திருப்பணி என்ற பெயரில் சிதைக்கப்படும் சிற்பங்கள்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (8)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில், திருப்பணி என்ற பெயரில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் சிதைக்கப்பட்டு வருவதாக, பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கும்பகோணம் மகாமகம் விழா, அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி, கும்பகோணம் மற்றும் அதைசுற்றியுள்ள கோவில்களில், கும்பாபிஷேகம் செய்ய, 260 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, திருப்பணிகள் நடந்து வருகின்றன; அத்துடன் சில கோவில்களில், புனரமைப்பு பணிகளும் நடந்து வருகின்றன. கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரன் கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமையானது; இங்குள்ள சிலைகள் கலைநயம் வாய்ந்தவை; வரலாற்று சிறப்புமிக்கவை. சோழர்களின் கலைநயத்தை எடுத்துரைக்கும் இக்கோவிலில், கம்பர் காலத்திற்கு முன் செதுக்கப்பட்ட, ராமாயண சிற்பங்கள் உட்பட, பல பழங்கால சிற்பங்கள், திருப்பணி என்ற பெயரில், தற்போது சிதைக்கப்பட்டு வருகின்றன.

ஆலய வழிபாட்டுக் குழு தலைவர் டி.ஆர்.ரமேஷ்

கூறியதாவது: குடந்தை கீழ்கோட்டம் என அழைக்கப்படும், நாகேஸ்வரன் கோவிலில், 1,200 ஆண்டு பழமையான சிற்பங்கள் உள்ளன. அதிலும், உலக பிரசித்தி பெற்ற ராமாயண சிற்பம் இங்கு தான் உள்ளது. தற்போது, இக்கோவிலில் திருப்பணி நடந்து வருகிறது. அதில், ராமாயண சிற்பம் சேதமடைந்துள்ளது; இந்த சிற்பத்தில், முன்னர் தெரிந்த பல உருவங்களும், வானரங்களும் தற்போது தெரியவில்லை; பெண் சிற்பங்களும் உடைந்துள்ளன. பன்னிரண்டு சூரியன்களின் அடையாளமாகக் காணப்படும், துவாதச சக்கரம் சேதமாகி உள்ளது. திருப்பணிகளுக்கு முன்,தொல்லியல் துறையினரிடம் முறையாக அனுமதி பெற்றனரா என தெரியவில்லை.

முன் அனுபவம் இல்லாத ஒப்பந்ததாரர்களிடம் திருப்பணி வேலைகளை கொடுத்திருக்கின்றனர். அதனால், கோவில் சிற்பங்கள் அதிக அளவில் சேதமாகி உள்ளன. இக்கோவில் திருப்பணிக்கு, 1.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; இருப்பினும், அதற்கான அரசாணை இல்லை. எனவே, கோவிலின் திருப்பணி வேலைகளை பிரித்து பிரித்து செய்து

Advertisement

வருகின்றனர். திருப்பணிக்கு முன் சிலைகள் மீது, ஒரு வித ரசாயனம் பூசப்படுகிறது; அதில், என்ன கலந்திருக்கிறது என, தெரியவில்லை.
திருப்பணியின் ஒரு பகுதியாக, மணல் மூலமும், சில இடங்களில், அதிக அழுத்தத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் சுத்தம் செய்கின்றனர். இப்படி செய்வதால், புராதன சிற்பங்கள் சேதமடைகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

வல்லுனர்கள் மேற்பார்வை தேவை :

தொல்லியல் துறைஅதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலில், திருப்பணி மேற்கொள்ள வேண்டும் எனில், தொல்லியல் துறையின் அனுமதியை, அறநிலையத் துறை பெற வேண்டும். பல கோவில் திருப்பணிகள், தொல்லியல் வல்லுனர்கள் மேற்பார்வையில் தான் நடக்கின்றன. ஆனால், நாகேஸ்வரன் கோவில் திருப்பணியில், தொல்லியல் வல்லுனர்கள் இடம் பெற்றனரா என்பது தெரியவில்லை. அறநிலையத்துறையிடம் சில தொல்லியல் வல்லுனர்கள் இருக்கின்றனர்; ஒருவேளை அவர்களை திருப்பணிக்கு அனுப்பினரா என்பதும் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sithu Muruganandam - chennai,இந்தியா
14-செப்-201503:10:17 IST Report Abuse
Sithu Muruganandam தண்ணீரில் மணல் கலந்து பீச்சி அடிப்பதை 'சாண்ட் பிளாஸ்டிங்' என்று கூறுவார்கள். வேலையின் தன்மையைப் பொருத்து இத்தனை வேகத்தில் அடிக்கவேண்டும் என்பதைக்கடைப்பிடிக்க வேண்டும். சிற்பங்களின் மீது எந்த விதமான அழுக்கு அல்லது தூசி அல்லது கறை படிந்திருக்கிறது என்பதைக் கணித்து 'சால்வண்ட்' எனப்படும் கறை நீக்கும் திரவத்தை உபயோகப்படுத்த வேண்டும். இவற்றை சரியாக கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கண்கானிக்க கோவில்களின் சார்பாக ஒரு பொறியாளரை நியமிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
11-செப்-201506:26:18 IST Report Abuse
மதுரை விருமாண்டி இது பற்றிய கருத்தை நான் ஏற்கனவே பதித்து இருந்தேன். ஸ்ரீரங்கம் கோவிலில் ரெட்டை இலை போட்ட வேன் கோவிலுக்குள் சகட்டு மேனி புகையை கக்கிக் கொண்டு தூண்களை உரசியும், இடித்தும் செல்வதைக் கண்டு மனம் பதைத்துப் போய் படமெடுத்து வைத்துள்ளேன்.. அம்ம்மா படம் போட்ட வேனில் ஒரு காட்டான் கான்டிராக்டராக வளம் வந்து கொண்டிருந்தான்.. எல்லாம் லஞ்ச மயம் தான்.. சிற்பங்களின் தன்மை, செதுக்கப்பட்ட கல்லின் தன்மை, சுற்றுச் சூழலால் அதற்கு ஏற்பட்ட பாதிப்பு, அதன் இன்றைய பலம், நிலை இவைகளை பற்றி ஒரு இதுவும் தெரியாமல், தெரிந்திருந்தாலும் அல்லக்கைகளுக்கு ஒப்பந்தத்தை கொடுத்து, பணம் மட்டுமே குறியாக எதையும் செய்யும் கொள்ளைக்காரக் கூட்டத்திடம் நாம் சிக்கித் தவிக்கிறோம்.. எதை எடுத்தாலும் லஞ்சம், கமிஷன்..
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
09-செப்-201516:04:19 IST Report Abuse
P. SIV GOWRI முன் அனுபவம் இல்லாத ஒப்பந்ததாரர்களிடம் திருப்பணி வேலைகளை கொடுத்தால் இப்படி தான் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
ஜெருயான் யோகராஜா - Wermelskirchen,ஜெர்மனி
09-செப்-201515:06:42 IST Report Abuse
ஜெருயான் யோகராஜா இங்கே தண்ணீரில் மண்ணைக் கலந்து அதி அழுத்தத்தை உருவாக்கி பாறைகளைப் பிளப்பார்கள். அந்தத் தொழில்நுட்பத்தை வைத்து சிலைகளைச் சுத்தம் செய்தால் சிலைகளின் நிலை என்னாகும். தகுதியும் அனுபவமும் செய்முறையும் இல்லாதவர்களிடம் ஒரு காரியத்தைக் கொடுப்பதைவிட நாமே அதை உடைத்துப் போட்டுவிட்டு போகலாம் அல்லது அதை ஒன்றும் செய்யாமல் விடலாம். இயற்கை அன்னை இந்த வேகத்தில் ஒன்றையும் அளிக்க மாட்டாள். இத்தனை ஆண்டுகள் இயற்கை பராமரித்ததை இந்த சில ஆண்டுகளில் இவர்கள் அழித்து விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
09-செப்-201511:41:14 IST Report Abuse
அம்பி ஐயர் அப்படியே இந்தச் சிலைகளைக் கடத்திடப் போறாங்க.... சிலையெல்லாம் உடைஞ்சு போச்சுனு சொல்லி கணக்கு காமிச்சுடுவாங்க....
Rate this:
Share this comment
Cancel
Vinoth - Cheyyar,இந்தியா
09-செப்-201511:20:58 IST Report Abuse
Vinoth புனரமைப்பு என்கிற பெயரில் நடக்கும் மிக பெரிய தாக்குதல் இது .மிக பழமையான கோயில்கள் தொல்லியல் துறை இடம் ஒப்படைக்க வேண்டும் .அறநிலைய துறை வேண்டாம் .காசு சம்பாதிக்க தான் லாயக்கு.
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
09-செப்-201507:08:27 IST Report Abuse
kundalakesi in Sreerangam temple walls also , very old stone inion messages were wiped out by the sand water jet. that too walls of several meters around the main sanctoram 2nd round . we will never know, what our ancestors wanted to say to future progenies.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-செப்-201507:06:16 IST Report Abuse
Kasimani Baskaran கூமுட்டைகளை வைத்து வேலை செய்தால் இப்படித்தான் ஆகும்... வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இது போன்ற வேலைகளுக்கு செலவு அதிகமாகும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.