Karnataka govt moves SC against acquittal of Jayalalithaa | ஜெ., விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்: தீர்ப்புக்கு தடை விதிக்கவும் கர்நாடகா மனு Dinamalar
Advertisement
பதிவு செய்த நாள் :

Dinamalar Banner Tamil News

Advertisement

புதுடில்லி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில், கடந்த, மே 11ல், அவரை விடுவித்து, கர்நாடகா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல் முறையீடு செய்யப்பட்டது.

அதில், 'ஜெயலலிதாவின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும்; தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்' என, கர்நாடகா அரசு கோரியுள்ளது.

வழக்கு:

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 18 ஆண்டுகளுக்கு முன், இப்போதைய, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமான சுப்பிரமணியன் சாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கு, கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. சிறப்பு கோர்ட் நீதிபதி குன்ஹா, கடந்த ஆண்டு, செப்டம்பர் 27ல், ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு, தலா, நான்காண்டு சிறை தண்டனையும் விதித்தார்.மேலும், ஜெயலலிதாவுக்கு, நுாறு கோடி ரூபாய் அபராதமும், பிறருக்கு, தலா பத்து கோடி ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.




சிறையில் அடைப்பு:

இதையடுத்து, முதல் வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டார். அக்டோபர் 17ல், அவரை ஜாமினில் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது; சிறையிலிருந்து அவர் வெளியே வந்தார். அதே நேரம், தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணையை, மே 12க்குள் முடிக்க, கர்நாடகா உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, கடந்த, மே 11ல் பிறப்பித்த உத்தரவில், ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா, அவரின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோரை, வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார். இதையடுத்து, ஜெயலலிதா முதல்வராக மீண் டும் பொறுப்பேற்றார். இந்நிலையில், காங்கிரசை சேர்ந்த, முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு, ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல் முறையீடு செய்தது.

வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், கர்நாடகா அரசின் மேல் முறையீட்டு மனுவை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

அதில், 'ஜெயலலிதா மற்றும் மூவரை விடுதலை செய்து கர்நாடகா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; அந்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்' என, கோரியிருந்தார்.

இந்த மனு, கோடை விடுமுறைக்குப் பிறகு, சுப்ரீம் கோர்ட், ஜூலை 1ம் தேதி கூடும்போது,விசாரணைக்குஎடுத்துக் கொள்ளப்படலாம் என, டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
'வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, கர்நாடகா அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்' என, ஒரு மாதத்திற்கும் மேலாக வலியுறுத்தி வந்த தமிழக அரசியல் கட்சிகள், கர்நாடகா அரசு, நேற்று மேல் முறையீடு செய்துள்ளதை வரவேற்றுள்ளன.

கடன் விவர கூட்டலில் தவறு :

மேல் முறையீட்டு மனுவின் முக்கிய அம்சங்களாவன:
* இந்த வழக்கில், கர்நாடகா விசாரணை அமைப்பு, கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் முன், வாதியாக சேர்க்கப்படவில்லை.
* ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விவரங்களை, உயர்நீதிமன்றம் தவறாக கணக்கிட்டுள்ளது.
* மொத்த கடன், 10.67 கோடி ரூபாயாக இருக்க வேண்டிய நிலையில், 24.17 கோடி ரூபாய் என, தவறாக கணக்கிடப்பட்டுள்ளது.
* வருமானத்தை விட, 8.12 சதவீதம் அளவிற்கு தான் ஜெயலலிதா சொத்து சேர்த்துள்ளார் என கருதி, நீதிபதி குமாரசாமி அவரை விடுதலை செய்துள்ளார். ஆனால், 76.7 சதவீத அளவுக்கு, வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து சேர்த்துள்ளார்.
* வருமானத்திற்கு அதிகமாக, 16.32 கோடி ரூபாய் சொத்து சேர்க்கப்பட்டுள்ளது; வருமானம், 21.26 கோடி ரூபாயாக நீதிபதியால் கண்டறியப்பட்டுள்ளது.
* 'வருமானத்திற்கு அதிகமாக, 10 சதவீதத்திற்குள் சொத்து சேர்த்திருந்தால், வழக்கிலிருந்து விடுதலை செய்யலாம்' என, சுப்ரீம் கோர்ட் முன்னர் பிறப்பித்திருந்த உத்தரவை, இந்த வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு சாதகமாக ஆக்கியுள்ளது. ஆனால், அவர், 10 சதவீதம் அல்ல; 76 சதவீதம் அளவிற்கு சொத்து குவித்துள்ளார்.
* கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்தமேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், தமிழக அரசின் சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமிக்கும் அதிகாரம், தமிழக அரசுக்கு இல்லை என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை, கவனத்தில் கொள்ளவேண்டும்.

* முதல்வர் பதவியில் இருந்தபோது, பதவியை தவறாக பயன்படுத்தி, வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்துகளை குவித்துள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் மோசமானவை. அவரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, நீதித்துறையின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும். இவ்வாறு, கர்நாடகா அரசின் மேல் முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"


புது கணக்குப்படி 168 சதவீதம்!

'கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கணக்கு பிழையை சரி செய்தால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின், வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு, 168 சதவீதம் வரும்' என, 'அப்பீல்' மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை, விடுதலை செய்து, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.வருமானத்துக்கு அதிகமான சொத்தின் மதிப்பு, 8.12 சதவீதம் என கணக்கிட்ட, நீதிபதி குமாரசாமி, 'ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பார்த்தால், அது, அனுமதிக்கப்பட்ட அளவு தான்' என, குறிப்பிட்டிருந்தார்.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், சிறப்பு அனுமதி மனுவை (எஸ்.எல்.பி.,), கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பிறப்பித்த உத்தரவில், கணக்கு பிழை இருப்பதாக, சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மனுவில், கூறியிருப்பதாவது:உயர் நீதிமன்ற உத்தரவில் உள்ள பிழையை சரிசெய்தால், வருமானத்துக்கு அதிகமான சொத்தின் மதிப்பு, 16.32 கோடி அளவுக்கு வருகிறது. அது, உயர் நீதிமன்றம் கணக்கிட்ட, 8.12 சதவீதத்துக்கு மாற்றாக, 76.70 சதவீதமாகத் தெரிகிறது. இதனுடன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சொன்னது போல், கட்டடங்களின் கட்டுமான செலவான, 19.90 கோடி ரூபாயைச் சேர்த்தால், சொத்தின் அதீத மதிப்பு, 93.60 சதவீதமாகிறது.இத்தொகையுடன், ஜெயா பப்ளிகேஷன்ஸ் வருமானமான, 22.75 கோடி ரூபாயைச் சேர்த்தால், கூடுதல் வருமானம், 123.50 சதவீதமாகிறது; இதனுடன், சுதாகரனின் திருமண செலவான, 6.16 கோடி ரூபாயைச் சேர்த்தால், வருமானத்துக்கு அதிகமான சொத்தின் மதிப்பு, 168 சதவீதம் ஆகிறது.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

"

Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:



வாசகர் கருத்து (184)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
veerappan - tiruchirapalli,இந்தியா
25-ஜூன்-201510:21:05 IST Report Abuse

veerappan10 லட்சம் கோடி ஒருவர் வைத்துள்ளதாக அவரது ஆடிட்டர் பாவப்பட்ட ஜென்மம் கூறியிருக்கிறாரே அது எங்கிருக்கிறது என்று கண்டுபிடித்து மக்களிடம் சேர்க்கும் சர்வ(ஆ)திகாரம் படைத்த திரு சோ அவர்களால் இரும்பு மனுஷி என வர்ணிக்கப்பட்டவருடைய நான்காண்டு கால ஆட்சியிலும், வைர நெஞ்சம் என கொண்டாடப்படுபவருடைய ஓராண்டு கால ஆட்சியிலும் ஒரு ஆணியை கூட புடுங்காதது ஏன். 1,76,000/- கோடி என்ற திரைக்கதையை உயர்ந்த, உயர்ந்த பதவியில் உள்ள நபர்களை வைத்து எழுதி உயர்ந்தவர்களை வைத்து வெளியிட செய்து, அவர்களுக்கு ஆதரவான ஊடகங்களைக் கொண்டு, காலை முதல் இரவு வரை ஒப்பாரி வைத்து, மேடைகளில் தவறான பிரச்சாரங்களின் வாயிலாக மக்களின் மனதில் விஷ விதையை ஊன்றி தாழ்த்தப்பட்டவனை ஒழிக்க நினைத்த காரியத்தை சாதித்துவிட்டு, வழக்கு தொடரும்போது 12,300 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு என்றுதான் குற்றம் சாட்டப்பட்டுள்ளதை மறைத்து, இன்னும் 1,76,000/- கோடி என்று கூறிக்கொண்டு திரியும் மனசாட்சி அற்றவர்களுக்கு மக்கள்தான் பாடம் புகட்டவேண்டும்.

Rate this:
Kumar - melbourne,ஆஸ்திரேலியா
25-ஜூன்-201504:26:54 IST Report Abuse

Kumarகர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு பற்றி இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்களின் கருத்து.. 1. ஹரீஷ் சால்வே கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை அவசர மனுவாக கொடுக்கவில்லை. மாறாக விடுமுறை காலம் முடிந்து நடக்கும் நீதிமன்றத்தில் விசாரனையை நடத்த வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொதுவாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட விடுதலை தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது இல்லை. தடை விதிப்பது என்பது அபூர்வமே. அதனால் தற்போதைய நிலமை படி ஜெயலலிதாவுக்கு பிரச்சனை இல்லை. ஒருவேளை இவ்வழக்கில் நான் வாதிட நேர்ந்தால் 2 மாதங்களில் மேல்முறையீடு மனுவை உடைத்து எறிந்து காட்டுவேன். முதலில் கர்நாடக அரசுக்கு மேல்முறையீடு செய்யும் தகுதியே இல்லை என்பதை நிரூபித்து காட்டுவேன். நான் வாதாடாத பட்சத்தில் வாதாடும் வழக்கறிஞர் இந்த வழக்கிற்கும் - கர்நாடக அரசிற்கும் உள்ள தொடர்பை முதலில் தெளிவுபடுத்திவிடவேண்டும். அதன் பின்பு தான், இதர வாதங்களை வைக்கவேண்டும். என்னை பொருத்தவரை இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வெகுநாட்கள் நீடிக்காது. 2. ராம் ஜெத்மலானி இந்த வழக்கை பொருத்தவரையில் ஜெயலலிதாவை தவிர்த்து மற்ற மூவரையும் இணைக்க முடியாது. கூட்டுச்சதி, பினாமி சட்ட வடிவங்கள் இந்த வழக்கிற்க்கு பொருத்தமானது இல்லை. அடுத்ததாக வழக்கை விசாரித்தது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை. ஆனால் கர்நாடக அரசு மேல்முறையீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறையை ஒரு வாதியாக இணைக்காமல் உள்ளதாக எனக்கு தகவல் கிடைத்தது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையை இணைக்காமல் இருந்தால், வழக்கு ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்யப்பட்டுவிடும். கர்நாடக மாநிலத்தில் நடப்பதால், கர்நாடக அரசுக்கு தான் உரிமை என்று கூற முடியாது. மாநில மாற்றம் பெற்ற பின்பு, அரசு வழக்கறிஞரை நியமிக்கும் பொறுப்பு மட்டுமே அந்த மாநில அரசுக்கு உண்டு. இதை மட்டும் தான் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது. மேல்முறையீட்டை யார் செய்வது என்பது இன்று வரை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லை. இந்த வழக்கிற்கு போதுமான முகாந்திரம் இல்லை. வழக்கின் மேல்முறையீட்டு மனு அவசர கதியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதையும் நான் அறிவேன். ஜோசப் அரிஸ்டாடில் மனுவை ஜூலை 2ம் தேதி வியாழக்கிழமை அன்று தாக்கல் செய்வதாக முடிவெடுத்திருந்தார். ஆனால் இதில் தமிழக பிரதான எதிர்கட்சியின் எம்பி ஒருவர் கொடுத்த அழுத்தம் காரணமாக நேற்றே அவசர கதியில் தாக்கல் செய்துள்ளார். வழக்கின் போக்கை வைத்தே தீர்ப்பு பற்றி கூறமுடியும். மீண்டும் நான், நாகேஸ்வர ரோ, கே.கே வேணுகோபால், ஹரீஷ் சால்வே கூட்டனி ஒன்று சேரவேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த வழக்கில் ஆதாரங்கள் ஏதும் கர்நாடக அரசிடம் இல்லை. எல்லாமே தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடமே உள்ளது. தமிழக லஞ்ச ஒழிப்பு துறை உதவினால் தான் வழக்கே நகரும். அதனால் இந்த மனு ஜெயலலிதாவுக்கு சாதகமே. மேலும் இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்ட வழக்கு என்பதால், ஆதாரங்கள் என்பது சுத்தமாக இல்லை. நீதிபதி குமாரசாமி தீர்ப்பில் பிழை இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளதால், இதுகுறித்து நீதிபதி குமாரசாமியிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்கவேண்டும். அப்போது தான் தீர்ப்பின் சாராம்சம் முழுவதுமாக கர்நாடக அரசுக்கு புரியும். கர்நாடக அரசு முதலில் உயர்நீதிமன்றத்தில் இதில் உள்ள பிழை பற்றி நீதிபதி குமாரசாமியிடம் முறையிட்டு தெளிவுபடுத்திக்கொண்டு, பின் உச்சநீதிமன்றம் வந்திருக்கலாம். அதை செய்யாமல் விட்டது கர்நாடக அரசுக்கு பின்னடைவே. 3. கே.கே வேணுகோபால் இந்த வழக்கை 1997 முதல் நான் கவனித்து வருகிறேன். வழக்கில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மீது கூறப்படும் குற்றசாட்டுகள் எதிலும் உண்மை இல்லை. மேலும் கூட்டுச்சதிக்கான முகாந்திரமோ, பினாமி என்பதற்கான ஆதாரமோ தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினரிடமே இல்லை. அப்படி இருக்கையில் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கும் என்பது நிச்சயம் அறிதே.இந்த வழக்கின் தீர்ப்பை இன்னும் 6 மாத காலத்திற்குள் எதிர்பார்க்கலாம். நீதிபதி மதன் பி லோகூர் தலைமையிலான அமர்வு விசாரிக்கவே 90% வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த இந்த மூத்த வழக்கறிஞர்களின் கூற்றுகளிலிருந்தே, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலைக்காது என்பது தெளிவாக தெரிகிறது..

Rate this:
murumaha - madurai,இந்தியா
26-ஜூன்-201511:28:19 IST Report Abuse

murumahaதிரு குமார் Melbourne,ஆஸ்திரேலியா அவர்கலே, நான் ஆரம்பத்திலிருந்தே கூறி வரும் கருத்தை கவனிக்கவும். வருமான் வரி சட்டத்தின்ப்படி ஒருவரின் வருமானம் என்பது அவர் சம்பாதித்த வருமானம் மட்டும் தான் கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும். கம்பெனிகள் மற்றும் பிறர் சேர்த்த சொத்துக்கள் ஒருவர் கணக்கில் வராது, குற்றம் சாட்டப்பட்டவர் எந்த கம்பெனியிலும் பொறுப்பில் இல்லை. எப்படி ஒருவர் வீட்டில் தங்கியிருந்த காரணத்தினாலே குற்றம் சாட்டலாம். அப்படியானால் திமுக மற்றும் பிற கட்சிகள் குடும்பம் Income tax return கணக்கை எடுத்து இப்போது உள்ள சொத்தையும் அவர்கள் சம்பாதிததயும் compare பண்ணி பாருங்கள் என்று RTI சட்டப்படி ஒரு கேள்வி கேளுங்கள். இந்த case காணாமல் போய்விடும்....

Rate this:
murumaha - madurai,இந்தியா
26-ஜூன்-201511:36:10 IST Report Abuse

murumahaகர்நாடகம் யார்? அவர்களுக்கு என்ன நஷ்ட்ம் வந்தது. ஆரம்பத்தில் அபீடவிட் தாக்கல் செய்த போது, இந்த மேல் முறையீடு தீர்ப்பு என்ன வந்தாலும் கர்நாடகம் நடுநிலையாக இருக்கும் என்று பிரமானபத்திரம் தாக்கல் செய்தது ஏன்?...

Rate this:
Flash Kalai - Chennai,இந்தியா
26-ஜூன்-201518:57:50 IST Report Abuse

Flash Kalaiதிரு குமார் Melbourne,ஆஸ்திரேலியா அவர்களுக்கு Fali Sam நரிமன் [ஜெயலலிதாவுக்காக ஜாமீன் கிடைக்க வாதாடியவர் தான் ] என்கிற மிக சீனியர் அட்வோகேட் டின் ஜூனியர் ஒருவர் டெல்ஹியில் இருந்து ஒரு சமூக வலைதளத்துக்கு தெரிவித்த சில கருத்துக்களில் இருந்து சிலவற்றை சுருக்குமாக தெரிவிக்கின்றேன் :- 1] ஹரீஷ் சால்வே,கே.கே வேணுகோபால் , ராம் ஜெத்மலானி , நாகேஸ்வர ரோ ஆகிய அனைவரது பார்வையும் இந்த வழக்கில் எப்படியாவது ஜெ. தரப்பில் வாதாடி விட வேண்டும் என்கிற துடிப்பு தான் இருக்கிறதே தவிர [ ஜெயித்தாலும் தோற்றாலும் fees கணிசமான லகரங்களை வாங்கி விடலாம் என்கிற முனைப்பு தெரிகிறது. ஆனால் அவர்களில் கூட பவானி சிங்கை நீக்க கோரும் வழக்கில் வெற்றி பெற முடிய வில்லை. அதில் மிக அதிகம் நம்பிக்கை கொடுத்த நாகேஸ்வர ரோ கடைசி நேரத்தில் சில லகரங்களை பார்த்ததோடு சரி அதன் பின்னர் அந்த குறிப்பிட்ட [பவானி சிங்கை நீக்க கோரும் வழக்கில் ] வெற்றி பெற முடியாது என்று தெரிந்தும் ஜெ தரப்பிற்காக மீண்டும் மீண்டும் நம்பிக்கை கொடுத்து வந்தது. ஆனால் நடந்தது என்ன என்று எல்லோருக்கும் தெரியும் பவானிசிங் நீக்கப்பட்டு ஆச்சார்யா வர நேரிட்டது .அதில் தெரிய வேண்டிய உண்மை என்ன வென்றால் ஜெ. தரப்பிற்கு வெற்று நம்பிக்கை மட்டும் தருகிறார்களே தவிர உண்மை புரியாமல் யாரோ இந்த வழக்கின் உண்மை நிலவரத்தை திரித்து கூறி கொண்டு வருகின்றனர். 2]TN DVAC part is already over in the case of Bavaani Singh 's removal ordered by SC. SC strongly condemned this type of bad intervention and ordered TN DVAC not to further interfere in this case. So there is no single bit of chance for DVAC TN here. Only Karnataka Govt is eligible party for this appeal and they will undergo smoothly without any trouble in APPEAL. aggrieved பார்ட்டி கர்நாடக இல்லை என்றாலும் ஒரு கிரிமினல் வழக்கில் எப்ப அந்த பார்ட்டி[ கர்நாடக அரசு ] அப்பீல் போக விருப்பம் என்று சொல்லி விட்டதோ அப்பவே இதனை சட்ட ரீதியாகவே அங்கீகாரமான ஒன்றாக சட்டம் ஏற்று அந்த பார்ட்டிக்கு உரிமை கிடைக்க வழி செய்கிறது. இதனை தெரிந்து தான் மற்ற இரண்டு பேரும் [ திமுகவும் சு சாமி யும் ] சும்மா இருந்து விட்டனர். ஒரு வேளை கர்நாடகா விருப்பமில்லை அப்பீல் செய்ய என சொல்லிருந்தால் அடுத்த preference திமுக அல்லது சு சாமி யாரேனும் ஒருத்தர் தான் இதன் பாதிக்கபபட்ட பார்ட்டி ஆக இருக்கும் . 3]Karnataka Govt never gave any mandate writings before SC that they are not aggrieved or not interested party. Of course Hypothetically they are not aggrieved and not interested parties, but SC had directed all rights of conducting this case including the APPEAL. But when they decide to go to file appeal even if they are not aggrieved they can maintain their locus standi and at that moment they got all rights for APPEAL .SC will never disagree or dis approve their rights in the light of this Non-aggrieved factor.As long as the case conducted on shifting from one state [Tamil Nadu to Karnataka] then automatically the rights of conducting case goes to Karnataka which will be acting as a prosecuting agency.Hence prosecuting agency will do all legal further proceeding till end.No Investigating agency [ DVAC TN ] permitted for this case. Suppose If the case say it is still in TRIAL stage then only TN DVAC will act as main Party of the case and act as Investigating agency.[also as defacto complainant] But now for this case, it's TRIAL part is over and shifted to APPEAL stage .So there is no part of work for DVAC TN GOVT as far as this case concerned.Secondly in the very initial stage itself the case has been transferred to other State So their fundamental motto is conducting the case by deviated from TN Jurisdiction.Thirdly, as per Deepak Misra and their Bench clearly ordered that the prosecuting agency is Karnataka Govt only not TN DVAC. [ in Bavaani Singh removal case] So definitely the right for APPEAL goes for Karnataka Govt. மேலே சொல்லியதிலி இருந்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஆதாரம் கொடுக்கவேண்டிய கேள்வியே எழவில்லை. காரணம் TRIAL தான் ஏற்கனவே முடிந்து விட்டது. அதோடு லஞ்ச ஒழிப்பு துறைக்கு வேலையும் முடிந்து விட்டது .. மற்றபடி இந்த வழக்கில் பினாமி சட்ட ப்படி குற்றம் என்று நீதிமன்றம் பார்க்க வேண்டியதில்லை சொத்துகுவிப்பு வழக்காகவே இதனை எடுத்து கொண்டாலே போதும் கீழ் நீதி மன்றத்தின் தீர்ப்பு தான் வரும் என்று மேற்படி அட்வகேட் தெரிவிக்கிறார்...

Rate this:
Flash Kalai - Chennai,இந்தியா
24-ஜூன்-201521:39:14 IST Report Abuse

Flash Kalai"நிகர வருமானம்" [Total Income ] என்பதற்கும் நிதி ஆதாரம் [ total source of money ]என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. உதாரணமாக ஒரு சொத்தை நம் கையிருப்பில் வாங்குவதற்கும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி அல்லது பேங்க் லோன் மூலம் வாங்குவது என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இந்த வழக்கின் நோக்கமே என்ன வருமானத்துக்கு அதிகமாக எவ்வளவு சதம் சொத்தில் மதிப்பு உள்ளது என்பது ஆகும். அப்படிஇருக்கையில் நிகர வருமானத்தை தான் தனது formula வில் போட்டிருக்க வேண்டும் .. தனது வருமானத்தில் எவ்வளவு கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கிறது என்பது தான் வழக்கே தவிர ஒருத்தரால் எவ்வளவு நிதி திரட்டி அந்த சொத்து வாங்க முடியும் என்பதல்ல வழக்கு .. குமாரசாமி அப்படி செய்யாமல் மொத்த நிதி ஆதாரம் கொண்டு வகுத்தல் போட்டு பிழையான கணக்கு விடையை வர வழைத்து உள்ளார். இந்த பிழையானது தீர்ப்பு வந்து வெகு நாட்கள் வரை நிறைய பேர் சொல்லவே இல்லை. அவர்கள் சொல்லியது எல்லாம் வெறும் கூட்டலில் பிழை செய்து விட்டார் ...கூட்டலில் பிழை செய்து விட்டார் என்று சொல்லியே இந்த முக்கியமான formula பிழை யை பற்றி கண்டு கொள்ளாமல் அல்லது கவனிக்காமல் கருத்து சொல்லி வந்தனர். .இதை வெளிச்சத்துக்கு கொண்டு வராமல் செய்து விட்டனர் மிக சமீபமாக த்தான் இந்த பிழை வெளிச்சத்துக்கு வந்ததது. இந்த பிழை வெளிச்சத்துக்கு வந்ததும் அதிமுக வழக்கறிஞர்களே அசந்து போய் இந்த பிழைக்கு விளக்கம் சொல்லாமல் மூடி மறைத்து வந்தனர். அதற்கு முன்பு வரை கூட்டல் பிழை மட்டும் தான் என்று இருந்த அதிமுக வழக்கறிஞர்களுக்கு இந்த பிழையும் ஒரு பெரிய தலைவலியாக தெரிய வர அதை பற்றி வாய் திறக்காமல் மௌனம் சாமியார்கள் ஆகி விட்டனர். இதையடுத்து அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தலைமையில் அவரது உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா மற்றும் சட்டத்துறை அதிகாரிகள் ஜெயலலிதா தரப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆச்சார்யா கேட்டுக் கொண்டதற்கிணங்க பவானிசிங்கின் உதவியாளராக இருந்த முருகேஷ் எஸ்.மரடியும் கடந்த சில நாட்களாக இரவு பகலாக உழைத்தார். அதில் அவரது உதவியாளர் பார்த்து சொன்னதில் தான் மேற் சொன்ன லேட்டஸ்ட் தவறையும் சேர்த்து சொல்லி உள்ளார்கள். அதை வாதம் வரும் போது குறிப்பிடலாம் என்று இப்போதைக்கு அதை மறுபடியும் நோட்ஸ் இல் பதிவு செய்து உள்ளனர். மேற்படி formula பிழையினால் என்ன நடந்த விட போகிறது என்றால் ஒரு வேளை குமாரசாம்யின் தீர்ப்பை அப்பிடியே ஒரு லைன் விடாமல் ஏற்று கொண்டாலும் கூட கணக்கில் சொல்லிய வருமான அளவுகளை ஏற்று கொண்டு விட்டாலும் கூட அவர் சொன்ன கணக்கின் படியே போட்டாலும் கூட formula சரியானபடி போட்டால் 27% என்று வருகிறது 8.12% அல்ல என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் செய்தி அதிமுக வக்கீல்களுக்கு ... மற்றபடி 168% வருகிறது என்பது குமார்சாம்யின் தீர்ப்பை தாண்டி செய்து உள்ள பிழை மற்றும் கூட்டல் /கழித்தல் பிழைகளினால் மட்டுமே.. அதை தவிர்த்து அவர் சொல்லுகிற மதிப்பின் படி போட்டால் formula பிழை மூலம் மட்டுமே 27% க்கும் கூடுதலாகவே வருகிறது என்பது லேட்டஸ்ட் டாக்...

Rate this:
V Nath - PCMC,இந்தியா
24-ஜூன்-201523:03:54 IST Report Abuse

V NathCongratulations to Mr.Flash Kalai. நீங்கள் சொல்ல விழையும் கருத்தை மிகவும் விளக்கமாக எந்த ஒரு பிழையும் காணமுடியாத வண்ணம் பதிவு செய்துள்ளதை மிகவும் பாராட்டுகிறேன். இம்மாதிரியான ஆதார பூர்வமான ஒரு வழக்கறிஞரின் திறமையுடன் வாதத்தை எடுத்து வைத்துள்ளீர்கள். இம்மாதிரியான ஆரோக்கியமான கருத்துப்பதிவுகளை வெளியிடுவதை விடுத்து கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் மாறி மாறி வசை பாடி செய்திக்கு துளியும் பொருத்தமற்ற கருத்துக்களை தினமலர் தவிர்க்க வேண்டுகிறேன்....

Rate this:
Janaki raman Pethu chetti - Trichy,இந்தியா
24-ஜூன்-201521:29:36 IST Report Abuse

Janaki raman Pethu chettiசுப்ரீம் கோர்ட்டிலும் தீர்ப்பு வரும்வரை திமுகவினர் வயிற்று எரிச்சல் தீர பொங்கி கற்பனை செய்து மகிழ ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வாய்ப்பை நழுவ விடாமல் தீர்ப்பு வரும் வரை திமுகவினர் மகிழ்ச்சி அடையட்டும்.

Rate this:
Kannan - Madurai,இந்தியா
25-ஜூன்-201500:10:14 IST Report Abuse

Kannanதிரு. ஜானகி ராமன், உங்களுக்கும், மொட்டை அடிப்பது, அலகு குத்தி தேர் இழுப்பது, தீ மிதிப்பது, அங்கப்ரடக்ஷினம் பண்ணுவதற்கெல்லாம் ஆண்டவன் அருளால் மீண்டும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. வாய்ப்பை நழுவவிடாமல் மேற் சொன்ன அனைத்தையும் பாட்டிக்காக மறுபடியும் செய்து பாட்டியின் அருளை பெறவும்....

Rate this:
kumaresan - coimbatiore,இந்தியா
24-ஜூன்-201520:23:36 IST Report Abuse

kumaresanமக்கள் எதிர்பார்த்த படி கர்நாடகா நடந்து உள்ளது - ஸ்டாலின். சார், நீங்க CM அவேங்கனு யாரும் நினைக்கல. உதையநிதி படத்தை பார்த்து குதுகலம் ஆகுங்க.

Rate this:
kumaresan - coimbatiore,இந்தியா
24-ஜூன்-201520:20:38 IST Report Abuse

kumaresanஜெயலலிதா முதலமைச்சர் நாட்கள் என்ன படுகின்றன - ராமதாஸ்.. சார், நீங்க முதல் அமைச்சர் ஆகும் நாட்கள் என்ன முடியுமா ?

Rate this:
sp kumar - Chennai,இந்தியா
24-ஜூன்-201520:08:55 IST Report Abuse

sp kumarஅம்மா அவசரப்படவில்லை. குமாரசுவாமி கொடுக்காமல் போயிருந்தால் வழக்கு உச்ச நீதி மன்றம் சென்றிருக்கும் .நல்ல வேளை தமிழக உயர் நீதி மன்றத்தில் வழக்கு நடக்கவில்லை .

Rate this:
jeyam - Srivilliputtur,இந்தியா
24-ஜூன்-201519:59:31 IST Report Abuse

jeyamஎன்னண்ணே நீங்க கும்பகர்ண தூக்கம் தூங்கீட்டீங்களா.அப்பவே மணி அடிச்சிட்டாங்க சோறுபோட.வாங்க வரிசைல நிப்போம் (ரெண்டு வருசம்).

Rate this:
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
24-ஜூன்-201519:33:37 IST Report Abuse

பஞ்ச்மணியப்பா இவ்வளவு புத்திசாலிகள் நம்ப ஊர் இருக்கறப்போ முதல்வர் உங்கள தேர்தெடுத்து வாதாட சொன்னால் சும்மா ஊடு கட்டி விளையாட மாட்டீங்களா ?? இடம்ன்னு ஒன்னு கிடைச்சா உடனே கருத்து கந்சாமியாட வேண்டியது போய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்கய்யா

Rate this:
Amirthalingam Sinniah - toronto,கனடா
24-ஜூன்-201518:36:23 IST Report Abuse

Amirthalingam Sinniahஊழல்கள் அடங்கிய கோப்புகளை எல்லா மாநிலங்களுக்கும் உள்ள நீதிமன்றங்களுக்கு அனுப்பி ஒருகிழமையில் முடித்து விடுங்கோ . விக்ரமாதித்தன் கதையை எத்தனை நாட்களுக்கு திரும்ப திரும்ப வாசிப்பது?

Rate this:
மேலும் 169 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X