| 95 ஜோடிகளுக்கு திருமணம்| Dinamalar

95 ஜோடிகளுக்கு திருமணம்

Updated : நவ 22, 2010 | Added : நவ 21, 2010 | கருத்துகள் (1)
Advertisement

 

புட்டபர்த்தி: சாய் பாபாவின் 85வது பிறந்த நாளை ஒட்டி 95 ஜோடிகளுக்கு பிரசாந்தி நிலையத்தில் 17ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சிக்காக குல்வந்த் மண்டபம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 11:15 மணிக்கு சாய் பாபா, மண்டபத்திற்கு வந்தார். அவர் வந்ததும் தலைமை குருக்கள் திருமண நிகழ்ச்சிக்கான சடங்குகளைத் துவக்கினார், கணபதி வழிபாட்டுடன் நிகழ்ச்சி துவங்கியது. 11:59 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க, தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மாலை மாற்றிக் கொண்ட தம்பதிகள், புனித தீயை வலம் வந்தனர். புதிய ஜோடிகளுக்கு, அவர்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்கார நகைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. திருமணம் நிறைவு பெற்றதும், சாய்பாபா, அவர்கள் அருகே சென்று ஆசிர்வதித்தார். புதிய திருமண ஜோடிகளுக்கும் அவர்களுடைய உறவினர்களுக்கும் சிறப்பான விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பகல் 12:55 மணி அளவில் காலை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.


மேலும் விவரங்களுக்கு


http://sssbpt.org/Pages/Prasanthi_Nilayam/darshanupdateNov2010.html


 

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ajantha - Singapore,சிங்கப்பூர்
23-நவ-201009:36:24 IST Report Abuse
Ajantha If we (everyone Individual)follow swami's teachings and preachings from inner heart with love and sincererity the entire world will turn swarga and absolutely no natural disasters
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X