தேனி நியூட்ரினோ மையம் அறிவியல் ஆராய்ச்சிக்கு அவசியம்: - ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் - வெ.பொன்ராஜ் -| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேனி நியூட்ரினோ மையம் அறிவியல் ஆராய்ச்சிக்கு அவசியம்: - ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் - வெ.பொன்ராஜ் -

Updated : ஜூன் 29, 2015 | Added : ஜூன் 28, 2015 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
தேனி நியூட்ரினோ மையம் அறிவியல் ஆராய்ச்சிக்கு அவசியம்: - ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் - வெ.பொன்ராஜ் -

நம் பேரண்டத்தில் காணப்படும் மிகப் பெரும்பாலான பருப்பொருட்களில், தொலைநோக்கிகள் மூலமாக காணமுடியாத பருப்பொருள் தான், இருள் பொருள் (Dark matter) என்பது. கண்ணுக்கு தெரியாத இருள்பொருளின் இருப்பு மற்றும் அதன் பண்புகள் என்பது கண்ணுக்கு புலப்படும் பருப்பொருளின் மீதான அதன் ஈர்ப்பு தன்மை சார்ந்து தான் அறிகிறோம். இன்றைய வான் இயற்பியல் (Astrophysics) ஆராய்ச்சியில் மிகப்பெரிய புரியாத புதிராக இருப்பது, நியூட்டிரினோ உட்பட, கண்ணுக்கு புலப்படாத இதுவரை நேரடியாக கண்டறியப்படாத சூடான இருள்பொருள் தான். இந்த இருள்பொருள் எவ்வித ஒளியையும் உமிழாது, வேறு ஏதேனும் மின் காந்த கதிரியக்கத்தையும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவில் வெளிப்படுத்தாது.


சிறிய பகுதி:

பிளாங் பிரபஞ்ச சர்வே மதிப்பீட்டின் படி, பேரண்டஇயலின் இதுவரை அறிவியல் ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டு தரப்படுத்தப்பட்ட அறிவியல் மாதிரியான பேரண்டவியலின் அடிப்படையில், பேரண்டத்தின் பெருந்திரள் சக்தியில் (Mass Energy of the known universe) 4.9 சதவீதம் பரும்பொருளாலானது (Ordinary matter), 26.8 சதவீதம் இருள் பொருளானது (Dark matter), 68.3 சதவீதம் இருள் ஆற்றலால் ஆனது (Dark Energy). எனவே, பேரண்டத்தின் மொத்த பெருந்திரள் சக்தியில் இருள்பொருளும், இருள் ஆற்றலும் இரண்டும் சேர்ந்து, 95.1 சதவீதமாகும். எனவே, இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும், நமக்கு தெரிந்த, வெறும் 4.9 சதவீத பருப்பொருளை, கண்டுணர்ந்து அதைப் பற்றிய ஆராய்ச்சியின் விளைவாகத் தான் பிறந்தது. பிரபஞ்சத்தின் சிறிய ஒரு பகுதியை ஆய்ந்து அறிந்து மனிதன் மேற்கொண்ட அறிவியலின் ஆராய்ச்சி, இந்த மனித குலத்திற்கு வழங்கிய மாபெரும் படைப்புகள் தான், இன்றைய நவீன உலகத்தை மலரச் செய்தது, மென்மேலும் வளர வழி நடத்துகிறது.
இன்று நடக்கிற அறிவியல் ஆய்வுகள், அண்ட வெடிப்பில் உருவான கோள்கள் மூலம் கண்டறியப்பட்டு நடைமுறையில் தரப்படுத்தப்பட்டுள்ள அறிவியல் அடிப்படை கோட்பாடுகளை தாண்டி, வேறு ஏதாவது சூழ்நிலையில் வேறு மாதிரியான அறிவியல் அடிப்படை கோட்பாடுகள் இருக்குமா? அப்படி இருந்தால், அதைப் பற்றி கண்டறிய முடியுமா? அப்படி கண்டறிந்தால் என்ன மாதிரியான அறிவியல் மாற்றங்கள் இந்த மனித சமுதாயத்திற்கு பயன்படும் என்பதை கண்டறிவதற்கான ஆராய்சிகள்தான், அடிப்படை துகள்களை பற்றிய ஆராய்ச்சிகள் ஆகும். இப்படிப்பட்ட அடிப்படை அறிவியலை பற்றிய ஆராய்ச்சியில், எந்த நாடு அதிக கவனம் செலுத்துகிறதோ, அந்த நாடு தான் தன் சமூகத்தை அறிவார்ந்த சமூகமாக உயர்த்தும் முயற்சியின் முதல் படியில் இருக்கிறது என்று அர்த்தம்.


வாய்ப்பு கிடைக்க வேண்டும்:

இப்படிப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி உலகம் முழுவதும் வளர்ந்த நாடுகளில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது, இந்த அடிப்படை ஆராய்ச்சியில் இந்தியாவும் ஈடுபட வேண்டும். இந்திய மாணவர்களுக்கு அப்படிப்பட்ட ஆராய்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நானும், என் நண்பர் பொன்ராஜும், உலகில் உள்ள பல்வேறு ஆராய்ச்சி நிலையங்களுக்கு பயணம் செய்து, அதன் பயனாக இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும், இந்த நியூட்ரினோ ஆய்வு அடிப்படை அறிவியலுக்கான ஆய்வு என்பதாலும், இந்த கட்டுரையை தமிழ் மக்களுக்கு விரிவாக விளக்கி, அவர்களின் நியாயமான சந்தேகங்களை போக்க வேண்டும் என்ற காரணத்தினால் தமிழில் எழுதுகிறோம். துகள் ஆராய்ச்சி நிலையங்களில் எங்கள் பயண அனுபவம். (LHC visit and Fermi lab visit) நாங்கள் இருவரும், ஹிக்ஸ் போஸான் என்ற கடவுள் துகளை கண்டுபிடித்து உலகிற்கு வெளிப்படுத்திய சுவிட்சர்லாந்தில் உள்ள CERN laboratoryக்கு சென்றிருந்தோம். அங்குதான் Large Hadron Collider (LHC) உலகின் மிகப்பெரிய மற்றும் மிக சக்தி வாய்ந்த துகள் முடுக்கி உள்ளது. அது அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பினால் கட்டப்பட்டது (CERN). இது நிலத்திற்கு அடியில், தரைக்கு கீழே, 50 முதல், 175 மீட்டர் ஆழத்தில், 17 மைல் நீளத்தில் (27 கிலோ மீட்டர்) மிகப்பெரிய வட்ட சுரங்கப்பாதையில் அமைந்துள்ளது. இது சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் எல்லை கீழே உள்ளது. 100 நாடுகளில் இருந்து, 10 ஆயிரம் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள், இணைந்து இந்த திட்டத்தில் பணியாற்றுகின்றனர். இதை கட்டியெழுப்ப, 10.4 பில்லியன் சுவிஸ் பிராங்குகள், அதாவது, 64 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். அது இப்போது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான சோதனை ஆராய்ச்சி மையம் ஆகும்.
இந்த மையம் பெருவெடிப்பு ஆராய்ச்சியில் புரோட்டன் முதலிய ஹட்ரோன்ஸ் (Hadrons) முடுக்கி ஒன்றுடன் ஒன்று துகள்களை மோதவிட்டு ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது. இதன் மூலம் பிரபஞ்சத்தில் ஹிக்ஸ் போஸான் என்ற கடவுள் துகள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கண்ணுக்கு தெரியாத ஹிக்ஸ் புலம் (Higgs Field) பீல்டு பேரண்டத்தில் இருப்பதை கண்டறியப்பட்டிருக்கிறது.அந்த புலத்தில் எந்த துகள் செல்கிறதோ, அந்த துகளுக்கு நிரை கிடைக்கிறது. இதன் மூலம், பேரண்டம் உருவாகியது குறித்த மற்றும் அடிப்படை துகளின் பண்புகள் ஒழுக்கம் முதலியவை குறித்த ஸ்டாண்டர்ட் மாடல் எனும் அறிவியல் கருதுகோள் மெய்த்தன்மை மேலும் உறுதிப்பட்டு உள்ளது. இதுபோன்ற மற்றொரு முயற்சி... நாளை.
ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்11வது இந்திய குடியரசுத் தலைவர் [apj@abdulkalam.com] வெ. பொன்ராஜ்டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர்[vponraj@gmail.com]

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
baluc - london,யுனைடெட் கிங்டம்
30-ஜூன்-201505:39:48 IST Report Abuse
baluc திரு சித்து அவர்களுக்கு www அங்கு தான் கண்டுபிடிக்கப்பட்டது ஆனால் அந்த CERN பற்றி Dr. Stephen William Hawking என்ன சொல்கிறார் தெரியுமா? Finding the 'God' particle could destroy the universe, warns Stephen Hawking ://www.dailymail.co.uk/news/article-2746727/Maybe-shouldn-t-looking-quite-hard-God-particle-destroy-universe-warns-Stephen-Hawking.html மேலும் இந்த லிங்கில் சென்று படிக்கவும். திரு.பொன்ராஜ் அவர்களே,நீங்கள் காண விரும்பும் விஷயம் இந்த உலகை அழிக்கவல்லது ஆனாலும் அதை செய்யவிரும்புகிறிர்கள், போகட்டும் உங்களின் இந்த நியூட்ரினோ ஆராய்ச்சியால் இந்தியாவின் சராசரி மனிதனின் வாழ்வு எந்த விதத்தில் முன்னேற்றமடையும் என விளக்கவும். இதை சொல்லும் நாங்கள் அறிவியல் ஆராய்ச்சிக்கு எதிரானவர்கள் கிடையாது 20000 கோடி செலவழித்து உங்களால் 2 ரியாக்டர்களை மட்டுமே கட்டமுடிந்தது கூடங்குளத்தில் அதுவும் ரஷ்யாவின் உதவியுடன் ஏன் சுதேசி இந்தியனால் இன்னும் முடியவில்லை சுயமாக கட்ட ??? இந்தநிலையில் நியூட்ரினோ ஆராய்ச்சி மட்டும் தனி உங்களால் எப்படி சத்தியம் ?? யாரேனுடனும் கூட்டு முயற்ச்சி என்றால் இதை அந்த நாட்டிலேயே செய்யவேண்டியதுதானே??? ஏன் இந்தியா அதிலும் தமிழ் நாடு 2 அணு மின் நிலையங்களினால் அதனை சுற்றி வாழும் தமிழ் மக்கள் பலவித நோய்களுக்கு உள்ளாகிஉள்ளனர் ஆனால் பலன் மட்டும் அனைத்து இந்தியாவிற்கு நல்ல நீதி உங்களுடையது, மொத்த அணு உலைகள் மூலமாகவும் 1470 மெஹா வாட் மட்டுமே உற்பத்தியாகிறது அதிலும் பாதி அவைகளின் இயக்கத்திற்கு போய்விடுகிறது மீதம் உள்ள சொற்ப மின்சாரத்திற்காக அதை சுற்றி வாழும் அப்பாவி ஏழை மக்களின் வாழ்வு போய்விட்டது, இதை எதித்து போராடும் phd படித்தவனும் முட்டாள் என்றால் நீங்கள் எப்படி அறிவாளி ஆகமுடியும்?? Greenpeace இயற்கைக்கு எதிரான அமைப்பு என்றால் நீங்கள் ஆதரவானவர்களா?? எப்படி?? இந்த நியூட்ரினோ மையத்தால் தமிழகத்தின் மையபகுதியான மதுரை மற்றும் அதன் சுற்றுபுறங்கள் இயற்க்கை அழிவிற்குவுட்படபோவதை மக்களாகிய நாங்கள் ஆதரிக்கவேண்டும் அப்படிதானே? அதற்க்கு இங்கு நீங்கள் கட்டுரை (காட்டு உரை) எழுதுவதை நாங்கள் ஆதரிக்கவேண்டும்? உங்களின் ஆராய்ச்சியை ஊழல் பண்ணும் அரசியல்வாதிகளை, அரசுஅதிகரிகளை விஞ்ஞானரீதியாக எப்படி கண்டுபிடிப்பது என ஆராய்ச்சி செய்யவும். CERN ஆய்வுகூடத்தில் 10000 ஆராயட்சியலர்களில் இந்தியர்கள் ஒருசிலரே உள்ளனர் இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பும் அதில் கிடையாது இந்தநிலையில் உள்ளது இந்தியாவின் அறிவியல் வளர்ச்சி இதில் நியூட்ரினோ ஆய்வு மையம் ??? சிரிப்பு தான் வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் மண் இல்லை, பெரும்பாலான சிறு குன்றுகள் tiles ஆக போய்விட்டது, கடற்க்கரை மணல்கள் கொள்ளை போய்விட்டன, பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட் ஆக போய்விட்டன, எஞ்சிய கொஞ்ச பகுதிகளையும் இந்தமாதிரி ஆராய்ச்சிகளுக்கு எடுத்துக்கொண்டால் இந்த பாவி தமிழன் எங்கு வாழ்வது? ??? ஹைட்ரசன், நியூற்றினோ எல்லாம் சோறு தருமா ?? குடிக்க h2o தண்ணீருக்கு எங்கே போவது ??? மலையாளி தமிழனின் காய்கறிகளில் Chemical அதிகம் உள்ளதாக குறைகூருகின்றான் ஆனால் நீரை அதிகம் தேக்க விடமாட்டன் இதற்க்கு உங்கள் விஞ்ஞானம் ஒன்றும் செய்யாது, ஆனால் இருப்பொருள், பருப்பொருள் விஞ்ஞானம் மிகவும் அவசியம் என கூருகின்றிர்கள். ஏழையின் விட்டிற்கு கூரை கிடையாது ஆனால் மங்கல்யன் தேவை. உங்களின் படிப்பிற்கு ஏ சி போட்ட அறை வேண்டும் ஆனால் ஏழை விவசாயியை நீங்கள் நினைக்க கூட மாட்டிர்கள். ஹைப்ரிட் அரிசி யை நீங்கள் எடுத்துகொள்ளுங்கள் அதை எங்களிடம் திணிக்கவேண்டாம். எங்களுக்கு மங்கல்யன் தேவையில்லை மண்சட்டி சோறும் நல்ல காற்றும் போதும் அதை எங்களிடம் இருந்து பரிக்கநினைதால் அழிவு எங்களுக்கு மற்றும் இல்லை உங்களுக்கும்தான் இயற்கை தாயிடம் நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள் மாறாக கற்றுகொடுக்க நினைத்தால் உங்களின் CERN னால் ஒன்றும் செய்யமுடியாது என்பது ஆணித்தரமான உண்மை. கடலோர காவல் படை விமானம் தொலைந்து 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது அவர்களின் குடும்பத்திற்கு உங்களின் விஞ்ஞானத்தின் பதில் என்ன? நியூற்றினோ ஆய்வு தேவை இல்லை இந்த விமானத்தை ஒழுங்காக கண்டுபிடியுங்கள் பார்போம், 10 நாட்களை கடந்து இன்னமும் உங்களின் விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை நீங்க இருபொருள், பருப்பொருள் கண்டுபிடிக்க போறிங்க hyooo hyoooo ஒரே காமெடியா இருக்கு உங்களோடு ??? எதாவது அரசாங்கம் செமினார் வைத்திருக்கும் அதில்( பொய்) சாரி போயி பேசவும்.
Rate this:
Share this comment
Cancel
Sithu Muruganandam - chennai,இந்தியா
30-ஜூன்-201503:02:55 IST Report Abuse
Sithu Muruganandam உலகத்தை மின்காந்த அலைகளுக்குப்பின், மின்காந்த அலைகளுக்குமுன் என்று பிரிக்க வேண்டும்.மின்காந்த அலைகளுக்கு முன் உலகம் இருண்டிருந்தது. இடங்கள் வெகுதொலைவில் இருந்தன. ஆனால் அதற்குப்பின்பு? செல்போன் வைத்திருந்தால் அந்த நண்பரோ, உறவினரோ நியூயார்க்கில் இருந்தாலும், நியூசிலாந்தில் இருந்தாலும் நமது பக்கத்தில் இருப்பது போல் ஆகிவிட்டது. தொலைவு சுருங்கிவிட்டது. அதே போல் நியூட்ரினோ தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டால், நியூட்ரினோவுக்கு முன், நியூட்ரினோவுக்குப்பின் என்று உலகம் மாறிவிடும். அவ்வளவு அற்புத மாற்றங்களைப் படைக்கவல்லது இது. ஆகவேதான் முன்னேறிய நாடுகள் இதற்கு நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போடுகின்றன.
Rate this:
Share this comment
Cancel
குஞ்சுமணி - chennai,சீனா
29-ஜூன்-201519:20:22 IST Report Abuse
குஞ்சுமணி இதை கண்டுபிடித்து என்ன பண்ண போகிரிர்கள் , சோறு தண்ணிக்கு வழி இல்லை நியூட்ரினோ மையமாம் . வேறு எங்காவது பண்ணவது தானே... ஏன் தமிழ்நாட்டில் தான் பண்ணவேண்டுமா ?அய்யா அப்துல் கலாம் , இருபது வருடமாக கட்டிய அணுஉலையை மூன்று மணிநேரம் சோதனை செய்து பாதுகாப்பாக உள்ளது என்று நீங்கள் சொன்னபோதே உங்கள் மேல் உள்ள நம்பிக்கை போய்விட்டது அய்யா , நீங்களும் விலை போக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபட்டிர்களோ என்று சந்தேகம் . இதனால் பொது மக்களுக்கு என்ன பிரயோஜனம் என்று சொல்லவில்லையே ? அறிவியல் ஆராய்ச்சி என்ற பேரில் மக்களையும் இயற்கையையும் கொள்ளாதீர்கள் ,
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
29-ஜூன்-201509:59:43 IST Report Abuse
pattikkaattaan நீங்க சொன்னா எல்லாம் ஒத்துக்கிட மாட்டோம்.... வைகோ அண்ணன் சொன்னால்தான் ஒத்துக்குவோம்....
Rate this:
Share this comment
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
29-ஜூன்-201506:59:29 IST Report Abuse
chakra விஞ்ஞானிகளை தவிர மற்றவர்களுக்கு இதனால் என்ன பயன் எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போகிறார் என்ற கதைதான்
Rate this:
Share this comment
ஈரோடுசிவா - erode ,இந்தியா
29-ஜூன்-201514:51:08 IST Report Abuse
 ஈரோடுசிவா''நோ '' ''பல் '' பரிசு பெற்ற உலகமகா விஞ்ஞானி அண்ணன் வைகோ சொல்லி விட்டார் .....நியூட்ரினோ எல்லாம் பம்மாத்து வேலை என்று ....நீங்க சொன்னா நாங்க எப்படி நம்ம்புவது ....??...
Rate this:
Share this comment
Cancel
Sithu Muruganandam - chennai,இந்தியா
29-ஜூன்-201504:36:34 IST Report Abuse
Sithu Muruganandam ஜெனிவாவில் உள்ள "லார்ஜ் ஹாட்ரான் கொளைடர்" எனப்படும் அணுத்துகள் முடுக்கிக்குச் சென்று வந்தவன் என்ற முறையில் சொல்கிறேன் அங்கு நடைபெறும் சோதனைகள் நமது கற்பனைக்கும் எட்டாதவை. புரோட்டான்கள் மோதுகிறபோது ஒரு நொடியில் ( நிமிடம் அல்ல ) நூறு கோடியில் ஒரு பங்கு நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை டெடெக்டர்கள் மூலம் கண்டறிகிறார்கள். கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் அணுத்துகள்கள் செலுத்தப்படுகின்றன. நாம் பயன்படுத்துகிற டபிள்யூ டபிள்யூ டபிள்யூ என்கிற வலைத்தளம் 'டிம் பெர்ணஸ் லீ' என்பவரால் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுத்தான் உலகம்பூராவும் பரவியது. மருத்துவத்துறையில் ஏராளம். இன்னும் எத்தனை எத்தனையோ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை