8 தமிழர்களை கொன்றராணுவ வீரனுக்கு மரண தண்டனை| Dinamalar

8 தமிழர்களை கொன்றராணுவ வீரனுக்கு மரண தண்டனை

Added : ஜூன் 26, 2015 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கொழும்பு:இலங்கையில், 15 ஆண்டுகளுக்கு முன், எட்டு தமிழர்களை கழுத்தை அறுத்து படுகொலை செய்த, ராணுவ வீரன் சுனில் ரத்னநாயகேவுக்கு, மரண தண்டனை விதித்து, அந்நாட்டு கோர்ட் நேற்று உத்தரவிட்டது.இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடுமையாக சண்டை நடைபெற்ற, 2000ம் ஆண்டில், தமிழர்கள் பகுதியான மிருசுவில் என்ற இடத்தில், விமானத்திலிருந்து குண்டுகள் வீசப்பட்டன.
அதில், தமிழர்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. குண்டுவீச்சுக்குப் பிறகு, தங்களின் வீடு, என்ன கதியில் இருக்கிறது என்பதைப் பார்க்க, சிறுவர்கள் உட்பட சிலர் அங்கு சென்றனர். அவர்களை வழிமறித்த ராணுவ வீரன் சுனில் ரத்னநாயகே, நான்கு சிறுவர்கள், நான்கு பெரியவர்களை, கழுத்தை அறுத்து கொன்று, மொத்தமாக குழியில் தள்ளி மூடிவிட்டான். அவன் பிடியில் இருந்து தப்பிய தமிழர் ஒருவர், இந்த விவகாரத்தை அம்பலப்படுத்தினார்.பதினைந்து ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு விசாரணையில் நேற்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழர்களை கொன்று குவித்த சுனிலுக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவனுடன் குற்றம்சாட்டப்பட்டிருந்த நான்கு வீரர்கள், ஆதாரமில்லாததால் விடுவிக்கப்பட்டனர்.இந்த படுகொலையை அறிந்த, அப்போது அதிபராக இருந்த சந்திரிகா குமாரதுங்கா, 2003ல், சுனில் இடம்பெற்றிருந்த ராணுவ பிரிவையே கலைத்து, குற்றம் இழைத்ததாக கருதப்பட்ட, ஐந்து வீரர்களையும் கைது செய்ய உத்தரவிட்டார்.
கடந்த 2009ல், இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போரின் போது, 40 ஆயிரம் தமிழர்கள், இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கான தண்டனை, இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Johnson Ponraj - சென்னை,இந்தியா
26-ஜூன்-201509:32:51 IST Report Abuse
Johnson Ponraj இந்த படுகொலையை அறிந்த, அப்போது அதிபராக இருந்த சந்திரிகா குமாரதுங்கா, 2003ல், சுனில் இடம்பெற்றிருந்த ராணுவ பிரிவையே கலைத்து, குற்றம் இழைத்ததாக கருதப்பட்ட, ஐந்து வீரர்களையும் கைது செய்ய உத்தரவிட்டார். கடந்த 2009ல், இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போரின் போது, 40 ஆயிரம் தமிழர்கள், இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கான தண்டனை, இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X