விற்று தீர்ந்தன அப்துல் கலாம் நூல்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விற்று தீர்ந்தன அப்துல் கலாம் நூல்கள்

Added : ஜூலை 30, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

அப்துல் கலாமின், 'விங்ஸ் ஆப் பயர்,
இக்னைடடு மைண்ட்ஸ், இந்தியா - 2020, டார்கெட் 3 பில்லியன், டர்னிங் பாயின்ட்ஸ், இன்டாமிடபிள் ஸ்பிரிட், கைடிங் சோல்ஸ், மை ஜர்னி: டிரான்ஸ்பார்மிங் டிரீம்ஸ் இன்ட்டூ ஆக் ஷன்ஸ்' உள்ளிட்ட பல புத்தகங்கள் உள்ளன. அவற்றில், விங்ஸ் ஆப் பயர், அக்னி சிறகுகள், இந்தியா - 2020 ஆகிய நுால்களை தேடி பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் அதிக அளவில் வருகின்றனர். மற்ற நாட்களை ஒப்பிடும் போது, தற்போது இந்த வருகை, 50 சதவீதம் அதிகம்.

பத்மநாபன், விற்பனை பிரதிநிதி, ஹிக்கின்பாதம்ஸ், அண்ணா சாலை

சென்னை:மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பற்றி, குழந்தைகள் அதிகம்
கேள்வி கேட்பதால், குழந்தைகளுக்குபரிசளிக்க, அப்துல் கலாமின்புத்தகங்களை தேடி, புத்தக கடைகளுக்கு பெற்றோர் படையெடுத்த வண்ணம் உள்ளனர். கடைகளில், கலாமின் நுால்கள் விற்றுத் தீர்ந்து விட்டன. இதுகுறித்து, சில புத்தக விற்பனையகங்களை தொடர்பு கொண்டபோது,
அவர்கள் தெரிவித்ததாவது:

அப்துல் கலாம், ஜனாதிபதியாகஇருந்த போதும், அவரின் புத்தகங்கள்வெளிவரும் காலங்களிலும், விற்பனைஅதிகமாக இருக்கும். மற்ற நாட்களில்ஓரளவு தான் இருக்கும். தற்போது, அவற்றை எல்லாம் விட, அதிக அளவில் விற்பனையாகின்றன. அதிலும், அக்னி சிறகுகள் - மாணவர் பதிப்பு, அதிகளவில்விற்பனையாகிறது. சக்திவேல், நிறுவனர்,
கோல்டன் புக் ஹவுஸ்,பூந்தமல்லி நெடுஞ்சாலை
பொதுவாக, எங்கள் பகுதியில் ஓரளவு தான், கலாமின் புத்தகங்கள் விற்பனை ஆகும். அதனால், 100 முதல் 200 புத்தகங்கள் தான் வாங்கி வைப்போம். நேற்று முன்தினம் மட்டுமே, அனைத்து புத்தகங்களும் தீர்ந்து விட்டன. நேற்று வந்தவர்களிடம், புத்தகங்கள் இருப்பு இல்லை என, சொல்லி விட்டேன்.ஸ்ரீதர், விற்பனையாளர்நேஷனல் புக் ஹவுஸ், அண்ணா நகர்
நேற்றும், நேற்று முன்தினமும் அப்துல் கலாமின் புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையாகி கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, மொத்தமாக அதிக எண்ணிக்கையில் வாங்கும் நிலை அதிகரித்துள்ளது. நேற்று மதியம் வரை அக்னி சிறகுகள், 'விங்ஸ் பயர்' ஆகிய புத்தகங்கள் தலா 200க்கும் மேல் விற்பனையாகி உள்ளன. ஷேக் அலாவுதீன், மேலாளர்,
லேண்ட்மார்க், கோடம்பாக்கம்பொதுவாகவே, கலாமின் புத்தகங்களை,மாணவர்களும், ஆசிரியர்களும் வாங்கி செல்வர். தற்போது, உறவுக்காரர்களுக்கும், பிள்ளைகளுக்கும் பரிசளிப்பதற்காக, எல்லா வயதினரும், வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களில், அவரை பற்றிய தாக்கம்அதிகரித்துள்ளது. கலாம் புத்தக நிலையம், சி.ஐ.டி., காலனி, மயிலாப்பூர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X