செந்தமிழ் நாட்டு தமிழச்சியே....| Dinamalar

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே....

Added : ஜூன் 07, 2015 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே....

''நான் சுத்த தமிழ் பொண்ணுங்க,'' என மடை திறந்த வெள்ளமாக மனம் திறந்த இவர், மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் என்ற பெருமையை தக்க வைத்து கொள்வார் என எண்ணத் தோன்றுகிறது. 'சரித்திரம் பேசு' சினிமாவில் ஹீரோயினாக நடித்த கையுடன் ராஜாத்தி, திருவெண்காடு மற்றும் பெயரிடப்படாத மேலும் இரு படங்கள் என கலக்கி வருகிறார். தமிழ் ஹீரோயின்களில் ஒருவரான இவர் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவல். 'சரித்திரம் பேசு' நாயகி கன்னிக்காவுடன் ஒரு பேட்டி* ஹீரோயின்-சிறு வயது கனவா?அப்பா தான் காரணம். அப்பாவிற்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம். 'டிவி' சீரியல்களில் குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பார். அதில் தொகுத்து வழங்குவோரை பார்த்த போது நாமும் இதுமாதிரி ஆக வேண்டும் என்ற ஆசை பிறந்தது. பத்தாம் வகுப்பு முடித்த கையுடன் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்க சென்னை பாட்டி வீட்டிற்கு வந்து விட்டேன். * இயக்குனர் சிகரம் பாலசந்தர் அறிமுகமா நீங்கள்?'டிவி'யில் தொகுப்பாளினியான என்னை மறைந்த இயக்குனர் பாலசந்தர், 'அமுதா ஒரு ஆச்சரியக்குறி' என்ற சீரியலில் அறிமுகப்படுத்தினார். அது என்னை பிரபலப்படுத்தியது.* சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தது..சீரியல்கள், விளம்பரம், குறும்படங்களில் என் நடிப்பை பார்த்த சத்ரபதி படத்தை இயக்கிய மகேஷ், 'சரித்திரம் பேசு' படத்தில் ஹீரோயினாக்கினார். * அடுத்தடுத்து படங்களில் காண முடியவில்லையே?ராஜாத்தி, திருவெண்காடு மற்றும் இரு பெயரிடப்படாத படங்களில் ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கிறேன்.* எந்த மாதிரி கேரக்டர்களில் நடிக்க ஆசை?கிராமத்து கதைகளில் நடிக்க ஆசை. நன்றாக தமிழ் பேசுவேன். தமிழ் சார்ந்த விஷயங்களில் எனக்கு ஆர்வம் உண்டு. தாவணி கட்டி நடிக்க வேண்டும்.* பிடித்த ஹீரோயின்கள் ?ராதிகா, மீராஜாஸ்மின் நடிப்பு பிடிக்கும். என் தோற்றம், கூந்தலை பார்ப்போர் 'சண்டைக்கோழி' மீராஜாஸ்மின் போல துருதுரு கேரக்டர்கள் உனக்கு நன்றாக இருக்கும் என்கின்றனர். வாய்ப்பு கிடைத்தால் கலக்குவேன். பல பிரச்னைகளையும் கடந்து நயன்தாரா தன்னை அடையாளம் காட்டியுள்ளார். அவரது தன்னம்பிக்கை பிடிக்கும்.* பிடித்த ஹீரோக்கள் ?கமல், தனுஷ், அஜித் ரசிகை நான். அஜித் புக் ஆகியுள்ள ஒரு படத்தில் தங்கை கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஏனோ தட்டி போய் விட்டது.* இதில் நடிக்கவில்லை என ஆதங்கப்பட வைத்த படம்?அட்டக்கத்தி, கும்கி.* நீள கூந்தலுக்காக விருது பெற்றீர்களாமே?இயற்கையில் கூந்தல் நீளம் அதிகம். இதற்காக 2013 'மிஸ்' தமிழ்நாடு விருது கிடைத்தது.vjkannika.isai@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Revathi Archana - madurai,இந்தியா
15-ஜூலை-201513:55:32 IST Report Abuse
Revathi Archana செந்தமிழ் நாட்டு தமிலட்சியின்னு பேரு குடுத்துருக்காங்க .அதுக்கு அர்த்தம் தெரிஞ்சு நடிமா. வெளிநாட்டுகாரி மாதிரி டிரஸ் போட்டுகிட்டு நடிக்க கூடாது .புரியதா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X