சாதிக்கும் பெண்மை! மயானத்தில் பணிபுரிந்து அசத்தும் பெண்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாதிக்கும் பெண்மை! மயானத்தில் பணிபுரிந்து அசத்தும் பெண்கள்

Added : ஜூலை 04, 2015 | கருத்துகள் (8)
Advertisement
சாதிக்கும் பெண்மை! மயானத்தில் பணிபுரிந்து அசத்தும் பெண்கள்

கீழ்ப்பாக்கம்: ஆண்களுக்கு நிகராக, பெண்களால் எல்லா வேலைகளையும் செய்ய முடியும் என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு, மயானத்தில் பணிபுரியும், எஸ்தர் சாந்தி, பிரவீணா.
இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனத்தில் பணிபுரிந்த அவர்கள், கீழ்ப்பாக்கம், நியூ ஆவடி சாலையில் உள்ள, வேலங்காடு மாநகராட்சி மயானத்தை பராமரிப்பதற்காக, கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்டனர்.


எதிர்ப்பு இல்லை:

ஏற்கனவே, இந்திய சமுதாய நலவாழ்வு தொண்டு நிறுவனத்தில், பலதரப்பட்டவர்களோடு இருவரும் பணிபுரிந்திருப்பதால், இறந்தவர்களின் உறவினர்களை அன்பாகவும், ஆறுதலாகவும் நடத்துகின்றனர்.
மயானத்தில் மேற்பார்வையாளராக பணிபுரியும் எஸ்தர் சாந்தி கூறுகையில், ''மயானத்தில் பணிபுரிய போவதாகச் சொன்னதும், வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆரம்பத்தில், சிறிது அச்சம் இருந்தது. பின்னாளில், உடல்கள் தகனம் செய்யும் இடத்திற்கு சென்று, அங்குள்ள பணியை கவனித்தோம். இப்போது, அனைத்து வேலைகளையும் கற்றுக் கொண்டோம்,'' என்றார்.

மயானத்தில் கழிப்பறை இருந்தும், உடல்களை தகனம் செய்ய வருவோர், ஆங்காங்கே இயற்கை உபாதைகளை கழித்தனர். அதைத் தடுக்க, 'கழிப்பறையை பயன்படுத்துவோருக்கு பரிசு' என்ற அறிவிப்பு பலகையை, பிரவீணாவும், எஸ்தரும் மயானத்தில் வைத்தனர். அதன்பின், அனைவரும் கழிப்பறையை பயன்படுத்துகின்றனர்.


உடன் நிற்போம்:

பிரவீணா கூறுகையில், ''ஆதரவற்றோர் உடல்களுக்கு, நாங்களே மாலை வாங்கி போட்டு, கடைசி வரை உடன் நிற்போம். ஒவ்வொரு மாதமும், அனாதையாக கொண்டு வரப்படும் இரு உடல்களுக்கு, எங்களால் முடிந்த பணத்தை செலவு செய்து, ஈமச் சடங்குகளை முடித்து வைப்போம்,'' என்கிறார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, மயானத்தை நடத்தி வரும், இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவன இயக்குனர் ஹரிஹரனிடம் பேசும்போது, ''மயானம் என்றாலே, பெண்கள் பணிபுரிய தயங்குவர். அதை மாற்றி, பெண்களும் பணிபுரியும் சூழலை உருவாக்கி வருகிறோம். தற்போது,
ஓட்டேரியில் உள்ள மயான பூமியையும், எங்கள் நிறுவனமே பராமரிக்க ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளோம்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sp kumar - Chennai,இந்தியா
04-ஜூலை-201520:40:36 IST Report Abuse
sp kumar வீட்டில் சமைக்கும் பெண்களை கலயாணத்தில் சமைக்க சொல்லுங்கள் பார்க்கலாம் . அண்டா அண்டாவா . திணறிப் போவார்கள் . எங்கோ இங்கும் அங்குமாக சிலர் செய்யலாம் . எல்லோருக்கும் எல்லாமும் ஒத்துவராது .அடுப்படியில் இருந்தே டி பி வந்த பெண்கள் நெறைய உண்டு . வீக்கர் செக்ஸ் ( உடல் ரீதியாக பலவீனமானவர்கள் ) . அதனால் தான் செய்தியாக வெளியிடுகிறீர்கள் .ஒரு நாதஸ்வர , வீணை, புல்லாங்குழல் , ஆட்டோ ஓட்டுனர் , விமாநி , மேசானிக் என்று பெயருக்கு ஒருவர் இருந்தால் அது சிறப்பா ?
Rate this:
Share this comment
Cancel
karthik - salem  ( Posted via: Dinamalar Windows App )
04-ஜூலை-201517:45:22 IST Report Abuse
karthik வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
manitha neyan - abudhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஜூலை-201516:39:45 IST Report Abuse
manitha neyan வணங்குகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
04-ஜூலை-201516:10:02 IST Report Abuse
இந்தியன் kumar ஆண்களுக்கு நாங்கள் சற்றும் இளைத்தவர்கள் அல்ல என் நிருபித்த உங்களுக்கு வாழ்த்துக்கள். பணி சிறக்க வாழ்த்துகிரின்
Rate this:
Share this comment
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
04-ஜூலை-201514:02:46 IST Report Abuse
Rangiem N Annamalai நீங்கள் இருப்பது ,செய்வது சிவன் கோவிலில் சேவை .நீங்கள் செய்வது மனித சேவை அல்ல மகேசன் சேவை .நலமாக இருங்கள் .
Rate this:
Share this comment
Cancel
Muruganantham Nagusamy - Dindigul,இந்தியா
04-ஜூலை-201512:50:57 IST Report Abuse
Muruganantham Nagusamy உங்கள் பணி மிகவும் உயர்ந்தது. வாழ்த்துக்கள் சகோதரிகளே .
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
04-ஜூலை-201510:29:11 IST Report Abuse
P. SIV GOWRI உங்கள் பணி மிகவும் உயர்ந்தது. வாழ்த்துக்கள் சகோதரிகளே .
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
04-ஜூலை-201508:55:04 IST Report Abuse
K.Sugavanam போற்றுதற்குரிய பணி..கோவையிலும் இந்த சமுதாயப்பணி பெண்களால் செய்யப்படுகிறது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை