நுகர்வோரே தட்டி கேட்க தயக்கம் ஏன்?: என் பார்வை| Dinamalar

நுகர்வோரே தட்டி கேட்க தயக்கம் ஏன்?: என் பார்வை

Added : ஜூலை 24, 2015 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 நுகர்வோரே தட்டி கேட்க தயக்கம் ஏன்?: என் பார்வை

பஸ் ஸ்டாண்ட் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைந்துள்ள கடைகளில் ஏதாவது பொருட்களை வாங்க நேரிடலாம். அந்த பொருட்களை இரண்டு அல்லது மூன்று ரூபாய் அதிகம் விலை வைத்து விற்பனை செய்வர். எம்.ஆர்.பி., விலை இவ்வளவு தானே?
ஏன் அதிக விலைக்கு விற்கிறீர்கள்? என அப்போது கேட்டு விட முடியாது.
அப்படி நீங்கள் கேட்டால் அவ்வளவு தான். அங்கே சுற்றி நிற்பவர்களும், கடைக்காரர்களும் நம்மை ஏளனமாக ஒரு பார்வை பார்ப்பர். என்ன சார் இது, எம்.ஆர்.பி.,யை விட அதிக விலை சொல்கிறீர்கள்? என நியாயமான முறையில் நீங்கள் கேட்டாலும் எல்லோரும் வாங்கிட்டு போகிறார்களே, உங்களுக்கு மட்டும் என்ன குறை? என அலட்சியமாக கேள்வி எழுப்புவர். ஏன் இந்த நிலை என எண்ணி பார்த்தோமா? எப்படி நாம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டோம் என இனி பார்க்கலாம்.சமீப காலங்களில் நுகர்வோரின் உரிமைகள் பற்றி அதிகம் பேசப்பட்டு வந்தாலும் நுகர்வோர் விழிப்புணர்வு இந்தியாவில் குறைவு எனலாம். படித்தவர்களுக்கும் கூட போதிய விழிப்புணர்வு இல்லை. மேலும் பலர் நமக்கு எதற்கு இந்த வம்பு என்ற மனப்பான்மையுடன் ஒதுங்கி விடுகின்றனர்.
சிலர் கவுரவம் கருதியும் உரிமைகளை கேட்க தயங்குவது கண்கூடாக காணலாம். இந்த நிலையினால் வாழ்வின் அத்தியாவசிய தேவையான உணவு மற்றும் மருந்து பொருட்களை வாங்கும் போது கூட நுகர்வோர் ஏமாற்றப்படுகிறார்கள் அல்லது குறைபாடுடைய சேவையை பெறுகிறார்கள்.
நுகர்வோர் சட்டம்
இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நுகர்வோர் தங்களுக்கு இழைக்கப்பட்ட எல்லா அநீதிகளையும் பொறுத்து கொள்ள வேண்டிய அவலம் இருந்தது. 1986ல் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு நாம் வாங்கிய பொருட்களில் கண்டிஷன்ஸ் அப்ளை என நிறுவனங்கள் அச்சிடுவதுடன் சரி. என்ன நிபந்தனைகள் என்பதை எந்த நிறுவனமும் சொல்வதில்லை. என்ன நிபந்தனை என்பதை அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் சென்று படித்து தான் பார்க்க வேண்டும். சரி படித்து தான் பார்க்கலாமே என இணையதளத்திற்கு நாம் சென்று பார்த்தால் நிபந்தனை பட்டியல் பத்து, பதினைந்து பக்கங்களுக்கு அதிகமாக இருக்கும். நிபந்தனைகள் ஆங்கிலத்தில் தான் இருக்கும்.
நுகர்வோருக்கு எளிதில் புரியாத டெக்னிக்கல் வார்த்தைகளால் எழுதப்பட்டிருக்கும். இதனால் சமானிய நுகர்வோர்களால் இந்த நிபந்தனைகளை எளிதில் படித்து புரிந்து கொள்ள முடியாது. பத்து ரூபாய் தந்து வாங்கும் தின்பண்ட பாக்கெட்டில் நமக்கு என்ன பாதகம் வந்து விடப்போகிறது இதற்கு ஏன் நிபந்தனை போடுகிறார்கள் என்று நினைத்து அதன் நிபந்தனைகளை படித்தால் நமக்கு பகீர் என இருக்கும்.
அந்த தின்பண்டத்தில் கலக்கப்பட்டுள்ள சில மூலப்பொருட்களினால் நம் உடலுக்கு பாதிப்பு வரலாம் என கூறியிருப்பர். ஆனால் இதை தெரிந்து கொள்ள இந்த பொருளை வாங்குகிற விலையை விட அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். உதாரணமாக தற்போது குழந்தைகள் விரும்பி உண்ட உணவான 'நூடுல்ஸை' எடுத்து கொள்ளலாம். தற்போது சுகாதார கேடு விளைவிக்கும் மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக 'நூடுல்ஸ்' தடை செய்யப்பட்டுள்ளது.
திருத்தப்படாத தவறு நிபந்தனைகளில் குறிப்பிட்டபடி இல்லாமல் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படும் பட்சத்தில் அந்த நிறுவனத்தின் மீது உடனடியாக நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர முடியும். ஆனால் நான் வாங்கும் பத்து ரூபாய் பொருட்களுக்கு பல ஆயிரம் செலவு செய்து வழக்கு போட வேண்டுமா? என நினைத்து பலரும் சும்மா இருந்து விடுகின்றனர். இதனால் நிறுவனங்கள் செய்யும் தவறுகள் திருத்தப்படாமல் போகிறது. நுகர்வோர் தட்டி கேட்க தயங்க கூடாது. பாதிக்கப்பட்ட நுகர்வோர் குறைந்த செலவில் குறுகிய காலத்தில் தங்கள் குறைகளை நுகர்வோர் குறைதீர் மன்றத்தினை அணுகி பரிகாரம் பெறலாம். நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் முக்கிய அம்சம் புகாரை வாதாட வழக்கறிஞர் தேவையில்லை என்பது தான்.
கடந்த 2009 ல் கிருஷ்ணன் என்ற நுகர்வோருக்கு ஆதரவாக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தொலை தொடர்பு துறையின் பொது மேலாளர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
அவ்வழக்கில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சேவை குறைபாடுகளுக்கு நுகர்வோர் நீதிமன்றங்களில் பரிகாரம் பெற முடியாது என்றும் இந்திய தொலைதொடர்பு சட்டம் 1885 பிரிவு 7 பி ன் கீழ் பரிகாரம் பெற முடியும் என்றும் தீர்ப்பளித்தது.
வழக்கு தொடரலாம்
பின் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இந்திய அரசால் வழங்கப்பட்ட தொலை தொடர்பு வசதியை அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நிறுவனம் வழங்க துவங்கியது. தொலைபேசி மற்றும் இன்டர்நெட் சேவைகளில் குறைபாடு மற்றும் முறையற்ற வணிக முறைகளுக்கு எதிராக நுகர்வோர் தாக்கல் செய்யும் வழக்குகளை உச்சநீதிமன்ற தீர்ப்பினை மேற்கொள்ள காட்டி ஏற்க மறுத்து வந்தது.
இந்நிலையில் மேற்கு வங்க அரசின் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் செயலாளர், இந்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு கடிதம் எழுதி மேற்படி
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக
மறுபரிசீலனை மனுவை தாக்கல் செய்ய கேட்டு கொண்டார். அதன்படி
உச்சநீதிமன்ற தீர்ப்பானது தொலை தொடர்பு சேவையை இந்திய அரசின் தொலை தொடர்பு துறையை வழங்கிய போது எடுத்த நிலைப்பாடு என்றும், தற்போது தொலை தொடர்பு சேவையை பி.எஸ்.என்.எல்., ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் வழங்கி வருகிறது. அவையும், இந்திய அரசின் தொலை தொடர்பு துறை வழங்கிய சேவையும் ஒன்றாகுது. எனவே மேற்படி உச்சநீதிமன்ற தீர்ப்பு பொருந்தாது என்று தெரிவித்துள்ளது. எனவே தொலை தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் தொலைபேசி மற்றும் இன்டர்நெட் சேவைகளில் குறைபாடு மற்றும் முறையற்ற வணிக முறைகளுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரலாம் என 2014 ஜன., 24ல் மத்திய நுகர்வோர் துறை சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.நுகர்வோர்கள் இனி தொலை தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் தொலைபேசி மற்றும் இன்டர்நெட் சேவைகளில் குறைபாடு மற்றும் முறையற்ற வணிக முறைகளுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்து பரிகாரம் தேடலாம்.நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் புகார் செய்ச்வதினால் நாமும் இழந்த நஷ்டத்தை அபராதத்துடன் பெற முடியும். இதுபோல் மற்ற நுகர்வோருக்கு நஷ்டம் நேரிடுவதை தவிர்க்கலாம். அனைவருக்கும் தரமான பொருள், சேவை அனைவருக்கும் கிடைக்க வழி ஏற்படும். தயக்கமின்றி தட்டி கேட்போம். நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்போம் என உறுதிஏற்போம்.
--மு.பிறவிப்பெருமாள்,நுகர்வோர் கண்காணிப்பகம்,மதுரை. 99941 52952.

வாசகர்கள் பார்வை

கேலி கிண்டல்

என் பார்வையில் வெளியான 'அடம் பிடிக்கும் குறும்புக் குழந்தைகள்' கட்டுரை படித்தேன். குறும்புக்கார குழந்தைகளின் குறும்பிற்கான காரணங்கள் பற்றி அறிய முடிந்தது. கேலி, கிண்டல் இவற்றால் சீண்டப்பட்டுதல் போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மறுப்பதை அறிய முடிந்தது. குழந்தைகள் அவ்வப்போது பள்ளி செல்ல மறுப்பதை பெற்றோர் அனுமதிக்காமல் அவர்கள் மனதினை மாற்றி பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
- த.கிருபாகரன், நிலக்கோட்டை.

சங்க இலக்கியம்

என் பார்வையில் வெளியான 'தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை சிந்தனைகள்' கட்டுரை படித்தேன். அதில் சங்க இலக்கியம் தொடங்கி இன்றைய ஹைக்கூ கவிதைகள் வரையிலான தமிழ் இலக்கியங்களில் பொதிந்துள்ள தன்னம்பிக்கை சிந்தனைகளை பேராசிரியர் நிர்மலா மோகன் அழகாக எடுத்துக் கூறியிருந்தார். - லி.ஜன்னத், மதுரை.

இலக்கிய ஆராய்ச்சி

என் பார்வையில் வெளியான 'தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை சிந்தனைகள்' கட்டுரை படித்தேன். தொல்காப்பிய காலம் முதல், இக்காலம் வரை இலக்கியங்களில் தன்னம்பிக்கை சிந்தனைகள் அதிகம் இருக்கிறதை சுட்டிகாட்டியுள்ளார் கட்டுரையாளர். இலக்கியங்கைள எல்லாம் ஆராய்ந்து அற்புதமான கட்டுரையை தொகுத்து வழங்கிய என் பார்வைக்கும், கட்டுரையாளருக்கும் வாழ்த்துக்கள்.- கே.செண்பகவல்லி, காரைக்குடி.

குடும்பச் செலவு

என் பார்வையில் வெளியான 'பெற்றோர்கள் ஏ.டி.எம்., இயந்திரமா கட்டுரை' படித்தேன். இக்கால பிள்ளைகளின் வாழ்க்கை முறைக்கும் நாம் கடந்து வந்த பிள்ளைத் தன்மைக்கும் எத்துனை வேறுபாடு உள்ளது என்பதை புரிந்த கொண்டேன். வீட்டுச் செலவு, குடும்பச் செலவு போன்றவைகளை பிள்ளைகள் முன் பட்ஜெட் போட்டு செலவு செய்ய வேண்டும். அப்போது தான் குழந்தைகள் பொறுப்புடன் நடந்து கொள்வர்.- சவுந்திரராஜூ, வடமதுரை.

தூக்கமின்மை நோய்

என் பார்வையில் வெளியான 'தூங்காத இரவுகள் தரும் துயரம்' கட்டுரை படித்தேன். இரவில் நாம் தூங்கும் போது கண்கள் குளிர்ச்சியாகும். அதனால் மூளையில் உள்ள சுரப்பிகள் சுரந்து உடல் ஆரோக்கியம் பெறும். அதனால் இரவு தூக்கத்தை ஒருபோதும் தவிர்க்க கூடாது என்பதை தெரிந்து கொண்டேன். தூக்கமின்மையால் ஏற்படும் நோய்கள் குறித்தும் விழிப்புணர்வு கிடைத்தது.
- ரா.நாரயணன், சிவகங்கை.பொம்மைகளா குழந்தைகள்என் பார்வையில் வெளியான மாணவர்களுக்கு நம்பிக்கை தாருங்கள் கட்டுரை படித்தேன். இக்கால கல்வி முறையானது குழந்தைகளை வெறும் பொம்மையாக மாற்றிவிட்டதை நினைத்து வருந்தினேன். வாசகர்களுக்கு பல்வேறு தகவல்களை அள்ளி
வழங்கும் என் பார்வை பகுதிக்கு என் வாழ்த்துக்கள்.- சிவா, திருப்பரங்குன்றம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
indra - chennai,இந்தியா
24-ஜூலை-201518:56:55 IST Report Abuse
indra எல்லாரும் MRP விலைய மட்டும் பார்க்கிறிங்க இங்க இருக்குற யாராவது ஒருத்தர் அவங்க வீடுகிட்ட இருக்குற ஒரு சாதாரண மளிகை கடை ல வாங்குரிங்கள இல்லையே பலபல இன்னு மின்னுற கடைல தானே வாங்குறிங்க. முக்கியமான இடத்துல ஒரு கடைய வைக்க அவுங்க எவளவு இன்வெஸ்ட் பண்ணனும் அதை எல்லாம் நம்ம கிட்ட தான் கண்டிப்பா வாங்குவாங்க. முதல்ல நீங்க மாறுங்க அப்புறம் எல்லாரயும் குறை சொல்லலாம். சின்ன கடைல இந்த பொருள் எல்லாம் குடுத்தாலும் நீங்க எதோ வெளிநாட்டுல இருக்குற மாதிரி supermarket ல தான் எல்லாமே கிடைக்கும் நினைச்சா உங்க காசு அவங்க கரண்டு பில் கு தான் போகும்
Rate this:
Share this comment
Cancel
mohangee - Namakkal,இந்தியா
24-ஜூலை-201514:11:54 IST Report Abuse
mohangee ”ஃபிாிட்ஜில் வைத்துக் குளிா்விப்பதற்காக கூடுதல் விலை என்று கூறுவாா்கள். இதைவிடக் கொடுமை, நெடுஞ்சாலைப் பாதைகளில் உள்ள உணவகங்களில், தரமற்ற உணவு, சூடான பானங்கள் மற்றும் குளிா்பானங்கள் ஆகியவைகளை கற்பனைக்கு அப்பாற்பட்ட விலைகளில் விற்கிறாா்களே இதனை யாா் தட்டி கேட்பது? ”
Rate this:
Share this comment
Cancel
maasi - chennai,இந்தியா
24-ஜூலை-201514:00:45 IST Report Abuse
maasi எல்லாத்துக்கும் அரச எதிர்பாக்கக்கூடாது. பொது மக்கள் தான், அவங்க வேல வெட்டியா விடுபுட்டு, அவங்க பைக்காச போட்டு கோர்ட்டு கேசுன்னு அலஞ்சு, நம்ம நாட்ல விக்குற எல்லா பொருட்களுக்கும் ஞாயம் கேட்டு வாங்கிக்கணும். புரியுதா? கடைகள்ள MRP, DUE date எல்லாம அவங்களே அடிச்சுக்கலாம். பால் பாக்கேட்டோ இல்ல வேற ஏதாவது ஐட்டமோ, சொன்ன அளவ விட கொஞ்சம் கம்மியா இருந்தாலும் நாமளே கன்சூமர் கோர்ட்டுல வழக்கு போட்டு ஞாயத்த கேட்டு வாங்கிக்கணும். கவர்மெண்டுக்கு உருப்புடியான வேல நெறைய்ய இருக்கு. சரியா மக்கா?
Rate this:
Share this comment
mohangee - Namakkal,இந்தியா
24-ஜூலை-201519:53:06 IST Report Abuse
mohangee” முன்பெல்லாம் பொட்டலமிட்ட பொருட்களில் எம்.ஆா்.ப்பி அச்சிடப்படுவதில்லை. அதைப் போன்றே, உற்பத்தி தேதி, காலாவதி தேதி, பொட்டலத்தின் நிகர எடை ஆகியவைகளும் அச்சிடப்படுவதில்லை. இவையெல்லாம் நுகா்வோா்களுக்கு எதிரானது என்பதால், நெருக்கடி நிலைக் காலத்தில் மத்திய அரசால் கடுமையாகச் சட்டமியற்றப்பட்டு, தற்பொழுது இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்க வேண்டியது அரசுதான். மக்களை நேரடியாகப் பாதிக்கும் இதனைக் கண்காணிப்பதை விட, மக்களின் நலனுக்கான அரசுக்கு இதைவிட வேறு என்ன முக்கியப் பணிகள் இருக்கக்கூடும்? ”...
Rate this:
Share this comment
Cancel
Maddy - bangalore,இந்தியா
24-ஜூலை-201510:44:39 IST Report Abuse
Maddy உங்களின் கருத்து அருமை ஆனால் இப்படி எம்.ஆர்.பி.,யை விட அதிக விலைக்கு விற்றால் அது சட்டப்படி தவறு என்றாலும் எம்.ஆர்.பி.என்பதே இந்திய மக்களை ஏமாற்றும் ஒரு தொழில் உத்தி தான்... பொருட்களின் விற்பனை இரண்டுவகைப்படும் ஒன்று கட்டுப்படியாகும் லாபம், அதிக லாபம்... இதில் எம்.ஆர்.பி. என்பது அதிக லாபம் என்ற இடத்தில் தான் இருக்கிறது... ஒரு பொருளின் எம்.ஆர்.பி. 10 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் அதை கடைகாரர் 8 ரூபாய்க்கும் விற்கலாம் அவரின் லாபம் கட்டுபடியாகும் என்ற வகையில்... அரசு அளித்த அதிகலாப உச்சவரம்புதான் 10 ரூபாய் எனவே எம்.ஆர்.பி. யை விட அதிகமாக விற்கப்படும் கடைகளின் உரிமையை நுகர்வோர் பாதுகாப்பு கமிட்டி தான் தடை செய்யமுடியும் எனவே அவர்கள் அரசு சம்பளம் மற்றும் கிம்பளம் வாங்கிக்கொண்டு அமைதியாக இருப்பதனால் தான் எம்.ஆர்.பி. யை விட அதிகமாக கடைகாரர்கள் விற்க முற்படுகிறார்கள்... நான் பெங்களூர்-ல் வசிக்கிறேன் என்றாலும் நாடு முழுவதும் நிலவும் ஒரு உதாரணம் கடைகாரரிடம் சென்று வாழைப்பழம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் கடைகாரரிடம் ஒரு பழம் எவ்வளவு என்று கேட்டால் 6 ரூபாய் என்று சொல்லுவார். அதே கடைகாரரிடம் 2 பழம் கொடுங்கள் என்று சொல்லி 10 ரூபாய் கொடுத்தால் 2 ரூபாய் திருப்பிகொடுப்பார்... இதுதான் நாட்டின் நடப்பு... இப்படியாகவே இருக்கிறார்கள் நமது நாட்டில் உள்ள விற்பனையாளர்கள்... நான் உதாரனதிட்க்காகவே பழத்தை சொன்னேன் இதர பொருள்களுக்கும் அதே நடைமுறைதான்....
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
24-ஜூலை-201510:06:06 IST Report Abuse
Natarajan Ramanathan திருத்தணி மலைமேல் உள்ள அனைத்து கடைகளிலுமே குளிர் பானங்கள் MRP விலையை விட 20 ரூபாய் வரை அதிகம் வைத்து விற்கிறார்கள். பெரும்பாலான கடைகாரர்கள் ரௌடிகளாகவும் இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
gmohan - chennai,இந்தியா
24-ஜூலை-201508:59:58 IST Report Abuse
gmohan நுகர்வோர் அமைப்புகள் கவனத்திற்கு : தினமலர் செய்தி MRP விலையை பார்த்து அதை மட்டுமே கடைக்காரர்களுக்கு தரவேண்டும் என்று நுகர்வோரை வற்புறுத்துகிறது. சரி. ஆனால் ஒரு பொருளுக்கு MRP விலை ( maximum retail price - அதிகபட்ச விற்பனை விலை, வரிகள் சேர்த்து ) இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று யார் அதிகாரபூர்வமாக நிர்ணயிப்பது? ஒரு உதாரணம் : கடலை உருண்டை பாக்கெட். 10 (சிறிய) உருண்டைகள் கொண்ட ஒரு பாக்கெட் தயாரிப்பு செலவு, ரூ.8/- என்று வைத்துக்கொள்வோம். இந்த பாக்கெட் கடைகளில், குறிப்பாக சூப்பர் மார்க்கெட் மற்றும் department கடைகளில் ரூ.38/- வரை MRP விலை ஸ்டிக்கர் இட்டு விற்கப்படுகிறது. இப்படி தான்தோன்றிதனமாக MRP விலை வைப்பதை யார் கண்காணிக்கிறார்கள் ? இந்த MRP முறையில், இந்த விலை வித்தியாசத்திற்கு காரணம் இடைத்தரகர்கள் மற்றும் பெரிய கடைகள். MRP சட்டம் இருந்துமே கூட, இதைபோன்ற கண்காணிப்பற்ற வியாபார முறைகளால், தயாரிப்பவர்களுக்கும் நுகர்வோருக்கும் நஷ்டம் மட்டுமே ஏற்படும். இதில் கொள்ளை லாபம் அடித்து கொழுப்பது இடைத்தரகர்களும் சூப்பர் மார்க்கெட் கடைகளும் தான். MRP விலை நிர்ணயம் செய்வது யார் கையில் இருக்கிறது? இந்தியாவில் தினம் தினம் விலைவாசி உயர்வுக்கு காரணம் இந்த கண்காணிப்பற்ற முறை தான் என்று நினைக்கிறேன். கடலை உருண்டை ஒரு பாக்கெட்டில் இத்தனை கொள்ளை லாபம் அடிக்கமுடியும் என்றால், நாம் தினம் தினம் எத்தனை பொருள்கள் வாங்குகிறோம், எத்தனை முறை ஏமாற்றப்படுகிறோம் என்று யோசித்து பாருங்கள்..( மருந்துகள் மற்றுள் மருத்துவ பரிசோதனைகள் விலைகள், ரயில் கட்டணம், பஸ் கட்டணம், காய்கறி விலைகள் என்று எல்லா விதத்திலும் பொது மக்களாகிய நாம் தினம் தினம் ஏமாற்றப்படுகிறோம். MRP என்பதே ஒரு மோசடி ஏன் என்றால், எந்த ஒரு பொருளுக்கும் அதிகபட்ச விலை வைத்துக்கொள்ள உரிமை அளித்து விட்டு, அந்த MRP -க்கு ஒரு upper ceiling வைக்காததே இதைப்போல கொள்ளைகளுக்கு காரணம். தரம் மற்றொரு விஷயம், அதைப்பற்றி யாருமே இந்தியாவில் கவலைப்படுவதில்லை. உலகில் நேர்மையற்றவர்கள் நிறைந்த நாடு நம் பாரத நாடு என்று சொன்னால் அது மிகையாகாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை