ஏற்படும் மணமுறிவுகள்.ஒரு பக்கம் கடவுளே இல்லை என்போரும் நன்றாக வாழ்கின்றனர். இன்னொரு பக்கம் மிகுந்த கடவுள் நம்பிக்கையோடு இருப்போரும் நன்றாக வாழ்கின்றனர். இன்னொரு பக்கம் என் கடவுள், உன் கடவுள் என அடித்து கொண்டு சாகின்றனர்.
எதுவுமே அளவுக்கு அதிகமானால் நஞ்சு. எனவே ஓர் இறைசக்தி உள்ளது என்ற நம்பிக்கை நமக்கு மனதிருப்தியை கொடுக்கும்.அதோடு நிறுத்தி கொண்டு ஜோதிடம், சாமியார் ஒப்புதல், வயது என்று திருமணங்களை தள்ளி போடாதிருந்தால் முதிர் கன்னிகள், முதிர் பிரமச்சாரிகள் அதிகமாகி கொண்டே போகமாட்டார்கள்.
எது முக்கியம் :வயது, ஜோதிட பொருத்தத்தை விட திருமணத்திற்கு முன்பு கீழ்கண்டவை முக்கியம்:1. உடல் பொருத்தம்: டாக்டருடன் திருமணத்திற்கு முன் ஆலோசனை.2. மனப்பொருத்தம்: ஆண், பெண் இருவரும் பேசி அதன் பின் சம்மதம் தருதல், உடல் அழகை விட மன அழகே முக்கியம் என்பதை இருவரும் உணர வேண்டும்.3. உயரப்பொருத்தம்: கொஞ்சம் உயர வித்தியாசம் இருந்தால் பரவாயில்லை, அதிக வித்தியாசம் இருந்தால் பிராக்டிகலாக சில பிரச்சனைகள் வரும்.4. தெளிவாக அறிந்து கொள்ளுதல்: திருமணத்திற்கு முன்பே ஆண், பெண் பற்றி (அவர்கள் வசதியை பற்றி அல்ல), அவர் தம் குணம் பற்றி தீர விசாரித்து, நல்ல முடிவெடுப்பது தான் முக்கியம்.மேற்கூறியவை தான் நல்ல திருமண வாழ்வை அமைத்து கொடுத்து, சாகும் வரை தம்பதியருக்கு மகிழ்வான வாழ்க்கையை கொடுக்கும்.
ஒவ்வொரு பெண்ணும் செல்லமாக வளர்ந்த வீட்டை விட்டு போகும்போது, வரப்போகும் மாமியார், மாமனார் தன்னை மகளாக கருதி நடத்துவார்கள் என எதிர்பார்க்கிறாள். அதே போல் ஒவ்வொரு ஆணும் வரப்போகும் தன் மனைவி தன்னை தாய்போல் கவனித்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறான்... இந்த எண்ண ஓட்டங்கள் நல்லவை தானே! இவர்கள் நினைத்தபடி அமைந்து விட்டால் அந்த குடும்பம், 'சூப்பர் குடும்பம்' ஆகிவிடும்.
-- டாக்டர். என்.என்.கண்ணப்பன், மதுரை.drnnk1@gmail.com

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
18-செப்-201515:26:10 IST Report Abuse
JeevaKiran உண்மையிலேயே திருமண இணையதளம் / அமைப்பாளர்கள்தான் இவர்களிடமிருந்து பிடுங்கி சம்பாதிக்கிறார்கள். வாரா வாரம் ஒரு தனியார் டிவியில் - ஆகட்டும், நீங்க நினைச்சபடியே மாப்பிள்ளை / பெண் கிடைப்பார் என்று சொல்லி ஆயிரக்கணக்கில் கொள்ளையடிக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
06-ஜூன்-201504:54:47 IST Report Abuse
Manian தெரிந்து கொள்ள வேண்டியது: ஒரு ஆணுக்கு 27 வயதான பின்தான் அவனது முன் மண்டைப் பகுதி வளர்ச்சி அடைகிறது. பெண்ணுக்கு இது சுமார் 22-23 வயதில் ஏற்படுகிறது. இந்த மன முதிர்ச்சி ( ஒரு சிலரை தவிர ) வந்த பின் ஒரு ஆணின் விந்தூவில் புத்திசாலித்தனம் என்ற அணுக்கூறு மாற்றமும் அதிகரிக்கிறது. அதன் பின் பிறக்கும் குழந்தைகள் மிக புத்திசாலிகளாக இருப்பதாக ஆராச்சிகள் கூறுகின்றன. இதயே நம் முன்னோர்கள் "மூத்தது மோழை, இளயது காளை " என்று சொன்னார்கள். இன்றும் பல குடும்பங்களில் இதை காணலாம். பழைய காலத்தில் பொருளதார வழி இல்லாததால் பெண்கள் பல கொடுமைகளை அடிமை போல் அநுபவித்தார்கள். ஆண் ஆதிக்கத்தால் அதிக குழந்தைகள் பெற்று உடல் வலிமை இல்லாமல் செத்தார்கள். தற்போதும் இதை கிராமங்களில் காணலாம். இரண்டு பேர் சம்பாதித்தால் மட்டுமே ஒரு குடும்பம் சுமாறாக வசதியுடன் வாழ முடியும். ஆண் குழந்தைகளை பெற்றோர்கள் மண வாழ்க்கைக்கு தயார் செய்வதில்லை. ஒன்றாக உண்பது, சமையல் செய்வது, தாயாருக்கு பாத்திரங்கள் கழுவி உதவி செய்தல், தகப்பனுடன் கடைக்கு சென்று காய்கறி, பலசரக்கு சாமான்கள் வாங்குதல் போன்ற எந்த குடும்ப வேலயும் செய்யாமல் வளரும் ஆண்கள் திருமணத்திற்கு ஒரு நாளும் தயார் இல்லை. அதனால் ஒரு வேலைக்கும் சென்று வீட்டில் எல்லா வேலையும் செய்ய பெண்களுக்கு சக்தி இருப்பதில்லை. இதில் எந்த உதவியும் செய்யாமல் கழுத்தை அறுக்கும் மாமனார்-மாமியர்கள் வரதக்ஷிணை வாங்குவது முதல் வீட்டுப் பெண் சகல காலா வல்லியாக இருக்க வேண்டும் என்ற தொல்லையும் சேர்ந்தால் வாழ்க்கை நரகமே. இந்த பெற்றோர்கள் ""பெற்றாளே பெற்றாளே பிரர் நகைக்காவும். நகைய்கவும்" ,என்ற புது மொழிக்கு இலக்கணம். தனிமை இல்லாமை, சோர்வு, வேலச்சுமை, துள்ளித் திரியும் குழந்தைகள், அநுசரணை இல்லாத மாமன்-மாமி என்ற் பட்டியலால் பலறும் திருமணத்தை வெறுக்கிறார்கள்.மேலும் ஆசியா முழுவதும் பெண்களுக்கு மனஅழுத்தம் அதிகம் என்றும் ஆராய்ய்சிகள் சொல்லுகின்றன. இந்த எறிகிற நெருப்பில், பெண்களின் தாயார்கள் முட்டாள்தனமாக உதவி செய்வதாக எண்ணி, பெண்கள் மனத்தை கெடுத்து விடுகிறார்கள். தந்தையின் முழு அன்புடன் வளராத பெண்கள் தாயின் துர்போதனையால் துன்பப்படுகிறர்கள். பண்பு, படிப்பு, கெட்ட குணம் இல்லாதவர், ஒரு நல்ல கணவனாகவும்., நல்ல தந்தையாகவும் , பிந்நாளில் நல்ல சம்பாத்தியம் செய்யும் திறன் என்றெல்லாம் எண்ணாமல்,பணக்காரனா,ஸ்டேடஸ், போன்ற பொருள்ளாதார மயக்கத்தில் தங்கள் பெண்ணின் வாழ்கயை நாசமாக்குகிறார்கள். இந்த சமுதாயம் இப்போதைக்கு மாறவே மாறாது. காலமே இதைக் செய்யும்.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
03-ஜூன்-201507:23:47 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> சில பெத்தவாள் செய்யும் லொள்ளும் காரணம் என் உறவு பெண் விதவை, மூத்த மருமக இவளை ஒதுக்கி வச்சுருக்கா. அதனால் தன இளைய மகன் திருமணத்தையே தள்ளிண்டுருக்கா, சொன்னாலும் கேக்க மாட்டேன்ரா, மகனும் வயசான அம்மாவுக்கு பிரச்சினை வரும்னு தள்ளிண்டுருக்கான், ரொம்பவே நல்ல பையன், புகை குடி எதுவும் கிடையாது, பிகாம் படிச்சுருக்கான். வேலைலேயும் இருக்கான். 25,000 / சம்பளம். சொந்த வீடும் இருக்கு, பாக்கவும் அழகா இருக்கான் . அம்மாவின் உபயம் 37 வயதாயிட்டுது இன்னம் மணம் ஆகலே பாவம்
Rate this:
Share this comment
Cancel
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
02-ஜூன்-201515:01:10 IST Report Abuse
மஸ்தான் கனி நண்பர்களில் ஒருவருக்கு கல்யாணம் ஆகி விட்டால் மற்றவர்கள் கிண்டலடிக்கிறார்கள் இது ஒரு காரணம் திருமணம் தள்ளிப் போக. அடுத்தவனுக்கு ஆகட்டும் பிறகு நமக்கு பார்க்கலாம் என்பவர்களும் உண்டு. கல்யாணம் ஆகி விட்டதுன்னு சோகமாக சொல்லுபவர்களும் உண்டு கல்யாணம் ஆகவில்லை என்று சோகமாக சொல்லுபவர்களும் உண்டு. நாம் நமக்காக வாழ்கிறோம் என்றால் பிரச்சனை இல்லை.
Rate this:
Share this comment
kumarkv - chennai,இந்தியா
10-ஜூன்-201522:08:33 IST Report Abuse
kumarkvGood one....
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
02-ஜூன்-201513:26:05 IST Report Abuse
Sundeli Siththar நிரந்தரத் தீர்வு... கூட்டுக் குடும்பம்... விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை..
Rate this:
Share this comment
Cancel
Rekha - thiruvarur,இந்தியா
02-ஜூன்-201513:16:44 IST Report Abuse
Rekha வெண்டைக்காய் போல் உங்களை வழ வழ கொழ கொழன்னு வாழ சொல்லல விட்டு கொடுத்து தான் வாழ சொன்னங்க மன முறிவுக்கு நீங்கள் சொன்ன 5 காரணங்களும் உண்மை
Rate this:
Share this comment
Cancel
Subhatma - Kanpur,இந்தியா
02-ஜூன்-201511:25:01 IST Report Abuse
Subhatma படிப்பைவிட வேலையைவிட பெண்களுக்கு குடும்பம் மிகவும் முக்கியமானது அவர்கள் குடும்பத்தை ஒழுங்காக நடத்தினால் சமூகம் மிகநன்றாக இருக்கும். குடும்பவாழ்கை என்பது வெறும் உடலுறவு அல்ல அன்பிற்காக எங்கும் எத்தனையோ கணவன்மார்களும், குழந்தைகளும் அது கிடைக்காமல் மனநோயாளி ஆகின்றனர். பெண்கள் மட்டுமே அவர்களுக்கு அன்பு, அரவணைப்பு போன்றவைகளை தரமுடியும். பணம் சம்பாதித்து தன்னை காப்பதைவிட அன்புசெலுத்தி முழு உலகத்தையும் ஆட்கொள்ளலாம். பெண்களுக்காக ஊயிரையே தர தயாராக உள்ள ஆண்கள் காமத்திற்காக அல்ல அன்பிற்காகவே ஏங்குகின்றார்கள். 25 வயதிற்குமேல் உண்டாகும் புதிய உறவுகளிலே பற்று ஏற்படுவதில்லை. இந்த வயதிற்கு மேல் ஏற்படும் காதல் பெரும்பாலும் காமத்தையே அடிப்படையாக கொண்டுள்ளது எனவே முடிந்தமட்டும் 21வயதிற்குள் பெண்களும் 24 வயதிற்குள் ஆண்களும் திருமணம் செய்யகொள்ள வேண்டும். நல்லகுடும்பம் nalla சமுகம்
Rate this:
Share this comment
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
02-ஜூன்-201511:19:00 IST Report Abuse
chennai sivakumar இன்று கல்யாண சமூக வலைத்தளங்களை பார்த்தால் பெண் வீட்டுக்காரன் போடும் கண்டிஷன் 440 வோல்ட் மின்சாரத்தை விட மிகவும் பயங்கரமாக இருக்கிறது. எல்லா பெண்களின் தந்தையும் தம் மகளுக்கு குறைந்தது 70000 ருபாய் வருமானம் ,ஒரு சொந்த குடியிருப்பு ஒரு நல்ல வேலை எல்லாம் உள்ள மாப்பிள்ளையாக எதிர்பார்கிறார்கள் குறிப்பாக நடுத்தர குடும்பங்களில் இது ரொம்ப ரொம்ப சகஜம் ஆகி விட்டது. காரணம் எல்லா பெற்றோரும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுவது இல்லை. கணவன், மனைவி இருவரும் (அப்பா அம்மா ) வேலைக்கு செல்வதால் செல்வ செழிப்பு ஓங்கி இருக்கிறது. அதனால் தம் மகள் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.அது ஒன்றும் தவறு இல்லை. ஆனால் அவர்களுக்கு வயது ஆகி போகிறதே பிறகு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் குழந்தை பெறுவது நல்லது இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்களே என்பது மண்டையில் உரைக்க வில்லை. ஒரு மாப்பிள்ளை மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கிறார் என்று வைத்து கொண்டு மன முடிக்கின்றனர். அவனோ அலுவலக டென்ஷன் தாங்க முடியாமல் ஒன்று நோய் வாய் படுகிறான் அல்லது டிக்கெட் வாங்கி விடுகிறான். அப்போது என்ன செய்ய முடியும் இந்த பெற்றோரால்.? முன் காலங்களில் பையன் நன்கு படித்து இருக்கிறானா ஒரு கௌரவமான வேளையில் இருக்கிறானா நல்ல குடும்பமா என்று மட்டுமே பார்த்து மணமுடித்தனர். ஆனால் இன்றோ மாப்பிளையின் financial background ஒரு நிர்ணயிக்கும் கருவியாக பயன் படுத்தப்படுகிறது. அதனால் திருமணங்கள் தள்ளி போகிறது. மேலும் ஒரு வயதிற்கு மேல் adjustability என்பது கேள்விக்குறியாகிறது. இருவரிடமும் நல்ல பணம், பெற்றோர் backup இருக்கும் பொது ஈகோ வெடித்து முறிவில் கொண்டு செல்கிறது. மேலும் திருமண இணையதளங்களில் சென்று பார்த்தால் ஒரு பெண்ணிற்கு 3 அல்லது 4 ஆண்கள் விகிதாசாரம் இருக்கிறது.இதில் நன்கு பிழைப்பவர்கள் திருமண இணையத்தளம் நடத்துபவர்களே. என் சகோதரி கிட்டத்தட்ட திருமண தளங்களுக்கு 2 லட்சத்திற்கும் மேல் செலவழித்து கொண்டு , இன்னும் செலவழித்து கொண்டு இருக்கிறார். திருமணம் ஆன பாடு இல்லை. இதுதான் இன்றைய நிலைமை. எப்போது ஆண்கள் அல்லது பெண்கள் தானாகவே முன் வந்து இந்த தடைகளை உடைத்தால் தவிர நிலைமை மாறாது. மேலும் மோசமாகத்தான் ஆகும். நான் இப்போதே ஒரே ஒரு மகனை வைத்துக்கொண்டு வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டு இருக்கிறேன் என்பது வேறு விஷயம்.
Rate this:
Share this comment
Cancel
Sankar Subramanian - Pune,இந்தியா
02-ஜூன்-201509:41:07 IST Report Abuse
Sankar Subramanian Ha, Ha, Ha... Once I was going through painful period, but decided to stay single forever happily. At times I feel sorry for myself but slowly adjusting to please myself :)
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
02-ஜூன்-201508:58:09 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அந்தகாலத்துலே ஜாதகம் என்ற காகிதத்தையே நம்பினாங்க இளம்வயதுலே திருமணம் முடிச்சு (வாழாமலே விதவை ஆனவா எவ்ளோ பேர்) கை குழந்தையுடன் வாழ்வை இழந்தவா எவ்ளோ பேர், விதியேன்னு வாழரவா எவ்ளோபேறு 10%கூட made for eachother தேறாது, அன்றிள்ளே இன்றுவரை இதே தான் கதை நீண்ட தொடர்கதை. காதல் திருமணமாவது வெற்றியா இருக்கோ 2% தேறும். ஒன்னு டிவோர்ஸ் இல்லியா நித்தியம் சண்டை பூரண யுத்தமனே வாழராங்க்க. விட்டுகொடுத்துவாழரவா தான் பலர் இதுலெயும் ஒருவழி பாதைதான் பெண்களே 90%விட்டுகொடுத்துபோராங்க 10%துவசம் கட்டிண்டு சண்டை போடறாங்க, எழுத தான் லாயக்கு ப்ராக்டிகலுக்கு ஒத்தேவராது ஒரே தவரூ ஆண் செய்தால் நியாபகமில்லெ பெண் செய்தால் அதுக்கு பேரு திமுரு பொறுப்பின்மை etc
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை