மத்திய, மாநில அரசுகளின் தொடர்அலட்சியம்:செஞ்சிக்கோட்டை பாதுகாக்கப்படுமா?| Dinamalar

தமிழ்நாடு

மத்திய, மாநில அரசுகளின் தொடர்அலட்சியம்:செஞ்சிக்கோட்டை பாதுகாக்கப்படுமா?

Added : ஜூலை 29, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

செஞ்சி;வரலாற்ற புகழ் மிக்க செஞ்சி கோட்டை மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தினால் மண்மேடாகி வருகிறது.தென்இந்தியாவில் மன்னர் ஆட்சி காலகோட்டைகளில் முழு அமைப்பும், பாதுகாப்பு அம்சங்களும் உள்ள ஒரே கோட்டையாக செஞ்சி கோட்டை உள்ளது. இந்திய மன்னர்களின் வலிமை, அறிவுத்திறனை உலகுக்கு பறைசாற்றும் அறிய பொக்கிஷமாக செஞ்சி கோட்டை உள்ளது.கடந்த 13ம் நூற்றாண்டில் செஞ்சியை ஆட்சி செய்த கோணார் வம்சத்தினர் முதன் முதலில் செஞ்சி கோட்டையை கட்டினர். இவர்களிடம் இருந்து 14ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் செஞ்சி கோட்டையை கைப்பற்றினர். 15ம் நூற்றாண்டில் செஞ்சி கோட்டை நாயக்கமன்னர்களின் வசமானது.விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் ஆட்சியின் போது செஞ்சி கோட்டையை வலிமை மிக்க கோட்டையாக மாற்றினர். எதிரிகள் உள்ளே வர முடியாத வலிமையான கோட்டையாக மாறியதால் இதை கைப்பற்றுவதில் சாம்ராஜ்யங்களுக்கு இடையே பெரும் போர்கள் நடந்துள்ளன. 16ம் நூற்றாண்டின் மத்தியில் முகமதியர்கள் செஞ்சியை கைப்பற்றினர்.இதே நூற்றாண்டில் மாவீரன் சிவாஜி, முகமதியர்களிடம் இருந்து செஞ்சியை கைப்பற்றினர். 17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் செஞ்சி கோட்டை மீண்டும் முகமதியர்கள் வசம் சென்றது. 17ம் நூற்றாண்டின் மத்தியில் பிரஞ்சுக்காரர்கள், செஞ்சியை கைப்பற்றினர். இவர்களிடம் இருந்து 1761ல் ஆங்கிலேயர்கள் செஞ்சிக்கோட்டையை கைப்பற்றினர். 1780ம் ஆண்டு ஐதர் அலி செஞ்சி மீது படையெடுத்தார். ஆனாலும் இந்த முயற்சியை ஆங்கிலேயர்கள் முறியடித்தனர்.அடுத்து வந்த ஆட்சி மாற்றங்களில் இந்தியாவின் பெரும்பகுதி ஆங்கிலேயர் வசமானது. ஆங்லேயர் சென்னையை தலைமையிடமாக்கினர். செஞ்சி முக்கியத்துவத்தை இழந்தது.முகமதியர்கள் வசம் செஞ்சி கோட்டை இருந்த போது அவரிகளிடம் இருந்த விடுதலை வேண்டும் என சுயராஜ்யமாக அறிவித்து, ஆற்காட்டு நவாப்பின் பெரும்படையை நெஞ்சுரத்தோடு எதிர் கொண்டு வீர மரணம் அடைந்தார் ராஜா தேசிங்கு. இவர், குறுகிய காலம் ஆட்சி செய்தாலும் செஞ்சியின் வரலாற்றில் நீங்க இடம் பிடித்தார்.தற்போதுள்ள செஞ்சி கோட்டை பெரும் போர்களை சந்தித்த பின்னர் எஞ்சி இருப்பது. மூன்று மலைகளை 12 கி.மீ., தூரத்திற்கான மதில் சுவர்களால் இணைத்து கட்டியுள்ளனர். பாதுகாப்பு அம்சம் மட்டுமின்றி தமிழகத்தின் கலை, கலாச்சாரத்தை விளக்கும் வகையில் கலை நயத்துடன் கோட்டையை கட்டி உள்ளனர்.கோட்டையில் வியக்க வைக்கும் மிகப்பெரிய கல்யாண மகால், கலை நயம் மிக்க சிற்பங்களுடனான கோவில்கள், இடிந்து தரை மட்டமான பிறகும் தனது கம்பீரத்தை உணர்த்தும் வகையில் தர்பார். பாறைகள் நிறைந்த மலையின் உச்சியில் தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்திய அறிவுத்திறன், இயற்கையை ஒட்டி வாழ்ந்து வந்த வாழ்க்கை முறை நமக்கு பாடம் சொல்லித்தரும் பள்ளிக்கூடமாக செஞ்சி கோட்டை உள்ளது. வரலாற்ற பொக்கிஷமான இந்த கோட்டை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல் விட்டதால் செடி, கொடிகள் முளைத்து, இடிந்து விழுந்து மண்மேடாகி வருகிறது.மத்திய அரசு இந்திய தொல்லியல் துறை மூலம் செஞ்சி கோட்டைக்கு என மிக குறைந்த அளவிலேயே நிதியை ஒதுக்குகிறது. 700 ஆண்டுகள் பழமையை தொட்டு விட்ட செஞ்சி கோட்டைக்கு இந்த நிதி போதுமானதாக இல்லை. மதில் சுவர்கள் இடிந்து விழுந்து வருகின்றன. கட்டடங்கள் பல வீணகாகி விட்டன.கோட்டைக்கு அழகு சேர்த்து வந்த அகழிகள் தூர்ந்து போய் செடி, கொடிகள் முளைத்து புதராகி விட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பூங்காக்களையும் சரி வர பராமரிக்காமல் பொலிவிழந்து விட்டன. கூடுதல் இடங்களில் பூங்காக்கள் அமைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விட்டனர்.மாநில அரசும் சுற்றுலாவை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் எந்த வளர்ச்சியும் இல்லாத "சவலை பிள்ளையாக' செஞ்சி கோட்டை காட்சி தருகிறது. சமீப காலமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் கிடைக்கும் அந்நிய செலவாணியை கருத்தில் கொண்டும், வரலாற்று பொக்கிஷத்தை அழிவில் இருந்து பாதுகாக்கவும், செஞ்சி கோட்டையின் மீது மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X