மாதவரம் ரெட்டை ஏரி நிரம்பி நீர் வீணாகிறது| Dinamalar

மாதவரம் ரெட்டை ஏரி நிரம்பி நீர் வீணாகிறது

Added : நவ 23, 2010 | கருத்துகள் (1)

மாதவரம் : கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மாதவரம் ரெட்டை ஏரி நிரம்பி வழிந்து, அதிக அளவில் தண்ணீர் வெளியேறி வீணாகிறது.
சென்னை, மாதவரம் நகராட்சி எல்லைக்குள் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ரெட்டை ஏரி, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கான நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு பயன்பட்டு வருகிறது.கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையால் அம்பத்தூர், அயப்பாக்கம், கொரட்டூர் ஆகிய ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் புத்தகரம், கதிர்வேடு ஊராட்சிகளின் மழைநீர் கால்வாய் வழியாக ரெட்டை ஏரிக்கு வருகிறது.ஆனால் பொதுப்பணித்துறையினர், மழைக் காலத்திற்கு முன்னதாக ஏரியின் கரைகளை முறையாக பராமரித்து கரைகளை பலப்படுத்தவில்லை.இதனால், ஏரியில் சேமிக்க வேண்டிய நீர் வெளியேறி வீணாகிறது.ஏரியின் பெரும்பகுதியில் ஆகாயத் தாமரைகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. லட்சுமிபுரம், விநாயகபுரம் ஆகிய பகுதிகளில் ஏரிக்கரையை ஒட்டிய பகுதிகள் தனியாரின் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன. இதனால் ஏரியின் பரப்பளவு நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது.மாதவரம், அம்பத்தூர், கோயம்பேடு சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் வெளியேற்றும் ஏராளமான கழிவுகள், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய ஏரிப் பகுதிக்குள் கொட்டி குவிக்கப்படுகின்றன.சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில், சில பகுதிகளில் குப்பை குழிவுகளை விஷமிகள் தீயிட்டு எரிக்கின்றனர்.இது போன்ற பல்வேறு பிரச்னைகளால் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு உதவி வரும் ரெட்டை ஏரியின் நிலை மோசமாகி வருகிறது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X