உலோக சிவன் சிலை பரமக்குடியில் மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உலோக சிவன் சிலை பரமக்குடியில் மீட்பு

Updated : ஜூலை 20, 2015 | Added : ஜூலை 20, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
உலோக சிவன் சிலை பரமக்குடியில் மீட்பு

பரமக்குடி:பரமக்குடி முருகன் கோயில் வாசலில் கிடந்த சாக்குமூடைக்குள் உலோகத்தால் செய்யப்பட்ட 'சிவன்' சிலை மீட்கப்பட்டது.
பரமக்குடி ஐந்து முனை ரோடு அருகில் முருகன் கோயில் உள்ளது. நேற்று காலை பூஜாரி கோயிலை திறக்க வந்தபோது வாசலில் ஒரு சாக்கு மூடை கிடந்தது. இதை திறந்து பார்த்தபோது சுவாமி சிலை ஒன்று இருந்தது. தகவலறிந்து வந்த டவுன் இன்ஸ்பெக்டர் துரை, தாசில்தார் காளிமுத்தன் சிலையை கைப்பற்றி தாலுகா அலுவலகத்தில் வைத்தனர்.
அந்த சிலை ஒன்றரை அடி உயரத்தில் 4 கைகளுடன் சுமார் 5 கிலோ எடையுடன் உள்ளது. ஒரு கையில் மான், உடுக்கை ஏந்திய நிலை காணப்படுகிறது. இது 'சிவன்' வடிவான 'சோம ஸ்கந்தர்' என தெரிகிறது. மேலும் பீடத்தின் அருகில் இருந்த ஒரு சிலை வெட்டி எடுக்கப்பட்ட தடம் உள்ளது. இத்துடன் நடுவில் கந்தன் சிலை இருந்ததற்கான ஒரு சிறு துளை உள்ளது.
இதேபோல் வீட்டில் பூஜை செய்ய பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான மணி ஒன்றும் இருந்தது. அதில் 'சுமதி' என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.தாசில்தார் காளிமுத்தன் கூறியதாவது: இச்சிலை குறித்து சப்--கலெக்டர் சமீரன், கலெக்டர் நந்தகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 'தினமலர்' நாளிதழில் சுமார் 4 அடி உயரமுள்ள பெருமாள் கல் சிலை மீட்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தது. இந்த இரு சிலைகளும் இந்து சமய அறநிலையத்துறை அல்லது தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்படும், என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை