யாருய்யா அது...நம்ம ஆர்யா இது !| Dinamalar

யாருய்யா அது...நம்ம ஆர்யா இது !

Added : ஆக 16, 2015 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
யாருய்யா அது...நம்ம ஆர்யா இது !

'தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடு டி...' என, வெள்ளித் திரையில் அறிமுகமாகி தீயாய் தன் நடிப்பை வெளிப்படுத்தியவர். 'என் பீசு போச்சே' என 'ஆரம்பம்' படத்தில் காதலாகி கசிந்து உருகிய சாக்லேட் பாய். அன்று, இவரது அசாத்திய நடிப்பை பார்த்து 'யாருய்யா அது புதுசா இருக்கே' என கேட்டவர்கள் இன்று, அட நம்ம 'நண்பேன்டா' ஆர்யா என, கைதட்டி வரவேற்கின்றனர். 'வாசுவும் சரவணணும் ஒண்ணா படிச்சவங்க' படத்தில் கலகலப்பாய் கலாய்க்கும் ஆர்யா தினமலர் வாசகர்களுக்காக மதுரையில் அளித்த பேட்டி இதோ...
* காமெடி கதைகளில் அதிகம் நடிக்கிறீர்களே ?அப்படி சொல்ல முடியாது. வித்தியாசமான கேரக்டர்களில் அதிகம் நடித்திருக்கிறேன். நான் நடிக்கும் காமெடி, காதல் படங்களை ரசிகர்கள் விரும்பி ரசிக்கின்றனர். இந்த ரசனை தான் அதிக காமெடி படங்களில் நடிப்பதை போன்ற தோற்றத்தை தருகிறது.
* இன்றைய சினிமா அரசியலாகிவிட்டதா?என்னை பொறுத்த வரை சினிமா எப்போதும் அரசியலாக்கப்படவில்லை. தமிழ் சினிமாவிற்கு புதியதாக அதிக தயாரிப்பாளர்கள் வந்துவிட்டனர். இவர்களுக்கு எப்படி படம் எடுக்க வேண்டும், எப்படி ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் தெரியவில்லை. எதோ ஒரு கதையை படமாக்கி வெளியிட முயற்சிக்கும் போது சிக்கலில் மாட்டிக் கொள்கிறது.
* உங்கள் நண்பர் விஷால் நடிகர் சங்க பிரச்னையில் தீவிரமாக இருக்கிறாரேசினிமாவில் அனைவரும் நண்பர்கள் தான். நடிகர் சங்க தேர்தல் நியாயமான முறையில் நடக்க வேண்டும் என்ற முயற்சியில் நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். கண்டிப்பாக இம்முயற்சியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
* திடீரென சைக்கிள் ரேசில் இறங்கிவிட்டீர்களேஉடற்பயிற்சி செய்யும் நோக்கத்தில் தான் 'சைக்கிளிங்' போக ஆரம்பித்தேன். அது என்னமோ தெரியவில்லை 'சைக்கிள் ரேஸ்' போக வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் வந்துவிட்டது. சமீபத்தில் நடந்த சைக்கிள் போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளேன்.
* மீண்டும் சந்தானம் கூட்டணி?!காமெடியன் என்ற இடத்திலிருந்த சந்தானம், ஹீரோ என்ற இடத்தை பிடித்துவிட்டார். 'பாஸ்(எ)பாஸ்கரன்' படத்திற்கு பின் இவருடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. 'வாசுவும் சரவணணும் ஒண்ணா படிச்சவங்க' படத்தில் வாசு என்ற பெயரில் நடிக்கும் சந்தானம் கேரக்டர், ரசிகர்கள் மத்தியில் நன்றாக பேசப்படும்.
* இயக்குனர் ராஜேஷ்...ராஜேஷ் படம் என்றாலே டயலாக் நன்றாக இருக்கும். இதற்கு முன் 'நண்பேன்டா' என்ற டயலாக் பிரபலமானதை போல இந்தப் படத்திலும் 'செம கலாய்' என்ற டயலாக் பிரபலமாகிவிட்டது.
* உங்கள் சகோதரர் நடிப்பில் அடுத்து...என் தம்பி சத்யா 'அமர காவியம்' என்ற படத்தில் அறிமுகமானார். அடுத்து 'சென்னை டூ சிங்கப்பூர்' என்ற படத்தில் நடிக்கிறார். என்னுடைய தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக கூறியுள்ளார்.
* மதுரை ரசிகர்கள்...மதுரை என்றாலே எப்போதும் 'ஸ்பெஷல்' தான். அந்த அளவிற்கு சினிமாவை ரசிக்கிறார்கள். ஒரு படம் வெளியானதும் எப்படி ஓடுகிறது என்பதை மதுரைக்கு போன் செய்து தான் கேட்போம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
21-ஆக-201506:49:48 IST Report Abuse
N.Purushothaman சாக்லேட் பாய்ன்னு இருந்த ஆர்யா VSOP மூலமா குடிப்பாய்யா மாறிட்டாரு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X