சசிபெருமாள் மரணம்: ஆதாரம் சேகரித்தார் வைகோ | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிபெருமாள் மரணம்: ஆதாரம் சேகரித்தார் வைகோ

Added : ஆக 28, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

நாகர்கோவில்: சசிபெருமாள் மரணத்தின் போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக உண்ணாமலைக்கடையில் வைகோ ஆதாரங்கள் சேகரித்தார். டாஸ்மாக் கடையை மூடக்கேட்டு உண்ணாமலைக்கடையில் 130 அடி உயர கோபுரத்தில் ஏறிய சசிபெருமாள் இறந்தார். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மதுவிலக்குக்கு எதிரான போராட்டம் வலுத்தது. மதுவிலக்கு அமல்படுத்த கோரி சசிபெருமாள் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில், வைகோ தலையிட்டு உடலை வாங்க செய்தார். சசிபெருமாள் மகன் மற்றும் தம்பியை அழைத்து வந்து வைகோ உடலை பெற்று சென்றார். இது தொடர்பான வழக்கு விசாரணை வரும் 31-ம் தேதி ஐகோர்ட்டில் நடக்கிறது.
இந்த வழக்கில் வைகோ ஆஜராக உள்ள நிலையில் நேற்று காலை உண்ணாமலைக்கடை வந்தார். சசிபெருமாளுடன் டவரில் ஏறிய உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன், போராட்டம் தொடங்கும் முன்னர் சசிபெருமாள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் சசிதரன், டவர் பக்கத்தில் உள்ள குடியிருப்பு வாசிகள், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என அனைத்து தரப்பினரிடம் விபரங்களை கேட்டறிந்த வைகோ அதுபற்றி குறிப்பு எடுத்துக்கொண்டார். அப்போது பெரும்பாலான மக்கள் தக்கலை ஏ.எஸ்.பி. விக்ராந்த்பாட்டீல் அதிக அளவில் புகார் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அவர் கேலி செய்ததாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போதையில் இருப்பதாகவும் ஏ.எஸ்.பி. கூறியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த வைகோ, போலீசார் நடந்து கொண்ட விதத்ததுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும், சசிபெருமாள் மரணத்துக்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X