உருவாகிறது! தேசிய உயர் தொழில்நுட்ப தகவல் களஞ்சியம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

உருவாகிறது! தேசிய உயர் தொழில்நுட்ப தகவல் களஞ்சியம்

Added : ஜூன் 18, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
உருவாகிறது! தேசிய உயர் தொழில்நுட்ப தகவல் களஞ்சியம்

உலகமெங்கும் உருவாக்கப்படும் அதிதிறன் தொழிற்நுட்பங்களில் சிறந்தவற்றைப் பற்றிய தகவல்களை சேமிக்கும் தேசிய அதிதிறன் தொழில்நுட்ப களஞ்சியம் ஒன்றை, தெலுங்கானா மாநில அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இது, மத்திய அரசின், 100 அதிதிறன் நகரங்களை உருவாக்கும் திட்டத்துக்கு ஆதரவாக இருக்கும் என்றும், மற்ற மாநிலங்களும் இந்த களஞ்சியத்திலிருந்து தங்களுக்கு வேண்டிய தகவல்களை பெற்று பயன் பெறலாம் என்றும், தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்ப சேவைத் துறை அமைச்சர், கே.டி.ராமராவ், ஐதராபாத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின், '100 அதிதிறன் நகரங்கள்' திட்டத்திற்கு தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத், வாரங்கல், கரீம்நகர், நிஜாமாபாத் மற்றும் கம்மம் ஆகிய ஐந்து நகரங்கள் தேர்வாகி உள்ளன. இந்த நகரங்களின் வளர்ச்சிக்கு தேவையான சிறந்த அதிதிறன் தொழில்நுட்பங்களை அலசி, மதிப்பிட்டு பரிந்துரை செய்ய, 12 நபர் குழு ஒன்றை அம்மாநில தகவல் தொழிற்நுட்பத் துறை உருவாக்கியுள்ளது.
ஐதராபாத்தில் அமையவுள்ள அதிதிறன் தொழிற்நுட்ப களஞ்சியம் மூலம், பிற மாநிலங்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், வரும் ஜூலையில் தேசிய மாநாட்டை தெலுங்கானா அரசு கூட்டவிருக்கிறது. இதில் பங்கேற்க, இந்தியா முழுவதிலும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி பிரதிநிதிகள் அழைக்கப்பட உள்ளனர்.

* உலகமெங்கும் தினமும், 3,000 காப்புரிமைகள் பதிவாகிறது.
* இவற்றில், இந்திய நகரங்களின் பிரச்னைகளுக்கு ஏற்ற தொழில்நுட்ப தீர்வுகளை, இந்தியாவே தேடிப் பெற வேண்டியது அவசியம்.
* தெலுங்கானா அரசு, மாநிலம் முழுவதும் குடிநீர் குழாய்கள் உள்ள வீடுகளுக்கு, அந்த குழாய்களுடனேயே ஒளி இழை (ஆப்டிக்கல் பைபர்) மூலம் இணைய வசதி தரவிருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X