TN Govt announces award in the name of Kalam | அப்துல் கலாம் பெயரில் விருது ; தமிழக அரசு அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அப்துல் கலாம் பெயரில் விருது ; தமிழக அரசு அறிவிப்பு

Updated : ஜூலை 31, 2015 | Added : ஜூலை 31, 2015 | கருத்துகள் (34)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
முதலில் கவுரவித்தது தமிழக அரசு

சென்னை: மறைந்த அப்துல் கலாம் பெயரில் தமிழக அரசு அறிவியல் வளர்ச்சி, மாணவர் நலன் மற்றும் மனிதவியலுக்கு பாடுபட்ட இளைஞர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் தமிழக அரசு விருது வழங்கும் என முதல்வர் ஜெ., அறிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கடந்த 27 ம்தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். இவரது இறுதிச்சடங்கு நேற்று ராமேஸ்வரத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில் கலாம் பெயரில் விமான நிலையத்திற்கு பெயர், ராமேஸ்வரத்தில் மணிமண்டபம், கலாம் பெயரில் பல்கலை., கலாம் இல்லம் குழந்தைகள் காட்சியகம் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ஏழைக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் ஒருமுக சிந்தனை, விடாமுயற்சியால் , தலைசிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்தார். இந்தியாவின் ஏவுகணை நாயகன், திருக்குறள் வழி நடந்தவர். இளைஞர்களின் எழுச்சி நாயகனாக திகழ்ந்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் சக்தியாக திகழ்ந்தவர். அனைவராலும் போற்றத்தக்க வகையில் வாழ்ந்த இவருக்கு பெருமை சேர்க்க , கலாமின் நினைவை போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான அக். 15 இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படும்.

8 கிராம் தங்கம்- ரூ. 5 லட்சம் ரொக்கம்
: மேலும் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் அப்துல்கலாம் பெயரில் அரசு விருதுகள் வழங்கப்படும். அறிவியல் வளர்ச்சி, மாணவர்கள் நலன் மற்றும் மனிதவியலுக்கு பாடுபட்ட இளைஞர் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். அந்த நபருக்கு இந்த விருது வழங்கப்படும். சுதந்திர தின விழாவில் இந்த விருது வழங்கப்படும். இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நபருக்கு 8 கிராம் தங்கப்பதக்கம், ரூ . 5 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். இவ்வாறு இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல தரப்பினரும் வரவேற்பும் , அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.


கலாம் நண்பரான பழனிச்சாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் வரவேற்பும் , மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
01-ஆக-201500:54:37 IST Report Abuse
Amirthalingam Sinniah நேர்மையைத்தான் கலாம் அவர்கள் விரும்பினார் .ஒரு சுத்தமான கையினாலேயே வருடாவருடம் கொடுக்கப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
sreeram - thuckalay  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-201520:01:38 IST Report Abuse
sreeram ஒரு வேண்டுகோள்: அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் பாடநூலில் வரும் கல்வியாண்டு முதல் இடம்பெற மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்க. வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறேன்.அடுத்து வரும் தலைமுறைகளுக்கு இந்த மாமனிதரை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.
Rate this:
Share this comment
Cancel
k.sreeram - thuckalay  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-201519:42:07 IST Report Abuse
k.sreeram மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் ஒவ்வொரு இந்தியரின் நெஞ்சில் இடம் பிடித்த ஒரு மாமனிதர் ஆவார்.அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை இளைஞர்களின் எழுச்சி நாளாக அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X