மக்கள் தொகை... சிக்கல் தொகை!| Dinamalar

மக்கள் தொகை... சிக்கல் தொகை!

Updated : ஜூலை 06, 2015 | Added : ஜூலை 06, 2015 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement

சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் பாரதி பாடும்போது “முப்பதுகோடி முகமுடையாள்” என பாரதத்தாயை போற்றி பாடினார். இப்போதோ அந்த முகங்கள் 120 கோடியை நோக்கி அதிகரித்த வண்ணம் உள்ளன. உலக மக்கள் தொகையோ 710 கோடியை தாண்டி விட்டதாம். உலக நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ள இந்தியா, உலக மக்கள் தொகையில் 18 சதவீதத்தைக் கொண்டுள்ளது. அப்படியென்றால், உலக மக்கள் தொகையில் ஆறு பேரில் ஒருவர் இந்தியர்தான். இந்தியாவின் மக்கள் தொகை 2018ல், 145 கோடியாக அதிகரித்து, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் என, ஐ.நா., சபை தெரிவித்து உள்ளது. மக்கள் தொகைப் பெருக்கத்தின் அபாயத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று விரும்பிய, ஐக்கிய நாடுகள் சபை, ஜூலை 11ம் தேதியை, உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது.

காரணங்களும் விளைவுகளும்...

மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சியினால் மனித இறப்பு விகிதம் குறைந்ததும், பிறப்பு விகிதத்தில் கட்டுப்பாடு இல்லாததுமே இந்த அபரிமிதமான மக்கள் பெருக்கத்திற்கு காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. வறுமை, வேலையின்மை, அடிப்படைச் சுகாதார வசதியின்மை, சுற்றுச்சூழல் சீர்கேடு, தண்ணீர்ப் பஞ்சம் போன்றவை மக்கள் தொகைப் பெருக்கத்தினால் விளைந்தவையே. அதுபோக இப்போது "உலக வெப்பமயமாதல்" என்ற அச்சுறுத்தல் நமக்கு முன் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. உலகம் அதிவிரைவாக வெப்பமடைந்து வருவதால் பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் உயர்வதாக சொல்லப்படுகிறது. இந்நிலை தொடர்ந்தால் பூமிக்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது.
மேலும், தண்ணீர் தட்டுப்பாட்டினால் விளையப்போகும் துயரத்தை இங்கே குறிப்பிட்டு சொல்லவேண்டும். அனைத்து உயிரினங்களின் வாழ்வாதாரத்துக்கும் அடிப்படையானது தண்ணீர். இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு தண்ணீர் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க காடுகள் சுருங்கி, நீர் ஆதாரம் வெகுவாகக் குறைந்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்துக்கு சென்று விட்டது. முறையற்று இயங்கும் தொழிற் சாலைகளால் ஓசோன் படலத்தில் துவாரம் விழுந்து, காற்றின் ஈரப்பதம் குறைந்து மழையளவும் குறைந்துவிட்டது. மழைக்குக் காரணமாகும் மரங்களின் அடர்த்தி குறைந்துவிட்டது.
ஒரு நாட்டில் எவ்வளவுதான் பொருளாதார வளம் இருந்தாலும், நாட்டின் மக்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தத் தவறினால், முன்னேற்றம் காண முடியாது. அளவோடு பெற்றால்தான், வளமோடு வாழ முடியும். மக்கள் செல்வம் என்பது ஒரு மகத்தான செல்வம்தான். ஆனால் அந்த மக்களை கல்வி அறிவற்ற சக்தியற்றதொரு கூட்டமாக ஆக்குவோமேயானால் அதுவே நமக்கு பேராபத்தாக முடிந்துவிடும். எனவே உலக மக்கள் தொகை தினமான வரும் ஜூலை 11ஆம் தேதியன்று, அளவோடு பெற்று பாரதத்தை அழிவிலிருந்து காக்க நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்!

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்
மக்கள் தொகை பெருக்கத்தால் காடுகள் பெருமளவு அழிக்கப்படுவதற்கு மரங்கள் நடுவதே சரியான தீர்வாக இருக்கும். ஈஷா அறக்கட்டளை, பசுமைக் கரங்கள் திட்டம் மூலம், தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயல்களை மேற்கொண்டு வருகின்றன.
தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ள பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர்கள், எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் பிரத்யேகமாக தயார் செய்து வழங்குகிறார்கள். புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.5) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் குறைந்த விலையில் பல அரிய வகை மரக்கன்றுகளைப் பெறுவதற்கு 94425 90062 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan. - singapore,சிங்கப்பூர்
06-ஜூலை-201519:35:20 IST Report Abuse
Rajan. இந்திய அழிவை நோக்கி செல்கிறது என்று எல்லாருக்கும் தெரியும் , ஆனால் பொறுப்பு அற்ற அரசியல் வாதி ( அவர்களே 10 ,11 பெறும் அறிவிலிகள் ) இருக்கும் போது எப்படி ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X