மதுரையில் புத்தகத் திருவிழா இன்று துவக்கம்:250 அரங்கங்கள்; செப்.௭ வரை நடக்கிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் புத்தகத் திருவிழா இன்று துவக்கம்:250 அரங்கங்கள்; செப்.௭ வரை நடக்கிறது

Updated : ஆக 28, 2015 | Added : ஆக 28, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மதுரை:லட்சக்கணக்கான புத்தகங்களுடன், மதுரை தமுக்கம் மைதானத்தில் வாசகர்களின் அறிவுப்பசிக்கு விருந்தளிக்கும் புத்தக திருவிழா, இன்று (ஆக.,28) துவங்குகிறது.2 லட்சம் தலைப்புகளில், 250 அரங்கங்கள் வாசகர்களை வரவேற்கின்றன. பல இடங்களில் தேடியும் கிடைக்காத புத்தகங்களை, ஒரே இடத்தில் வாங்குவதற்கும், புதுமையாக வெளிவந்துள்ள புத்தகங்களை பதிப்பகத்தாரிடம் நேரடியாக கேட்டு வாங்குவதற்கும், இக்கண்காட்சி பெரும் வாய்ப்பாக இருக்கும்.இன்று மாலை 5.30 மணிக்கு மாநகராட்சி மேயர் ராஜன் செல்லப்பா துவக்கி வைக்கிறார்.
கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகர், கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசுகின்றனர். 'பபாசி' தலைவர் மீனாட்சி சுந்தரம் வரவேற்கிறார், செயலாளர் புகழேந்தி நன்றி கூறுகிறார்.அறிவுக்கடல் போல் காட்சியளிக்கும் இக்கண்காட்சியை, செப்., 7 வரை தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இலவசமாக பார்க்கலாம். புத்தக பொக்கிஷங்களை பார்த்து வெறுங்கையோடு செல்லாமல், சின்ன பட்ஜெட்டிலும் நிறைவான புத்தகங்களை குடும்பமாய் வந்து வாங்கிச்செல்லுங்கள்.
தினமலர் சார்பில் தினமும் பரிசுபுத்தக திருவிழாவில் இடம்பெறும் தினமலர் அரங்கில் வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து அளிப்பவர்களில், தினமும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். பரிசுக்கு தேர்வு செய்யப்படுவோரின் கூப்பன் எண்கள், அடுத்தநாள் தினமலர் நாளிதழில் வெளியாகும்.புத்தகத்தில்கையெழுத்து வாங்கலாம்வாசகர்கள் வாங்கிவரும் புத்தகங்களுக்கு, தினமலர் அரங்கில் தினமும் மாலை 5:30 மணி முதல் 6:00 மணிவரை எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் கையெழுத்திடுகின்றனர். நாளை (ஆக.,29) நாவலாசிரியர் இந்திரா சவுந்தரராஜன் கையெழுத்திடுகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X