Total prohibition if Dmk comes to power: karunanidhi | தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு: கருணாநிதி அதிரடி அறிவிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு: கருணாநிதி அதிரடி அறிவிப்பு

Updated : ஜூலை 22, 2015 | Added : ஜூலை 20, 2015 | கருத்துகள் (294)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு: கருணாநிதி அதிரடி அறிவிப்பு

'தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில், மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று அதிரடியாக அறிவித்தார்.

'தமிழகத்தில், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என, காங்கிரஸ், பா.ஜ., - ம.தி.மு.க., - பா.ம.க., மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முதல்வர் ஜெயலலிதாவை வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், கோவை மாவட்டத்தில், பள்ளி மாணவி ஒருவர், மது அருந்தி விட்டு, நடு ரோட்டில் ரகளை செய்த விவகாரம், தமிழக மக்களிடம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில், மூன்று வயது சிறுவனுக்கு இளைஞர் ஒருவர் பால் கொடுப்பது போல, மதுவை ஊற்றி கொடுத்த சம்பவமும் பொதுமக்கள் மனதை பதை பதைக்க வைத்தது.இந்நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின், சென்னை கோபாலபுரம் இல்லத்தில், நேற்று மாலை கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதையடுத்து, கருணாநிதி நேற்று இரவு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு:
தமிழகத்தில், தற்போது மதுவிலக்கு அமலில் இல்லாததால், ஏழை, எளிய விவசாய பெருங்குடி மக்கள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள், மனம் போன போக்கில் மது அருந்தி, நுாற்றுக்கணக்கில் உயிர்ப்பலி ஆகின்றனர்.இந்த கொடுமைக்கும், கொடூர பழக்கத்திற்கும் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும், பச்சிளம் குழந்தைகளும் பலியாகின்றனர் என்ற செய்திகளும் தொடர்ந்து வருகின்றன.அதனால், மீண்டும் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தினால், என்ன என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. எனவே, தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில், மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (294)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thiagu thiagu - Madurai,இந்தியா
27-ஜூலை-201510:03:06 IST Report Abuse
thiagu thiagu புகை பழக்கம் மது பழக்கம் உள்ளவர்கள் என் கட்சிக்கு தேவையில்லை என்று சொல்வாய பெருசு அண்ணே சிறுசு அண்ணே .
Rate this:
Share this comment
Cancel
makesh - kumbakonam ,இந்தியா
23-ஜூலை-201510:46:24 IST Report Abuse
makesh இந்த நாடும் நாட்டு மக்களும் இனிமேலாவது நல்லா இருக்கனும் வளர்ந்து வரும் சமுதாயம் குடிக்க கூடாதுன்னு முடிவு பண்ணி 2016ல் ஆட்சிக்கு வரும் போது மது விலக்கு கொண்டு வருவோமின்னு சொன்னா... ஒருத்தன் இது சாத்தியாமாங்கிறான்..... ஒருத்தன் கள்ள சாராயம் பெருகிடுங்கிறான்... ஒருத்தன் இதுக்கு முன்னாடி ஏன் செய்யலங்கிறான்.. ஒருத்தன் கட்சிகாரன் வச்சிருக்கிற பேக்டரிய முடிட்டு சொல்லுங்கிறான்... ஒருத்தன் இதுக்கு முன்னாடி செய்ததுக்கு பாவ மன்னிப்புங்கிறான்.. ஒருத்தன் தேர்தல மனசுல வச்சி ஆட்சிய புடிக்கங்கிறான்... இன்னும் கண்ட கண்ட கழுத எல்லாம் முட்டு சந்துல நின்னு கனைக்குது... இப்போ நீங்க எல்லாம் சேர்ந்து என்னா சொல்லவரிங்க... மதுவிலக்கு வேண்டாம் இப்போ இருக்குற 6500 கடைங்க பத்தாது இன்னும் ஒரு 5000 கடை திறக்கனுமின்னு சொல்லுறிங்களா.. இல்லை இந்த மக்கள் எப்படி போனா எங்களுக்கு என்னா எங்களுக்கு வேண்டியது எப்படியாவது அரசியல் பொழப்ப ஓட்டனும் அதுல மண்ண அள்ளி போடாதிங்கன்னு சொல்லுறிங்களா...அப்புறம் என்னா டேஷுக்கு இத்தனை நாளா மதுவ ஒழிக்கனுமின்னு கோஷம் போட்டிங்க.. எவன் என்னா வேணுமானாலும் சொல்லுங்க.. எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்க. கலைஞர் முடிவெடுத்துட்டார்.. இன்னுமே அதை மாற்ற முடியாது.. ஒரு தடவை முடிவெடுத்து அறிவிச்சிட்டா அதை திரும்ப பெறவும் மாட்டார் அதுக்கு ஏராளமான உதாரணம் இருக்கு.... எங்காவது முட்டு சந்து இருந்தா ஓரமா போயி வேற வேலை இருந்தா பாருங்க
Rate this:
Share this comment
rajangam ganesan - lalgudi,இந்தியா
27-ஜூலை-201518:49:32 IST Report Abuse
rajangam ganesanகலைஞர் முடிவெடுத்து , புண்ணியம் இல்லே . ஜெயச்சு, முதல்வர் ஆன பிறகுதான் முடிவு எடுக்கணும்...
Rate this:
Share this comment
Cancel
Prakash JP - Chennai,இந்தியா
21-ஜூலை-201520:55:20 IST Report Abuse
Prakash JP TASMAC - டாஸ்மாக்கை யார் துவக்கியது?? டாஸ்மாக்கை சில்லறை மதுவிற்பனையாளராக மாற்றி, வீதிக்கு வீதி யார் திறந்து வைத்தது??? இதெல்லாம் "மறைத்துவிட்டு", ஒரு கூட்டம் கலைஞரை விமர்சித்துகொண்டுள்ளது... 1971 மாநில நிதி நிலையை காரணம் காட்டி மத்திய அரசிடம் கலைஞர் முறையிடுகிறார். மதுவிலக்கை அமல்படுத்தினால் சிறப்பு நிதியை தருவதாக சொன்ன மத்திய அரசு கைவிரிக்கிறது. மது விலக்கை தளத்துகிறார், மாநில நிதி நிலைமை சீரானதும் மதுவிலக்கு கொண்டு வருவதாக வாக்களிக்கிறார் கலைஞர். 1973 திமுக ஆட்சி - கள்ளுக்கடைகள் மூடப்படுகின்றன. 1974ல் சாராயக்கடைகளும் மூடப்பட்டன.1975 முதல் தமிழ்நாட்டில் மதுவிலக்கை கலைஞர் அமுல்படுத்தினார். 1981 MGR அதிமுக ஆட்சி.. கள்ளுக்கடைகளும், சாராயக்கடைகளும் மீண்டும் திறக்கப்படுகிறது, தமிழ்நாடு வாணிபக் கழகம் எனப்படும் டாஸ்மாக் 1983ஆம் ஆண்டு உருவாக்கப்படுகிறது. 2003 ஜெயாவின் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மது சில்லறை விற்பனை செய்ய அதிகாரம் பெற்ற ஒரே நிறுவனமாக டாஸ்மாக் இருக்கும் என திருத்தப்பட்டது. மூலைக்கு மூலை TASMAC கடைகளை திறந்து, தனது உடன்பிறவா சகோதரி சொந்தங்களால் நடத்தப்படும் மிடாஸ் நிறுவனம் தயாரிக்கும் மதுக்களை விற்கிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X