| மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள்| Dinamalar

மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள்

Updated : நவ 22, 2010 | Added : நவ 21, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

 

புட்டபர்த்தி: சாய் பாபாவின் 85வது பிறந்த நாளை ஒட்டி 18ம் தேதி மாலை சத்ய சாய் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை 06:40 மணிக்கு வேதங்கள் முழங்க, சாய் பாபா, குல்வந்த் மண்டபத்திற்கு வந்தார். அவர் வருவதற்கு முன், மாணவ, மாணவியரின் கண்கவர் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. மாணவர்கள் பேண்டு வாத்தியங்களை முழக்கி, பாங்ரா நடனம் ஆடி, சாய் பாபாவை வரவேற்றனர். பின்னர் மாணவ, மாணவியர் பங்கேற்ற நாட்டிய நடனம் நடைபெற்றது. நடனம் நிறைவு பெற்றதும், அவர்கள் அருகே சென்ற சாய் பாபா, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு புத்தாடைகளும் இனிப்பும் வழங்கப்பட்டன. நிறைவாக மாணவர்களின் பஜனை நிகழ்ச்சி இடம் பெற்றது. இரவு 08:10 மணி அளவில் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் பக்தர்கள் சிறப்பாக காணும் வகையில் மண்டபத்திற்குள் இரண்டு பெரிய திரைகள் அமைக்கப்பட்டு, அவற்றில் ஒளிபரப்பப்பட்டன.


 http://sssbpt.org/Pages/Prasanthi_Nilayam/darshanupdateNov2010.html

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X