NASA Camera Reveals 'Dark Side' of the Moon | 'கருப்பு நிலா': கண்டது நாசா சாட்டிலைட்| Dinamalar

'கருப்பு நிலா': கண்டது நாசா சாட்டிலைட்

Updated : ஆக 06, 2015 | Added : ஆக 06, 2015 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
nasa, moon, நாசா, நிலா

நியூயார்க்: முதன்முறையாக நிலாவின் இருண்ட பகுதியை அமெரிக்க சாட்டிலைட் படம் பிடித்து சாதனை படைத்துள்ளது.சூரிய வெளிச்சம்பட்டு, பிரகாசமாக தெரியும் நிலாவின் பாதி மட்டுமே பூமியில் இருந்து பார்க்கும்போது தெரிகிறது. அதன் பின்புறம் இருண்டு இருக்கும்போது இதுவரை படம் பிடிக்கப்பட்டதில்லை.
நாசாவின் சாட்டிலைட்:நாசா அனுப்பிய அமெரிக்காவின் "டீப் ஸ்பேஸ் கிளைமேட் அப்சர்வேட்டரி (டிஸ்கவர்)' என்ற சாட்டிலைட்டில் உள்ள காமிரா, முதன்முறையாக நிலாவின் இருண்ட பகுதியை படம் பிடித்து அனுப்பி உள்ளது.பூமியை சுற்றி வரும் நிலா, சாட்டிலைட்டுக்கும் பூமிக்கும் இடையே பயணிக்கும்போது, இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
1.6 லட்சம் கி.மீ.,:நிலாவில் இருந்து 1.6 லட்சம் கி.மீ., தொலைவில் இருந்து இப்படத்தை சாட்டிலைட் எடுத்துள்ளது. விஞ்ஞானிகள் இது பற்றி கூறும்போது, ""நாம் எப்போதுமே நிலாவின் ஒரே பகுதியைத் தான் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இப்போது தான் முதன்முறையாக நிலாவின் இருண்ட பகுதியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படத்தை ஆராயும்போது மேலும் பல புதிய விஷயங்கள் தெரிய வரும்'' என்று கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAIRAJ - CHENNAI,இந்தியா
07-ஆக-201508:21:11 IST Report Abuse
JAIRAJ சும்மா இருங்கப்பா.....அந்த வட்டம் பீமன் அடித்த ஆணி என்று கதை ஆரம்பமாகுமே ..........
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
07-ஆக-201506:04:04 IST Report Abuse
kundalakesi நமக்கு பவ்ர்ணமியில் தெரியும் நிலாவை விட, அமாவாசையில் நிலவின் காணமுடியா அப்பக்கம் அதிக ஒளியுடன் இருக்கும், சூரியனின் பக்கம் நெருங்கி உள்ளதால்.
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
07-ஆக-201505:18:38 IST Report Abuse
தங்கை ராஜா நிலவோ அழகோ, அதன் பின்பகுதி கருப்பு என்பது மட்டும் உண்மை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X