விவசாயியின் சூப்பர் சாதனை!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விவசாயியின் சூப்பர் சாதனை!

Added : ஜூன் 28, 2015 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
விவசாயியின் சூப்பர் சாதனை!

திருப்பதி: தெலுங்கானா மாநிலத்தில், ஒரு விவசாயி, சைக்கிள் கலப்பையை கண்டுபிடித்துள்ளார்.தெலுங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்தவர், புக்கியாசந்து, 30. அவர், அங்கு விவசாயம் செய்து வருகிறார். சமீபத்தில், தன் நிலத்தில் பருத்தியை விதைத்தார். அப்போது, அவருக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது.

தன்னிடமிருந்த பழைய சைக்கிளின் பின்புறம் உள்ள சக்கரம், பெடெல் மற்றும் சீட்டை அகற்றினார்.பின், சைக்கிள் செயினில், கலப்பையை பொருத்தி, அதை ஓட்டிப் பார்த்தார். சைக்கிள் கலப்பை நன்றாக வேலை செய்தது. புக்கியா, அதில் மேலும் சில மாறுதல்களை செய்தார். மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட பொருட்களை, அதில் பொருத்தி, மறுபடியும் சோதனை செய்தார். அதுவும் நன்றாக வேலை செய்தது.

உடனே, அதே மாடலில், இன்னொரு பழைய சைக்கிளையும் தயார் செய்து, மனைவிக்கு அளித்தார். தற்போது, கணவன், மனைவி இருவரும் சைக்கிள் கலப்பையை பயன்படுத்தி, சிரமப்
படாமல் நிலத்தில், வேலை செய்கின்றனர். இதைப் பார்த்த, கிராம மக்கள், அவரை பாராட்டினர். ஒரு சைக்கிளை, இது போல் மாற்றி வடிவமைக்க, புக்கியாவிற்கு 300 ரூபாய் மட்டுமே செலவானது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman - Porur, Chennai,இந்தியா
30-ஜூன்-201518:43:35 IST Report Abuse
Anantharaman அருமை புக்கியாசந்து வாழ்த்துக்கள்.....நம்பூரு விவசாயி டாஸ்மாக்-ல தண்ணியடிக்க காலையிலேயே போய்டுவான்...அவன் வயலுக்கு போய் ரொம்ப வருஷமாச்சு.....அதான் அரசாங்கம் இலவசமா அரிசி, தட்டு முட்டு சாமானெல்லாம் கொடுக்குது...அப்புறம் என்ன
Rate this:
Share this comment
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
29-ஜூன்-201500:34:17 IST Report Abuse
Devanand Louis வாழ்த்துக்கள் புக்கியா
Rate this:
Share this comment
Cancel
Baskaran - Chenaai,இந்தியா
28-ஜூன்-201518:20:28 IST Report Abuse
Baskaran சூப்பர் புக்கியாசந்து சூப்பர்
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
28-ஜூன்-201503:39:44 IST Report Abuse
Manian தீ இல்லை, புகை இல்லை, தீவிராமா போகுது பார் என்று சைய்கிளைய் பற்றிய பாடல் உண்டு. இந்த விவசாயி எந்த காலேஜுக்கும் போகாமல் இந்த அறிய படைப்யை செய்துள்ளார். தலை வணங்கி நன்றி கூறுகிறேன் இந்த சைக்கிள் மாற்ற வேயையும் பயிர் செய்யாத நேரம் ஒரு குடிசைத் தொழிலாளக செய்து உபரி வருமானமும் பெறல்லாம் . இனி அம்மா சைக்கிள் எல்லாம் கலபைப்யாக மாறும். இங்கல்ல, ஆந்திராவில். நம்ம பயலுக காலேசிலே மனபாடம் செய்து பட்ட்ம் வாங்கினானுக. ஒடம்பால செய்யற வேலைய் எல்லாம் கேவலம். லஞ்சம் வாங்கற அரசாங்க வேலொய்யேதான் வேணும். அத்தோட, நம்ம விவசாயிங்களுக்கு இது எல்லாலாம் எலவசமா அரசாங்கம் தரனும். இல்லாடி கததிறிக்காகையே, வெண்டைய்கயெ, தக்களி எல்லாம் ரொட்லெ கொட்டி ஸ்டிரக்கு பண்ணுவநுக. ஆனா ஏழைய பாழைய்களுக்கு கொடுக்கமாட்டாங்க. போங்க்கய்யா. இப்போ வாச்சும் ஏன் வடக்கு (ஆந்திரா) வாழ்கிறது, தெற்கு தேய்கிறது எண்ணு தெரியுதா?.
Rate this:
Share this comment
Cancel
.Dr.A.Joseph - London,இந்தியா
28-ஜூன்-201503:36:32 IST Report Abuse
.Dr.A.Joseph மனித குலத்தின் அடிப்படை வளர்ச்சி மாற்றத்திற்கு சக்கரம் காரணமாக இருந்தது என்பது பழைய வரலாறு. அது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப் பட்டுள்ளது.வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Arichandran - Singapore  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூன்-201502:55:09 IST Report Abuse
Arichandran Super Appu. Real Hero
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை