தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு| Dinamalar

தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு

Added : ஜூன் 23, 2015 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு

உலகில் தொன்மையான மொழிகளுள் சிறப்பான முதல்மொழி நம் தமிழ்மொழி. ஆதிகாலத்து மூத்த குடிமக்களால் மொழி உருவாக்கம் மற்றும் எழுத்து வடிவம் பெற்று இலக்கணம் படைக்கப்பட்டது. செய்யுள், இறையருட்பாக்கள், காப்பியம், இலக்கியம், நாடகம், கதை, கட்டுரை, செய்திகள், திரைப்படங்கள், நவீன காலப்படைப்புகள் என பல்லாயிரம் ஆண்டுகளாக நம் வாழ்வாக, வழியாக, ஒளியாக, மதியாக நம் தீந்தமிழ்மொழி திகழ்கிறது.தமிழ் எனும் சர்க்கரை தென்னிந்திய மொழிகளின் தாய்மொழியாகவும், பல்வேறு மொழிகளில் உள்ள பல்வேறு வார்த்தைகளுக்கு வேர்ச்சொல்லாகவும், தமிழ் மொழி இருக்கிறது. 'சர்க்கரை' என்னும் தமிழ் வார்த்தை 'ஷக்கர்' (இந்தி), 'சுகர்' (ஆங்கிலம்), 'சுக்காரியா' (கிரீஸ்), 'சுக்காரோ' (இத்தாலி), 'சூக்கர்' (பிரெஞ்சு), 'அசுக்கர்' (ஸ்பானிஷ்), 'சோக்ரி' (பின்னிஷ்), 'சுக்கர்' (டேனிஷ்), 'கியுக்கர்' (ஹங்கேரியன்), 'சாக்கர்' (ருமேனியன்) மற்றும் இன்னபிற மொழிகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக கரும்பின் பேரினப் பெயரான 'சக்காரம்' மற்றும் ஈஸ்ட் உயிரியின் பேரினப் பெயரான 'சக்காரோமைசிஸ்' என்ற வார்த்தைகள் 'சர்க்கரை' என்ற தமிழ் வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது.
தொழில்நுட்ப முன்னோடி :கரும்பு பயிரிடும் முறை மற்றும் சர்க்கரையை கரும்பில் இருந்து பெறும் தொழில்நுட்பத்தை முதன்முதலில் கண்டறிந்து உலகிற்கு அளித்தவர்கள், தமிழர்களே. இதனாலேயே தென்னாப்ரிக்கா, கியூபா, பார்பேடாஸ், மேற்கிந்திய தீவுகள், பிஜித் தீவுகள் என பல்வேறு நாடுகளில் சர்க்கரை ஆலைகள் அமையவும், தொழில் வளம் பெருகவும் முன்னோடிகளாக விளங்கியவர்கள் தமிழர்களே.அரிசி, மா என்ற நம் அருந்தமிழ் வார்த்தைகள் ஆங்கிலம், இத்தாலி, லத்தீன், பிரேசிலியன், லித்துவேனியம், போர்த்துக்கீசியம், ருமேனியா, ரஷ்யா, சுவீடன், செக், குரேஷியா நாடுகளின் மொழிகளில் அதே பொருளை உணர்த்தும் வார்த்தைகளாக இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது."நளியிறு முன்னீர் நாவாய் ஓட்டி' எனத் தொடங்கும் புறநானுாற்றுப் பாடலில் 'நாவாய்' என்பது அலைகடலில் செலுத்தும் கலத்தைக் (கப்பலை) குறிக்கும். கப்பல் கட்டும் முறையையும், அதனை அலைகடலில் செலுத்திப் பயணிக்கும் திறனையும் உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் நம் மூத்தகுடி தமிழ் மக்களே. இதற்குச் சான்றாக ஆங்கிலம் மற்றும் லத்தீன் மொழிகளில் இன்றும் பயன்பாட்டில் உள்ள 'நேவி', 'நேவிகேஷன்' மற்றும் 'நேவிகோ' எனும் வார்த்தைகள் தமிழின் வேர்ச்சொல்லான 'நாவாய்' என்பதில் இருந்து உருவாக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.
தமிழும் எண்களும் :வார்த்தைகள் மட்டுமல்லாது பாரசீக எண் உருக்கள் (1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10) தமிழ் எண் உருக்களிலிருந்து (க, உ, ங, ச, ரு, சா, எ, அ, கூ, க) பெறப்பட்டதே. 'தினம்' எனும் தமிழ்ச்சொல் 'திவஸ்' என்ற சமஸ்கிருதச் சொல் மூலமாக 'டேய்ஸ்' எனும் ஆங்கிலச்சொல்லாக உருவாக்கம் பெற்றது. அதைப் போன்றே அட்(ஷ்)டம், நவம், தசம் என்ற தமிழ்ச்சொற்கள் முறையே அக்டோபர், நவம்பர், டிசம்பர் என ஆங்கில மாதங்களாயின.தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் பரவலாகவும் இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிஜித்தீவுகள், மொரீஷியஸ், டிரினிடாட், மடகாஸ்கர், தென்னாப்ரிக்காவிலும் தமிழ்மொழி பயன்பாட்டில் உள்ளது. அபூர்வமானதும் தொன்மையானதுமான மொழி என்பதாலேயே, ரஷ்ய அதிபரின் க்ரெம்ளின் மாளிகையின் பெயரை, அதன் முகப்பில் தமிழ் மொழியிலும் பொறித்துள்ளனர்.
மொழியியலாளர்கள் கூற்றுப்படி உலகின் ஆறு தொன்மையான மொழிகளுள் தமிழ் மற்றும் சீனமொழிகள் தவிர மற்ற மொழிகள் அழிந்து விட்டன. தற்போதுள்ள நடைமுறைப்படி பார்த்தால் குறிப்பாக தமிழகத் தமிழர்கள் தமிழ்மொழியைப் பயன்படுத்துவதை எண்ணித்தான், 'மெல்லத் தமிழினி சாகும்' என பாரதியார் பாடி வைத்தார் போலும்.பண்பாட்டிற்கும் மனித நாகரிகத்திற்கும் இலக்கணம் வகுத்து, வாழ்க்கைக்கான சீரிய நெறிமுறைகளையும், மாண்பையும் கற்றுக்கொடுத்தது தமிழ். பண்டைய தமிழ் இலக்கியங்கள் மற்றும் படைப்புகள் உருவாக்கிய அன்னை மொழியை நாம் சீரிய முறையில் கற்று, அடுத்தடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்வது நம் தலையாய கடமை.இதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகள்;தமிழ்மொழியை உள்ளார்வத்துடன் கற்கவேண்டும். கல்விச்சாலைகளில் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்வியியலாளர்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டும்.
வார்த்தைகள்- அது தொடர்பான பதங்களை எளிமையாகவும், ஆழ்ந்தும் கற்பிக்க வேண்டும். அதற்கிடையேயான சமூகம், மானுடவியல் தத்துவங்கள் மற்றும் அறிவியல் பூகோளத் தொடர்புகளை ஒருமித்து அறிந்து, அவரவர் துறை சார்ந்து பயன்படுத்த வேண்டும். தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமன்று; அதுவே உணர்வு, நம் இயக்கம், நம்மை நெறிப்படுத்தும் ஒரு கருவி; தமிழே நம் வாழ்வு என்பதை முழுமையாக உணர வேண்டும்.
தமிழ் இலக்கணம் :அறிவியல் கூறுகளில் அடிப்படையிலும் தமிழ் இலக்கணம் படைக்கப் பெற்றது. எடுத்துக்காட்டாக உயிரின வகைகளின் அமைப்பு, பண்புகளின் அடிப்படையிலேயே அலகிட்டு வாய்ப்பாட்டினை அமைத்துள்ளனர். தமிழ் இலக்கணத்தை அறிவியல் கோட்பாடுடன் ஒப்பிட்டு, ஆய்வு மேற்கொண்டு உயிர்கள் மற்றும் வாழ்க்கையோடு பொருத்திப் படிக்க வேண்டும்.பிறமொழிகளை நிந்தனை செய்யாமல், கற்றுக் கொண்டு தமிழ் மொழிக்கும் பிறமொழிகளுக்கும் இடையேயான தொடர்பினை அறிய முற்படவேண்டும்.தமிழ்மொழியின் அறிந்திராத அல்லது தெரிந்திராத விபரங்களையும் கருத்துக்களையும் பெற வழிவகை செய்ய வேண்டும்.தமிழ்ப்பதத்தையும், தமிழில் வழங்கப்பட்டு வரும் பழமொழிகளின் பொருளை புரிந்து கொண்டு பாழ்படுத்தாமல் பயன்பெற வேண்டும்.கணினி வழிப்பயன்பாட்டினை தமிழில் எளிமைப்படுத்தி உலகெங்கும் ஒரே மாதிரியாகப் பயன்படும் வகையில் வடிவமைத்தல் வேண்டும்.நம் செயல்பாடுகளின் மூலம் தமிழின் வாழ்வை, நம் உணர்வை தழைத்தோங்கச் செய்வோம்.- டி.கண்ணன், உதவிப்பேராசிரியர், தாவரவியல் துறை,தியாகராஜர் கல்லுாரி,மதுரை99941 08836dekan_c@rediffmail.com

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
30-ஆக-201508:22:26 IST Report Abuse
Amirthalingam Sinniah வடபகுதியில் உள்ள கடவுள்கள் தென்பகுதியில் உள்ள கடவுளை ஓரங்கட்டுகின்றது. தமிழ் சாய்ந்து போகாமல் யார்தான் காப்பாத்துவார் ?
Rate this:
Share this comment
Cancel
Tamil Selvan - Chennai,இந்தியா
26-ஜூன்-201523:03:52 IST Report Abuse
Tamil Selvan கப்பல் விடுவதில் தமிழர்களே மிக சிறந்தவர்கள்..... ஏன் என்றால் கடல் கடந்து தனது சாம்ராஜ்யத்தை நிறுவிய ஒரே ஒரு இந்திய இனம், தமிழ் இனம்... அதுவும் சோழ பேரசர்கள் மட்டுமே.. ராஜா ராஜா சோழன் இருந்தபோது தனது எல்லையை இலங்கை வரை மட்டுமே வைத்துருந்தார். ஆனால், அவரது மகன் ராஜேந்திர ராஜா சோழன் தெற்கு ஆசியா வரை தன் எல்லையை விரிவு படுத்தி உள்ளார்... அதுதான் இன்றைய சிங்கப்பூர் (சிங்கம்+ ஊர்), மலேசியா (மலை+ ஆசியா), இந்தோனேசியா (இந்து + ஆசியா), தாய்லாந்து (தாய்+லாந்து), மாலத்தீவு (மாலை + தீவு) .... அனைத்தும் தமிழ் பெயர்கள்தான்... அதனால்தான் ராஜேந்திர ராஜா சோழனுக்கு "கடாரம் கொண்டான்" ( அதுதான் மலேசியாவின் இன்றைய KEDAH மாநிலம், அதன் தலை நகர் - Alor Setar ).... ஆனால் இவர்களுக்கு முன்பு அசோகர் பாரசிகம் வரை தனது எல்லையை வைத்து இருந்தார். அவர்தான் பாரசிகம் வரை புத்த மதத்தை பரப்பினர்... அதனால்தான் ஆப்கானிஸ்தானில் பாமியன் புத்தர் கோவில் இருந்தது... ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு அதனை தீவிரவாதிகள் வெடி வைத்து தகர்த்து விட்டனர் உலக பாரம்பரிய புராதன சின்னத்தை....... ஆனால் இவர் கடல் கடந்து ஆட்சியை நிறுவவில்லை.... ஆனால் இந்தியாவில் கடல் கடந்து ஆட்சியை நிறுவிய ஒரே ஒரு பேரரசு... சோழ பேரரசு மட்டுமே. காரணம் அவர்களின் படை திறமை அப்படி... 1000- ஆண்டுகளுக்கு முன்னரே 6 படை பிரிவுகள் வைத்து மிக நேர்த்திய போர் செய்தார்கள்..... இந்திய வரலாற்றிலேயே என்றுமே தோற்காத 6 அரசர்களில் இவர்களும் இருவர்கள்..... ஆறு வகையான படைகள் (1) தேர்ப்படை (2) யானைப்படை (3) குதிரைப்படை (4) காலாட்படை (5) துணைப்படை (6) ஏனைய படைகள் (வில்வீரர், வாள் வீச்சு வீரர் மற்றும் பிற).... அவர்களின் படை எப்படி என்பதை நான் சொல்லுவதை விட, ஒரு சீன அறிஞரின் சோழர் படையைப் பற்றிய குறிப்பு சொல்லுகிறார் (Source : Wikipedia ) கி.பி. 1225-ல் ஒரு சீன புவியியலாளர் சா யூ-குவா சோழ நாட்டைப் பற்றியும் சோழர் படையைப் பற்றியும் பின்வருமாறு எழுதியுள்ளார். "இந்நாடு மேற்கு இந்திய நாடுகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தினரிடம் அறுபது ஆயிரம் போர் யானைகள் உள்ளன. ஒவ்வொரு யானையும் 7 அல்லது 8 அடி உயரம் உள்ளது. போரிடும்போது யானைகளின் மீது அம்பாரிகள் அமைத்து அவற்றில் வீரர்கள் அமர்ந்து கொண்டு நெடுந்தொலைவிற்கு அம்பு எய்கின்றார்கள். அருகே உள்ளவர்கள் ஈட்டிகளால் தாக்குகின்றனர்......ஆம்.... அறுபது ஆயிரம் போர் யானைகள் கொண்டு போர் செய்த ஒரு இனம் உலகத்திலே தமிழ் இனாம்தான்...... சோழர்கள் படை எடுத்து வருகிறார்கள் என்றால், தலை தெறித்து ஓடுவர்காலாம் எதிரிகள்..... அதனால்தான் ராஜேந்திர சோழன் தலைநகரை தஞ்சையில் இருந்து கங்கைகொண்டசோழபுரத்திற்கு மாற்றினார்... இவ்வளவு பெரிய படைகளை காவேரி ஆற்றை கடந்து சென்று வடக்கே போர் செய்வதற்கு பெரும் சவாலாக இருந்தது அவருக்கு .... உலகத்திலே பெரிய இந்து கோவில், கம்போடியாவில் உள்ள உலக பாரம்பரிய Angkor Wat விஷ்ணு கோவிலை கட்டியவன் இரண்டாம் சூர்யவர்மன்.... அதை இன்று புத்த கோவிலாக மாற்றிவிட்டார்கள்.... இந்தோனேசியாவில் உள்ள உலக பாரம்பரிய Prabanan Temple - மும்மூர்த்தி கோவில்கள் , Pali temple ... போன்றவை... தாய்லாந்தில் உள்ள பெரிய கோவில் Wat Arun - தேவி அருணா (அம்பாள்) கோவில், தாய்லாந்தின் பலம் பெரும் வரலாற்று மாநகரம் அயோத்தி (AYODHYA )... மற்றும் எவ்வளவோ இருக்கிறது.... தமிழ் நாட்டில் இருக்கும் அளவுக்கு வட இந்தியாவில் பெரிய கோவில்கள் இல்லை... காரணம்... அங்கே உரு தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டது.... படை எடுப்பால் பஸ்பம் ஆகிவிட்டது.... ஈழத்திலே சின்ன பிரச்சனை என்றவுடன் மாமன்னன் ராஜா ராஜா சோழன் சினம் கொண்டு படையெடுத்து செல்கிறான்... சிங்களவன் ஐந்தாம் மகிந்தன், ராஜா ராஜா சோழன் இடம் மண்டி இட்டு மன்னிப்பு கேட்கிறான்... அறுபது ஆயிரம் போர் யானைகள் கொண்டு போர் புரிந்த ராஜேந்திரன் சோழனும், சிங்கள மன்னனை மண்டி இட்டு மன்னிப்பு கேட்கவைத்த ராஜராஜ சோழனும், இந்தியாவிலே கடல் கடந்து ஆட்சி செய்த, என்றுமே போரிலே தோற்காத ராஜேந்திரன் சோழனும், ராஜராஜ சோழனும் பிறந்த மண்ணிலே, போர் என்றவுடன் நாங்களும் இங்கு ஒரு அடிமைகளாய் இருக்கிறோம்..... ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும் என்று வாழும் ராஜா ராஜா சோழனோ இல்லை ராஜேந்திர சோழனையோ மட்டுமே எங்களுக்கு தெரிந்தால்..... "தமிழ் இனி மெல்ல சாகும்" - என்பதில் அணு அளவும் ஐயம் இல்லை..... இப்படிக்கு இவன் தலை வணக்குவது தாய் தமிலுக்கு மட்டுமே..... தமிழ் அடியேன்..... தமிழ் செல்வன்.
Rate this:
Share this comment
Cancel
mohanasundaram - chennai,இந்தியா
26-ஜூன்-201506:46:41 IST Report Abuse
mohanasundaram கட்டுரையாளர் இதெற்கெல்லாம் proof வைத்துள்ளாரா.
Rate this:
Share this comment
Cancel
Prabhu nath - chennai,இந்தியா
23-ஜூன்-201519:23:19 IST Report Abuse
Prabhu nath தமிழ் வழக்கொழிந்துபோகும்.. விரைவில் சாகும்.. இது சாபமில்லை.. நிதர்சனம்.. இன்று இருக்கும் தமிழ்ப் பத்திரிகைகளைப் பாருங்கள்.. பெயர் சொல்ல விரும்பவில்லை.. முன் அட்டை முதல் பின் அட்டை வரை ஆங்காங்கே தமிழ் வருகிறது.. பெரும்பாலும் ஆங்கிலச் சொற்கள்.. தலைப்புக்கள்.. உரையாடல்கள்.. கேள்வி பதில்கள்.. பேட்டிகள்.. கட்டுரைகள்.. செய்திகள்.. துணுக்குகள்.. என் கவிதைகள் கூட.. இப்பாடி எல்லாவற்றிலும் ஆங்கிலம் ஆக்கிரமித்து தமிழை வாசல் திண்ணைக்கு அனுப்பியாயிற்று.. தொலைக் காட்சி நிகழ்ச்சிகளுக்கும் அதே கதி.. இப்படியே போனால் மை மதர் டங் ஈஸ் டமில் யா.. பட் ஐ டோன்ட் நோ ஹொவ் டு ஸ்பீக் திஸ் டர்ட்டி லாங்க்வேஜ் யா.. என்று நம்முன்னாலேயே நம் வாரிசுகள் பேசும் காலம் தொலைவில் இல்லை.. முதலில் தமிழைப் பேணாத வாராந்தரிகளையும் மாதாந்தரிகளையும் புறக்கணிக்க உறுதி பூணுவோம்.. தமிழ் தானே வளரும்..
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
23-ஜூன்-201517:23:15 IST Report Abuse
jagan 'cash ' என்பதன் மூல சொல் காசு.......இப்போ அதான் நல்லா ஓடுது....
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
23-ஜூன்-201515:15:05 IST Report Abuse
Endrum Indian கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தது தமிழ். அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம் எல்லாம் அந்த காலத்து புராதன புத்தகங்கள். அப்பொழுதே தமிழன் அந்த அளவுக்கு முன்னேறி விட்டான். ஆனால் 1967லிருந்து தமிழ்நாடு பின்னோக்கி பயணித்து இன்று நாம் குறைந்தது 200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். எல்லாம் இந்த தரம் கெட்ட அரசியல்வாதிகள், டாஸ்மாக், இலவசம் செய்த வினை. தமிழா விழித்தெழு.
Rate this:
Share this comment
Cancel
Sankar Subramanian - Pune,இந்தியா
23-ஜூன்-201514:07:52 IST Report Abuse
Sankar Subramanian வாழ்க தமிழ், வளர்க தமிழர்கள்.
Rate this:
Share this comment
Cancel
kovai - kovai,இந்தியா
23-ஜூன்-201513:55:35 IST Report Abuse
kovai தமிழ் மொழி யினை பற்றி அற்புதமான கட்டுரை.. ஐயா அவர்களுக்கு நன்றிகள்...
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
23-ஜூன்-201512:49:41 IST Report Abuse
Sundeli Siththar தமிழ் மொழி தொன்மையானது. அதேநேரம், வளரும் விஞ்ஞானத்தின் பல சொற்றொடர்களுக்கு தமிழில் வார்த்தைகள் இல்லை. மேலும், தமிழ் தமிழ் என்று கூவுகிறவர்கள் வெறும் அரசியல் லாபத்திர்க்காகத்தான் கூவுகிறார்களே தவிர, உண்மையிலேயே தமிழை வளர்க்கும் எண்ணத்தில் இல்லை என்பது கவலைக்குறியது. பொற்றுதலுக்காக நடத்தப்படும் நாடகங்களால் தமிழ் மொழி அழிந்து வருகிறது...
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
23-ஜூன்-201508:06:26 IST Report Abuse
Manian தமிழை அழித்த பெருமை கரை வேட்டிளையும் தமிழ் சக்கரவைத்தி முடிசுடா மஞ்சள்த் துண்டு கருணாவயே சேரும். ஜாதிய வெருப்பைய் வளர்த்துத் தமிழர்களை முட்டாள்களாகவே வைக்க அவர் செய்த முயர்ச்சியே தமிழ் மெல்ல மெல்ல அழிகிறது. கருப்பு துண்டுகள், சிவப்புத் துண்டுகள், வெள்ளைத் துண்டுகள் எல்லாம் வெறும் வெத்து வேட்டுக்ளே. பிள்ளையார் பிடிக்க போய் குறங்கான கதையே இது, எல்லா கரை வேட்டிகளின் பிள்ளைகளும் ஹிந்தியும் ஆங்கிலமுமே கற்கிரார்கள். ஹிந்தியும் இப்போது அமோகமாக தமிழ் நாட்டில் வளர்கிறது. இனி தடுப்பவர் யாரோ? இன்னும் ஒரு பேராசிரியர் ஊவேசா , ஒரு பேராசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளைகள் திரும்ப பிறப்பார்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை